This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License. Readers dont try to copy the content here.

Friday, 8 February 2019

உமா சாரல்'s சாரலடி நீ எனக்கு 1


Click here to get all parts


அத்தியாயம்...1


அன்றையத்தினம் மிதுலாவிற்க்கு விஷேசமானது.மூன்று வருடம் கழித்து 

வெளிநாட்டில் படித்து விட்டு வரும் மகனைக்காண அவ்வளவு ஆவல சொல்லமுடியாதது.


காலை பதினொரு மணிக்கு விமானத்தில்

இந்தியா வருகிறான். அதனால் மிதுலா 

பத்து மணிக்கெல்லாம் அவனை கூப்பிட கிளம்பி விட்டார்..


ஆனால் கணேஷ் தான் இன்னும் கிளம்பவில்லை.இவர் தான் மிதுலாவின் கணவர்..


இப்ப நீங்க வர்றீங்களா இல்லை நான் மட்டும் கிளம்பி போட்டும்மா என கேட்க்க...


இன்னும் டைம் இருக்கு மிதுலா எனவும்

''இல்லை நாம் அங்க போய் வெயிட் பண்ணலாம்.. மிதுலா சொல்ல கிளம்பினார்..


ஒற்றைப்பிள்ளையை இத்தனை வருடம் பார்க்காமல் இருந்தது போதும் இனியும் பொறுக்க முடியவில்லை அவரால் அதான் கணேஷை காலையில் இருந்து அந்தப்பாடு..படுத்தினார்..


கணேஷ்க்கும் தெரியும் மகனை காண மிதுலாவின் தாயுல்லம் படும் பாட்டை...


அங்குப்போயும் மிதுலா உட்காரவில்லை 

குட்டிப்போட்ட பூனை போல் வெளி வரும் மனிதர்களையே பார்த்துக்கொண்டு நடந்துக்கொண்டே இருந்தார்.. 


நீ உட்கார் மிதுலா விஜய் வந்துடுவான் என கணேஷும் சொல்வார் ஆனால் மிதுலாவ்வோ "இல்லை விஜய் வந்துடுவான் நான் பார்க்குறேன் என்பார்...


அதற்க்கு பிறகு உன் இஷ்டம் என்று சொல்லி விட்டார்..


பிறகு விஜயும் வந்துவிட்டுருந்தான்..மிதுலாவிற்க்கு கண்கள் எல்லாம் நீர்...


விஜய் அம்மா என்று சொண்ணப்போதே

அழுதே விட்டார்..அம்மா என்னது இங்க போய் அழுதுட்டு என விஜய் சொண்ணப்போது தான் மிதுலா அழுகையை விட்டார்...


விஜய் மிதுலாவை அணைத்துக்கொள்ள மிதுலா அவன் நெற்றியில் முத்தம்மிட்டார்..


விஜய் ஹாய்ப்பா என்றான்...


எப்படிடா இருக்க...எனக்கேட்டார் விஜய்யைக்காண அவர் மிதுலாவைப்போல குதிக்கவில்லைதான் ஆனால் விஜய்யை காணும் ஆவள் நிறைய இருந்தது..கணேஷுக்கு...



எப்படி இருக்கேன் நீங்களே சொல்லுங்க..என விஜய் கேட்க ...


கணேஷ் தன் மகனைப்பார்த்தார் ..

விஜய் ஆறடி உயரம் கருப்பும் இல்லாது சிவப்பு இல்லாத யாரையும் கவர்ந்து இழுக்கும் நிறம் இப்பொழுது வெளி நாடு வாசம் வேறு மாடர்ன் ஆகவும் நுனி நாக்கு ஆங்கிலம் என முழுமையான ஆண் மகனாய் வந்த மகனை இருவரும் ஆசையுடன் பார்த்தனர்...



"

மிதுலா பார்த்திங்களா என் பய்யனை எப்படி வளந்து நிக்காறான்னு எனவும்...



"

அவன் என் பய்யன்டி அதான் என்னையை மாதிரி இருக்கான் என கணேஷ் சொல்ல..



அவன் உங்களை மாதிரியெல்லாம் கிடையாது எனவும்...



"

விஜய் என் பய்யன் தானே கணேஷ் மிதுலாவிடம் சந்தேகம் கேட்க்க...



"

மிதுலாவின் முறைப்பில் வாயை மூடிக்கொண்டார் கணேஷ்....


விஜய்யோ அவர்களது சண்டையை சுவாரஸ்யம்மாக பார்த்துருந்தான்...


"எவ்ளோ நேரம் தான் பிள்ளை இப்படி நிற்பான் கிளம்புங்க .....


முதலில் எனவும் அனைவரும் வீடு வந்தனர்..


விஜய் குளிச்சிட்டு வாயா சாப்பிடலாம் எனவும் சரிம்மா என்றான். .


என்னங்க "என்ன மிதுலா..." பய்யன் வளர்ந்துட்டான் ஒருப்பெண்னைப்பார்த்து கல்யானத்தை பண்ணிப்பார்க்கனும் என மிதுலா சொல்ல...


அதற்க்கு உன் பய்யன் சம்மதிக்கனும்...


அதல்லாம் சம்மதிப்பான் என மிதுலா...சொல்ல


சம்மதுச்சா சந்தோஷம் தான்...என்றார் கணேஷ்....


"விஜய் வர வா விஜய் வந்து உட்கார் நீ வரவும் இன்னைக்கு உன் அம்மா உனக்கு பிடிச்சதா சமைச்சுறுக்கா எனக்கு தான் எதுவும் செய்துதர்றாள்ளே இல்ல என கவலைக்கொள்ள...


"பிள்ளை இப்பத்தான் பல நாள் கழிச்சு வந்துருக்கான் அவனுக்கு வாய்க்கு ருசியா சமைச்சு போட வேண்டாம்மா என்னோட வம்பு வளக்காம சாப்பிடுங்க என்ற மிதுலா "விஜய் தட்டில் இடியாப்பத்தை வைத்து தேங்காய் பாலை ஊற்றியவர் அதை ருசித்த விஜய் அமிர்தம்மா என்றான்...


இன்னும் நால வை மிதுலா என கணேஷ்...சொல்ல 



"

வேண்டாப்பா போதும் எனவும் இந்த பணியாரத்தை சாப்பிடு சாப்பிட்ட ,விஜய் பயணியாரம் செம டேஷ்ட் என்றான்...


இன்னும் கொஞ்சம் சாப்பிடுயா...


வேணாம் மா...போதும் என்றவன் கையை கழுவியவன் கிளம்பினான்...


விஜய் என ..மிதுலா அழைக்க...


சதிஷ் எனக்காக வெயிட் பண்றான்மா ரொம்ப நாள் ஆச்சு நம்ம ஊரையும் பொண்ணுங்களையும் சைட் அடுச்சு நான் சீக்கிரம் வந்துட்றேன்...என்றவன் கிளம்பிவிட்டான்...


விஜயின் சிறுவயது நண்பன் தான் சதிஷ் எப்பொழுதும் இருவரும் தான் சுற்றுவர்....



"

வெகுநேரம் தன்னை அணைத்துருந்தவனிடம் விடுடா எனவும் தான் விஜய்யை விட்டான் சதீஷ்...



"எப்படிடா இருக்க ...விஜய்...



"எப்படி இருக்கேன் நீயே..சொல்....



"செம...ஹேன்சம்மா இருக்கடா நான் மட்டும் பொண்ணா இருந்தா உன்னத்தான் கல்யாணம் பண்ணிப்பேன்...என...சதிஷ் சொல்ல...



"எந்த ஜென்மத்திலும் அந்த லக் எனக்கு வேண்டாம் என சொண்ணவனை கையிலையே தட்டினான் சதிஷ்...



"சின்ன வயதில் இருந்து அவர்கள் வரும் காபி ஷாப் நெருக்கமான சேர்கள் என இருந்தாலும் பளிச்சென்று இருக்கும் அங்கு கொடுக்க படும் காபி ருசி அலாதி...




"

அதன் உரிமையாளர் விஜய்யிடம் வந்து...எப்படிப்பா இருக்கீங்க எனவும்...நல்லா இருக்கோம் நீங்க எப்படி இருக்கிங்க ....




"

நல்லாயிருக்கோம் தம்பி உங்கள் ரெண்டுபேரையும் ஒன்னாப் பார்த்து ரொம்ப நாள் ஆச்சு சதிஷ் தம்பியைக்கூட 

இப்பத்தான் பார்க்கமுடியுது.. 



"ஏன் நான் தான் இங்க இல்ல இவன் இங்கத்தானே இருந்தான்...



"நீங்க வெளிநாட்டுக்கு கிளம்பும் போது உங்களோட வந்தது தான் அப்பறம் இன்னைக்கு தான் சதிஷ் தம்பி வருது...



"ஏன்டா நிஜம்மாவா...



"அவன் தலையாட்டியன் .."நீ இல்லாம்ம எங்க நான் வரது அதா நான் வரது இல்லப்பா....என்றான் 



"டேய் உண்மையை சொல்லு காபிக்கு காசுக்கொடுக்க ஆள் இல்லையின்னதும் வரலையா..என விஜய் கலாய்க்க...






"

நான் கூட கேட்டேன் தம்பி அவன் இல்லாம்மல் நான் எப்படி வரதுன்னு சொல்லிட்டாங்க தம்பி எனவும் விஜய் சதிஷின் நட்பைக்கண்டு பூரித்துப் போனான்...



"

அவருக்கு விஜய் இங்கு வந்து காபி சாப்பிடுவது அவ்வளவு பெருமை பின்னே இருக்காத தமிழ் நாட்டின் முக்கிய நகரம் அனைத்திலையும் விஜய்க்கு சொந்தமான ஹோட்டல் இருக்கிறது அவ்வளவும் பெயர் சொல்லும் அளவு பெயர் பெற்ற உணவங்கள்.. 



"

அப்பொழுதுதான் கருமேகங்கள் கூடி சாரல் மழையை தூவிக்கொண்டுருந்தது விஜய்க்கு சாரல் என்றால் ரொம்ப விருப்பம்..."சாரல் மழையில் நனைவதென்றாள் பத்து நாள் என்றாலும் நனைந்து கொண்டே இருப்பான் .....



"

இதம்மானக்காற்று உடலைத் தழவ காபியை ருசிக்க துவங்கிருந்தனர் இருவரும்...சிலதைப்பேசிய படி...



"அப்பொழுது தான் அங்கு சிலப்பெண்கள் அவர்கள் பின்னே இருந்த டேபிலில் அமர்ந்தனர்..


அவர்களில் சாரலும் இருந்தாள்...

மழைச்சாரல் இல்லைங்க நம்ம..கதையின் கதாநாயகி....



"

என்றாவது அறிதாய் தனது கூந்தலை விரித்து விட்டுறுப்பாள் அது அவளை மேலும் எழிலாக காமிக்கும் என்பது தெரியாது அவளுக்கு..



"

ஏன் உனக்கு மாதிரி எனக்கு முடி வளரம்மாட்டிங்குது என ராணி சாரலிடம் கேட்க...



"

அதற்க்கு அவளைப்போல் அமைதியாய் இருக்கனும் உன்னால் இருக்க முடியாதே.. என துர்க்கா சொல்ல...


அமாம் இவங்க அமைதிக்கான நோபல் பரிசு வாங்கிறுக்காங்க நாங்க அமைதி இல்லாமல் இருக்கோம்..என அவளும் சண்டையிட..



"

இப்ப நீங்க அமைதியாய் இல்ல நான் கிளம்பி போயிருவேன் என சொல்லவும் இருவரும் அமைதியாகினர்..


"இப்பொழுது சாரல் மழையுடன் காற்றும் மிதம்மாக வீச ஆரம்பித்துருந்தது...


"அங்கு சதிஷ் காபியை தவறுதலாக கொட்டிவிட இருடா வாஷ் பண்ணிட்டு வரேன் என்று போய் விட விஜய் அமர்ந்துருந்தான்..


"பலமானக்காற்று வீச விரித்து விடப்பட்டிருந்த சாரலின் கூந்தல் சராலென விஜய்யின் முகத்தில் வாரியடிக்க அதில் வந்த மணம் விஜய்யை அசையாது செய்துருந்தது..


"காற்றில் வந்த மண் மனமும் அவள் கூந்தளில் இருந்த மணம்மும் ஒன்றாக இருக்க அவனை கட்டிப்போட்டது. கண்டிப்பா ஷாம்பின் ராசாயணம் இல்லை தூய்மையான துளசியின் மணம் அதில் கிறங்கிப்போனவன்...கண்களை மூடி வாசம் பிடித்துக்கொண்டுறுக்க. .


"அவனை வந்து எழுப்பியது சதிஷ் தான்

டேய் என்னடா காபி மணத்தை இப்படி மூக்கால வாசம் பிடிச்சுட்டு இருக்க எனவும் விஜய் தன்னிலைக்கு வந்தான்..


"அவரம்மாய் பின்னே திரும்பி பார்கக ..

சதிஷ்தான் என்னடா என்று கேட்டான்..



"ஒன்னும்மில்லை என்றான் பிறகு சதிஷ் விஜய் இனி உனக்குகல்யானம் தான் என்றான்....


எனக்கு கல்யாணம்மா நோ சான்ஸ்...


"நோ சான்ஷா அங்க அம்மாவும் அப்பாவும் முடிவுப்பண்ணிட்டாங்க...


என்ன முடிவு விஜய் கேட்க்க 


வந்ததும் உனக்கு ஒரு பொண்னை பார்த்து கல்யாணத்தை முடிக்கனும்னு...


"என் முடிவு தாண்டா அவங்க முடிவும் நீ ஒரு பொண்ணைப்பார்த்து கல்யாணத்தை பண்றது...

விஜய் சதிஷைப்பார்த்துக்கேட்க்க...


"எனக்கு தங்கச்சி இருக்காடா நீ அவங்களுக்கு ஒரே பய்யன் சீக்கரம் கல்யாணத்தை பண்ணி பேரன் பேத்திகளை பெத்து அவங்க கையில கொடு.......



"

என்னடா சதிஷ் முதியோர் மாதிரி பேசுற அலுத்துக்கொண்டான்...விஜய்...



"

முதியோர் மாதிரிப்பேசல உன் நலம் விரும்பியாத்தான் பேசுறேன்.. 



"

நலம் விரும்பி என்னோட ப்ரண்ட் அதனால எனக்கு சப்போர்ட்டா பேசு அம்மா அப்பாவுக்கு எதிரா நில்லு......


"நான் உனக்கு ப்ரண்ட் மட்டும் இல்லை அவங்களுக்கு பய்யனும் தான் அதனால்ல அவங்களுக்கு சாதகம்மா தான் பேசுவேன்..


"நீயும் அவங்களுக்கு பய்யன் தானே அப்போ நீயே ஒரு கல்யாணத்தை பண்ணி குழந்தையை

பெத்துக்கொடு எனவும் வாயடைத்து போனான் சதிஷ்.



"

நீ என்னை வேணா கண்ரோல் பண்ணலாம் அம்மா அப்பாவை பண்ணமுடியாது.. 



"

என்னால முடியும் நீ கிளம்பு நம்ம ஹோட்டல் கிழம்பலாம் பார்த்து ரொம்ப நாள் ஆச்சு...


"நானும் போகல நம்ம ஹோட்டல், ரியல்எஸ்டேட்,கண்ஷக்ஸன் கம்பெனி...எத்தனையைக்கவனிக்கிறார் தெரியும்மா இதல்லாம் நீ இருந்து பார்த்துக்காம்ம நீ படிக்கிறேன்னு ஓடிட்ட...



"

அதான் நீ இருந்தியே எனக்கு பதிலா.. அப்பா எதையும் எதிர்கொள்ளும் திறன் கொண்டவர்...

என்றான்...


"வீட்டுக்கு போன விஜய் பால்கனியில் நின்றுருந்தான் மழை நிக்க இதமாக காற்று வீச அதை அனுபவித்து நின்ற போது மறுபடியும் அந்தக்கூந்தலின் மனத்தை நாசி இழுத்தது...


"எத்தனையோ பெண்ணிடம் பேசிறுக்கிறான் பழகிருக்குறான் யாரிடம்மும் இப்படி ஒரு மணத்தை அவன் உணர்ந்தது இல்லை..

இப்படி மயங்கி போனது இல்ல.....


"இனியொரு ஒரு முறை அந்த மனத்தைத்தன்னால் உணரமுடியும்மா என்று நினைத்தவனுக்குள் இனம் புரியாத உற்சாகம்...


"இரவு உணவிற்க்காக...டைனிங் ஹால் வந்தபோது...


"சதிஷைப்பார்த்தாச்சா...


"பார்த்துட்டேன்ம்மா....


"அவனையும் இங்க அழைச்சிட்டு வரவேண்டியது தானே...


"அவன் நாளைக்கு வரனாம்..


"விஜய் சாப்பிட ஆரம்பித்துருந்தான்...அப்பொழுது..மிதுலா..விஜய் என அழைக்க...


சொல்லுங்க...மா...


"அப்பாவோட ப்ரண்ட் ஒருத்தர் ஹாஸ்பெட்டலில் அட்மிட் ஆகி இருக்கார்...

நம்மப்போய் பார்த்துட்டு வந்துடலாம்...


"அதுக்கு ஏன் என்னைக்கூப்றிங்க நீங்க போய்ட்டு வாங்க நான் வரலை என சலித்தான்...



"இல்ல விஜய் உன் அப்பாவுக்கு உடம்பு சரியில்லாமல் ஹாஸ் பெட்டலில் இருந்தப்போ அவர் குடும்பத்தோட வந்து நலம் விசாருச்சாங்க நாமல்லும் அப்படிப்போறது தானே முறை...என மிதுலா சொல்ல...


"அம்மா....... என விஜய் இழுக்க...


"என் தங்கம் ஒரு அரைமணி நேரம் வந்தாள் போதும் என மிதுலா அவனைக்கொஞ்சி கெஞ்ச...


"சரி எப்போ என்றான் சலித்தபடி...


"நாளைக்கு காலையிலதான்..


"மறுநாள் காலையில விஜய் உட்பட புறப்பட்டனர் அம்மா எனக்கு ஹாஸ்பெட்டல் என்றாலே...அலர்ஜி...


"சரிடா கண்ணா...கொஞ்ச நேரம் அட்ஷஸ்ட் பண்ணிக்க...விஜய் தான் ட்ரைவ் பண்ணினான்..



"சாரல் ஹாஸ் பெட்டல் போவதற்க்கு பஸ்டாண்டில் வெயிட் பண்ணிக்கொண்டிருந்தாள் ஸ்கூல் பஸிற்க்காக சில பசங்களும் நிற்க்க சாலையில் விளையாடிக்கொண்டிருந்தனர் அது சாரலுக்கு பயத்தைக்கொடுத்தது..


"ஒரம்மா விளையாடுங்க பசங்களா. என்று சொல்ல அது அவர்கள் காதில் விழுந்ததாக தெரியவில்லை இப்பொழுது அவர்கள் சாலைக்குள் லேசாக வந்துருந்தனர்...


"அப்பொழுது எதிரே வந்த காரை பார்க்காமல் விளையாடிக்கொண்டிருக்க பயம் வந்தது சாரலுக்கு அவர்களை ஏதும் மோதிவிடும்மோ என்று...


"அந்தக்காரும் நெருங்கி வர அவளும் அவர்களை நெருங்கி ஓரம்மாக இழுத்துருந்தாள்...


"அந்த கார் நம்பரையும் மனதில் வைத்துக்கொண்டாள்.என்னதான் இந்தபசங்க மேல தப்பு இருந்தாலும் எதிரே பார்த்து வரதுல்ல கார்ல்லப்போற...திமிர்..என நினைத்தவள் அந்த இரு பசங்களிடம் இனி இந்த மாதிரி ரோட்டில் விளையாடக்கூடாது கண்டிப்புடன் சொல்லி விட்டு அவர்களை அவர்களது ஸ்கூல் பஸ்ஸில் ஏற்றிவிட்டுதான் ஹாஸ்பெட்டல் வந்தாள்....


"அந்தக்காரை எப்பொழுது பார்த்தாலும் திட்டவேண்டும் என நினைத்துக்கொண்டாள்...


விஜய் மிதுலா கணேஷ் எல்லாரும் ஹாஸ்பெட்டல் வந்துவிட்டுருந்தனர் சாரலும் அந்த ஹாஸ்பெட்டலில் வேலைப்பார்க்கிறாள் அவளும் வந்து சேர்ந்தாள்....


"கணேஷ் நண்பரிடம் நலம் விசாரிக்க மிதுலா அவரது மனைவியிடம் அவரது உடல் நலம் பற்றிக்கேட்டார்....


"விஜய் இவர் கண்ணன் மனைவி...


"வணக்கம் ஆண்ட்டி...


"அவர் தலையை மட்டும் அசைத்தார் கண்ணனின் மனைவி சாரதா...


"இப்போ எப்படி இருக்கார் அண்ணன்...


"நேத்துக்கு இப்ப பாராவாயில்லை ...


"ஒரே நாளில் அண்ணன் மெலுஞ்சுட்டார் எனவும் கண்ணனின் மனைவி

அழுது விட்டார் அவரை அழைத்துக்கொண்டு வெளியே வந்தார் மிதுலா........



"கண்ணன் மயக்கத்தில் ஆழ்ந்துவிட அறையில் விஜய்யும் கணேஷ் மட்டும்மே இருந்தனர்....



"அப்பொழுது தான் உள்ளே வந்தாள் சாரல்........


"அவளைப்பார்த்ததும் ஒரு நிமிடம் சிலையாகி அமர்ந்துருந்தான்... சிப்பியாய் மூடிருந்த கண்கள்

இயற்க்கையாய் சிவந்துருந்த உதடு பாலாடை நிறம் கூர்மையான நாசி என தன்னை மறந்து பார்த்துருந்தான்....


"அவள் குரல் தான் அவனைக்களைத்தது சார் பார்த்துட்டிங்கள்ள கிளம்புங்க ரொம்ப நேரம் இங்க நிக்கக் கூடாது என்றாள்...


"குரலிள் கூட சிறு அதிர்வ்வு இல்லை.. எவ்வளவு அழகான குரல் குலழிசை போல் என விஜய் அவளை மனதுக்குள்ளாயே வர்ணித்து கொண்டுறுக்க மறுபடியும் சாரலே அவனை சுயநினைவுக்கு கொண்டு 

வந்தாள்...


'"கணேஷ்ஷிடம் ப்ளிஸ் சார் கிளம்புங்க என்றப்படி அவளும் போக....


"அவர் சரி என்றார் விஜய் வாடா என அழைக்க...


"டாட் ஐ லவ் திஷ்...எனவும் கணேஷ் குளம்பி போனார்....


"என்ன சொல்றான் இங்க என்ன இருக்குன்னு ஐ லவ் திஷ் னு சொல்றான்...


"அவர் குளம்பி போவதுற்க்கும் காரணம் இருந்தது ஒரு நகைக்கடைக்குப்போய் நகைகளைப் பார்த்து ஐ லவ் திஷ் என சொல்லலாம் ஒரு துணிக்கடைக்குப்போய் துணிப்பிடித்துருந்தாள் ஐ லவ் திஷ் என சொல்லலாம்."இங்க என்ன நல்லாருக்குன்னு சொல்றான் ...


"விஜய் என்ன சொல்ற...


"எஸ் டாட் ஐ லவ் திஷ்...


"எதைடா...


"அதை என்றான்.......


"அவன் கைக்காட்டிய திசையைப்பார்க்க சாரல் போய் கொண்டுருந்தாள்...


No comments:

Post a Comment

எழுத்தாளர்கள் கவனத்திற்கு

இந்த தளத்தினில் உங்களது படைப்புகளையும் இடம்பெறச் செய்ய விரும்பினால், rheamoorthy6@gmail.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் செய்யவும்.