This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License. Readers dont try to copy the content here.

Thursday, 3 January 2019

Kaima Idli | கைமா இட்லி

VICKEY'S RECIPES :)


எல்லாருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் . லேட்டா விஷ் பண்ணாலும் லேட்டஸ்ட் ரெசிபியோட வந்திருக்கேன். இட்லி பிடிக்காதவங்க கூட இதை ரொம்ப விரும்பி சாப்பிடுவாங்க. பிரெஷ் இட்லி விட, மீந்து போன இட்லியை யூஸ் பண்ணிங்கனா நல்லா இருக்கும்.. ஏன்னா இட்லியை ப்ரை செஞ்சு சேர்க்க போறோம் . பிரெஷ் இட்லியா இருந்த உதிர்ந்துடும் அதுனால மீந்து போன இட்லி இந்த ரெசிபிக்கு யூஸ் பண்ண போறோம்.

சரவணா பவன் ஹோட்டல்ல இந்த ரெசிபி பேமஸ்னு சொல்லுவாங்க பட் நான் அங்க டேஸ்ட் பண்ணது இல்ல . சின்ன வயசுல பெரியம்மா கூட கோவில்பட்டி போயிருந்தேன் ,அப்போ அங்க ஒரு ஹோட்டல்ல இந்த ரெசிபி ட்ரை பண்ணேன் . செம டேஸ்ட் , இட்லிய இப்படியெல்லாம் செஞ்சு சாப்பிடலாமான்னு அப்போ தான் தெரிஞ்சது. சான்ஸே இல்ல . அதுக்கு அப்புறம் நானும் பெரியம்மாவும் வீட்டுல இத ட்ரை பண்ணோம் ஜஸ்ட் வெங்காயம் , தக்காளி , இட்லி கொஞ்சம் மசாலா எல்லாம் போட்டு ட்ரை பண்ணோம் பட் அந்த டேஸ்ட் வரல. கொஞ்ச வருஷத்துக்கு முன்னாடி நெட்ல இந்த ரெசிபி பார்த்தேன் . உடனே ட்ரை பண்ணலாம்னு நினைச்சா, மீந்து போன இட்லி வேணும்னு போட்ருந்தது . ஒரு நாள் வெயிட் பண்ணி இதை செஞ்சேன் . டேஸ்ட் அல்லிருச்சு . Finally i got the same taste , same recipe :) :) .

நீங்களும் இந்த அருமையான கைமா இட்லி செஞ்சு பாருங்க . எப்படி இருந்ததுன்னு உங்க கமெண்ட்ஸ் சொல்லுங்க.

தேவையான பொருட்கள்

மீந்து போன இட்லி - 5
சோம்பு - 1 / 2 டீஸ்பூன்
கறிவேப்பில்லை
பெரிய வெங்காயம் - 1
தக்காளி - 2
பச்சை மிளகாய் - 2
பச்சை குடைமிளகாய் - 1 /2
பச்சை பட்டாணி - 1 /4 கப் (optional )
இஞ்சி பூண்டு விழுது - 1 /2 டீஸ்பூன்
மிளகாய் தூள் - 1 / 2 டீஸ்பூன்
மல்லி தூள் -1 /2 டீஸ்பூன்
பிரியாணி பவுடர் அல்லது சிக்கன் 65 பொடி-1 /4 டீஸ்பூன்
உப்பு மற்றும் எண்ணெய் தேவையான அளவு
தக்காளி சாஸ் - 1 டேபிள்ஸ்பூன்
கொத்தமல்லித்தழை அலங்கரிக்க

செய்முறை


  • இட்லியை பிரிட்ஜ்ல் ஒரு 5 முதல் 6 மணிநேரம் வைக்கவும் . பின் அதை எடுத்து நான்கு துண்டுகளாக வெட்டி எண்ணையில் பொன்னிறமாகும் வரை பொரித்து எடுக்கவும்.

  • ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சோம்பு , கறிவேப்பிலை சேர்த்து தாளிக்கவும் . அடுத்து பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய் சேர்க்கவும்.
  • சிறுது நேரம் வெங்காயம் வதக்கிய பின்னர் , இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்குங்கள். அடுத்து மிளகாய் தூள், மல்லி தூள், சிக்கன் 65 போடி சேர்த்து ஒரு நிமிடம் வதக்குங்கள்.
  • மிக்ஸியில் தக்காளியை விழுதாக அரைத்து கடாயில் சேர்க்கவும்.

  • ஒரு 10 நிமிடத்தில் தக்காளி பச்சை வாசனை போய் எண்ணெய் மேலே மிதந்து வரும். அப்பொழுது பொடியாக நறுக்கிய குடமிளகாய் சேர்த்து 2 நிமிடம் வதக்குங்கள். அப்புறம் தக்காளி சாஸ் , உப்பு சேர்த்து பொறித்த இட்லி துண்டுகளை சேர்த்து கிளறுங்கள்.
  • கொத்தமல்லித்தழை , துருவிய கேரட் சேர்த்து அலங்கரிக்கவும்.

சுவையான கைமா இட்லி ரெடி.இதை சூடாக இருக்கும்போது சாப்பிட்டால்  நன்றாக இருக்கும். 

No comments:

Post a Comment

எழுத்தாளர்கள் கவனத்திற்கு

இந்த தளத்தினில் உங்களது படைப்புகளையும் இடம்பெறச் செய்ய விரும்பினால், rheamoorthy6@gmail.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் செய்யவும்.