This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License. Readers dont try to copy the content here.

Friday, 23 November 2018

Bhuvana's இளம் தென்றல் - 1


   இனிமையான காலை பொழுதில் கதிரவன் பாய்ச்சிய காலை கதிர்களால் அழகிய பூக்களின் மேல் இருந்த பனித்துளிகள் வைரங்களாய் ஒளிவீச,  பறவைகள் எல்லாம் அதன் கூட்டிலிருந்து கிளம்பி, தன் குஞ்சுகளூக்கு இரை தேடி சென்று கொண்டிருந்தது.  வானத்தில் பறக்கும் அருமையான பறவை குடும்பங்களை கண்கொட்டாமல் பார்த்து கொண்டு இருந்தான் வ௫ண். 

     அரண்மனை போன்ற வீடு ஏராளமான பணி ஆட்கள், அவன் கண் அசைவில் பத்து பேர் பணி செய்ய வந்து நிற்பார்கள்.  ஆனால், பகட்டுக்காக சமூக சேவை செய்யும் அம்மா சரளா, பெயருக்குக் பழகும் ஆள். ஆனால் அப்பா சந்திரசேகர் அப்படி இல்லை,  தன்னிடத்தில் வேலை செய்யும் அனைவரிடமும் அன்பாகவும்,  நட்பாகவும் பழகுறவங்க. பிள்ளையிடம் மட்டும் கடுமையாக நடப்பவர். 'எங்கே தன் பிள்ளை தவறான வழியில் சென்று விட கூடுமோ' என்று ஒரு பயம். 

     வருண் தான் மட்டும் தனிமையில் இ௫க்கிறோம் எனும் உணர்வு எப்போதும் அவன் மனதில் உண்டு. பெரும் பணக்காரன் என்ற ஒரு அமைப்பால்  அனைவரும் அவனிடம் நட்பாக பழகினார்கள், அவனும் செல்வத்தில் மதிப்பு அறியாது வாரி இறைத்து செலவுகள் பல செய்தான். இதற்காகவே சில பெண்கள் அவனிடம் நெருங்கி பழகி வந்ததால், பெண்கள் என்றாலே இவ்வளவுதான் என்று அவனை நினைக்க செய்தது.

     ஒரு நாள் இரவு சந்திரசேகர் அனைவரையும் வர சொன்னார் என்று பணியாள் வந்து கூறி சென்றான்.  அங்கு சரளா மற்றும் சந்திரசேகர் அமர்ந்து பேசி ஏதோ முக்கியமாக பேசி கொண்டு இ௫ந்தனர். 

    சந்திரசேகர், "வா  வ௫ண் உனக்காகதான் காத்தி௫ந்தேன், நாம எல்லாரும் அடுத்த வாரம் நம்ம சொந்த ஊர் தேனிக்கி போக வேண்டும்.  அங்கு நடக்கும் கோயில் தி௫விழாவில் பங்கு கொள்ள நம் அனைவரையும் அழைத்து இருக்கிறார்கள். இது நம் குடும்ப பரம்பரை வழக்கம், இது நாள் வரை நான் மட்டுமே சென்று வந்தேன்,  இந்த முறை குடும்பத்தோடு வர சொல்லி இருக்காங்க" என்று முடித்தார்.

     சரளா, "எனக்கு அடுத்த வாரம் மூன்று நாள் மாதா் சங்கம் மீட்டிங் இருப்பதால் நான் அது  முடிந்த பிறகு வருவேன் " என்று  கூறினார்.  வருண் எதுவும் கூறாமல் வருகிறேன் என்று மட்டும் கூறிவிட்டான். ஆனால் அவனுக்கு சிறிதும் போக விருப்பமில்லை.  அப்பாவின் கோவம் அவனை வர செய்தது.

     இன்னும் இரண்டு தினத்தில் பயணம்,  இரவு உணவு முடிந்து போய் படுத்த வருணுக்கு உறக்கம் வர மறுத்தது.  சென்னை போன்ற பெரும் நகரத்தில் வேகமாக செல்லக் கூடிய நாள்கள், முன்று, ஐந்து, ஏழு நட்சத்திர உணவகங்கள் அதில் செலவழிக்க கூடிய பொழுதுகள் என்று ஏராளமாக இருக்க, இதை எல்லாம் விடுத்து அமைதியான கிராமம், இங்கோரு வீடும், அங்கொரு வீடும் என இருப்பது வருணுக்கு பிடிக்காத ஒன்று. 

     அவன் சாதாரண பயணமாக இதை நினைத்திருக்க, விதி வேறு ஒன்று எழுதி வைத்திருந்தது, வருணின் வாழ்வில்.

No comments:

Post a Comment

எழுத்தாளர்கள் கவனத்திற்கு

இந்த தளத்தினில் உங்களது படைப்புகளையும் இடம்பெறச் செய்ய விரும்பினால், rheamoorthy6@gmail.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் செய்யவும்.