This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License. Readers dont try to copy the content here.
Showing posts with label ரெசிபி. Show all posts
Showing posts with label ரெசிபி. Show all posts

Friday, 22 February 2019

Oats Pongal | ஓட்ஸ் பொங்கல்

VICKEY RECIPES :)



ஓட்ஸ் ரொம்பவே ஹெல்த்தியானது. டயட்ல இருக்குறவங்க, சர்க்கரை வியாதி உள்ளவர்கள் கொலெஸ்ட்ரோல் மற்றும் ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்த ஓட்ஸ் சாப்பிடுவாங்க. வெறும் ஓட்ஸ் கஞ்சி மட்டுமே சாப்டுட்டு வந்தா போர் அடிச்சுடும். அப்போப்போ இந்த மாதிரி ஓட்ஸ் ல வித்யாசமா செஞ்சு குடுக்கலாம்.

அதே மாதிரி பொங்கல் சாப்பிடணும்னு நினைக்கிறவங்க, பொங்கல் ஹெவியா இருக்குமே சாப்பிட்டா தூக்கம் வருமே என்ன பண்றதுனு நினைக்கிறவங்களும் இந்த பொங்கல் செஞ்சு சாப்பிடலாம். இது ரொம்பவே லைட்டா இருக்கும் அதே மாதிரி ஹெல்த்தியும் கூட.

எல்லாரும் இத ட்ரை பண்ணி பாத்துட்டு உங்கள் கருத்துக்களை கீழே பதிவிடுங்கள்.இந்த ரெசிபி ஓட வீடியோ கீழே அப்லோட் பண்றேன்.




இந்த ரெசிபி ஓட செய்முறை தமிழில் கீழே pdf வடிவத்தில் பதிவிடுகிறேன்.

Tuesday, 19 February 2019

Chicken Pizza

VICKEY RECIPES :)
பீசா யாருக்குத்தான் பிடிக்காது. இப்போ உலகம் பூரா குழந்தைங்க முதல் பெரியவங்க கிட்ட  பிரபலமா இருக்குற  இந்த பீசாவை நம்ம வீட்லயே, நம்ம ஊர் ஸ்டைலில் எப்படி செய்யலாம்னு பாக்கலாம். பொதுவா பீசால வெந்த சிக்கன் அது மேல கொஞ்சம் மிளகு தூள் இல்லேன்னா அதுகூட போடமாட்டாங்க. நான் கொஞ்சம் காரமான சாப்பாடு விரும்பி சாப்பிடுவேன், அதுனால நான் காரம் எல்லாம் போட்டு இந்த பீசாவை பண்ணிருக்கேன். ரொம்ப காரம் எல்லாம் இருக்காது, பட் நம்ம ஊர் டேஸ்ட் கொஞ்சம் இருக்கும்.

எங்க வீட்ல முதல எல்லாம் கடைல தான் பீசா வாங்கி சாப்பிடுவோம். அங்க ரொம்ப சீஸ் எல்லாம் போட்டு இருக்கறதுனால சரி உடம்புக்கு நல்லது இல்ல, நம்மளே வீட்ல சீஸ் கம்மியா போட்டு , மைதாக்கு பதிலா கோதுமை மாவு போட்டு பண்லாம்னு முடிவு பண்ணோம். என்கிட்ட பீசா சாஸ் இல்ல அதுனால நான் இங்கே  தக்காளி சாஸ் உபயோக படுத்திருக்கேன்.
பீசா செய்யுறது சுலபம்ங்கிறதால மாசத்துக்கு ஒரு முறை அல்லது ரெண்டு முறை நாங்களே வீட்ல செய்யவோம். என் husband கூட சேர்த்து ஹெல்ப் பண்ணுவாரு . குக்கிங் ரொம்பவே fun ஆ இருக்கும். 

நான் இங்க மைதா போட்டு பீசா ரெசிபி ஷேர் பண்ணிருக்கேன். சீக்கிரம் கோதுமை பீசா ஷேர் பண்றேன். இந்த ரெசிபி ட்ரை பண்ணி பாத்துட்டு சொல்லுங்க. வேற ஏதும் சந்தேகம் இருந்தாலும் கீழே கமெண்ட் ல சொல்லுங்க. நன்றி!

தேவையான பொருட்கள் 

மைதா - 2 .5 கப்
ஈஸ்ட் - 1 .5 டீஸ்பூன்
சர்க்கரை - 2 டீஸ்பூன்
தண்ணீர் - 1 கப்
எழுப்பில்லாத சிக்கன் - 150 gm 
மிளகாய் தூள் - 1 /4 டீஸ்பூன்
கரம் மசாலா தூள் - 1 /4 டீஸ்பூன்
மிளகு தூள் - 1 /4 டீஸ்பூன்
வெங்காயம், குடைமிளகாய் ( நீளவாக்கில் நறுக்கியது) - 1 கப்
மோசரெல்லா மற்றும் செடார் சீஸ் - 1 கப்
தக்காளி சாஸ் - 3 டேபிள்ஸ்பூன்

எண்ணெய் மற்றும் உப்பு தேவையான அளவு




செய்முறை

பீசா மாவு


  • ஒரு பௌலில் வெதுவெதுப்பான தண்ணீர், ஈஸ்ட், சர்க்கரை சேர்த்து மிஃஸ் செய்து ஒரு 10 நிமிடம் தனியா வையுங்கள்.
  • 10 நிமிடம் கழித்து மைதா மாவு , உப்பு சேர்த்து நன்றாக பிசைந்து கொள்ளுங்கள் . மாவு மேலே 1 ஸ்பூன் எண்ணெய் போட்டு தடவி, ஈர துணி அல்லது ஈர டிஷு போட்டு மாவை ஒரு 2 மணிநேரம் ஊற விடுங்கள்.
சிக்கன் ப்ரை

  • சிக்கனை சிறு துண்டுகளா நறுக்கி, அலசி எடுத்து கொள்ளுங்கள். அதில் மிளகாய் தூள், கரம் மசாலா தூள், சிறிதளவு உப்பு போட்டு பிசறி ஒரு 10 நிமிடம் ஊற விடுங்கள்.
  • 10 நிமிடம் கழித்து, அடுப்பில் ஒரு கடாய் வைத்து சிறிதளவு எண்ணெய் ஊற்றி , ஊற வைத்துள்ள சிக்கனை போட்டு 5 நிமிடம் வறுத்தெடுங்கள். கடைசியாக மிளகு தூள் மற்றும் 1 டேபிள்ஸ்பூன் தக்காளி சாஸ் சேர்த்து அடுப்பை அணைத்து விடுங்கள்.
  • அடுத்து வெங்காயம் மற்றும் குடைமிளகாயை நீளவாக்கில் நறுக்கி வையுங்கள்.
பீசா செய்முறை 

  • 2 மணிநேரம் கழித்து மாவு இரண்டு மடங்காக உப்பி வந்துருக்கும். 
  • ஒரு பெரிய பீசா பான் எடுத்து, அதில் எண்ணெய் போட்டு தடவி விடுங்கள். அதின் மேல் பீசா மாவை, சப்பாத்தி போல் பான் முழுவதும் திரட்டுங்கள்.  
  • மாவை திரட்டியதும் கத்தி அல்லது போர்க் வைத்து அங்கங்கே குத்தி விடுங்கள். இது மாவை பொங்கி வராமல் இருப்பதற்கு செய்கிறோம். பீசா கொஞ்சம் மெல்லிசா, ஓரங்களில் கிரிஸ்பியா இருக்கும்.
  • அடுத்தாக தக்காளி சாஸ் அல்லது பீசா சாஸ் மேல போட்டு முழுவதுமாக பரப்பி விடுங்கள். அடுத்து பாதி சீஸ், வெங்காயம், குடை மிளகாய், சிக்கன் துண்டுகள், மீதம் உள்ள சீஸ் போட்டு விடுங்கள்.
  • அவனில் 350 F or 230 C செட் செய்யது 15 முதல் 17 நிமிடம் வரை பீசாவை bake செய்யுங்கள்.
  • 17 நிமிடம் கழித்து சுவையான, சீஸியான பீசா தயார். சூடாக இருக்கும்போதே கட் செய்யது கொள்ளுங்கள்.
இப்பொழுது சுவையான, சூப்பரான பீசா நம்ம வீட்லயே செய்யலாம். ட்ரை பண்ணி பாத்துட்டு சொல்லுங்கள். நன்றி!

Wednesday, 13 February 2019

உளுந்தங்களி | Urad dal kali (Easy way)

VICKEY RECIPES :)

களி உடம்புக்கு ரொம்பவே ஆரோக்கியமானது. குறிப்பாக பெண் குழந்தைகள் வயதுக்கு வந்த பின் எலும்பு வலு  பெற குடுப்பாங்க. குழந்தைகளுக்கு மட்டும் இல்லை வயதான பின் பெண்களுக்கு வரும் முதுகு வலிக்கும், இதை சாப்பிட்டால் மிகவும் நல்லது. இதுல நிறைய சத்துக்கள் இருக்கு மற்றும் உடம்பை குளிர்ச்சியாய் வச்சுருக்க உதவும்.
களி எனக்கு மிகவும் பிடித்தமான ஒரு உணவு . சின்ன வயசுல என் பாட்டி, அப்புறம் எங்க பக்கத்து வீட்ல இருக்குற பாட்டி அடிக்கடி கிண்டி குடுப்பாங்க. என் அத்தை ( அப்பாவின் தங்கை ) அவங்களும் அப்போப்போ வெந்தய களி செஞ்சு எடுத்துட்டு வருவாங்க . ரொம்பவே சூப்பரா இருக்கும் . வீட்ல என் அம்மா, நானும் பெருசா களி செஞ்சது இல்லை. ஏன்னா அதை செய்ய ரொம்ப கஷ்டமா இருக்கும்னு நினைச்சுட்டு நாங்க பண்ணது இல்லை. கல்யாணத்துக்கு அப்புறம் எனக்கு இந்த ரெசிபி கிடைச்சது. ரொம்பவே சுலபமா செய்ய கூடியதா இருந்துச்சு. அதுக்கு அப்புறம் நானே வாரம் ஒரு முறை அல்லது மாசத்துக்கு ரெண்டு முறையாவது இதை செய்வேன்.

கட்டாயம் மாசத்துக்கு ஒரு முறையாவது நீங்களும், உங்க பெண் குழந்தைகளும் களி செஞ்சு சாப்பிடுங்க. இடுப்பு எலும்புக்கும் ரொம்பவே நல்லது. 

என் கிட்ட கருப்பட்டி இல்லை, அதுனால வெல்லம் போட்டு செஞ்சுருக்கேன். உங்க கிட்ட கருப்பட்டி இருந்த நீங்க அதையே போடலாம்.

களி செஞ்சு பார்த்துட்டு, இல்லை வேற ஏதும் சந்தேகம் இருந்தாலும் கீழே கமெண்ட் ல பதிவிடுங்க. நன்றி!





Tuesday, 12 February 2019

Chocolate Fudge | Valentine Special

VICKEY RECIPES :)


இந்த ரெசிபி சாக்லேட் பிரியர்களுக்காக. இது ரொம்பவே சுலபமா செய்ய கூடிய சாக்லேட். நார்மல் சாக்லேட் விட இது சற்றே வித்தியாசமாகவும், சுவையாகவும் இருக்கும்.  இது வேலெண்டேன் வாரம், இது போல் நிறைய சாக்லேட், கேக் வகைகளை உங்களிடம் சீக்கிரம் பகிர்ந்து கொள்வேன். உங்கள் பிரியமானவர்களுக்கு மற்றும் குழந்தைகளுக்கு இந்த சாக்கெலட்டை செய்து குடுத்து அசத்துங்கள்.  

நான் இங்கே கொடுத்துள்ள அளவின் படி செய்தால் உங்களுக்கு 9 துண்டுகள் கிடைக்கும். அதிகமாக வேண்டுமென்று நினைப்பவர்கள் கொடுத்துள்ள அளவை, இரண்டு மடங்காக போட்டு செய்யுங்கள். Store the chocolate Fudge in fridge.





இதன் செய்முறையை வீடியோவாகவும் எடுத்து கீழே கொடுத்துள்ளேன். நீங்கள் செய்து, ருசித்து பார்த்துவிட்டு உங்கள் கருத்துகளை கீழே பதிவிடுங்கள். என்னோட youtube சேனல் பெயர் "Happy Pots " . உங்கள் கருத்துக்களை அங்கேயும் பதிவிடலாம். மேலும் உங்களுக்கு வேறு என்ன உணவு வகைகள் இங்கே பதிவிட வேண்டும் என்றும் நீங்கள் சொல்லலாம்.
நன்றி!


Thursday, 7 February 2019

Starbucks White Chocolate Mocha | Valentine Special

VICKEY RECIPES:)

நான் ரொம்ப ஆவலா காத்துட்டு இருந்தேன், எப்போடா இந்த ரெசிபிய உங்களோட ஷேர் பண்ணுவோம்னு. இன்னிக்கி அந்த நாள் வந்துடுச்சு. இது பேஸிக்கா ஒரு காபி தான் , ஆனா கொஞ்சம் கிரீமியா, சாக்லேட் எல்லாம் சேர்த்து ரொம்ப யம்மியா இருக்கும்.

Valentine day வருது, அதுனால இந்த வாரம் முழுவதும் இந்த மாதிரி ரெசிபிஸ் ஷேர் பண்ணலாம்னு இருக்கேன்.

பொதுவாவே நான் பெரிய காபி லவ்வர் எல்லாம் கிடையாது. கல்யாணத்துக்கு முன்னாடி வரைக்கும் வைட் சாக்லேட் காபி நான் கேள்வி பட்டதே இல்ல. US வந்த அப்புறம், என் ஹஸ்பண்ட் தான் இங்க starbucks காபி நல்லா இருக்கும் ட்ரை பண்ணி பாருன்னு சொன்னாங்க. சரினு ட்ரை பண்ணேன். ரொம்பவே யம்மியா, கிரீம் எல்லாம் போட்டு சூப்பரா இருந்துச்சு. அதுல இருந்து அந்த காபிக்கும்,அந்த கடைக்கும் fan ஆகிட்டேன். காரணம் என்னனா, அந்த இடம் அவ்ளோ இயற்கையோட ஒன்றி போன மாதிரி இருக்கும், ஒரு காபி வாங்கிட்டு நீங்க எவ்ளோ நேரம் வேணும் நாளும் அங்க இருக்கலாம், free wifi.
ஸ்டுடென்ட்ஸ் எல்லாம் லேப்டாப், புக் வச்சுட்டு படிச்சுட்டு இருப்பாங்க. ரொம்பவே மனசுக்கு இதமான ஓர் இடமா இருக்கும். நாங்க வீக்கெண்ட்ல எங்கயாவது ட்ரிப் மாதிரி போன, முதல starbucks ல போய் ஒரு காபி வாங்கிட்டு தான் கிளம்புவோம்.

என்னோட கதையை பாத்தாச்சு, இப்போ ரெசிபிக்கு போகலாம். நீங்களும் இந்த வித்யாசமான, அருமையான காபிய உங்களுக்கு விருப்பமானவர்களுக்கு போட்டு குடுத்து அசத்துங்க. இன்னும் நீங்க அசத்துரத்துக்கு,  இன்னும் நிறைய ரெசிபிஸ் சீக்கிரமே ஷேர் பண்றேன்.
நன்றி!





இதோட வீடியோவும் இங்க போட்ருக்கேன். இந்த ரெசிபி செஞ்சுட்டு உங்க கமெண்டுகளை கீழே பதிவுடுங்க.



Monday, 4 February 2019

Madras Fish Curry | மெட்ராஸ் மீன் குழம்பு

VICKEY'S RECIPES :)



ஹாய் ப்ரண்ட்ஸ் ,
இந்த புது வருடம் , புது மாதம் அப்போ ஒரு புது முயற்சி எடுக்கிறேன். எப்போவும் ப்ளாக்ல போடுற மாதிரி  ரெசிபி போடறதுக்கு பதிலா ஒரு புது முயற்சியா pdf வடிவத்துல போடணும்னு ஆசை பட்டு போடுறேன். உங்களுக்கு இது பிடிச்சிருக்கா,இல்லையா , இல்லை இதை வேற என்ன மாதிரி மாத்தலாம்னு உங்க கருத்துக்களை கீழ பதிவிடுங்க. உங்களுக்கும் இன்னும் ஒரு ஆச்சரியம் கீழே காத்திருக்கு அதையும் கொஞ்சம் பாருங்க.





இன்னொரு ஆச்சரியம் என்னனா நான் புது youtube சேனல் ஆரம்பிச்சுருக்கேன். படிச்சு சமைக்கிறதா விட, அதை பாத்து சமைச்சா நல்ல இருக்கும்னு சில கருத்துக்கள் வந்ததுனால இந்த முயற்சி. இந்த வீடியோவும் பாத்துட்டு உங்கள் கருத்துக்களை பதிவிடுங்க. மேலும் இன்னும் வேற என்ன மாதிரியான சமையல் எதிர் பாக்கிறீங்கனும்னு சொல்லுங்க. நன்றி!


Saturday, 2 February 2019

Chicken hakka noodles | சிக்கன் நூடுல்ஸ்

VICKEY'S RECIPES :)

நான் வந்துட்டேனு சொல்லு , திரும்பி வந்துட்டேனு சொல்லு . ஒரு மாசத்துக்கு முன்னாடி எப்படி போனேனோ அப்படியே திரும்பி வந்துட்டேனு சொல்லு விக்கிடா :) :). 
என்னப்பா பண்றது லேப்டாப் கொஞ்சம் மக்கர் பண்ணிடுச்சு . உங்க வீட்டு பிள்ளையா நினைச்சு மன்னிச்சுக்கோங்கபா . இது வரைக்கும் ஆதரவு கொடுத்தவர்களுக்கும், இனி கொடுக்க போகிறவர்களுக்கும் மிக்க நன்றி . 
இன்னிக்கி நம்ம பார்க்க போற ரெசிபி சிக்கன் நூடுல்ஸ் . எப்போ ஹோட்டல் போனாலும் நூடுல்ஸ் , fried ரைஸ் ஆர்டர் பண்ணிடுவோம் . எனக்கு நூடுல்ஸ் விட fried ரைஸ் தான் பிடிக்கும் . என் husband தான் நூடுல்ஸ் ரொம்ப விரும்பி சாப்பிடுவாங்க. மாசத்துக்கு 2 அல்லது 3 தடவை வீட்லயே செஞ்சிடுவோம் . இந்த ரெசிபி நம்ம ஊர் ரோட்டறோம் இருக்குற தள்ளுவண்டி நூடுல்ஸ் மாதிரி இருக்கும் . சிக்கன் எல்லாம் வறுத்து போடுறதுனால. நீங்க எல்லாரும் இந்த ரெசிபி ட்ரை பண்ணி பாத்துட்டு சொல்லுங்க. இப்போ நம்ம ரெசிபிக்கு போகலாம் வாங்க.


தேவையான பொருட்கள் 

hakka நூடுல்ஸ் பாக்கெட் - 2 
முட்டை - 4 
எலும்பு இல்லாத சிக்கன் - 250 gm 
இஞ்சி - 1 இன்ச் பொடியாக நறுக்கியது 
பூண்டு - 5 பல் (பொடியாக நறுக்கியது )
பச்சை மிளகாய் - 3 அல்லது 4 (பொடியாக நறுக்கியது )
பெரிய வெங்காயம் - 1 
கேரட் - 1 
முட்டைகோஸ் - 1 /2 கப் (நீளவாக்கில் நறுக்கியது)
குடை மிளகாய் - 1 
சோயா சாஸ் - 1 டீஸ்பூன் 
தக்காளி சாஸ் - 1 டேபிள்ஸ்பூன் 
சிவப்பு மிளகாய் சாஸ் - 1 டேபிள்ஸ்பூன்
மிளகாய் தூள் - 1 டீஸ்பூன் 
கரம் மசாலா தூள் - 1 டீஸ்பூன் 
மிளகு தூள் - 1 டீஸ்பூன் 
எண்ணெய் மற்றும் உப்பு தேவையான அளவு 

செய்முறை 

  • சிக்கனை நன்றாக அலசிவிட்டு , பொடியாக நறுக்கி அதில் மிளகாய் தூள் , கரம் மசாலா தூள் , சிறிதளவு உப்பு போட்டு நன்றாக பிசைந்து ஒரு 15 நிமிடம் ஊற வையுங்கள்.
  • நூடுல்ஸ் பாக்கெட் பின்னால் கொடுத்துள்ள முறைப்படி அதை வேக வைக்க வேண்டும். ஒரு பாத்திரத்தில் 10 கப் தண்ணீர் எடுத்து அதை நன்றாக கொதித்த வைத்து ,பின் அதில் 1 /2 ஸ்பூன் உப்பு , 1 ஸ்பூன் எண்ணெய் , நூடுல்ஸ் சேர்த்து 3 முதல் 5 நிமிடம் வரை வேக வைக்கணும் . வெந்த உடன் நூடுல்ஸ் எடுத்து ஒரு பாத்திரத்தில் தனியாக எடுத்து வையுங்கள்.




  • ஒரு அகலமான பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி காய்ந்த உடன், 4 முட்டை உடைத்து சேருங்கள் , அதில் சிறிதளவு உப்பு , 1 / 4 டீஸ்பூன் மிளகு தூள் சேர்த்து நன்றாக வறுத்து எடுத்து தனியாக வையுங்கள்.


    • அதே பாத்திரத்தில் கொஞ்சம் எண்ணெய் சேர்த்து ஊற வைத்துள்ள சிக்கனை சேர்த்து ஒரு 5 நிமிடம் வதக்குங்கள். வதங்கிய பின்னர் இஞ்சி பூண்டு , பச்சை மிளகாய் ,வெங்காயம் ,மற்றும் அனைத்து காய்கறிகளையும் சேர்த்து 2 முதல் 3 நிமிடம் வதக்குங்கள்.


    • அடுத்து அனைத்து சாஸ் வகைகளையும் போட்டு ஒரு நிமிடம் வதக்கி விட்டு , பின் பொரித்து வைத்துள்ள முட்டை மற்றும் நூடுல்ஸ் , 1 ஸ்பூன் மிளகு தூள் சேர்த்து ஒன்றோடு ஒன்று சேரும் படி நன்றாக கிளறுங்கள். உப்பு சேர்க்கும்போது டேஸ்ட் பாத்துட்டு சேர்த்துக்கோங்க ஏன்னா சாஸ்ல , அப்புறம் நூடுல்ஸ் வேக வைக்கும்போது உப்பு சேர்த்துருக்கோம் . 


    சூடான , டேஸ்டியான சிக்கன் நூடுல்ஸ் ரெடி . நீங்களும் செஞ்சு சுவைத்து பாத்துட்டு உங்க கருத்துக்களை இங்கே பதிவிடுங்க. நன்றி :)



    Thursday, 3 January 2019

    கத்திரிக்காய் வற்றல்

    Raagaa's Recipes:

    தேவையானவை: 

    கத்திரிக்காய் - கால் கிலோ, 

    புளித் தண்ணீர் - சிறிதளவு, 

    மஞ்சள்தூள் - ஒரு சிட்டிகை, 

    உப்பு - தேவையான அளவு.




    செய்முறை: 

    கத்திரிக்காயை சிறு துண்டுகளாக நறுக்கி, ஒரு நாள் வெயிலில் காயவைத்து எடுத்துக்கொள்ளவும். இதனுடன் புளித் தண்ணீர் உப்பு, மஞ்சள்தூள் சேர்த்து அடுப்பில் வைத்து  கொஞ்ச நேரம் கொதிக்கவிடவும். 


    வெந்ததும் நீரை வடித்து, திரும்பவும் 2 நாட்கள் வெயிலில் காயவைத்து உபயோகப்படுத்தவும்.


    இதை வதக்கி பயன்படுத்தி குழம்பு செய்தால்... ருசியாக இருப்பதுடன், வாசனை ஊரைக் கூட்டும்.

    Kaima Idli | கைமா இட்லி

    VICKEY'S RECIPES :)


    எல்லாருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் . லேட்டா விஷ் பண்ணாலும் லேட்டஸ்ட் ரெசிபியோட வந்திருக்கேன். இட்லி பிடிக்காதவங்க கூட இதை ரொம்ப விரும்பி சாப்பிடுவாங்க. பிரெஷ் இட்லி விட, மீந்து போன இட்லியை யூஸ் பண்ணிங்கனா நல்லா இருக்கும்.. ஏன்னா இட்லியை ப்ரை செஞ்சு சேர்க்க போறோம் . பிரெஷ் இட்லியா இருந்த உதிர்ந்துடும் அதுனால மீந்து போன இட்லி இந்த ரெசிபிக்கு யூஸ் பண்ண போறோம்.

    சரவணா பவன் ஹோட்டல்ல இந்த ரெசிபி பேமஸ்னு சொல்லுவாங்க பட் நான் அங்க டேஸ்ட் பண்ணது இல்ல . சின்ன வயசுல பெரியம்மா கூட கோவில்பட்டி போயிருந்தேன் ,அப்போ அங்க ஒரு ஹோட்டல்ல இந்த ரெசிபி ட்ரை பண்ணேன் . செம டேஸ்ட் , இட்லிய இப்படியெல்லாம் செஞ்சு சாப்பிடலாமான்னு அப்போ தான் தெரிஞ்சது. சான்ஸே இல்ல . அதுக்கு அப்புறம் நானும் பெரியம்மாவும் வீட்டுல இத ட்ரை பண்ணோம் ஜஸ்ட் வெங்காயம் , தக்காளி , இட்லி கொஞ்சம் மசாலா எல்லாம் போட்டு ட்ரை பண்ணோம் பட் அந்த டேஸ்ட் வரல. கொஞ்ச வருஷத்துக்கு முன்னாடி நெட்ல இந்த ரெசிபி பார்த்தேன் . உடனே ட்ரை பண்ணலாம்னு நினைச்சா, மீந்து போன இட்லி வேணும்னு போட்ருந்தது . ஒரு நாள் வெயிட் பண்ணி இதை செஞ்சேன் . டேஸ்ட் அல்லிருச்சு . Finally i got the same taste , same recipe :) :) .

    நீங்களும் இந்த அருமையான கைமா இட்லி செஞ்சு பாருங்க . எப்படி இருந்ததுன்னு உங்க கமெண்ட்ஸ் சொல்லுங்க.

    தேவையான பொருட்கள்

    மீந்து போன இட்லி - 5
    சோம்பு - 1 / 2 டீஸ்பூன்
    கறிவேப்பில்லை
    பெரிய வெங்காயம் - 1
    தக்காளி - 2
    பச்சை மிளகாய் - 2
    பச்சை குடைமிளகாய் - 1 /2
    பச்சை பட்டாணி - 1 /4 கப் (optional )
    இஞ்சி பூண்டு விழுது - 1 /2 டீஸ்பூன்
    மிளகாய் தூள் - 1 / 2 டீஸ்பூன்
    மல்லி தூள் -1 /2 டீஸ்பூன்
    பிரியாணி பவுடர் அல்லது சிக்கன் 65 பொடி-1 /4 டீஸ்பூன்
    உப்பு மற்றும் எண்ணெய் தேவையான அளவு
    தக்காளி சாஸ் - 1 டேபிள்ஸ்பூன்
    கொத்தமல்லித்தழை அலங்கரிக்க

    செய்முறை


    • இட்லியை பிரிட்ஜ்ல் ஒரு 5 முதல் 6 மணிநேரம் வைக்கவும் . பின் அதை எடுத்து நான்கு துண்டுகளாக வெட்டி எண்ணையில் பொன்னிறமாகும் வரை பொரித்து எடுக்கவும்.

    • ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சோம்பு , கறிவேப்பிலை சேர்த்து தாளிக்கவும் . அடுத்து பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய் சேர்க்கவும்.
    • சிறுது நேரம் வெங்காயம் வதக்கிய பின்னர் , இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்குங்கள். அடுத்து மிளகாய் தூள், மல்லி தூள், சிக்கன் 65 போடி சேர்த்து ஒரு நிமிடம் வதக்குங்கள்.
    • மிக்ஸியில் தக்காளியை விழுதாக அரைத்து கடாயில் சேர்க்கவும்.

    • ஒரு 10 நிமிடத்தில் தக்காளி பச்சை வாசனை போய் எண்ணெய் மேலே மிதந்து வரும். அப்பொழுது பொடியாக நறுக்கிய குடமிளகாய் சேர்த்து 2 நிமிடம் வதக்குங்கள். அப்புறம் தக்காளி சாஸ் , உப்பு சேர்த்து பொறித்த இட்லி துண்டுகளை சேர்த்து கிளறுங்கள்.
    • கொத்தமல்லித்தழை , துருவிய கேரட் சேர்த்து அலங்கரிக்கவும்.

    சுவையான கைமா இட்லி ரெடி.இதை சூடாக இருக்கும்போது சாப்பிட்டால்  நன்றாக இருக்கும். 

    Friday, 28 December 2018

    Instant Paalkova | Srivilliputtur Special | இன்ஸ்டன்ட் பால்கோவா (ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்பெஷல்)


    VICKEY'S RECIPES :)

    நான் பால்கோவா பாத்தாலே Motu Patlu கார்ட்டூன் ல எப்படி அவன் சமோசாஆ னு பறந்து போவானோ அதே மாதிரி நானும் போயிடுவேன் . அதுவும் பால்கோவாக்கு பேரு போன ஊர்ல பொறந்துட்டு பால்கோவா பிடிக்காம போகுமா சொல்லுங்க .எங்க அப்பா சண்டே அன்னைக்கு கடைல இருந்து சீக்கிரம் வீட்டுக்கு வந்துடுவாங்க . அவர் வீட்டுக்குள்ள வர்றதுக்கு முன்னாடி பால்கோவா என் கைக்கு வந்துடும் (எங்க அம்மா Gate தொறக்க போகும்போது First பால்கோவா எடுத்துட்டு வந்து என்கிட்ட குடுத்துடுவாங்க ). எப்போவும் எனக்கு சண்டே டின்னர் 250gm பால்கோவா தான் :) :) . சீக்கிரமே வாங்கிட்டு வரதுனால பால்கோவா மிதமான சூட்டோட இருக்கும் . அப்டியே சாப்ட்ருவேன் . என் கதையை பார்த்தாச்சு இப்போ ஆண்டாள் கதை பாப்போம். மார்கழி மாசம் வேற!

    ஆண்டாள் கல்யாணம் அப்போ, பெரியாழ்வார் பால்கோவா, அப்புறம் சில தானிய வகைகள் எல்லாம் "பிறந்த வீட்டு சீர்" ஆக அனுப்பி வச்சாரு. இத இப்போவும் நெறய பேர் நடைமுறைல பண்ணிட்டு  இருக்காங்க . ஆண்டாள் கோவில்ல விஷ்ணு கடவுளுக்கு பால்கோவா பிரசாதமா படைப்பாங்க. 

     சிநேகிதி புக்ல சமையல் டிப்ஸ் பக்கத்துல இந்த ரெசிபி போட்ருந்தாங்க . அப்போலாம் நான் நினைச்ச உடனே அப்பாவ கடைல இருந்து வாங்கிட்டு வர சொல்லி சாப்ட்ருவேன். இப்போ கல்யாணத்துக்கு அப்புறம் US வந்துட்டதால பால்கோவா சாப்பிட முடியாம போச்சு. அப்போ தான் ஒரு நாள் சிநேகிதி புக்ல படிச்சது ஞாபகம் வந்துச்சு. உடனே இந்த இன்ஸ்டன்ட் ரெசிபி ட்ரை பண்ணேன். ப்ப்ப்ப்பா!!!!! அப்டியே ஊர் டேஸ்ட். சுடச்சுட கொஞ்சம் குழைவா, செமயா இருந்துச்சு. அதனால அதே ரெசிபியை இங்க உங்ககிட்ட பகிர்ந்துக்கிறேன். ரெசிபி கீழ இருக்கு. படிச்சு பாருங்க.  பால்கோவாவ செஞ்சும் பாருங்க. உங்க கமெண்டுக்காக ஐ யாம் வெயிட்டிங்..!!!


    தேவையான பொருட்கள்

    Milk Powder - 1 கப்
    Sugar - 1 / 2 கப்
    தண்ணீர் தேவையான அளவு 

    செய்முறை 

    • ஒரு மிக்ஸிங் பௌலில் மில்க் பவுடர், சுகர், தண்ணீர் சேர்த்து தோசை மாவு பதத்திற்கு கரைத்து கொள்ளுங்கள். 



    • Microwave Oven இல் இந்த பௌல் வைத்து ஒரு நிமிடம் time செட் செய்யவும். ( என்னோடது 1200 W power oven ).
    • அந்த கரைசல் கொஞ்ச நேரத்துல பொங்கி வரும் . அப்டி வரும் பொது உடனே ஸ்டாப் பண்ணிடுங்க இல்லேன்னா பொங்கி வழிஞ்சுடும் . ஒரு வேளை 1 நிமிஷத்துல பொங்கி வரலேன்னா மறுபடியும் ஒரு 30 செகண்ட் வையுங்க. அது அடுத்தும் பொங்கி வரும் .
    • இதே மாதிரி 30 செகண்ட் ஒவ்வொரு தடவையும் வச்சு, பொங்கி வரும்போது ஸ்டாப் செஞ்சு கிளறி விட்டுட்டு இருங்க. ஒரு 2 முதல் 5 நிமிஷத்துல கொஞ்சம் குழைவா வந்துடும். இப்ப சுவையான, அருமையான, ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவா ரெடி.


    - Vicky

    Wednesday, 26 December 2018

    மல்லி காபி

    Raagaa's Recipes:

    தேவையானவை:  

    தனியா - 150 கிராம், 

    சுக்கு - 50 கிராம், 

    மிளகு - 10 கிராம், 

    திப்பிலி - 10 கிராம், 

    சித்தரத்தை - 10 கிராம், 

    சதகுப்பை - 10 கிராம், 

    பனை வெல்லம் - தேவையான அளவு.


    செய்முறை: 


    பனை வெல்லம் நீங்கலாக  மற்ற பொருட்களை தனித்தனியே வெறும் வாணலியில் வறுத்து, ஆற வைத்து, மிக்ஸியில் நைஸாக பொடிக்கவும். 


    இந்தப் பொடியை காற்றுப் புகாத, ஈரமில்லாத டப்பாவில் போட்டு வைக்கவும். 


    தேவையானபோது ஒரு டம்ளர் தண்ணீருக்கு இரண்டு டீஸ்பூன் பொடி, தேவையான அளவு பனை வெல்லம் சேர்த்து நன்கு கொதிக்கவிட்டு, இறக்கி வடிகட்டினால்... மணமான மல்லி காபி ரெடி!


    குறிப்பு: சித்தரத்தையை நன்கு தட்டி உடைத்த பின் வறுக்கவும்.

    Tuesday, 25 December 2018

    Pista icecream

    VICKEY'S RECIPES :)


    2 மினிட்ஸ் நூடுல்ஸ் மாதிரி இந்த ஐஸ் கிரீம் நீங்க 5 நிமிஷத்துல ரெடி பண்ணிடலாம் . இத செய்யுறதுக்கு கொஞ்ச பொருள் தான் தேவை. எல்லாத்தையும் மிக்ஸ் பண்ணிட்டு 6 முதல் 8 மணி நேரம் பிரிட்ஜ்ல வச்சிருந்த போதும் டேஸ்டியான ஐஸ் கிரீம் ரெடி. நான் இதுல கலர் ஏதும் add பண்ணல natural color தான் . கடைல வாங்குற மாதிரி பச்சை கலர்ல இந்த ஐஸ்கிரீம் இருக்காது பட் டேஸ்ட் கடை டேஸ்ட்ல கண்டிப்பா இருக்கும்.

    தேவையான பொருட்கள்

    whipping cream or fresh cream - 2 cup
    பிஸ்தா எசென்ஸ் - 2 டீஸ்பூன்
    வறுத்த பிஸ்தா பருப்பு - 3 டேபிள்ஸ்பூன்
    milkmaid - 1 cup

    செய்முறை


    • ஒரு மிக்ஸிங் பௌலில் whipping cream or fresh cream , பிஸ்தா எசென்ஸ் சேர்த்து ஒரு 2 நிமிடம் beater வச்சு நன்றாக அடிக்கவும்.

    • அடுத்து milkmaid சேர்த்து ஒரு 2 நிமிடம் அடிக்கவும்.


    • கடைசியாக வறுத்த பிஸ்தா பருப்பை மிக்ஸியில் பொடித்து இந்த கலவையில் சேர்த்து ஒரு 1 நிமிடம் அடிக்கவும்.





    • ஒரு tight container box எடுத்து அதில் இந்த கலவை ஊற்றி பிரிட்ஜ்ல் 6 முதல் 8 மணிநேரம் வைக்கவும்.

    சுவையான ஐஸ்கிரீம் தயார் . ஒரு பௌலில் ஐஸ்கிரீம் வைத்து அதில் மேல் அவரவர் விருப்பமான toppings சேர்த்து சாப்பிடுங்கோ . எனக்கு whipped cream , hot fudge toppings போட்டு சாப்பிட பிடிக்கும் உங்க எல்லாருக்கும் எப்படி :)




    Saturday, 22 December 2018

    எள் துவையல்

    Raagaa's Recipes:

    தேவையானவை: 

     கறுப்பு எள் - அரை கப், 

    காய்ந்த மிளகாய் - 5, 

    தேங்காய் துருவல் - 3 டேபிள்ஸ்பூன், 

    கறிவேப்பிலை - ஒரு ஆர்க்கு, 

    புளி - கோலி அளவு, 

    உப்பு - தேவைக்கேற்ப.


    செய்முறை


    வெறும் வாணலியை சூடாக்கி எள்ளை வறுத்துக் கொள்ளவும். உப்பு தவிர மற்ற பொருட்களையும் வெறும் வாணலியில் வறுக்கவும். 


    எல்லாவற்றையும் ஒன்றாக சேர்த்து, உப்பு சேர்த்து, சிறிதளவு தண்ணீர் விட்டு கெட்டியாக அரைத்துக் கொள்ளவும்.

    அவ்வளவேதான், எள்ளு துவையல் ரெடி ...

    எள், இரும்புச்சத்து மிக்கது, ஆதலால் உடலுக்கு ரொம்பவே நல்லது. முயன்று பாருங்கள் தோழமைகளே....

    Tuesday, 18 December 2018

    Dhaba style paneer masala

    VICKEY'S RECIPES :)

    இந்த ரெசிபி என் ப்ரண்ட் கிட்ட இருந்து சுட்டுட்டேன் . சமீபத்துல அவங்க பொண்ணு பிறந்தநாளுக்கு இந்த ரெசிபி பண்ணிருந்தாங்க . கூடவே நெறய ரெசிபீஸும் இருந்துச்சு ஆனா இந்த பன்னீர் மசாலா தான் பஸ்ட் காலியாச்சு . அப்டியே கடைல வாங்குற பன்னீர் பட்டர் மசாலா டேஸ்ட் அவ்ளோ சூப்பரா இருந்துச்சு எல்லாரும் சப்பு கொட்டிட்டு போட்டி போட்டு சாப்பிட்டோம் .அடுத்த நாளே அவங்க கிட்ட இந்த ரெசிபி கேட்டு வாங்கிட்டேன் . உடனே பிரிட்ஜ்க்குள்ள இருந்து பன்னீர் எடுத்து ரெசிபி ட்ரை பண்ணிட்டேன் . சேம் டேஸ்ட் ,சூப்பரா இருந்துச்சு நீங்களும் ட்ரை பண்ணிட்டு சொல்லுங்கோ .   

    தேவையான பொருட்கள் 

    ஊற வைக்க :
    பன்னீர் - 1 பாக்கெட்
    மஞ்சள் தூள் - 1 / 4 டீஸ்பூன்
    காஷ்மீரி மிளகாய் தூள் - 1 /4 டீஸ்பூன்
    கரம் மசாலா தூள் - 1 /2 டீஸ்பூன்
    உப்பு சிறிதளவு 
    நெய் - 1 டேபிள்ஸ்பூன் 

    For masala :
    பெரிய வெங்காயம் - 1 
    தக்காளி - 3 
    சீரகம் - 1 / 2 டீஸ்பூன்
    பட்டை - 1 
    கிராம்பு - 4 
    ஏலக்காய் - 1 
    இஞ்சி பூண்டு விழுது - 1 ஸ்பூன்
    மிளகு தூள் - 1 / 4 டீப்சூன்
    காஷ்மீரி மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
    கரம் மசாலா தூள் - 1 / 2 ஸ்பூன்
    மல்லி தூள் - 1 / 2 டீஸ்பூன் 
    சீரகதூள் - 1 / 2 டீஸ்பூன் 
    கடலை மாவு - 1 ஸ்பூன் 
    கஸ்தூரி மேத்தி- 1 ஸ்பூன் 
    சர்க்கரை - 1 /4 டீஸ்பூன் 
    கொத்தமல்லித்தழை 
    உப்பு தேவையான அளவு
    எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன்
    நெய் - 1 ஸ்பூன்

    செய்முறை 

    • பன்னீரை சிறு துண்டுகளாக கட் செய்து அதில் ஊற வைக்க வேண்டிய மசாலா பொடிகளை சேர்த்து பிரட்டி ஒரு 15 நிமிடம் ஊற வைக்க வேண்டும் . பின்னர் ஒரு தவாவில் நெய் சேர்த்து பன்னீரை ஒரு 2 முதல் 5 நிமிடம் வதக்கவும். 


    FOR MASALA :

    • ஒரு கடையில் எண்ணெய் மற்றும் நெய் சேர்த்து அது சூடான பின்பு பட்டை , கிராம்பு , சீரகம் , ஏலக்காய் சேர்க்கவும். பெரிய வெங்காயத்தை மிக்ஸியில் விழுதாக அரைத்து பின்னர் கடையில் சேர்க்கவும்.




    • வெங்காயத்தின் பச்சை வாசனை போன உடன் இஞ்சி பூண்டு விழுது , மசாலா தூள்கள் அனைத்தையும் சேர்த்து ஒரு 2 நிமிடம் வதக்கவும். அடுத்து கொத்தமல்லித்தழை சேர்க்கவும்.


    • அடுத்து 3 தக்காளியும் மிக்ஸியில் விழுதாக அரைத்து சேர்க்கவும் . மூடி போட்டு சிம்ல ஒரு 10 நிமிடம் வையுங்கள் . அடிபிடிக்காமல் இருக்க அடிக்கடி அத தொறந்து கிளறுங்கள் . பச்சை வாசனை போன பின் கஸ்தூரி மேத்தி சேர்க்கவும் .


    • பின் பொறித்த பன்னீரை சேர்த்து கிளறுங்கள்.



    • கடைசியாக சர்க்கரை , உப்பு சேர்க்கவும்.

     Dhaba style paneer masala ready . Serve it with chapathi , naan .









    எழுத்தாளர்கள் கவனத்திற்கு

    இந்த தளத்தினில் உங்களது படைப்புகளையும் இடம்பெறச் செய்ய விரும்பினால், rheamoorthy6@gmail.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் செய்யவும்.