This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License. Readers dont try to copy the content here.
Showing posts with label பாடல் வரிகள். Show all posts
Showing posts with label பாடல் வரிகள். Show all posts

Tuesday, 6 November 2018

இன்னும் என்ன தோழா,

இன்னும் என்ன தோழா, எத்தனையோ நாளா?

நம்மை இங்கு நாமே தொலைத்தோமே!

நம்ப முடியாதா? நம்மால் முடியாதா?

நாளை வெல்லும் நாளாய் செய்வோமே!


யாரும் இல்லை தடை போட

உன்னை மெல்ல இடை போட

நம்பிக்கையில் நடைபோட சம்மதமே!

என்ன இல்லை உன்னோடு!

ஏக்கம் என்ன கண்ணோடு!

வெற்றி என்றும் வலியோடு பிறந்திடுமே.


வந்தால் அலையாய் வருவோம்!

வீழ்ந்தால் விதையாய் விழுவோம்!

மீண்டும் மீண்டும் எழுவோம்! , எழுவோம்!

இன்னும் இன்னும் இறுக!

உள்ளே உயிரும் உருக!

இளமை படையே வருக!

எழுக!!!!


இன்னும் என்ன தோழா, , எத்தனையோ நாளா?

நம்மை இங்கு நாமே தொலைத்தோமே!

நம்ப முடியாதா? நம்மால் முடியாதா?

நாளை வெல்லும் நாளாய் செய்வோமே!


மனம் நினைத்தால் அதை தினம் நினைத்தால்

நெஞ்சம் நினைத்ததை முடிக்கலாம்!

தொடு வானம் இனி தொடும் தூரம்!

பலர் கைகளை சேர்க்கலாம்!


விதை விதைத்தால்

நெல்லை விதை விதைத்தால்

அதில் கள்ளி பூ முளைக்குமா?

நம் தலைமுறைகள்

நூறு கடந்தாலும்

தந்த வீரங்கள் மறக்குமா?


ஒரே பலம் ஒரே குணம்

ஒரே தடம் எதிர் காலத்தில்

அதே பலம் அதே இடம்

அகம் புறம் நம் தேகத்தில்


கழுத்தோடும் ஒரு ஆயுதத்தை

தினம் களங்களில் சுமக்கிறோம்

எழுத்தோடும் ஒரு ஆயுதத்தை

எங்கள் மொழியினில் சுவைகிறோம்


பனி மூட்டம் வந்து படிந்தென்ன

சுடும் பகலவன் மறையுமா?

அந்த பகை மூட்டம் வந்து பணியாமல்

எங்கள் இரு விழி உறங்குமா?


இதோ இதோ இணைந்ததோ

இனம் இனம் நம் கையோடு!

அதோ அதோ தெரிந்ததோ

இடம் இடம் நம் கண்ணோடு!


யாரும் இல்லை தடை போட

உன்னை மெல்ல இடை போட

நம்பிக்கையில் நடைபோட சம்மதமே!

என்ன இல்லை உன்னோடு!

ஏக்கம் என்ன கண்ணோடு!

வெற்றி என்றும் வலியோடு பிறந்திடுமே!


வந்தால் அலையாய் வருவோம்!

வீழ்ந்தால் விதையாய் விழுவோம்!

மீண்டும் மீண்டும் எழுவோம்! , எழுவோம்!

இன்னும் இன்னும் இறுக!

உள்ளே உயிரும் உருக!

இளமை படையே வருக!

எழுக!!!! 

வாடி ராசாத்தி

வாடி ராசாத்தி

புதுசா இளசா ரவுசா போவோம்


வாடி வாலாட்டி

நரியா புலியா தனியா திரிவோம்

ஊரே யாருன்னு கேட்டா ஏய்


உம் பேர மைக்கு செட்டு போட்டு உறுமிக் காட்டு

காட்டு காட்டு காட்டு காட்டு

ஹெ ஹெ என்னப்பா இது


தங்கமுன்னு ஊரு உன்ன

மேல தூக்கி வைக்கும்


திண்டுக்கல்லு பூட்டு ரெண்டு

மாட்டி பூட்டி வைக்கும்


உட்டு வாடி ராசாத்தி

ஒன்ன நீயே காப்பாத்தி ஹே


ராசாத்தி ராசாத்தி ராசாத்தி


வாடி நீ வாடி அட வாடி ராசாத்தி…

வாடி ராசாத்தி


புதுசா இளசா ரவுசா போவோம்

வாடி வாலாட்டி


தனியா நரியா

புலியா திரிவோம்


தம்பி டிரம்பெட்டு

என்னப்பா இது


பொட்டப் புள்ள போக உலகம்

பாத போட்டு வைக்கும்


முட்டு சந்த பாத்து அந்த

ரோடு போயி நிக்கும்


படங் காட்டும் ஏமாத்தி

கலங்காதே ராசாத்தி


ராசாத்தி ராசாத்தி ராசாத்தி


வாடி ஏ வாடி அட வாடி ராசாத்தி…

வாடி ராசாத்தி


புதுசா இளசா ரவுசா போவோம்

வாடி வாலாட்டி


நரியா புலியா

தனியா திரிவோம் அடடே


ராசாத்தி ராசாத்தி ராசாத்தி

வாடி ஏ வாடி அட வாடி ராசாத்தி…

வாடி ராசாத்தி

பூக்களே சற்று

பூக்களே சற்று ஓய்வெடுங்கள்,

அவள் வந்துவிட்டாள்!

அவள் வந்துவிட்டாள்!


பூக்களே சற்று ஓய்வெடுங்கள்,

அவள் வந்துவிட்டாள்!

அவள் வந்துவிட்டாள்!


ஹே ஐ என்றால்,

அது அழகு என்றால்,

அந்த ஐகளின் ஐ அவள்தானா?


ஹே ஐ என்றால்,

அது கடவுள் என்றால்,

அந்த கடவுளின் துகள் அவள்தானா?


ஹையோ என திகைக்கும்,

ஐ என வியக்கும்,

ஐகளுக்கெல்லாம் விடுமுறையை,

அவள் தந்துவிட்டாள்...

அவள் வந்துவிட்டாள்...


பூக்களே சற்று ஓய்வெடுங்கள்,

அவள் வந்துவிட்டாள்!

அவள் வந்துவிட்டாள்!



இந்த உலகில் உனைவெல்ல,

ஒருவன் இல்லை,

உந்தன் அசைவுகள் யாவிலும் ஐ!


விழி அழகு கடந்து,

உன் இதயம் நுழைந்து,

என் ஐம்புலம் உணர்ந்திடும் ஐ!


இவன் பயத்தை அணைக்க,

அவள் இவனை அணைக்க,

அவள் செய்கையில் பெய்வது ஐ!


அவள் விழியின் கனிவில்,

இந்த உலகம் பணியும்,

சிறு நோய்யளவும் ஐயமில்லை!


என் கைகளை கோர்த்திடு,

ஐ விரலை...

இனி தைத்து நீ வைத்திடு,

நம் நிழலை...


அவள் இதழ்களை நுகர்ந்துவிட,

பாதை நெடுக தவம் புரியும்!


பூக்களே சற்று ஓய்வெடுங்கள்,

அவள் வந்துவிட்டாள்!

அவள் வந்துவிட்டாள்!


ஹே ஐ என்றால்,

அது கடவுள் என்றால்,

அந்த கடவுளின் துகள் அவள்தானா?


ஹையோ என திகைக்கும்,

ஐ என வியக்கும்,

ஐகளுக்கெல்லாம் விடுமுறையை,

அவள் தந்துவிட்டாள்!

அவள் வந்துவிட்டாள்!


நீர்வீழ்ச்சி போலே நின்றவன்,

நான் நீந்த ஒரு ஓடை ஆனான்!


வான் முட்டும் மலையை போன்றவன், நான் ஆட ஒரு மேடை ஆனான்!


என்னுள்ளே என்னை கண்டவள், யாரென்று எனை காணச்செய்தாள்!


கேளாமல் நெஞ்சை கொய்தவள்,

சிற்பம் செய்து கையில் தந்தாள்!


யுகம் யுகம் காண முகம்,

இது போதும் ...

புகலிடம் என்றே உந்தன்,

நெஞ்சம் மட்டும் போதும்...


மறு உயிர் தந்தாள்,

நிமிர்ந்திடச் செய்தாள்,

நகர்ந்திடும் பாதை எங்கும்,

வாசம் வீச வந்தாளே!


பூக்களே சற்று ஓய்வெடுங்கள்,

அவள் வந்துவிட்டாள்!

அவள் வந்துவிட்டாள்!


ஹே ஐ என்றால்,

அது அழகு என்றால்,

அந்த ஐகளின் ஐ அவள்தானா?


ஹே ஐ என்றால்,

அது கடவுள் என்றால்,

அந்த கடவுளின் துகள் அவள்தானா?


ஹையோ என திகைக்கும்,

ஐ என வியக்கும்,

ஐகளுக்கெல்லாம் விடுமுறையை,

அவள் வந்துவிட்டாள்!

அவள் வந்துவிட்டாள்!


சிறகுகள் வீசியே

சிறகுகள் வீசி சுந்திர ஆசையில்

போகிறேன் நான் போகிறேன்


உலகத்தின் ஓசையில் புது ஒலி வீசிட

போகிறேன் நான் போகிறேன்


ஆசைகள் எல்லாம் 

எனக்கென கொண்டு

மீசைகள் இல்லா 

கனவுகள் கண்டு


பொறுப்புகள் தேடி பயணங்கள் இன்று

செருப்புகளே என் சிறகுகள் என்று


போகிறேன் நான் போகிறேன்

போகிறேன் நான் போகிறேன்

போகிறேன் நான் போகிறேன்

போகிறேன் நான் போகிறேன்


உலகம் சதுரம் என்றே இருந்தேன்

சுவர்கள் என்று பின்பே அறிந்தேன்


உலகின் விளிம்பை 

உரசும் பயணம் போகிறேன்

என்னை நீங்கி 

எங்கோ பிரிந்தேன்


நானே இல்லா வாழ்வில் தெரிந்தேன்

இன்றே முழுதாய் வாழும் முடிவில் போகிறேன்


என் பலம் மூடிய இருளைத் தேடி எரிப்பவளாகிறேன்

ஓர் சூரியன் ஜோதியில் 

தீயை வளர்த்திட போகிறேன்


போகிறேன் நான் போகிறேன்

போகிறேன் நான் போகிறேன்


சிறகுகள் வீசி சுந்திர ஆசையில்

போகிறேன் நான் போகிறேன்

உலகத்தின் ஓசையில் புது ஒலி வீசிட

போகிறேன் போகிறேன்

Saturday, 27 October 2018

மலர்கள் கேட்டேன்

மலர்கள் கேட்டேன்

வனமே தந்தனை


தண்ணீர் கேட்டேன்

அமிர்தம் தந்தனை


மலர்கள் கேட்டேன்

வனமே தந்தனை


தண்ணீர் கேட்டேன்

அமிர்தம் தந்தனை


எதை நான் கேட்பின்

எதை நான் கேட்பின்

உனையே தருவாய்

எதை நான் கேட்பின்

உனையே தருவாய்


மலர்கள் கேட்டேன்

வனமே தந்தனை


தண்ணீர் கேட்டேன்

அமிர்தம் தந்தனை


மலர்கள் கேட்டேன்

மலர்கள் கேட்டேன்

மலர்கள் கேட்டேன்

மலர்கள் கேட்டேன்


எதை நான் கேட்பின்

உனையே தருவாய்


மலர்கள் கேட்டேன்

தண்ணீர் கேட்டேன்

அமிர்தம் தந்தனை


காட்டில் தொலைந்தேன்

வழியாய் வந்தனை


இருளில் தொலைந்தேன்

ஒளியாய் வந்தனை


காட்டில் தொலைந்தேன்

வழியாய் வந்தனை


இருளில் தொலைந்தேன்

ஒளியாய் வந்தனை


எதனில் தொலைந்தால்


எதனில் தொலைந்தால்

நீயே வருவாய்


மலர்கள் கேட்டேன்

வனமே தந்தனை


தண்ணீர் கேட்டேன்

அமிர்தம் தந்தனை


பள்ளம் வீழ்ந்தேன்

சிகரம் சேர்தனை


வெள்ளம் வீழ்ந்தேன்

கரையில் சேர்ந்தனை


பள்ளம் வீழ்ந்தேன்

சிகரம் சேர்ந்தனை


வெள்ளம் வீழ்ந்தேன்

கரையில் சேர்ந்தனை


எதனில் வீழ்ந்தால்


எதனில் வீழ்ந்தால்

உன்னிடம் சேர்ப்பாய்


மலர்கள் கேட்டேன்

வனமே தந்தனை


தண்ணீர் கேட்டேன்

அமிர்தம் தந்தனை


மலர்கள் கேட்டேன்

வனமே தந்தனை


தண்ணீர் கேட்டேன்

அமிர்தம் தந்தனை


எதை நான் கேட்பின் ஆ ஆ ஆ

எதை நான் கேட்பின்

உனையே தருவாய்

உனையே தருவாய்


மலர்கள் கேட்டேன்

வனமே தந்தனை


தண்ணீர் கேட்டேன்

அமிர்தம் தந்தனை


மலர்கள் கேட்டேன்

வனமே தந்தனை


தண்ணீர் கேட்டேன்

அமிர்தம் தந்தனை

Monday, 22 October 2018

சிவா சிவாய போற்றியே

சிவா சிவாய போற்றியே! 

நமச்சிவாய போற்றியே!

பிறப்பறுக்கும் ஏகனே! 

பொறுத்தருள் அநேகனே!


பரம்பொருள் உன் நாமத்தை

கரங்குவித்துப் பாடினோம்!

இறப்பிலி உன் கால்களை

சிரங்குவித்து தேடினோம்!


யாரு இவன்? யாரு இவன்?

கல்லத் தூக்கிப் போறானே!

புள்ள போல தோளு மேல

உன்னத் தூக்கிப் போறானே!


கண்ணு ரெண்டு போதல!

கையு காலு ஓடல!

கங்கையத்தான் தேடிகிட்டு 

தன்னத் தானே சுமந்துகிட்டு

லிங்கம் நடந்து போகுதே!


எல்லையில்லாத ஆதியே

எல்லாமுணர்ந்த சோதியே

மலைமகள் உன் பாதியே

அலைமகள் உன் கைதியே


அருள்வல்லான் எம் அற்புதன்

அரும்பொருள் எம் அர்ச்சிதன்

உமை விரும்பும் உத்தமன்

உருவிலா எம் உருத்திரன்


ஒளிர்விடும் எம் தேசனே

குளிர்மலை தன் வாசனே

எழில்மிகு எம் நேசனே

அழித்தொழிக்கும் ஈசனே


நில்லாமல் ஆடும் அந்தமே

கல்லாகி நிற்கும் உந்தமே

கல்லா எங்கட்கு சொந்தமே

எல்லா உயிர்க்கும் பந்தமே!

என்னோடு நீ இருந்தால்

காற்றை தரும் 

காடுகள் வேண்டாம்!


தண்ணீர் தரும் 

கடல்கள் வேண்டாம்!


நான் உண்ண உறங்கவே 

பூமி வேண்டாம்!


தேவை எதுவும் தேவையில்லை

தேவை இந்த தேவதையே!


என்னோடு நீ இருந்தால் 

உயிரோடு நான் இருப்பேன்...


என்னை நான் யாரென்று 

சொன்னாலும் புரியாதே,

என் காதல் நீயென்று 

யாருக்கும் தெரியாதே...


நீ கேட்டால் உலகத்தை 

நான் வாங்கி தருவேனே!

நீ இல்லா உலகத்தில் 

நான் வாழ மாட்டேனே!

என்னோடு நீ இருந்தால்...



உண்மைக் காதல் யாரென்றால் 

உன்னை என்னை சொல்வேனே!

நீயும் நானும் பொய்யென்றால் 

காதலை தேடி கொல்வேனே!


கூந்தல் மீசை ஒன்றாக 

ஊசி நூலில் தைப்பேனே!

தேங்காய்க்குள்ளே நீர் போல 

நெஞ்சில் தேக்கிகொள்வேனே!


வத்திகுச்சி காம்பில் 

ரோஜா பூக்குமா?

பூனை தேனை கேட்டால் 

பூக்கள் ஏற்குமா?


முதலை குளத்தில் 

மலராய் மலர்ந்தேன்!

குழந்தை அருகில் 

குரங்காய் பயந்தேன்!


என்னோடு நீ இருந்தால் 

உயிரோடு நான் இருப்பேன்...


என்னோடு நீ இருந்தால் 

உயிரோடு நான் இருப்பேன்...

உயிரோடு நான் இருப்பேன்...


நீ இல்லா உலகத்தில் 

நான் வாழ மாட்டேனே!

என்னோடு நீ இருந்தால்...

காக்கா முட்டை

கருப்பு கருப்பு 

கருப்பு நிறத்தை

வெறுத்து வெறுத்து 

உலகம் ஒதுக்க


காக்கை காக்கை 

முட்டை வண்ணம்

மாற்றிக் கொண்டதா


உருவம் உருவம் உருவம் மட்டும்

மனிதன் மனிதன் மனிதன் இல்லை


உருவம் இல்லை 

உடைகள் இன்று

மாறிப் போனதா


அடிச்சு புடிச்சு 

அடிச்சு புடிச்சு

அல்லும் பகலும் 

ஒழச்சு ஒழச்சு


நெனச்சி நெனச்சி 

நெனச்சி நெனச்சி

விரும்பி வந்தா

யாரோ யாரோ யாரோ யாரோ


கருப்பு கருப்பு 

கருப்பு நிறத்தை

வெறுத்து வெறுத்து 

உலகம் ஒதுக்க


காக்கை காக்கை 

முட்டை வண்ணம்

மாற்றிக் கொண்டதா


உருவம் உருவம் 

உருவம் மட்டும்

மனிதன் மனிதன் 

மனிதன் இல்லை


உருவம் இல்லை 

உடைகள் இன்று

மாறிப் போனதா


ஆள் பாதி நம் ஆடை பாதி

என்றே தான் அட யார் சொன்னது


அவனால் தான் நம் மானம் இங்கு

காத்தாடி போல் பறந்தோடுது


நாம் அட நேற்று வரை

பசித்தால் தான் உண்போமடா


யார் இன்று மாற்றி வைத்தார்

ருசிக்காய் நாம் அலைந்தோமடா

யாரோ யாரோ யாரோ யாரோ


கருப்பு கருப்பு 

கருப்பு நிறத்தை

வெறுத்து வெறுத்து 

உலகம் ஒதுக்க


காக்கை காக்கை 

முட்டை வண்ணம்

மாற்றிக் கொண்டதா


உருவம் உருவம் 

உருவம் மட்டும்

மனிதன் மனிதன் 

மனிதன் இல்லை


உருவம் இல்லை உடைகள் இன்று

மாறிப் போனதா


அடிச்சு புடிச்சு 

அடிச்சு புடிச்சு

அல்லும் பகலும் 

ஒழச்சு ஒழச்சு


நெனச்சி நெனச்சி 

நெனச்சி நெனச்சி

விரும்பி வந்தா

யாரோ யாரோ யாரோ யாரோ

நீயும் நானும்

நீயும் நானும் சேர்ந்தே 

செல்லும் தூரமே,


நீலம் கூட வானில் இல்லை

எங்கும் வெள்ளை மேகமே,


போக போக ஏனோ நீளும் தூரமே

மேகம் வந்து போகும் போக்கில்

தூறல் கொஞ்சம் தூறுமே...


என் அச்சம் ஆசை எல்லாமே 

தள்ளி போகட்டும்!

எந்தன் இன்பம் துன்பம் எல்லாமே உன்னை சேரட்டும்!


ஓ நான் பகல் இரவு,

நீ கதிர் நிலவு,

என் வெயில் மழையில்,

உன் குடை அழகு...


கத்தாழ முள்ள முள்ள

கொத்தோடு கிள்ள கிள்ள

கொலையோடு அள்ள அள்ள

வந்த புள்ள


முந்தான துள்ள துள்ள

மகாராசி என்ன சொல்ல

முத்தத்தால் என்ன கொல்ல

வந்த புள்ள


நான் பகல் இரவு,

நீ கதிர் நிலவு,

என் மன கண்களில்,

நீ முதற் கனவு...


நீ வேண்டுமே

எந்த நிலையிலும் 

எனக்கென நீ போதுமே


ஒலி இல்லா உலகத்தில்,

இசையாக நீயே மாறி,

காற்றாய் வீசினாய்,

காதில் பேசினாய்...


மொழி இல்லா மௌனத்தில்,

விழியாலே வார்த்தை கோர்த்து,

கண்ணால் பேசினாய்,

கண்ணால் பேசினாய்...


நூறு ஆண்டு உன்னோடு,

வாழவேண்டும் மண்ணோடு,

பெண் உனைத் தேடும்,

எந்தன் வீடு!


நான் பகல் இரவு,

நீ கதிர் நிலவு!

என் வெயில் மழையில்,

உன் குடை அழகு!


கத்தாழ முள்ள முள்ள

கொத்தோடு கிள்ள கிள்ள

கொலையோடு அள்ள அள்ள

வந்த புள்ள


முந்தான துள்ள துள்ள

மகாராசி என்ன சொல்ல

முத்தத்தால் என்ன கொல்ல

வந்த புள்ள


நான் பகல் இரவு,

நீ கதிர் நிலவு!

என் மன கண்களில்,

நீ முதற் கனவு!


நீ வேண்டுமே,

இந்த பிறவியை கடந்திட,

நீ போதுமே!


கத்தாழ முள்ள முள்ள

கொத்தோடு கிள்ள கிள்ள

கொலையோடு அள்ள அள்ள

வந்த புள்ள


முந்தான துள்ள துள்ள

மகாராசி என்ன சொல்ல

முத்தத்தால் என்ன கொல்ல

வந்த புள்ள


நீயும் நானும் சேர்ந்தே செல்லும் தூரமே, நீலம் கூட வானில் இல்லை எங்கும் வெள்ளை மேகமே, போக போக ஏனோ நீளும் தூரமே மேகம் வந்து போகும் போக்கில் தூறல் கொஞ்சம் தூறுமே... என் அச்சம் ஆசை எல்லாமே தள்ளி போகட்டும்! எந்தன் இன்பம் துன்பம் எல்லாமே உன்னை சேரட்டும்! ஓ நான் பகல் இரவு, நீ கதிர் நிலவு, என் வெயில் மழையில், உன் குடை அழகு... கத்தாழ முள்ள முள்ள கொத்தோடு கிள்ள கிள்ள கொலையோடு அள்ள அள்ள வந்த புள்ள முந்தான துள்ள துள்ள மகாராசி என்ன சொல்ல முத்தத்தால் என்ன கொல்ல வந்த புள்ள நான் பகல் இரவு, நீ கதிர் நிலவு, என் மன கண்களில், நீ முதற் கனவு... நீ வேண்டுமே எந்த நிலையிலும் எனக்கென நீ போதுமே ஒலி இல்லா உலகத்தில், இசையாக நீயே மாறி, காற்றாய் வீசினாய், காதில் பேசினாய்... மொழி இல்லா மௌனத்தில், விழியாலே வார்த்தை கோர்த்து, கண்ணால் பேசினாய், கண்ணால் பேசினாய்... நூறு ஆண்டு உன்னோடு, வாழவேண்டும் மண்ணோடு, பெண் உனைத் தேடும், எந்தன் வீடு! நான் பகல் இரவு, நீ கதிர் நிலவு! என் வெயில் மழையில், உன் குடை அழகு! கத்தாழ முள்ள முள்ள கொத்தோடு கிள்ள கிள்ள கொலையோடு அள்ள அள்ள வந்த புள்ள முந்தான துள்ள துள்ள மகாராசி என்ன சொல்ல முத்தத்தால் என்ன கொல்ல வந்த புள்ள நான் பகல் இரவு, நீ கதிர் நிலவு! என் மன கண்களில், நீ முதற் கனவு! நீ வேண்டுமே, இந்த பிறவியை கடந்திட, நீ போதுமே! கத்தாழ முள்ள முள்ள கொத்தோடு கிள்ள கிள்ள கொலையோடு அள்ள அள்ள வந்த புள்ள முந்தான துள்ள துள்ள மகாராசி என்ன சொல்ல முத்தத்தால் என்ன கொல்ல வந்த புள்ள

ஏயா என் கோட்டிக்காரா

ஏயா என் கோட்டிக்காரா

அட வாயா என் வேட்டைக்காராா!


குத்தால சாரல் போல்

தல தட்டும் சேட்டக்காரா!


செத்தாலும் வாழ்ந்தாலும்

நீதான் என் சொத்துக்காரா!


யே எட்டி என் கொட்டிக்கார

அடி ஏழா என் வேட்டைக்காரி!


குத்தால சாரல் போல்

தல தட்டும் சேட்டைக்காரி!


செத்தாலும் வாழ்ந்தாலும்

நீதான் என் சொத்துக்காரி!


தேடி சேர்த்த காச போல்

காதல் இருக்குதா?


கொஞ்சமாக எடுக்குற

கஞ்சம் தடுக்குதா?


காச போல காதலும் செலவுக்கில்லட்டி

கோடி முத்தம் வாங்கிக்கோ 

கஞ்சம் இல்லட்டி...


சின்ன புள்ள நான்தான்

பெண்ணே உண்மை அல்லோ!


என்ன தாங்க இப்போ

மூணு அம்மை அல்லோ!


பாலருவியும் தேனருவியும் ஐந்தருவியும்

உன் நேசத்தின் முன்னே முன்னே தோத்தே போகும்

மண்ணில் சொர்கமிது!


ஏயா என் கோட்டிக்காரா

அட வாயா என் வேட்டைக்காரா!


குத்தால சாரல் போல்

தல தட்டும் சேட்டக்காரா!


செத்தாலும் வாழ்ந்தாலும்

நீதான் என் சொத்துக்காரா!


காச போல காதலும் செலவுக்கில்லட்டி

கோடி முத்தம் வாங்கிக்கோ 

கஞ்சம் இல்லட்டி....


தட்டான் பூச்சி போல

வண்ணம் அள்ளி தார...


கண்ணில் இன்னும் வேற

ஏதோ சொல்லி தார...


நான் நினைச்சதும் நீ நினைச்சதும்

நூழிலையில் தான் வழுக்கிட

பேசி பேசி இன்னும் பேசி

பேசா நிலை வருமோ?


தேடி சேர்த்த காச போல்

காதல் இருக்குதா?


கொஞ்சமாக எடுக்குற

கஞ்சம் தடுக்குதா?


காச போல காதலும் செலவுக்கில்லட்டி

கோடி முத்தம் வாங்கிக்கோ 

கஞ்சம் இல்லட்டி....

நான் அவள் இல்லை

நான் அவள் இல்லை 

நான் அவள் இல்லை

அழகிலும் குணத்திலும் எதிலும்

நான் அவள் இல்லை


உன் மேலே காதல் கொண்டேன்

உன் வானத்தில் ரெண்டாம் நிலவாய்

என்னை பூக்க செய்வாயா?

செய்வாயா?


அவள் எங்கே விட்டுப் போனாளோ,

அங்கே தொடங்கி 

உன்னை நான்

காதல் செய்வேனே!


ஆனால் அன்பே!

ஆனால் அன்பே!

அவளுக்கு கொடுத்த இதயத்திலே 

உன்னை வைத்து பார்க்க தயங்குகிறேன்!

 

ஆனால் அன்பே!

ஆனால் அன்பே!

அவள் விட்டுப் பறந்த உயரத்திலே

உன்னை விட்டுப் பறக்க முயல்கிறேன்!


என் வானிலே 

ஒரு முகிலாய்

நீ தோன்றினாய்


மெதுவாக நீ வானமாய்

விரிந்தாயடி என நெஞ்சிலே

என பூமியில் ஒரு செடியாய்

பூ நீட்டினாய்


மெதுவாக நீ காடென

படர்ந்தாய் என நெஞ்சிலே


உன்னாலே விழியோடும் சிரிக்கின்றேன் மீண்டும் இன்று

உன்னாலே எனை மீண்டும் திறந்தேன் பெண்ணே


இருளோடு நேற்றை நான் தேடினேன்

எதிர்கால தீபம் காட்டினாய்


ஆனால் அன்பே 

ஆனால் அன்பே

அவளுக்கு கொடுத்த இதயத்திலே

உன்னை வைத்து பார்க்க 

உன்னை வைத்து பார்க்க


வா என்று நான் சொல்லும் முன்பே

என் பிள்ளைக்கு தாயென்று 

ஆனாயே நீ இன்று


ஏனென்று நான் கேட்கும் முன்னே

என் காதின் ஓரத்தில் முத்தத்தில் சொன்னாயடி


மடி மீது கிடத்தி

தலை கோதினாள்


தன் காதலால் என்

காயம் ஆற்றினாள்


நீதான் அன்பே நீதான் அன்பே

இனி எந்தன் நிலவு 

இனி எந்தன் உறவு

இனி எந்தன் கனவு


நீதான் அன்பே நீதான் அன்பே

இனி எந்தன் இதயம் 

இனி எந்தன் பயணம்

இனி எந்தன் உலகம்.

Friday, 28 September 2018

உனக்கென்ன வேணும் சொல்லு?

உனக்கென்ன வேணும் சொல்லு
உலகத்தை காட்டச் சொல்லு
புது இடம் புது மேகம் தேடி போவோமே
பிடித்ததை வாங்கச் சொல்லு
வெறுப்பதை நீங்கச் சொல்லு
புது வெள்ளம் புது ஆறு நீந்திப் பார்ப்போமே

இருவரின் பகல் இரவு
ஒரு வெயில் ஒரு நிலவு
தெரிந்தது தெரியாதது பார்க்க போறோமே
உலகென்னும் பரமபதம்
விழுந்தபின் உயர்வு வரும்
நினைத்தது நினையாதது சேர்க்க போறோமே

ஒரு வெள்ளி கொலுசு போல இந்த பூமி சிணுங்கும் கீழ
அணியாத வைரம் போல அந்த வானம் மினுங்கும் மேல
ஒரு வெள்ளி கொலுசு போல இந்த பூமி சிணுங்கும் கீழ
அணியாத வைரம் போல அந்த வானம் மினுங்கும் மேல

கனவுகள் தேய்ந்ததென்று கலங்கிட கூடாதென்று
தினம் தினம் இரவு வந்து தூங்க சொல்லியதே
எனக்கென உன்னை தந்து உனக்கிரு கண்ணை தந்து
அதன் வழி எனது கனா காண சொல்லியதே
நீ அடம் பிடித்தாலும் அடங்கி போகின்றேன்
உன் மடி மெத்தை மேல் மடங்கி கொள்கின்றேன்

தன தான னத்தன நம்தம்
தன தான னத்தன நம்தம்
தன தான னத்தன நம்தம்
தன தான னத்தன நம்தம்

உனக்கென்ன வேணும் சொல்லு
உலகத்தை காட்டச் சொல்லு
புது இடம் புது மேகம் தேடி போவோமே
பிடித்ததை வாங்கச் சொல்லு
வெறுப்பதை நீங்கச் சொல்லு
புது வெள்ளம் புது ஆறு நீந்திப் பார்ப்போமே

பருவங்கள் மாறி வர வருடங்கள் ஓடி விட
இழந்த என் இனிமைகளை உன்னில் கண்டேனே
எழுதிடும் உன் விரலில் சிரித்திடும் உன் இதழில்
கடந்த என் கவிதைகளை கண்டு கொண்டேனே
துருவங்கள் போல் நீளும் இடைவெளி அன்று
ஓ தோள்களில் உன் மூச்சு இழைகிறதின்று

தன தான னத்தன நம்தம்
தன தான னத்தன நம்தம்
தன தான னத்தன நம்தம்
தன தான னத்தன நம்தம்

உனக்கென்ன வேணும் சொல்லு
உலகத்தை காட்டச் சொல்லு
புது இடம் புது மேகம் தேடி போவோமே
பிடித்ததை வாங்கச் சொல்லு
வெறுப்பதை நீங்கச் சொல்லு
புது வெள்ளம் புது ஆறு நீந்திப் பார்ப்போமே
இருவரின் பகல் இரவு
ஒரு வெயில் ஒரு நிலவு
தெரிந்தது தெரியாதது பார்க்க போறோமே
உலகென்னும் பரமபதம்
விழுந்தபின் உயர்வு வரும்
நினைத்தது நினையாதது சேர்க்க போறோமே

ஒரு வெள்ளி கொலுசு போல இந்த பூமி சிணுங்கும் கீழ
அணியாத வைரம் போல அந்த வானம் மினுங்கும் மேல
ஒரு வெள்ளி கொலுசு போல இந்த பூமி சிணுங்கும் கீழ
அணியாத வைரம் போல அந்த வானம் மினுங்கும் மேல

முன் பனியா? முதல் மழையா?

முன் பனியா? முதல் மழையா?
என் மனதில் ஏதோ விழுகிறதே..!
விழுகிறதே .... உயிர் நனைகிறதே....!
புரியாத உறவில் நின்றேன்!
அறியாத சுகங்கள் கண்டேன்!
மாற்றம் தந்தவள் நீதானே!

மனசில் எதையோ மறைக்கும் கிளியே!
மனசைத் திறந்து சொல்லடி வெளியே!
கரையைக் கடந்து நீ வந்தது எதுக்கு?
கண்ணுக்குள்ளே ஒரு ரகசியம் இருக்கு!
மனசைத் திறந்து சொல்லடி வெளியே.....!

என் இதயத்தை ... என் இதயத்தை வழியில்
எங்கேயோ மறந்து தொலைத்து விட்டேன்!
உன் விழியினில்... உன் விழியினில் அதனை,
இப்போது கண்டு பிடித்து விட்டேன்!
இதுவரை எனக்கில்லை முகவரிகள்!
அதை நான் கண்டேன் உன் புன்னகையில்..!
வாழ்கிறேன்... நான் உன் மூச்சிலே.....!

சலங்கை குலுங்க ஓடும் அலையே!
சங்கதி என்ன சொல்லடி வெளியே!
கரையில் வந்து நீ துள்ளுவது எதுக்கு?
நெலவ புடிச்சுக்க நெனைப்பது எதுக்கு?
ஏலோ ஏலோ... ஏலே ஏலோ....!

என் பாதைகள் .... என் பாதைகள்
உனது வழி பார்த்து வந்து முடியுதடி!
என் இரவுகள், என் இரவுகள்
உனது முகம் பார்த்து விடிய ஏங்குதடி!
இரவையும் பகலையும் மாற்றிவிட்டாய்!
எனக்குள் உன்னை நீ ஊற்றி விட்டாய்!
மூழ்கினேன் .... நான் உன் கண்ணிலே...!

- பழனிபாரதி
படம் : நந்தா

மறுவார்த்தை பேசாதே

மறுவார்த்தை பேசாதே
மடி மீது நீ தூங்கிடு
இமை போல நான் காக்க
கணவாய் நீ மாறிடு

மயில் தோகை போலே
விறல் உன்னை வருடும்
மனப்பாடமாய்
உரையாடல் நிகழும்

விழி நீரும் வீணாக
இமைத்தாண்ட கூடாதென
துளியாக நான் சேர்த்தேன்
கடலாக கண்ணானதே

மறந்தாலும் நான் உன்னை
நினைக்காத நாளில்லையே
பிரிந்தாலும் என் அன்பு
ஒருபோதும் பொய்யில்லையே

விடியாத காலைகள்
முடியாத மாலைகளில்
வடியாத வேர்வை துளிகள்
பிரியாத போர்வை நொடிகள்

மணி காட்டும் கடிகாரம்
தரும் வாடை அறிந்தோம்
உடைமாற்றும் இடைவேளை
அதன் பின்பே உணர்ந்தோம்

மறவாதே மனம்
மடிந்தாலும் வரும்

முதல் நீ
முடிவும் நீ
அலர் நீ
அகிலம் நீ

தொலைதூரம் சென்றாலும்
தொடு வானம் என்றாலும், நீ
விழியோரம் தானே மறைந்தாய்
உயிரோடு முன்பே கலந்தாய்

இதழ் எனும் மலர் கொண்டு
கடிதங்கள் வரைந்தாய்
பதில் நானும் தருமுன்பே
கனவாகி கலைந்தாய்

பிடிவாதம் பிடி
சினம் தீரும் அடி
இழந்தோம் எழில்கோலம்
இனிமேல் மழைக்காலம்

மறுவார்த்தை பேசாதே
மடி மீது நீ தூங்கிடு
இமை போல நான் காக்க
கணவாய் நீ மாறிடு

மயில் தோகை போலே
விறல் உன்னை வருடும்
மனப்பாடமாய்
உரையாடல் நிகழும்

விழி நீரும் வீணாக
இமைத்தாண்ட கூடாதென
துளியாக நான் சேர்த்தேன்
கடலாக கண்ணானதே

மறந்தாலும் நான் உன்னை
நினைக்காத நாளில்லையே
பிரிந்தாலும் என் அன்பு
ஒருபோதும் பொய்யில்லையே

மறுவார்த்தை பேசாதே
மடி மீது நீ தூங்கிடு

மன்றம் வந்த தென்றலுக்கு

மன்றம் வந்த தென்றலுக்கு
மஞ்ச்ம் வர நெஞ்சம் இல்லையோ
அன்பே என் அன்பே
தொட்டவுடன் சுட்டதென்ன
கட்டழகு வட்ட நிலவோ
கண்ணே என் கண்ணே
பூபாளமே கூடாதென்னும்
வானம் உண்டோ சொல்

தாமரை மேலே நீர்த்துளி போல்
தலைவனும் தலைவியும் வாழ்வதென்ன
நண்பர்கள் போலே வாழ்வதற்கு
மாலையும் மேளமும் தேவையென்ன
சொந்தங்களே இல்லாமல்
பந்த பாசம் கொள்ளாமல்
பூவே உன் வாழ்க்கைதான் என்ன சொல்

மேடையைப் போலே வாழ்க்கை அல்ல
நாடகம் ஆனதும் விலகிச் செல்ல
ஒடையைப் போலே உறவும் அல்ல
பாதைகள் மாறியே பயணம் செல்ல
விண்ணோடு தான் உலாவும்
வெள்ளி வண்ண நிலாவும்
என்னோடு நீ வந்தால் என்ன வா

- கவிஞர் வாலி
படம்: மௌன ராகம்

கண்பேசும் வார்த்தைகள்

கண் பேசும் வார்த்தைகள் புரிவதில்லை
காத்திருந்தால் பெண் கனிவதில்லை
ஒரு முகம் மறைய மறுமுகம் தெரிய
கண்ணாடி இதயம் இல்லை
கடல் கை மூடி மறைவதில்லை
கண்ணாடி இதயம் இல்லை
கடல் கை மூடி மறைவதில்லை

காற்றில் இலைகள் பறந்த பிறகும்
கிளையின் தழும்புகள் அழிவதில்லை
காயம் நூறு கண்ட பிறகும்
உன்னை உள் மனம் மறப்பதில்லை
ஒரு முறைதான் பெண் பார்ப்பதினால்
வருகிற வலி அவள் அறிவதில்லை
கனவினிலும் தினம் நினைவினிலும்
கரைகிற ஆண் மனம் புரிவதில்லை

காட்டிலே காயும் நிலவை கண்டுகொள்ள யாருமில்லை
கண்களின் அனுமதி வாங்கி காதலும் இங்கே வருவதில்லை
தூரத்தில் தெரியும் வெளிச்சம் பாதைக்கு சொந்தமில்லை
மின்னலின் ஒலியை பிடிக்க மின்மினி பூச்சிக்கு தெரியவில்லை
விழி உனக்கு சொந்தமடி வேதனைகள் எனக்கு சொந்தமடி
அலை கடலை கடந்த பின்னே நுரைகல் மட்டும் கரைக்கே சொந்தமடி

உலகத்தில் எத்தனை பெண் உள்ளது
மனம் ஒருத்தியை மட்டும் கொண்டாடுது
ஒரு முறை வாழ்ந்திட திண்டாடுது
இது உயிர்வரை பாய்ந்து பந்தாடுது
பனி துளி வந்து மோதியதால்
இந்த முள்ளும் இங்கே துண்டானது
பூமியில் உள்ள பொய்களெல்லாம்
ஆட புடவை கட்டி பெண்ணானது
புயல் அடித்தால் மழை இருக்கும்
மரங்களில் பூக்களும் மறைந்து விடும்
சிரிப்பு வரும் அழுகை வரும்
காதலில் இரண்டுமே கலந்து வரும்
ஒரு முறைதான் பெண் பார்ப்பதினால்
வருகிற வலி அவள் அறிவதில்லை
கனவினிலும் தினம் நினைவினிலும்
கரைகிற ஆண் மனம் புரிவதில்லையே
கண் பேசும் வார்த்தை .......

- நா.முத்துக்குமார்
படம்: 7ஜி ரெயின்போ காலணி

அச்சம் அச்சம் இல்லை

 

                 

விடியாத இரவென்று எதுவுமில்லை
இல்லை இல்லை இல்லை இல்லை
முடியாத துயரென்று எதுவுமில்லை
இல்லை இல்லை இல்லை இல்லை
வடியாத வெள்ளமென்று எதுவுமில்லை
இல்லை இல்லை இல்லை இல்லை
வாடாத வாழ்க்கையென்று எதுவுமில்லை
இல்லை இல்லை இல்லை இல்லை
ராரரா…

ஹே அச்சம் அச்சம் இல்லை இனி அடிமை எண்ணம் இல்லை
நம் காலம் இங்கே கூடிப்போச்சு கண்ணீர் மிச்சமில்லையே
ஹே அச்சம் அச்சம் இல்லை இனி அடிமை எண்ணம் இல்லை
நம் காலம் இங்கே கூடிப்போச்சு கண்ணீர் மிச்சமில்லையே

காலம் மாறிப்போச்சு நம் கண்ணீர் மாறிப்போச்சு
நாளை நல்ல நாளை என்ற நம்பிக்கை உண்டாச்சு
காலம் மாறிப்போச்சு நம் கண்ணீர் மாறிப்போச்சு
நாளை நல்ல நாளை என்ற நம்பிக்கை உண்டாச்சு

ஹே அச்சம் அச்சம் இல்லை இனி அடிமை எண்ணம் இல்லை
நம் காலம் இங்கே கூடிப்போச்சு கண்ணீர் மிச்சமில்லையே

அந்த நிலா நிலா நிலா நிலா நீ கொண்டோடி வா
அந்த நிலா நிலா நிலா நிலா நீ கொண்டோடி வா

பட்டாம்பூச்சி சுற்றும் மனிதன் என்ன மட்டம்
அட இன்னும் கொஞ்சும் போனால் என்ன வானம் தலையில் தட்டும்
பட்டாம்பூச்சி சுற்றும் மனிதன் என்ன மட்டம்
அட இன்னும் கொஞ்சும் போனால் என்ன வானம் தலையில் தட்டும்

வாடி இளைய செல்லியே… வாடி இளைய செல்லியே
நம் காலம் சொல்லும் நம்மை வாழச்சொல்லியே
அம்மா அழகுக் கண்ணம்மா... அம்மா அழகுக் கண்ணம்மா
இது நம்ம பூமியென்று அழுத்திச்சொல்லம்மா

ஹே அச்சம் அச்சம் இல்லை இனி அடிமை எண்ணம் இல்லை
நம் காலம் இங்கே கூடிப்போச்சு கண்ணீர் மிச்சமில்லையே
ஹே அச்சம் அச்சம் இல்லை இனி அடிமை எண்ணம் இல்லை
நம் காலம் இங்கே கூடிப்போச்சு கண்ணீர் மிச்சமில்லையே

காலம் மாறிப்போச்சு நம் கண்ணீர் மாறிப்போச்சு
நாளை நல்ல நாளை என்ற நம்பிக்கை உண்டாச்சு
காலம் மாறிப்போச்சு நம் கண்ணீர் மாறிப்போச்சு
நாளை நல்ல நாளை என்ற நம்பிக்கை உண்டாச்சு

லல்லல்லல்லோ பட்டாம்பூச்சி
லல்லல்லல்லோ பட்டாம்பூச்சி

வானம் பக்கம் இனி வாழ்க்கை ரொம்பப் பக்கம்
அச்சம் அச்சம் துச்சம் என்றால் பக்கம் பக்கம் சொர்க்கம்
வானம் பக்கம் இனி வாழ்க்கை ரொம்பப் பக்கம்
அச்சம் அச்சம் துச்சம் என்றால் பக்கம் பக்கம் சொர்க்கம்
பூமி தொறந்துகெடக்கு அட மனுசப்பய மனசு பூட்டிக்கெடக்கு
பூமி தொறந்துகெடக்கு அட மனுசப்பய மனசு பூட்டிக்கெடக்கு

இனி அச்சம் அச்சம் இல்லை இனி அடிமை எண்ணம் இல்லை
இனி அச்சம் அச்சம் இல்லை இனி அடிமை எண்ணம் இல்லை
நம் காலம் இங்கே கூடிப்போச்சு கண்ணீர் மிச்சமில்லையே

இன்பக்காற்று வீசட்டும் எட்டுத்திக்கும் பரவட்டும்
பரவட்டும் பரவட்டும் பரவட்டும் பரவட்டும்
மனிதப்பூக்கள் மலரட்டும் மனங்கள் இன்னும் விரியட்டும்
விரியட்டும் விரியட்டும் விரியட்டும் விரியட்டும்

இன்பக்காற்று வீசட்டும் எட்டுத்திக்கும் பரவட்டும்
மனிதப்பூக்கள் மலரட்டும் மனங்கள் இன்னும் விரியட்டும்
குற்றம் குற்றம் எரியட்டும் சுற்றம் சுற்றம் வாழட்டும்
வட்டம் வட்டம் விரியட்டும் வானம் தொட்டு வளரட்டும்
வட்டம் வட்டம் விரியட்டும் வானம் தொட்டு வளரட்டும்

கோழிச்சிறகில் குஞ்சைப் போலவே பூமிப்பந்து உறங்கட்டும்
ரத்தம் சிந்தா நூற்றாண்டு புத்தம் புதிதாய் விடியட்டும்

உன்னோடு வாழாத

உன்னோடு வாழாத வாழ்வென்ன வாழ்வு என் உள் நெஞ்சு சொல்கின்றது
பூவோடு பேசாத காற்றென்ன காற்று ஒரு பூஞ்சோலை கேட்கின்றது
மண்ணில் ஏன் ஏன் ஏன் நீயும் வந்தாய் எந்தன் பெண்மை பூப்பூக்கவே
நான் பிறக்கும் முன்னே அட நீ பிறந்ததேன்
நான் பிறக்கும்போது நீ உந்தன் கையில் என்னை ஏந்தத்தானோ

உன்னோடு வாழாத வாழ்வென்ன வாழ்வு என் உள் நெஞ்சு சொல்கின்றது

மெல்லிய ஆண்மகனைப் பெண்ணுக்குப் பிடிக்காது முரடா உனை ரசித்தேன்
தொட்டதும் விழுந்துவிடும் ஆடவன் பிடிக்காது கர்வம் அதை மதித்தேன்
முடி குத்தும் உந்தன் மார்பு என் பஞ்சு மெத்தையோ
என் உயிர் திறக்கும் முத்தம் அது என்ன வித்தையோ
உன்னைப் போலே ஆணில்லையே நீயும் போனால் நானில்லையே
நீரடிப்பதாலே நீ நழுவவில்லையே ஆம் நமக்குள் ஊடலில்லை

உன்னோடு வாழாத வாழ்வென்ன வாழ்வு என் உள் நெஞ்சு சொல்கின்றது
பூவோடு பேசாத காற்றென்ன காற்று ஒரு பூஞ்சோலை கேட்கின்றது

நீ ஒரு தீயென்றால் நான் குளிர் காய்வேன் அன்பே தீயாயிரு
நீ ஒரு முள்ளென்றால் நான் அதில் ரோஜா அன்பே முள்ளாயிரு
நீ வீரமான கள்ளன் உள்ளூரும் சொல்லுது
நீ ஈரமான பாறை உள் உள்ளம் சொல்லுது
உன்னை மொத்தம் நேசிக்கிறேன் உந்தன் மூச்சை சுவாசிக்கிறேன்
நீ வசிக்கும் குடிசை என் மாடமாளிகை காதலோடு பேதமில்லை

உன்னோடு வாழாத வாழ்வென்ன வாழ்வு என் உள் நெஞ்சு சொல்கின்றது
பூவோடு பேசாத காற்றென்ன காற்று ஒரு பூஞ்சோலை கேட்கின்றது
மண்ணில் ஏன் ஏன் ஏன் நீயும் வந்தாய் எந்தன் பெண்மை பூப்பூக்கவே
நான் பிறக்கும் முன்னே அட நீ பிறந்ததேன்
நான் பிறக்கும்போது நீ உந்தன் கையில் என்னை ஏந்தத்தானோ

-வைரமுத்து
படம்: அமர்க்களம்

என் மேல் விழுந்த

என் மேல் விழுந்த மழைத் துளியே
இத்தனை நாளாய் எங்கிருந்தாய்
இன்று எழுதிய என் கவியே
இத்தனை நாளாய் எங்கிருந்தாய்

என்னை எழுப்பிய பூங்காற்றே
இத்தனை நாளாய் எங்கிருந்தாய்
என்னை மயக்கிய மெல்லிசையே
இத்தனை நாளாய் எங்கிருந்தாய்

உடம்பில் உறைகின்ற ஓருயிர் போல்
உனக்குள் தானே நான் இருந்தேன்

என் மேல் விழுந்த மழைத் துளியே...

மண்ணை திறந்தால் நீர் இருக்கும் என்
மனதை திறந்தால் நீ இருப்பாய்

ஒலியை திறந்தால் இசை இருக்கும் என்
உயிரை திறந்தால் நீ இருப்பாய்

வானம் திறந்தால் மழை இருக்கும் என்
மனதைத் திறந்தால் நீ இருப்பாய்

இரவை திறந்தால் பகல் இருக்கும் என்
இமையைத் திறந்தால் நீ இருப்பாய்

என் மேல் விழுந்த மழைத் துளியே
இத்தனை நாளாய் எங்கிருந்தாய்
இன்று எழுதிய என் கவியே
இத்தனை நாளாய் எங்கிருந்தாய்

இலையும் மலரும் உரசுகையில்
என்ன பாஷை பேசிடுமோ
அலையும் கரையும் உரசுகையில்
பேசும் பாஷை பேசிடுமோ

மண்ணும் விண்ணும் உரசுகையில்
என்ன பாஷை பேசிடுமோ
பார்வை ரெண்டும் பேசிக் கொண்டால்
பாஷை ஊமையாய் விடுமோ

என் மேல் விழுந்த மழைத் துளியே...

என்னை எழுப்பிய பூங்காற்றே
இத்தனை நாளாய் எங்கிருந்தாய்
என்னை மயக்கிய மெல்லிசையே
இத்தனை நாளாய் எங்கிருந்தாய்
உடம்பில் உறைகின்ற ஓருயிர் போல்
உனக்குள் தானே நான் இருந்தேன்

என் மேல் விழுந்த மழைத் துளியே...

- வைரமுத்து

உளுந்து விதைக்கையில

உளுந்து விதைக்கையிலே

சுத்தி
ஊதக்காத்து அடிக்கையிலே
நான் அப்பனுக்குக் கஞ்சி கொண்டு
ஆத்துமேடு தாண்டிப் போனேன்
கண்ட நல்ல நல்ல சகுனத்தில் நெஞ்சுக்குழி
பூத்துப் போனேன்

உளுந்து விதைக்கையிலே சுத்தி
ஊதக்காத்து அடிக்கையிலே
நான் அப்பனுக்குக் கஞ்சி கொண்டு
ஆத்துமேடு தாண்டிப் போனேன்
கண்ட நல்ல நல்ல சகுனத்தில் நெஞ்சுக்குழி
பூத்துப் போனேன்

வெக்கப்படப்பில் கவுளி கத்த வலது பக்கம்
கருடன் ஒத்த
தெருவோரம் நெறகுடம் பார்க்கவும்
மணிச்சத்தம் கேட்கவும் ஆனதே
ஒரு பூக்காரி எதுக்க வர பசும் பால்மாடு கடக்கிறதே
இனி என்னாகுமோ ஏதாகுமோ
இந்த சிறுக்கி வழியில் தெய்வம் புகுந்து வரம் தருமோ

உளுந்து விதைக்கையிலே சுத்தி
ஊதக்காத்து அடிக்கையிலே
நான் அப்பனுக்குக் கஞ்சி கொண்டு
ஆத்துமேடு தாண்டிப் போனேன்
கண்ட நல்ல நல்ல சகுனத்தில் நெஞ்சுக்குழி
பூத்துப் போனேன்

அனிச்ச மலரழகே அச்சு அச்சுவெல்லப் பேச்சழகே
என் கண்ணுக்குள்ள கூடு கட்டி காதுக்குள்ள
கூவும் குயிலே
நீ எட்டியெட்டிப் போகயில விட்டுவிட்டுப் போகும் உயிரே..

உளுந்து விதைக்கையிலே சுத்தி
ஊதக்காத்து அடிக்கயிலே
நான் அப்பனுக்குக் கஞ்சி கொண்டு
ஆத்துமேடு தாண்டிப் போனேன்
கண்ட நல்ல நல்ல சகுனத்தில் நெஞ்சுக்குழி
பூத்துப் போனேன்

எழுத்தாளர்கள் கவனத்திற்கு

இந்த தளத்தினில் உங்களது படைப்புகளையும் இடம்பெறச் செய்ய விரும்பினால், rheamoorthy6@gmail.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் செய்யவும்.