This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License. Readers dont try to copy the content here.
Showing posts with label ஆன்மீகம். Show all posts
Showing posts with label ஆன்மீகம். Show all posts

Friday, 23 November 2018

திருக்கார்த்திகை

கார்த்திகை நாள்:


தமிழ்நாட்டில் கார்மேகம் சோணை மழை பொழியும் மாதம் கார்த்திகை மாதம். கார் என்றும், கார்த்திகை என்றும் வழங்கப்படும் காந்தள் பூ மிகுதியாக மலரும் காலம் கார்த்திகை மாதம். கார்த்திகை எனப்படும் விண்மீன் கூட்டம் கீழ்வானில் மாலையில் தோன்றும் மாதம் கார்த்திகை மாதம். பண்டைய தமிழர்கள் ஒரு மாதத்தில் உள்ள நாட்களை 27 நாள்மீன் பெயர்களால் வழங்கி வந்தனர். அந்த நாள்மீன்களில் ஒரு நாள்மீன் கார்த்திகை நாள். இவ்வாறு ஒவ்வொரு மாதமும் வருகின்ற கார்த்திகை நாள் முக்கியமான நாளாக தமிழர்களால் வழிபடப்பட்டு வருகின்றது.


விரதம்:


இதன் முதல் நாளான பரணி நட்சத்திர நாளில் சைவ சமயிகள் பகலில் மட்டும் ஒருபொழுது உண்டு கார்த்திகையன்று அதிகாலையில் நீராடி இறைவனை வழிபட்டு நீர் மட்டும் அருந்தி இரவு கோயிலுக்குச் சென்று தரிசனம் பெறுவர். மறுநாட்காலையில் காலைக்கடன்களை முடித்து நீராடி பாரணை அருந்தி விரதத்தை நிறைவு செய்வர். பன்னிரண்டு ஆண்டுகள் இவ்விரதம் இருப்பவர்கள் வேண்டும் வரங்களைப் பெறலாம்.


கார்த்திகை நட்சத்திரம்:


கார்த்திகை நட்சத்திரத்தன்று பூரணை கூடுகின்ற மாதம் கார்த்திகை ஆகும். இதனால் இக்கார்த்திகை நாள் திருக்கார்த்திகை எனப்படுகிறது. கார்த்திகை நட்சத்திரம் ஆயிரக்கணக்கான நட்சத்திரங்களைக் கொண்டிருந்த போதிலும் அதிலுள்ள ஏழு நட்சத்திரங்கள் பிரகாசமானவை. இதிலுள்ள மிகப்பிரகாசமான ஆறு நட்சத்திரங்களே கார்த்திகை நட்சத்திரக் கூட்டம் (Pleiades) எனப்படுகிறது.


விளக்கேற்றும் முறை:


அகல் விளக்குகளுக்கு குங்குமப் பொட்டு வைக்கப்பட்டு, அதில் எண்ணெய் ஊற்றி, பஞ்சாலோ, திரியாலோ ஆன திரியைப் போட்டு பூஜை செய்து, விளக்கு ஏற்ற வேண்டும். கார்த்திகை மாதம் முழுவதும் தினமும் மாலையில் வீடுகளிலும், ஆலயங்களிலும் விளக்கேற்றி வழிபடுவது, அக்னியின் வாயிலாக ஆண்டவனுக்கு அவிர்பாகம் (யாகத்தீயில் தேவர்களுக்காகப் போடப்படும் சாதம்) அளிக்கும் பெரும் யாகத்திற்கு நிகரான பலன் தரக்கூடியது. தினமும் விளக்கேற்ற இயலாதவர்கள் துவாதசி, சதுர்தசி, பௌர்ணமி ஆகிய மூன்று தினங்களில் மட்டுமாவது கண்டிப்பாகத் தீபம் ஏற்ற வேண்டும்.


கிழக்கு --> கஷ்டங்கள் விலகும். 


மேற்கு --> கடன் தொல்லை நீங்கும். 


வடக்கு --> திருமணத்தடை அகலும். 


எக்காரணம் கொண்டும் தெற்குத் திசை நோக்கி விளக்கு ஏற்றக்கூடாது. 


தீபத்திருநாளன்று குறைந்தபட்சம் 27 தீபங்கள் ஏற்றவேண்டும். வீட்டு வாசலில் லட்சுமியின் அம்சமான குத்து விளக்கில் தீபம் ஏற்றுவது நல்லது. அன்றைய தினம் நெல் பொரியை நைவேத்தியமாகப் படைத்தால் சிவனருள் கிடைக்கும். 


ஒரு முகம் ஏற்றினால் - நினைத்த செயல்கள் நடக்கும். 


இரு முகம் ஏற்றினால் - குடும்பம் சிறக்கும். 


மூன்று முகம் ஏற்றினால் - புத்திர தோஷம் நீங்கும். 


நான்கு முகம் ஏற்றினால் - செல்வம் பெருகும். 


ஐந்து முகம் ஏற்றினால் - சகல நன்மைகளும் உண்டாகும். 


கார்த்திகை தீப வரலாறு:


படைத்தல் தொழிலைச் செய்யும் பிரம்மனும், காத்தல் தொழிலைச் செய்யும் விஷ்ணுவும் நானே பெரியவன் என்று வாதாடிப் பல வருடங்கள் போரிட்டனர். இவர்களின் கர்வத்தை அடக்க எண்ணிய சிவபெருமான் இவர்கள் முன் ஜோதிப்பிழம்பாகத் தோன்றினார். அடியையும், முடியையும் தேடும்படி அசரீரி கூறியது. ஜோதியின் முடியைக் காண அன்னப்பறவை வடிவம் கொண்டு சதுர்முகப் பிரம்மன் விண்ணுலகம் சுற்றினார். அடியைக்காண திருமால், வராக அவதாரம் எடுத்து பாதாள லோகம் சென்று அடிமலரடியைத் தேடினார்.


அடிமுடி காணமுடியாத பரம்பொருளாக விளங்கினார் எம்பெருமான். அதனால் இருவரும் சிவபெருமானே முழுமுதற்கடவுள் என்று ஏற்று கொண்டனர். அவர்கள் இருவரும் தாம் கண்ட ஜோதியை எல்லோரும் காணும்படி காட்சியருள வேண்டும் என்று கேட்டுக்கொண்டனர். சிவபெருமான், திருக்கார்த்திகை நட்சத்திரத்தன்று ஜோதிப்பிழம்பாக காட்சியருளினார். முழுமுதற்கடவுள் சிவபெருமானே என்ற நோக்கில் கார்த்திகை தீபத் திருநாள் கொண்டாடப்படுகிறது.


சொக்கப்பனை:


கார்த்திகை தீப விழாவின் முதன்மையான நிகழ்வு சொக்கப்பனை ஏற்றுதல். பனை மரத்தை பூலோக கற்பக விருட்சம் என்றும், பொற்பனை என்றும் சிறப்பிப்பார்கள். அதை அக்னியின் வடிவம் என்பார்கள். கார்த்திகை தீப நாளில் பனைமரத்தை வெட்டி எடுத்து வந்து ஆலயத்தின் முன்னுள்ள முற்றத்தில் வெட்டவெளியில் நடுவார்கள். அதைச் சுற்றி 10 அல்லது 15 அடி உயரத்திற்குப் பனை ஓலைகளைக் கொண்டு கூம்பு போன்று அமைப்பார்கள். மாலையில் ஆலயங்களின் உச்சியில் தீபம் ஏற்றியதும், பஞ்ச மூர்த்திகளுக்குத் தீபாராதனை செய்து, கோவிலுக்கு முன்புறம் அமைக்கப்பட்டிருக்கும் இந்தக் கூம்புகளுக்கு முன்பாக எழுந்தருளச் செய்வார்கள். பின்னர், சுவாமிக்குத் தீபாராதனை செய்து, அந்தச் சுடரால் இந்த சொக்கப்பனைகளைக் கொளுத்துவர். சுடர் வேகமாகப் பரவி கொழுந்துவிட்டு எரியும். அந்த ஜோதியை சிவனாகவே எண்ணி வழிபடுவார்கள். இது, அக்னி மய லிங்கமாகும்.


மாவளி:


கார்த்திகைத் தீப நாளில் ‘மாவளி’ சுற்றுதல் என்ற விளையாட்டும் நிகழும். பனம் பூளையை அதாவது, பனம் பூக்கள் மலரும் காம்பு. இதை நன்கு காய வைத்து, காற்றுப்புகாமல் (பள்ளத்துக்குள் வைத்து) தீயிட்டுக் கரியாக்கிவிடுவார்கள்.


பிறகு, அதை நன்கு அரைத்துச் சலித்துத் துணியில் சுருட்டிக் கட்டுவார்கள். அடுத்து, பனை ஓலை மட்டைகள் மூன்றை எடுத்து அதன் நடுவில் கரித்தூள் சுருணையை வைத்துக் கட்டுவார்கள். பிறகு அதை உறியைப் போல் நீண்ட கயிற்றில் பிணைப்பார்கள்.


இதையடுத்து, துணிப்பந்தில் நெருப்பை வைத்து கனலை ஏற்படுத்துவர். கயிற்றைப் பிடித்து வட்டமாகவும் பக்கவாட்டிலும் சுற்றுவர். இருளில் அது தீப்பொறிகளைச் சிதறவிட்டு, எரிநட்சத்திரம் வேகமாகச் சுழன்று ஓடினால் எப்படி இருக்குமோ அப்படியாகக் காட்சி தரும்.


     இந்த தீப திருநாளில் அனைவரும் சகல ஐஸ்வர்யங்களையும் பெற்று வாழ்வாங்கு வாழ இறைவனை பிரார்த்திப்போமாக...


Wednesday, 14 November 2018

தீபம் ஏற்ற சிறந்த உலோகம்


    இல்லங்களிலும் இறைவன் சன்னிதானத்திலும் பரிகாரங்களுக்காக தீபம் ஏற்றுவதற்கு என்ன எண்ணெய், என்ன திரி பயன்படுத்த வேண்டும் என்று பலர் சொல்கிறார்கள். அதே போல என்ன உலோகத்தால் ஆன விளக்கு வேண்டும் என்ற விதியும் இருக்கிறது.


லஷ்மி கடாட்சம் வேண்டுமானால் வெள்ளி விளக்கிலும், 


ஆரோக்யம் ஏற்பட வெண்கல விளக்கிலும், 


தேவதைகளின் வசியம் ஏற்பட பஞ்சலோக விளக்கிலும், 


சனிதோஷம் விலக இரும்பு விளக்கிலும் தீபம் ஏற்ற வேண்டும். 


இவை அனைத்தையும் விடவும் மிகவும் சிறந்தது சகல தோஷங்களையும், சகல பீடைகளையும் போக்க கூடியது மண் விளக்கில் தீபம் ஏற்றி வழிபாடு செய்வதாகும்.

Monday, 12 November 2018

விநாயகரின் துணைவிகள்

இந்து புராணத்தில் யானை முகத்தினைக் கொண்ட விநாயக கடவுளுக்கு மிகுந்த முக்கியத்துவம் அளிக்கப்பட்டு விசேஷ இடமும் அளிக்கப்பட்டுள்ளது.விநாயகரின் பிறப்பு மற்றும் வீரத்தை குறிக்கும் கதைகள் பலவற்றை நாம் அறிவோம். அவரின்மணமான தகுநிலை பற்றி புராண கதைகளில் விவரிக்கப்பட்டுள்ளது. 


தென் இந்தியாவில் விநாயகர் ஒரு பிரம்மச்சாரி, அதாவது திருமணமாகாத கடவுளாக பார்க்கப்படுகிறார். ஆனால் அவரின் மணமான தகுநிலை பற்றியும், அவரின் துணைவிகளை பற்றியும் பல நம்பிக்கைகள் இருக்க தான் செய்கிறது. இரட்டை சகோதரிகளான ரித்தி மற்றும் சித்தியை அவர் மணமுடித்துள்ளார் என நம்பப்படுகிறது.


விநாயகர் மற்றும் அவரின் மணமான தகுநிலை பற்றிய புராணங்களை பார்க்கையில், நாட்டின் பல்வேறு பகுதிகளில்பல விதமான நம்பிக்கைகள் நிலவி வருகிறது. புத்தி (அறிவு), சித்தி (ஆன்மீக சக்தி)மற்றும் ரித்தி (வளமை) ஆகியோரை விநாயகர் மணந்துள்ளார் என பல பக்தர்கள் நம்பி வருகின்றனர். இன்னும் சில இடங்களிலோ சரஸ்வதி தேவியின் கணவராக விநாயகர் அறியப்படுகிறார். விநாயகரை பற்றியும், அவரின் மணமான தகுநிலை பற்றியும் இந்த வட்டார வேறுபாடுகள் உள்ளதால் பலவித குழப்பங்கள் நிலவுகிறது. 


சிவபுராணத்தில் விநாயகரின் திருமணம் விவரிக்கப்பட்டுள்ளது. விநாயகரும், அவருடைய தம்பியுமான கந்தனும் பிரஜாபதியின் புதல்விகளான சித்தி மற்றும் புத்தியை மணக்க போட்டி போட்டுள்ளனர். தன் சாதூரியத்தால் இந்த சண்டையில் ஜெயித்த விநாயகர், அந்த இரட்டை சகோதிரிகளை தனக்கு மணம் முடித்து வைக்க தன் பெற்றோரான பரமசிவன் பார்வதியிடம் கோரிக்கை விடுத்தார். விநாயகருக்கு இரண்டு மகன்கள் இருக்கிறார்கள் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது: சித்திக்கு பிறந்த ஷேமா மற்றும் புத்திக்கு பிறந்த லாபா. 


அஷ்ட சித்தியுடனான விநாயகரின் உறவும் நன்கு அறியப்பட்டதே. யோகா மூலமாக அடையப்படும் 8 ஆன்மீக ஆற்றல்களே இந்த அஷ்டசித்தியாகும். விநாயகரை சுற்றியுள்ள எட்டு பெண்கள் தான் இந்த 8 ஆன்மீக சக்திகளை குறிக்கிறார்கள். 


சந்தோஷி மாதாவிற்கு தந்தையாகும் விநாயகரை சிலர் குறிப்பிடுகின்றனர். மேற்கு வங்காளத்தில் வாழை மரத்துடன் விநாயகரை சம்பந்தப்படுத்துகின்றனர். துர்கை பூஜையின் முதல் நாளன்று, சிவப்பு நிற பார்டர்கொண்ட வெள்ளை நிற சேலையை வாழைமரத்தில் சுற்றி, அதன் இலைகளின் மீது குங்குமம் தெளிக்கப்படும். 'காலா பௌ' என அழைக்கப்படும் இந்த மரத்தை வணங்கிய பிறகு அதனை விநாயகரின் வலது பக்கம் வைப்பார்கள். இந்த காலா பௌவை விநாயகரின் மனைவியாக பல வங்காள மக்கள் கருதுகின்றனர்.


ரித்தி மற்றும் சித்தி என இரண்டு பேர்களுடன் விநாயகர் சம்பந்த படுத்த பட்டிருந்தாலும், அவரை கல்யாணம் ஆகாத பிரம்மச்சாரியாக பல பக்தர்கள் கருதுவதால், அந்த பெண்களுடனான அவரின் உறவு முறை தெளிவற்று உள்ளது. 


இந்த ஜோடிக்கு புராண சான்று எதுவும் இல்லை; ஆனால் சிவபுராணத்தில் புத்தி மற்றும் சித்தி பற்றியும். மத்ஸ்ய புராணாவில் ரித்தி மற்றும் புத்தி பற்றியும் குறிப்பிட பட்டுள்ளது. இந்து மதத்தில், விநாயகரை அவருடைய துணைவியான ரித்தி மற்றும் சித்தியுடன் சேர்ந்து தான் வணங்குகின்றனர்.

Friday, 9 November 2018

கந்த சஷ்டி விரதம்

நமக்கு இஷ்டமான வாழ்க்கையைத் தருவார் கந்தபெருமான். எத்தனை கஷ்டங்கள் வந்தாலும் சஷ்டியில் விரதம் இருந்தால், சங்கடங்களும் கவலைகளும் காணாமல் போகச் செய்வார் 


தீபாவளி அமாவாசைக்கு மறுநாள் பிரதமை முதல் கந்தசஷ்டி விரதம் மேற்கொள்ள வேண்டும். இந்த ஆறு நாட்களில் பகல் பொழுது மட்டும் உண்டு, காலையும் இரவும் பட்டினியாக இருத்தல் வேண்டும். இந்த நாட்களில் துவைத்து உலர்த்திய தூய்மையான ஆடைகளையே அணிய வேண்டும்.மெளன விரதம் அனுஷ்டிப்பது சிறப்பு. மாலையில் தம்பம், பிம்பம், கும்பம் ஆகியவற்றில் முருகப் பெருமானை ஆவாஹனம் செய்து வழிபடவேண்டும். வெல்லத்தாலான மோதகத்தை நிவேதனம் செய்வது விசேஷம்.


இந்த ஆறு நாட்களிலும் கந்தபுராணம், கந்தர் கலிவெண்பா, கந்தர் அனுபூதி, கந்தர் அலங்காரம் ஆகிய நூல்களைப் படித்தல், கேட்டல் மிகவும் நல்லது. இதனால் வீட்டில் உள்ள தீயசக்திகள் அகலும். சுபிட்சம் குடிகொள்ளும்.


ஆறாம் நாள் கந்தசஷ்டியன்று முழு உபவாசமிருந்து, பூஜைகள் செய்து, ஏழாம் நாள் காலை அன்னதானம் செய்து, விரதத்தை முடிக்க வேண்டும்.


ஆறு ஆண்டுகள் முறைப்படி இந்த விரதத்தைக் கடைப்பிடித்தால் அருளும் பொருளும் கிடைத்து ஞானத்துடனும் யோகத்துடனும் வாழலாம். 


விரத முறைகள்:

தீவிர முருக பக்தர்கள் இவ்விரதத்தை ஒரு கடுந் தவமாகக் கருதி, ஆறு தினங்களும் உபவாசம் இருத்தல் வழக்கம். அமாவாசைத் தினத்தில் ஒரு வேளை உணவு உண்பர்.

இவ்விரத முறைமையை அனுசரிக்க இயலாதவர்கள் ஐந்து தினங்கள் ஒரு வேளை பால், பழம் மட்டும் அருந்தி, ஆறாம் நாள் உபவாசம் இருத்தலும் நடைமுறையாக உள்ளது. ஏழாம் நாள் பாரணை அருந்தி விரதத்தை நிறைவேற்றுவர்.


தொடக்க தினத்தில் ஆலயத்தில் தர்ப்பையணிந்து, காப்புக்கட்டல்அதாவது சங்கற்பம் செய்தல் வழக்கம்.


பக்தர்கள் ஆறு தினங்களும் முருகன் ஆலயத்தில் இறைவழிபாடு, புராணபாடனம், போன்ற புனிதச் செயல்களில் ஈடுபடுவர். இறுதி நாளில் காப்பை அவிழ்த்து, தட்சணையுடன் அர்ச்சகரிடம் சமர்ப்பிக்க வேண்டும். ஏழாம் நாள் அதிகாலை நீராடி அனுஷ்டானங்களை நிறைவேற்றி, பாரணைப் பூஜை முடிந்ததும் மகேஸ்வர பூசை செய்து விரதத்தைப் பூர்த்தி செய்யலாம்.

மனிதர்களின் உட்பகையாக உள்ள காமம், வெகுளி, ஈயாமை (உலோபம்), மயக்கம், செருக்கு, பொறாமை ஆகிய அசுரப் பண்புகளை அழித்து, அவர்கள் தெய்வீக நிலையில் பெருவாழ்வு வாழ அருள் பாலிக்கும் இறைவன் ஆற்றலின் பெருமை கந்த சஷ்டி உணர்த்தும் மெய்ப்பொருள் ஆகும்.

முருகப் பெருமான் சூரசங்காரம் செய்து தேவர்களைக் காத்த அருட் செயலைக் குறிக்கும் இவ்விழாவின் ஆறாம் நாள் முருகன் ஆலயங்களில் ‘சூரன் போர்’ என்னும் சமய நிகழ்வு நாடக பாணியில் நடைபெறுவது வழக்கம்.

சூர சம்காரத்தின் முடிவில் முருகன் மா மரமாக நின்ற சூரனை தன் சக்தியாகிய வேலினால் பிளந்தார். பிளவுபட்ட மாமரம் சேவலும் மயிலுமாக மாறவும், சேவலை கொடியாகவும் மயிலை வாகனமாகவும் முருகன் ஏற்றுக்கொண்டார். இது கந்தபுராணத்தில் சொல்லப்பட்ட ஒரு நிகழ்ச்சியாகும்.

கந்தபுராணத்தில் வரும் சூரபத்மன், சிங்கமுகன், தாரகாசுரன் ஆகியோர் முறையே சைவ சித்தாந்தத்தில் பேசப்படும் ஆணவம், கன்மம், மாயை என்னும் மும்மலங்களைக் குறிப்பதாகக் கருதப்படுகின்றது. ஆன்மாவைத் துன்புறுத்தும் மலங்களின் கெடுபிடியில் இருந்து ஆன்மாவுக்கு விடுதலை அளிப்பதோடு ஆணவமலத்தின் பலத்தைக் குறைத்து அதனைத் தன் காலடியில் இறைவன் வைத்திருப்பதை உணர்த்துவதே சூர சம்காரமாகும்.

ஆறுபடை வீடுகளிலும், அனைத்து முருகன் கோயில்களிலும் இந்த ஆறு நாட்களிலும் சிறப்பான பூஜைகள் நடைபெறும். ஆறு நாட்கள் தொடர்ந்து விரதம் இருப்பவர்களும், இருக்க முடியாமல் போனவர்களும் கூட மாதந்தோறும் வரும் சுக்கில பட்சத்துச் சஷ்டியில் முருகப் பெருமானை வழிபட்டு விரதம் மேற்கொள்ளலாம்.


கந்த விரத மகிமை:


முழு முதற் கடவுளாக கலியுகக்கந்தப் பெருமான் போற்றப்படுகின்றார். மனித மனம் விரதத்தின் போது தனித்து விழித்து பசித்து, இருந்து ஆறு வகை அசுத்தங்களையும் அகற்றித் தூய்மையை அடைகின்றது. தூய உள்ளம், களங்கமற்ற அன்பு, கனிவான உறவு என்பவற்றிற்கு அத்திவாரமாக *கந்தசஷ்டி* விரதம் அமைகிறது. கொடுங்கோலாட்சி செலுத்திய ஆணவத்தின் வடிவமாகிய சூரனையும், கன்மத்தின் வடிவமாகிய சிங்கனையும், மாயா மலத்தின் வடிவமாகிய தாரகனையும், அசுர சக்திகளையெல்லாம் கலியுக வரதனான பெருமான் அழித்து, நீங்காத சக்தியை நிலை நாட்டிய உன்னத நாளே கந்த சஷ்டியாகும்.


கந்தசஷ்டி விரதத்தின் பலன்:


குடும்பத்தில் துன்பங்கள் நீங்கவும், வேலைவாய்ப்பு, கடன் தொல்லை நீங்கவும் இவ்விரதத்தை கடைப்பிடிப்பது நன்று. “சட்டியில் இருந்தால் அகப்பையில் வரும்” என்பது பழமொழி. இதன் உண்மையான பொருள், சஷ்டியில் விரதமிருந்தால் கருப்பையில் குழந்தை உண்டாகும் என்பதாகும். எனவே குழந்தை வரம் வேண்டும் பெண்களுக்கு இது மிகவும் சிறந்த விரதமாகும். சுருக்கமாகச் சொன்னால் இவ் விரதத்தை கடைப்பிடித்து விரும்பிய பலனைப் பெறலாம்


முருகன் அருள் வேண்டி பக்தர்கள் இருக்கும் விரதங்களுள் மிகச்சிறப்புடையது சஷ்டி விரதம். இந்த விரதத்தை மனதில் கொண்டே “சஷ்டியிலிருந்தால் அகப்பையில் வரும்” என்ற பழமொழி எழுந்தது. சஷ்டி விரதம் இருந்தால் நல்ல குழந்தை பேறு கிடைக்கும் என்பது பொருள். சஷ்டி விரதம் இருந்தால் நம் உள்ளத்தில் இறைவன் குடி கொள்வான் என்ற பொருளும் உண்டு.


வரலட்சுமி விரதம்

முன்பு ஒரு காலத்தில் சவுராஷ்டிர தேசத்தில் பத்ரஷ்ரவா என்றொரு அரசன் இருந்தான். அவன் மிகவும் நல்ல முறையில் ஆட்சி நடத்தி வந்தான். அவனது மனைவி கசந்திரிகா அவளும் கணவனுக்கேற்ற மனைவியாக எல்லா வகையிலும் விளங்கினாள். எந்நேரமும் நல்ல சொற்களையே பேசி வேலைக்காரர்களை நல்ல முறையில் நடத்தி வந்தாள். அவர்களுக்கு ஒரு அழகான பெண் குழந்தை பிறந்தது. அவளுக்கு சியாமா என்று பெயரிட்டு அருமை பெருமையாக வளர்த்து வந்தார்கள்.


தினமும் லட்சுமி பூஜை செய்யாமல் கசந்திரிகா உணவருந்த மாட்டாள். கணவனுக்கு மிகவும் உதவியாகவும், வயதான மாமனார், மாமியாரை போற்றிப் பாதுகாப்பதில் மிகவும் அக்கறை உள்ளவளாகவும் இருந்தாள் அந்த மாதரசி. இதனால் மனம் மகிழ்ந்த லட்சுமிதேவி அவளுக்கு அருள் புரிய எண்ணினாள். ஓர் ஆடி வெள்ளிக்கிழமை நாளில் மிகவும் வயதான சுமங்கலி போல கசந்திரிகாவின் அரண்மனைக்கு வந்தாள்.


அப்போதுதான் பகல் உணவு உண்டு முடித்து தாம்பூலம் தரித்துக் கொண்டிருந்தாள் கசந்திரிகா. அந்த சுமங்கலியை வரவேற்று உரிய முறையில் உபசரித்தாள். வெற்றிலை, பாக்கு, குங்குமம், மஞ்சள் முதலிய மங்கலப் பொருட்களைக் கொடுத்தாள். “தாயே, தாங்கள் யார்? என்னை நாடி வர என்ன காரணம்“ என்று கேட்டாள்.


அதற்கு லட்சுமி தேவி, “அதை அப்புறம் சொல்கிறேன். என் கேள்விக்கு நீ முதலில் பதில் சொல். நீ வணங்கும் லட்சுமி தேவியின் அவதார தினமான இன்று அதிதிக்கு உணவிடாமல் நீ இப்படி வயிறார சாப்பிட்டு தாம்பூலம் தரித்துக் கொண்டிருக்கிறாயே இது நியாயமா?” என்று கேட்டாள்.


ஒருபோதும் கோபமே வராத கசந்திரிகாவுக்கு அன்று மிகவும் ஆத்திரம் வந்து விட்டது. “நீ யாரோ ஒரு பிச்சைக்காரக் கிழவி, எனக்கு புத்தி சொல்வதா?” என்று கேட்டு அன்னையைக் கன்னத்தில் அடித்து விட்டாள். லட்சுமி தேவியும் ஒன்றும் சொல்லாமல் கண்கள் சிவக்க அந்த அரண்மனையை விட்டு வெளியேறத் தொடங்கினாள். அப்போது சியாமா அங்கு வந்து அந்த சுமங்கலியைப் பார்த்து, “தாங்கள் யாரம்மா? ஏன் கண்கள் சிவந்திருக்கின்றன? உங்களை யாராவது ஏதாவது சொன்னார்களா? என்று பரிவோடு வினவினாள்.


இதனால் உள்ளம் குளிர்ந்த திருமகள், “சியாமா, உன் அன்னைக்கு எப்படி லட்சுமிதேவியை முறைப்படி பூஜிப்பது என்பதை சொல்லிக் கொடுக்க வந்தேன். அனால் அவள் என் கன்னத்தில் அடித்து அவமானப்படுத்தி அனுப்பி விட்டாள்” என்றாள். உடனே “தாயே அந்தப் பூஜையை எனக்குக் கற்றுக் கொடுங்கள். நான் முறைப்படி செய்கிறேன்” என்று சியாமா கூற, அவ்வாறே அன்னையும் பூஜை முறைகளை அருளிச் செய்தாள்.


அன்று முதல் சியாமா ஒவ்வொரு வருடமும் அந்த பூஜையை மிகச் சிறப்பாகச் செய்து வந்தாள். லட்சுமிதேவி அரண்மனையை விட்டு நீங்கியதால் பத்ரஷ்ரவா அரசனின் செல்வங்கள் குறைய ஆரம்பித்தன. எல்லாச் செல்வமும் தன்னை விட்டுப் போகும்முன் தனது மகளுக்கு திருமணம் செய்து வைக்க முயன்றான். சியாமா வருடந்தோறும் வரலட்சுமி பூஜை செய்து வந்த பலனால் அவளுக்கு அவளை போற்றிப் பாதுகாக்கும் கணவனாக மாலாதரன் என்ற மன்னன் வாய்த்தான். சியாமா கணவன் வீடு சென்றாள்.


ஒரு நிலையில் பத்ரஷ்ரவாவின் எதிரிகள் அவனையும், அவனது மனைவியையும் நாட்டை விட்டுத் துரத்தி விட்டு சிம்மாசத்தைப் பிடித்துக் கொண்டனர். ஒரு பிடி சோற்றுக்குக் கூட வழியின்றி காட்டில் அலைந்தனர் இருவரும். தன் பெற்றோரின் நிலை சியாமாவை மிகுந்த வருத்தத்துக்குள்ளாக்கியது. அவர்களை தன் நாட்டுக்கு அழைத்து உணவிட்டுக் காத்து வந்தாள். ஒரு முறை அவள் ஒரு குடம் நிறைய பொற்காசுகளைப் போட்டு தனது தாயிடம் கொடுத்து இதை வைத்துப் பிழைத்துக் கொள்ளுங்கள் எனக் கூறினாள். கசந்திரிகா தெட்டதும் அந்தப் பானையில் இருந்த தங்கக் காசுகள் எல்லாம் கரித் துண்டுகளாக மாறி விட்டன.


இதைக் கண்ட சியாமாவுக்கு அப்போது தான் தன் தாய் அந்த சுமங்கலியை அவமானப்படுத்தி அனுப்பிய நிகழ்ச்சி நினைவுக்கு வந்தது. வந்தது சாதாரண மானிடப் பெண்ணில்லை. அந்த மகாலட்சுமியே தான் என்று உணர்ந்து அதை தன் தாயிடம் கூறினாள். தன் தவறை உணர்ந்த கசந்திரிகாவும் வரலட்சுமி பூஜை முறையை தனக்குக் கற்பிக்குமாறு கேட்டுக் கொண்டாள்.


அந்த தருணம் முதல் கசந்திரிகாவும் அந்த பூஜையை முறைப்படி செய்து வந்தாள். அதன் பலனாக அவள் கணவன் தைரிய லட்சுமியின் அருள் பெற்று, வீரத்துடன் படை வீரர்களை சேர்த்துக் கொண்டு சென்று எதிரி மன்னனை வீழ்த்தி மீண்டும் முடி சூடினான். இழந்த செல்வங்கள் வைபவங்கள் அனைத்தையும் திரும்பப் பெற்றாள் கசந்திரிகா.


இந்தக் கதையை வரலட்சுமி விரதம் இருக்கும் தினத்தன்று வயதான சுமங்கலியின் வாயால் சொல்லிக் கேட்பது மிகவும் சிறப்பு வாய்ந்தது.


வரலட்சுமி பூஜைக்கான மற்றொரு கதை:


வரலட்சுமி பூஜையால் பலன் பெற்ற மற்றொரு பெண் சாருமதி. அவள் சாதாரணக் குடும்பத்தில் பிறந்து, வளர்ந்து, மணந்த ஒரு பெண்மணி. ஆனால் அவள் தன் கணவனிடமும், குழந்தைகளிடமும் காட்டிய ஈடுபாடு காரணமாக மனமிரங்கிய மகாலட்சுமி அவள் கனவில் வந்து வரலட்சுமி விரதத்தைப் பற்றி எடுத்துக் கூறினாள். மறுநாள் எழுந்த சாருமதி தன் கனவைப் பற்றிக் கூற அதைக் கேள்விப்பட்ட பலரும் அந்தப் பூஜையை செய்தனர். அதனால் நன்மக்கட் பேறுடன் என்றும் சுமங்கலியாக வாழும் பாக்கியத்தைப் பெற்றனர்.


மானிடப் பெண்களுக்கு மட்டுமல்ல, தேவகுலப் பெண்களும் இந்த பூஜை செய்து பயனடைந்து உள்ளனர். சித்திரநேமி என்றொரு தேவகுலப் பெண் இருந்தாள். அவள் நடுநிலை தவறாதவள் என்று பெயரெடுத்தவள். அதனால் தேவர்களிடையே எழும் சில சச்சரவுகளுக்கு அவளே நீதிபதியாக இருந்து தீர்ப்பு வழங்குவாள். 


ஒருமுறை அவள் நடுநிலை தவறி தீர்ப்பு சொல்லி விட்டாள். அதனால் அவளுக்கு தொழு நோய் பீடிக்கும்படி சாபம் கொடுத்தாள் அன்னை உமையவள். தன்னை மன்னிக்கும்படி வேண்டி கேட்டுக் கொள்ள, மனமிரங்கிய தேவி கங்கை நதிக்கரையில் வரலட்சுமி விரதத்தை அனுஷ்டித்தால் அவளுக்கு உள்ள நோய் நீங்கும் என்று சொன்னாள்.


சித்திரநேமியும் அவ்வாறே கங்கைக் கரை வந்து வரலட்சுமி பூஜையைச் செய்ய அவளது நோய் நீங்கி நல்லுருவம் பெற்றாள். அவள் “என்னைப் போல புண்ணிய நதிகளான கங்கை, யமுனை, சிந்து, காவிரி, தாமிபரணி முதலிய நதிகளில் நீராடி இந்த பூஜையைச் செய்பவர்களுக்கு பலன் பல மடங்கு கொடுக்க வேண்டும் என வேண்டிக் கொண்டாள். லட்சுமியும் அவ்வாறே செய்வதாக கூறினாள். அதனால் இந்த பூஜையை நதிகளில் நீராடிய பின் செய்வது மிகவும் சிறப்பு என்பது ஐதீகம்.


வரலட்சுமி விரதம் பற்றிய புராணக்கதை:


சித்திரநேமி என்ற தேவகுலப் பெண் நீதிபதியாக இருந்தாள். அவள் தேவர்களுக்கு ஏற்படும் பிரச்சனைகளுக்கு நடுவராக இருந்து தீர்ப்பு வழங்குவாள். ஒருமுறை அவள் பாரபட்சமாக நடத்துக்கொண்டதால் அன்னை பார்வதி அவளை குஷ்டரோகியாகும்படி சாபம் கொடுத்தாள்.


சித்திரநேமி சாபவிமோசனம் கேட்டு பார்வதி காலில் விழுந்தாள். வரலட்சுமி விரதத்தை கடைபிடித்தால் நோய் நீங்கும் என பார்வதி அருள் செய்தாள். உடனே சித்திரநேமி பூலோகம் வந்து, ஒரு குளக்கரையில் அமர்ந்து வரலட்சுமி பூஜை செய்து சாபம் நீங்கப்பெற்றாள். புண்ணிய நதிகளில் தீர்த்தமாடுவது, வரலட்சுமி விரதம் இருந்ததற்கு ஒப்பானதாகும். குறிப்பாக கங்கை, சரஸ்வதி, நர்மதை, கோதாவரி, காவிரி, தாமிரபரணி ஆகிய புண்ணிய தீர்த்தங்களில் நீராடினால் காலம் முழுவதும் வரலட்சுமி விரதம் இருந்த பலன் கிடைக்கும். 


இன்றைய நாளில் பெண்கள் புண்ணியநதிகளில் தீர்த்தமாடினால் கூடுதல் பலன்கள் கிடைக்கும் மாமனார் மற்றும் மாமியாருக்கு பணிவிடை செய்யும் மருமகள்களுக்கும், வரலட்சுமி விரதம் அனுஷ்டித்த பலன் கிடைக்கும். 


Tuesday, 6 November 2018

விரதங்கள்

விரதங்கள் இறைவழிபாட்டில் முக்கிய பங்கு வகிக்கிறது. அவை இறைவழிபாட்டில் முக்கியமாக ஒன்பது விரதங்கள் கடை பிடிக்கப்படுகின்றன. அனைத்து விதமான விரதங்களும் பலன் தரக்கூடியவையே. விரதங்கள் இருப்பதால் மனமும், உடலும் சுத்தம் அடைகிறது. ஆனாலும் சில முக்கிய விரதங்கள் அனைவராலும் கடைப்பிடிக்கப்படுகிறது.


இறை வழிபாட்டில் முக்கியமாக ஒன்பது விரதங்கள்: 

நவராத்திரி விரதம், 

வரலட்சுமி விரதம், 

கேதாரகவுரி விரதம், 

பாவை நோன்பு, 

விநாயகர் சதுர்த்தி விரதம், 

கந்தசஷ்டி விரதம், 

வைகுண்ட ஏகாதசி விரதம், 

சிவராத்திரி விரதம், 

காரடையான் நோன்பு.


விரதங்கள் இருப்பதற்கு பல முறைகள் உண்டு. விரதம் இருக்கும் நாள் முழுவதும் உபவாசம் இருத்தல், ஒரு பொழுது மட்டும் உணவு உண்டு உபவாசம் இருத்தல், நீர் ஆகாரம் மட்டும் குடித்து உபவாசம் இருத்தல் போன்ற அவரவரின் விருப்பத்திற்கு ஏற்ப விரதம் கடைப்பிடிக்கப்படுகிறது. கடவுளிடம் வைக்கப்படும் நியாயமாக கோரிக்கைகளுக்காக இருக்கும் அனைத்து விதமான விரதங்களுக்கும் பலன் கிடைக்கும் என்பது அசைக்க முடியாத நம்பிக்கை.


Saturday, 3 November 2018

ராகுகால பூஜை

ராகு பூஜைக்கென்று சில சங்கல்பங்கள் செய்து, விரதமிருந்து பக்தர்கள் குறையை நீக்கலாம். அவை,


1. திருமணத் தடையை நீக்குதல்


2. வழக்குகளில் வெற்றி பெறுதல்


3. குடும்பச் சிக்கல்களை நீக்கும் என்றும் அனைத்திற்கும் தனித்தனி மந்திரங்கள் இருக்கின்றன.


1. ராகுகால அஷ்டமி பூஜை செய்தால் - குறைவற்ற வாழ்வைப் பெறலாம்.


2. ராகுகால மங்களவார பூஜை (செவ்வாய்) செய்பவர்களுக்கு திருமணத் தடைகள் நீங்கும்.


3. சுக்கரவார பூஜை (வெள்ளி) பூஜை செய்து வழிபட்டால் - நல்ல புகழைத் தருதல், எதிர் பார்ப்பில் வெற்றி கூடுதல் கிட்டும்.


4. மாங்கல்ய பல ராகு பூஜை (வெள்ளிக்கிழமை) செய்தால் - திருமண நாணின் பலம் கூடும்.


5. சிவாஸ்தான ராகுகால சாந்தி பூஜை (திங்கட்கிழமையில் மட்டும் செய்ய வேண்டும்)- சுபகாரியத் தடங்கல் மனோவியாகூலம், சிவ தோசம், சாபம் முதலியவை நீங்கும்.


6. சர்ப்பதோச நிவாரணம் பூஜை செய்தால்- பாம்பு தோசம் நீங்கும்.


7. வியாபார லாப ராகு கால பூஜை செய்தால்- வியாபாரத் தொடக் கத்தில் செய்யப்படுதல்.

Monday, 29 October 2018

கிரிவலம்

சித்ரா பவுர்ணமி கிரிவலம் செல்வதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா?


நிலவின் ஒளிக்கு சில அபூர்வ ஆற்றல்கள் உண்டு. பயிர், செடி, கொடி, மூலிகைகள் செழிப்பாக வளர்வதற்கு தேவையான சக்தியை அது தரும். நிலவொளி நம் மீது பட்டால் அறிவு பலப்படும். மனக்குழப்பம் நீங்கும். மற்றைய நாளை விட தெய்வீக சக்தி மிக்க மலைகளுக்கு பவுர்ணமியில் சக்தி அதிகரிக்கும்.


பவுர்ணமி கிரிவலத்தால் தெய்வ அருள், மூலிகைக் காற்றால் உடல்நலம், நிலவொளியால் மனத்தெளிவு உண்டாகிறது. வலம் வருபவர்கள் இறைநாமத்தை உச்சரித்தப்படி அமைதியாக வந்தால் பலன் இரட்டிப்பாகும். 


குறிப்பாக சித்தர்களின் அருளை நாம் கிரிவலத்தில் பெற முடியும். சித்ரா பவுர்ணமி வழிபாட்டின் மிக முக்கிய அம்சமாக சித்தர்களின் அருளை பெறுவது வலியுறுத்தப்பட்டுள்ளது.


நமக்கு மட்டுமல்ல சித்தர்களுக்கும் சித்ரா பவுர்ணமி முக்கியத்துவம் வாய்ந்தது. பொதுவாக சித்ரா பவுர்ணமி தினத்தன்று பூமி யில் இருந்து ஒருவித உப்பு கிளம்பும். அந்த உப்புக்கு பூமிநாதன் என்று பெயர். இந்த உப்பு அதிக சக்தி தரக்கூடியதாகும். இதை சித்தர்கள்தான் கண்டுபிடித்து உலகத்துக்கு தெரிவித்தனர்.


சித்ரா பவுர்ணமி தினத்தன்று அந்த உப்பு சக்தி பெறுவதற்காகவே சித்தர்கள் பல இடங்களில் தோன்றுவது உண்டு. மேலும் பல முக்கிய தலங்களில் உள்ள இறைமூர்த்தங்களை வழிபடுவதற்காக சித்தர்களும் வருவார்கள். அந்த வகையில் திருவண்ணாமலை, சதுரகிரி மலை, பொதிகை மலை உள்பட பல்வேறு மலைகளில் சித்தர்களும் வலம் வருவார்கள்.


திருவண்ணாமலையில் அருணாசலேஸ்வரரின் அருளை பெறுவதற்காக சித்தர்கள் பல்வேறு வடிவங்கள் எடுத்து கிரிவலம் வருவதாக நம்பப்படுகிறது. வண்ணத்துப்பூச்சியாக, ஏதோ விலங்காக அல்லது மனிதர்கள் போலவே சித்தர்கள் வலம் வருவார்கள். அந்த சமயத்தில் நாமும் கிரிவலம் சென்றால் நமக்கு அண்ணா மலையாரின் அருளுடன் சித்தர்களின் அருள் ஆசியும் கிடைக்கும்.


எனவேதான் கிரிவல தலங்களில் உள்ள சித்தர்களின் ஜீவ சமாதியை சித்ரா பவுர்ணமி தினத்தன்று தவறாமல் வழிபட வேண்டும் என்று நமது மூதாதையர்கள் அறிவுறுத்தி உள்ளனர். திருவண்ணாமலையில் ஏற்கனவே நிறைய சித்தர்களின் அருள் உள்ளது. சித்ரா பவுர்ணமி தினத்தன்று மற்ற இடங்களில் உள்ள சித்தர்களும் திருவண்ணாமலைக்கு வந்து விடுவார்கள் என்று ஒரு நம்பிக்கை உள்ளது. ஆகையால் திருவண்ணாமலைக்கு கிரிவலம் செல்பவர்கள் ஈசன் பெயருடன் சித்தர்களையும் நினைத்து வழிபட்டால் நன்மைகள் உண்டாகும்.


பொதிகை மலையில் அகத்தியரை வழிபட்டால் சிவபெருமானின் திருவடியை மிக எளிதாக சென்றடைய முடியும் என்பார்கள். அதுபோல மதுரையில் ஒவ்வொரு சித்ரா பவுர்ணமி தினத்தன்றும் இந்திரனே நேரில் வந்து சொக்கநாதரை பூஜித்து வழிபடுவதாக சொல்வார்கள். அந்த சமயத்தில் மதுரை சொக்கநாதரை நாமும் வழிபட்டால் இந்திரனின் அருள்ஆசி பெற முடியும்.


சித்ரா பவுர்ணமி தினத்தன்று சித்திரை நட்சத்திரமும், பவுர்ணமி திதியும் சேர்வதால் கடலில் நீராடுவது மிகவும் நல்லது என்று நம் முன்னோர்கள் கணித்து உள்ளனர். கடலில் நீராடினால் இதுவரை சம்பாதித்த பாவங்கள் அனைத்தையும் கரைத்து விடலாம் என்பது ஐதீகம். கடலில் புனித நீராட வருபவர்களுக்காக சித்தர்கள், ரிஷிகள் தயாராக காத்து இருப்பார்கள் என புராணங்களில் குறிப்பிடப் பட்டுள்ளது. எனவே கடலில் புனித நீராடினால் சித்தர்களின் ஆசி பரிபூரண மாக நமக்கு கிடைக்கும்.


தஞ்சை பெரிய கோவிலில் சித்ரா பவுர்ணமி விழாவை “சித்தர் பெருவிழா” என்றே நடத்துவார்கள். இதையட்டி நந்தி எம்பெருமானுக்கும், கருவூராருக்கும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறும். அன்னதானமும் செய்வார்கள். இதில் பங்கேற்றால் சித்தர் பெருமான் கருவூராரின் அருளை பெறலாம்.


சித்தர்கள் பெரும்பாலும் ஏழை எளியவர்களின் பசியை போக்க அன்னதானம் செய்யுங்கள் என்பதையே வலியுறுத்தி உள்ளனர். எனவே முடிந்தால் அன்னதானம் செய்யுங்கள். இல்லையெனில் அன்னதானத்துக்கு உதவி செய்யுங்கள்.


சதுரகிரியில் இதை கருத்தில் கொண்டே 24 மணி நேரமும் அன்னதானம் கொடுக்கிறார்கள். சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு சதுரகிரியில் கணக்கில் அடங்காத சித்தர்களை தரிசனம் செய்ய முடியும். குறிப்பாக கோரக்கர் சித்தரை நினைத்து தியானம் செய்தால் நிச்சயமாக அவரது தரிசனத்தை சதுரகிரியில் பெற முடியும்.


சதுரகிரியில் சித்தர்களின் முக்கிய ஆசியாக நமக்கு நல்ல உடல்நலம் கிடைக்கும். 


16 வகை பேறுகளில் ஒன்று நோயின்மை. சித்ரா பவுர்ணமி வழிபாட்டுக்கும் நோயின்மைக்கும் நெருங்கிய தொடர்பு இருப்பதாக சித்தர்கள் கண்டுபிடித்து கூறி உள்ளனர். எனவே சதுரகிரியில் எந்த அளவுக்கு நாம் முழு மனதுடன் சித்தர்களை வழிபடுகிறோமோ அந்த அளவுக்கு நன்மைகள் கிடைக்கும். சதுரகிரியில் சந்தன மகாலிங்கம் அருகே 18 சித்தர்களின் சன்னதி உள்ளது. அந்த பகுதியில் அமர்ந்து தியானம் செய்தாலே போதும், சித்தர்கள் உங்களுக்குள் ஊடுருவுவார்கள்.


அதுபோல திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் ஆலயத்திலும் கிரிவலத்தின்போது சித்தர்களின் அருளை பெறலாம். திருச்செங்கோடு மலையானது ஓங்கார வடிவில் அமைந்தது. எனவே அங்கு சித்தர்கள் அருள் அதற்கேற்ப கிடைக்கும். 


நாகை மாவட்டம் எட்டுக்குடி முருகன் கோவி லில் பதினெண் சித்தர்களில் ஒருவரான வால்மீகி சித்தர் அடங்கியுள்ளார். சித்ரா பவுர்ணமி தினத்தன்று சிறப்பு பூஜைகள் நடைபெறும். அதில் பங்கேற்றால் திருமண பாக்கியம் கிடைக்கும் என்கிறார்கள்.


ஆலயங்களில் மட்டுமின்றி ஜீவ சமாதிகளிலும் சிறப்பு பூஜைகள் நடைபெறும். உங்களுக்கு அருகில் உள்ள ஏதாவது ஒரு சித்தரின் ஜீவ சமாதிக்கு சென்று வழிபாடு செய்தால் சித்ரா பவுர்ணமி வழிபாட்டுக்குரிய அனைத்து பலன்களையும் நிச்சயம் பெற முடியும்.


சிங்கம்புணரியில் புகழ்பெற்ற முத்து வடுகநாதர் ஜீவ சமாதி அமைந்துள்ளது. சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு அந்த ஜீவ சமாதி தலத்தில் சித்தரின் திருஉருவ சிலையை தேரில் வைத்து நகர் வலமாக எடுத்து செல்வார்கள். அப்போது சித்தரை வழிபட்டால் நாம் கேட்டது எல்லாம் கிடைக்கும் என்பது நம்பிக்கை.


சித்தர்களை வழிபடச் செல்லும் முன்பு காலை வீட்டில் குளித்து முடித்து விட்டு உங்களது குல தெய்வம், இஷ்ட தெய்வத்தை வணங்குங்கள். முடிந்தவர்கள் சக்கரை பொங்கல் நைவேத்தியம் செய்து வழிபடுவது நல்லது. மாலையில் சந்திரனை பார்த்து விட்டு ஜீவ சமாதிக்கு சென்று வழிபடுங்கள் அல்லது சித்தர்களை நினைத்தப்படி கிரிவலம் வாருங்கள்.


உங்களது தேடல் உண்மையாக இருந்தால் நிச்சயம் சித்தர்களின் அருளை பெற முடியும்.

Saturday, 27 October 2018

சாஸ்திரங்கள் சில

நம் முன்னோர்களால் வகுத்து தரப்பெற்ற சாஸ்திரங்கள் சில:


1. மகாலட்சுமி அமர்ந்த நிலையில் உள்ளபடம். விக்கிரகம் ஆகியவற்றையே வீட்டில் வைக்க வேண்டும்.


.2. வீட்டு பூஜையில் கற்பூர தீபம் தானே குளிர்ந்து விடுவதுதான் நல்லது. நாம் அணைக்கக் கூடாது.


3. திருக்கோவிலின் பிரதான வாசல் வழியேதான் கோயிலுக்குள் செல்ல வேண்டும்.


4. அர்ச்சனைப் பொருட்களை இடது கையால்எடுத்துச் செல்லக் கூடாது.


5. கோவிலிலிருந்து வீட்டிற்கு வந்ததும் சிறிது நேரம் கழித்துக் கை,கால்கள் கழுவலாம். ஆனால் குளிக்கக் கூடாது.


6. எலுமிச்சம் பழத் தீபம் விளக்கைக் கோயிலில் மட்டுமே ஏற்ற வேண்டும். வீடுகளில் ஏற்றக் கூடாது.


7. சுவாமிக்கு எடுக்கும் ஆரத்தியில் சுண்ணாம்பு சேர்க்கக் கூடாது. 

மனிதர்களுக்கு எடுக்கும் போது சுண்ணாம்பு சேர்க்கலாம்.


8. சனி பகவானுக்கு வீட்டில் எள் விளக்கு ஏற்றக் கூடாது


9. இறைவன் சன்னிதி போன்ற தெய்வீக அலை உள்ள இடத்தில் யோசித்தால் நல்ல முடிவு கிடைக்கும்.


10. நல்ல காரியங்கள் பற்றிப் பேசும் போது, எள் அல்லது எண்ணெய் பற்றிப் பேசக் கூடாது. பேசினால் சுபம் தடைபடும்.


11. திருப்பதி, திருத்தணி, பழநி, திருச்செந்தூர் போன்ற கோவில் ஸ்தலத்திற்குச் சென்றால் அங்கிருந்து நேராக அவரவர் வீட்டிற்குத்தான் செல்ல வேண்டும்.


12. ருத்ராட்சம் அணிவோர் இறுதிச் சடங்குகளுக்குச்செல்லும் பொழுது அதைக் கழற்றி வைத்து விட்டுத்தான் செல்ல வேண்டும்.


13. கோயில் மூடியிருக்கும் போதும், திருமஞ்சன பூஜையின் போதும், திரையிட்டிருக்கும் போதும் வழிபடக்கூடாது.


14. குங்குமத்தை வலது கை மோதிர விரலில் இட்டுக் கொள்வதே நல்லது


15. விக்கிரகத்திற்கு தீபாராதனை நடக்கும்போது கண்களை மூடிக்கொண்டு வணங்கக்கூடாது.


16. பெண்கள் மாதவிலக்கின்போது எக்காரணம் கொண்டும் பூ வைத்துக் கொள்ளக் கூடாது.


17. செவ்வாய் கிழமை, புதன் கிழமை பகல்,வெள்ளிக்கிழமை குத்து விளக்கைத் துலக்கக் கூடாது.


18. இறந்த முன்னோர்களின் படங்களை (அவர்கள் தெய்வமாகி விட்டிருந்தாலும்) சாமி படங்களுடன் வைத்து வணங்குதல்கூடாது. தனியாக வீட்டில் வேறொரு இடத்தில் வைத்து வணங்கலாம.


19. வாழைப்பழம் சாப்பிட்டபின் மோர் சாப்பிடக் கூடாது.


20. பூஜை அறையில் தெய்வங்களை வடக்குப் பார்த்து வைக்கக் கூடாது.


21. புல்லாங்குழல் ஊதும் தனி கிருஷ்ணன் படம், விக்கிரகம், காலண்டர் ஆகியவற்றை வீட்டில் வைக்கக் கூடாது. பசுக்களோடு உள்ள மற்றும் ராதையுடன் கூடிய புல்லாங்குழல் ஊதும் கிருஷ்ணன் படத்தை வீட்டில் வைத்துக்கொள்ளலாம்.


22. கர்ப்பிணிப் பெண்களோ அல்லது அவர்கணவரோ சிதறு தேங்காய் உடைக்கக்கூடாது. சில தகவல் நூல்களிலும் சில தகவல் நன்றாக வாழ்ந்தும் , வாழும் தம்பதியர்கள் அனுபவம் அடைந்து சொன்னது ...  

                                                                                23 இறந்தவர்களின் ஆத்மாக்கள் வண்ணத்துப் பூச்சியினுள் புகுந்து இறப்பு ஏற்பட்ட நாளிலிருந்து கொஞ்ச காலம் வரை நம் வீட்டைச் சுற்றி வரும். ஆகவே,மரணம் ஏற்பட்ட ஒரு வீட்டிற்குள் வண்ணத்துப்பூச்சி அடிக்கடி பறந்து வந்து கொண்டிருந்தால் அந்த வீட்டில் அந்த ஆன்மாக்களின் ஆசியால் சந்தோஷம்,சுபகாரிய நிகழ்வும்,தீர்க்காயுளும் உண்டாகும்.


24 சிங்கம்,புலி,கரடி ஆகிய கொடிய மிருகங்களின் பொம்மைகளை உங்களுடைய வீடுகளில் வைப்பதின் மூலம் எதிரிகளின் தொல்லை அடங்கும்.


25  தன்னைப்பற்றி பிறரிடம் சொல்வதன் மூலம் குறைந்து விடும் விஷயங்கள் இரண்டு. அவை பாவமும் புண்ணியமும்.

நாம் செய்யும் பாவங்களை நாமே பிறரிடம் கூறும் போது அதுவும் குறைந்து கொண்டே வரும்.


26  முறைப்படி மந்திரங்கள் ஓதி பிறர் மீது ஏவப்பட்ட செய்வினைக்கு 1008 நாட்கள் மட்டுமே சக்தி உண்டு.அதன் பிறகு அது செய்தவனையே திருப்பித்தாக்கும்.  தான் செய்த வினையை தாமே அனுபவிப்பார்.


27  உங்கள் வீட்டில் துர்நாற்றம் வீசிக் கொண்டிருந்தால் கண்ணூறு தாக்கி இருப்பதாக உறுதி செய்து,உங்கள் வீடு முழுக்க உப்பு கலந்த நீரால் கழுவி விட்டால் கண்ணூரு போய்விடும்.


28  அடுக்கு அரளி,செம்பருத்தி பூக்களைக் கொண்டு பூஜை செய்வதினால் ஞானம் பெருகும்.தொழில் விருத்தியடையும்.


29  ஒரு பெண் கர்ப்பமான ஏழாவது மாதத்திலிருந்து அவள் குழந்தை பெற்ற முப்பதாவது நாள் வரை அவளது ஜாதகத்தைப் பார்த்து பலன் சொல்லுதல் கூடாது.


30  அன்னாச்சிப்பழம் ஓவியத்தை உங்கள் வீட்டில் சுவற்றிலோ அல்லது தொழிலகங்களின் முன்புற அறைகளிலோ வரைந்து வைத்தால் அதிர்ஷ்டம் தேடிவரும்...

Friday, 26 October 2018

விளக்கு

எந்த எண்ணெய்க்கு என்ன பலன்?


 தீபமேற்ற பயன்படுத்தும் எண்ணெயின் பலனைப் பொறுத்தும் பலன் கிடைக்கும்.


நெய்- செல்வவிருத்தி, நினைத்தது கைகூடும்

நல்லெண்ணெய்- ஆரோக்கியம் அதிகரிக்கும்

தேங்காய் எண்ணெய்- வசீகரம் கூடும்

இலுப்பை எண்ணெய்- சகல காரிய வெற்றி

விளக்கெண்ணெய்- புகழ் தரும்

ஐந்து கூட்டு எண்ணெய்- அம்மன் அருள் ஐந்துக்கும் ஒவ்வொரு பலன் 


விளக்கேற்றும் போது ஒவ்வொரு முகத்துக்கும் ஒரு பலன் உண்டு.


ஒரு முகம் ஏற்றினால் - நினைத்த செயல்கள் நடக்கும்

இரு முகம் ஏற்றினால் - குடும்பம் சிறக்கும்

மூன்று முகம் ஏற்றினால் - புத்திரதோஷம் நீங்கும்

நான்கு முகம் ஏற்றினால் - செல்வம் பெருகும்

ஐந்து முகம் ஏற்றினால் - சகலநன்மையும் உண்டாகும்


எந்த திசை என்ன பலன்


 கிழக்கு - துன்பம் நீங்குதல், குடும்ப அபிவிருத்தி

மேற்கு - கடன், தோஷம் நீங்கும்

வடக்கு - திருமணத்தடை அகலும்

தெற்கு நோக்கி விளக்கேற்றக்கூடாது. 


தெய்வங்களுக்குரிய எண்ணெய்:

விநாயகர் - தேங்காய் எண்ணெய்

மகாலட்சுமி - பசுநெய்

குலதெய்வம் - வேம்பு, இலுப்பை, பசுநெய் கலந்த எண்ணெய்

பைரவர் - நல்லெண்ணெய்

அம்மன் - விளக்கெண்ணெய், வேம்பு, தேங்காய், இலுப்பை, பசுநெய் சேர்ந்த ஐந்து கூட்டு எண்ணெய்

பெருமாள், சிவன், முருகன், பிற தெய்வங்கள்- நல்லெண்ணெய்.

Sunday, 21 October 2018

கையில் கயிறு இருக்க வேண்டிய நாள்

காசி, திருப்பதி போன்ற இடங்களுக்கும், இன்னும் பல அம்மன் கோயில்களிலும் பைரவர் கயிறு, வெங்கடாஜலபதி கயிறு என கருப்பு கயிறுகள் வாங்கி கட்டி வருகிறார்கள். 


சில கோயில்களில் சிவப்பு, மஞ்சள் கயிறுகையில் கட்டப்படுகிறது. இதை ஆண்கள் வலது கையிலும், பெண்கள் இடது கையிலும் கட்டிக் கொள்ள வேண்டும். 


வரலட்சுமி நோன்பு கயிறை மட்டும் பெண்கள் வலது கையில் கட்ட வேண்டும். இந்தக் கயிறுகளை பெரும்பாலானவர்கள் ஒரு வருடம் வரையிலும் கட்டிக் கொள்கிறார்கள். அவ்வாறு செய்யக்கூடாது. 


இந்த கயிறுகளுக்குரிய காலம் 48 நாட்கள் மட்டுமே. அதன்பின், இதைக் கழற்றி ஆற்றிலோ பிற நீர்நிலைகளிலோ போட்டு விட வேண்டும்.

Wednesday, 17 October 2018

தெய்வங்களுக்கு படைப்பதன் காரணம்

எல்லா தெய்வங்களுக்கும் தவறாமல் வாழைப்பழம் தேங்காய் படைக்கிறார்கள். ஏன்...?


மற்ற எந்தப் பழமாக இருந்தாலும் சாப்பிட்டுவிட்டு, கொட்டையை எறிந்தால் மீண்டும் முளைக்கும். ஆனால், வாழைப்பழத்தை உரித்தோ, முழுமையாகவோ வீசினாலும் கூட மீண்டும் முளைப்பதில்லை. இது பிறவியற்ற நிலையாகிய முக்தியைக் காட்டுகிறது.


எனது இறைவா!

மீண்டும் பிறவாத,

நிலையைக் கொடு!


என வேண்டவே நாம் நமது கடவுளுக்கு வாழைப்பழம் படைக்கிறோம்.


அதுபோல் தேங்காய்க்கும் அந்த குணம் உண்டு. அது மட்டுமல்ல தேங்காய், வாழைப்பழம் இரண்டும் நமது எச்சில் படாதவை. ஒரு மாம்பழத்தை நாம் சாப்பிட்டுவிட்டு, கொட்டையைப் போட்டால் அந்த விதையிலிருந்து மாமரம் உருவாகிறது. ஆனால், தேங்காயை சாப்பிட்டுவிட்டு ஓட்டைப் போட்டால் அது முளைக்காது.


முழுத்தேங்காயிலிருந்து தான் தென்னைமரம் முளைக்கும். அது போல, வாழைமரத்திலிருந்து தான் வாழைக்கன்று வரும். பழம் கொட்டை என்பது வாழையில் கிடையாது. அப்படி நமது எச்சில்படாத இவற்றை இறைவனுக்கு உகந்ததாக நமது முன்னோர்கள் படைக்கும் மரபினை உருவாக்கினார்கள். நாமும் இந்த மரபினைப் பின்பற்றிவருகிறோம்...!

கோவிலில் வழிபடும் முறை

நம்மில் பெரும்பாலானோர் குறைகளை கொட்டுவதற்கும், தேவைகளை கேட்பதற்குமே திருக்கோயில்களை தேடிச் செல்கிறோம். மிகச் சிலரே நம்மை காத்து ரட்சிக்கும் இறைவனுக்கு நன்றி சொல்லவும், அமைதி தேடவும் கோயில்களுக்கு செல்கிறோம். திருக்கோயில்களை எப்படி மதிக்க வேண்டும்? அங்கு எப்படி நடந்து கொள்ள வேண்டும் ஆகிய அடிப்படைகளை பலரும் மறந்து விட்டோம்.


நம்முடைய திருக்கோயில்கள் பெரும் சக்திகளை உள்ளடக்கியது. யோகியரும் ஞானியரும் பல அற்புத சக்திகளை திருக்கோயில்களில் உணர்ந்து உள்ளனர், நமக்கும் உணர்த்தியுள்ளனர். பழம் பெருமையும் அளவிடமுடியாத சக்தியும் கொண்ட திருக்கோயில்களில் செல்போன் கேமிராவில் செல்பி எடுத்துக் கொள்வதும், அநாகரிக ஆடைகள் அணிந்து செல்வதும், கூச்சலிட்டு ஆரவாரம் செய்வதும், பக்தியில் கவனமின்றி செல்போனில் பேசித் திரிவதும் பாவத்தையே நம்மிடம் சேர்க்கும். 


திருக்கோயில்கள் நம் வாழ்க்கையை மேம்படுத்தும் திருத்தலங்கள். இறைவனின் இல்லம் அது. எனவே கோயிலுக்கு செல்லும் முன் குளித்து, சுத்தமாக செல்ல வேண்டும். கோயிலுக்கு வெறுங்கையுடன் செல்லாமல் கடவுளுக்குப் படைக்க நம்மால் முடிந்த பூ, பழம் எதையாவது  வாங்கிச் செல்வது உத்தமம். குறிப்பாக அடுத்தவர் கவனத்தை சிதறச் செய்யும் ஆடைகளை அணியாமல், நேர்த்தியான ஆடைகளை அணிந்து செல்ல வேண்டும். 


* சிவன் கோயிலுக்கு வில்வத்தையும், பெருமாள் கோவிலுக்கு  துளசியை வாங்கி சென்று அர்ச்சனைக்கு கொடுக்கலாம்.


* கோயிலுக்குள் உள்ளே செல்லும் போது முதலில் கோயில் கோபுரத்தை வணங்கிவிட்டு  செல்ல வேண்டும்.


* விநாயகர் சன்னதியில் தலையில் மூன்று முறை கொட்டிக் கொண்டு, மூன்று தோப்புக்கரணம் போட வேண்டும்.


* விநாயகரை ஒரு தரமும், சூரியனை 2 தரமும், அம்பாளையும், விஷ்ணுவையும் 4 தரமும், ஆஞ்சநேயரை 5 முறையும் பிரதட்சணம் செய்ய வேண்டும்.


* மூலவருக்கு அபிஷேகம் நடந்து கொண்டிருக்கும் போது கோயில் பிரகாரத்தைச் சுற்றக்கூடாது. அபிஷேகத்தை கண்டால் அலங்காரமும் பார்க்க வேண்டும்.


* இறைவனுக்கு  நமஸ்காரம் செய்யும் போது மேற்கு அல்லது தெற்கில் கால் நீட்டல் வேண்டும். வடக்கிலும், கிழக்கிலும் கால் நீட்டுதல் கூடாது.


* வேண்டுதல்களையும் பிரார்த்தனைகளையும் கொடிமரத்தின் அருகே நின்று கேட்க வேண்டும்.


* திருக்கோயிலில் இருக்கும் நேரமாவது சிவ  நாமமும் நாரயண நாமமும் தவிர நமது புத்தியில் மனதில் வேறு எந்த சிந்தனையும் இருக்கக்கூடாது. 


* ஆலயத்திற்குள் எந்த தனி மனிதரையும் வணங்கக் கூடாது. அப்படி வணங்கினால்,  கும்பிட்டவரின் பாவம் எதிரில் உள்ளவரை சேரும். 


* சனிபகவானை நேருக்கு நேர் நின்று கும்பிடக்கூடாது.


* கோவிலிலிருந்து, பிரசாதம் தவிர வேறெதையும் எடுத்துச் செல்லக்கூடாது.


* சண்டிகேசுவரரின் சன்னதியில் நூலை கிழித்துக் போடுவது, கைதட்டுவது போன்றவை செய்தல் கூடாது. சிவ தியானம் பூர்த்தி செய்யச் சொல்லி அவரிடம் வேண்டிவிட்டு, சிவனுடைய அருளைத் தவிர, வேறெதையும் கொண்டு செல்லவில்லை என்று சண்டிகேசுவரரிடம் தெரிவித்துவிட்டு செல்ல வேண்டும்.


* சிவன் கோவிலில் காலபைரவரையும், பெருமாள் கோவிலில், சக்கரத்தாழ்வாரையும் வழிபட, நம்மை செய்வினை தோஷங்கள் அண்டாது. 


இந்த குறிப்புகளை நெஞ்சில் நிறுத்தி பக்தி சிரத்தையுடன், திருக்கோயில்கள் தெய்வ சன்னதி என்பதை உள்ளப்பூர்வமாக உணர்ந்து வணங்கிட நம் பாவங்கள் தீரும். நோய் நொடி அகலும். வீட்டில் மகாலட்சுமி அருள் நிலைக்கும்.

Tuesday, 16 October 2018

பலி பீடம்

பொதுவாக அனைத்து ஆலயங்களிலும் கொடி மரத்துக்கு அடுத்தபடியாக பலிபீடம் அமைத்து இருப்பார்கள். கொடி மரத்தை வழிபட்டு முடித்ததும் நாம் பலி பீடத்தை மனதார வழிபட வேண்டும். பொதுவாக பலி பீடங்கள் மூன்று அடுக்கு பீடம் மீது, தாமரை மலர் வடிவம் போன்று அமைக்க பட்டிருக்கும். அந்த பீடங்களில் சிற்பங்கள் இருக்கும். சில ஆலயங்களில் வெறும் பீடம் மட்டும் இருக்கும்.


பலி பீடம் என்றதும் பலரும் தங்கள் மனதில், இது ஏதோ உயிர் பலியிடும் இடம்போல என்றுதான் நினைப்பார்கள். அப்படியல்ல.. அது நமது மனதில் உள்ள தீய எண்ணங்களை, குணங்களை பலியிடும் இடம் என்பதே சரியானது.


அதெப்படி தீய குணத்தையும், தீய எண்ணத்தையும் பலியிடுவது?


மனிதர்களாகிய நமக்கு ஆழ்மனதில் கெட்ட குணங்கள் இருக்கும். எவ்வளவுதான் பக்குவப்பட்ட பெரிய மனிதர்களாக இருந்தாலும், அவர்கள் மனதுக்குள்ளும் போட்டி, பொறாமை, காமம், குரோதம், கோபம், தாபம், சூது, வாது, வஞ்சனை, வயிற்றெரிச்சல் போன்றவைகளில் ஏதாவது ஒன்றிரண்டு கெட்ட குணங்கள் நீக்க முடியாததாக இருக்கவே செய்யும்.


இப்படி கெட்ட குணத்துடனும், எண்ணத்துடனும் கருவறைக்குச் சென்றால், கடவுள் நமக்கு எப்படி அருள்புரிவார்? நம் மனது எந்த ஆசாபாசமும் இல்லாமல், தெள்ளத்தெளிவாக, ஒன்றுமே இல்லாமல் சுத்தமாக, வெற்றிடமாக இருந்தால்தான் நமக்கு இறைவன் அருளை வழங்குவார். எந்த எதிர்பார்ப்பும் இல்லாத மனநிலை கொண்டவர்கள்தான் கடவுளை அடையமுடியும். அவர்களின் அருகில்தான் கடவுளும் வருவார்.


எனவே நம் மனதில் உள்ள தீய குணங்களை எல்லாம் வெளியேற்ற வேண்டும். அதாவது கெட்ட நினைவுகளை பலி கொடுக்க வேண்டும். இது ஆலய வழிபாட்டில் மிகவும் முக்கியமானது. ஏனெனில் நாம் நம் மனதில் உள்ள தீய அழுக்குகளை விரட்டும் போது, நாம் நல்ல மனிதனாக மாறி விடுகிறோம்.


இத்தகைய அற்புத மாற்றத்தை ஒவ்வொரு பக்தனிடமும் ஏற்படுத்தும் அருமையான இடம்தான் பலிபீடம். உயிர்ப்பலி இல்லாத இந்த ஆன்மிகப் பலி பீடுமானது உயர்வுக்குரியது. இந்த பலி பீடத்தை அமைப்பதற்கு என்று விதிகள் உள்ளன.


பலி பீடத்தின் உயரம், மூலஸ்தானத்தில் எழுந்தருளியுள்ள மூலவரின் பீடத்து உயரத்துக்கு சமமாக இருக்க வேண்டும்.


பலி பீடத்தில் பாதுகா, ஜகதி, குமுதம், குமுத பத்திகம், கலா கம்பம், நிதிரவம், சுபோதம், அசுரபத்தி, பத்மம் என்று பல வகைகள் உள்ளன.


பலி பீடத்தை பொதுவாக ‘பத்ரலிங்கம்’ என்று அழைப்பார்கள். பலி பீடம் அருகில் இருக்கும் நந்தி எனும் ஆன்மாவில் உள்ள ஆணவ மலம், பலி பீடத்தில்தான் ஒதுங்கியிருக்கும். எனவே பலி பீடம் அருகே சென்றவுடன் ஆணவம், மாயை, கன்மம் ஆகிய நமது மும்மலங்களையும் பலியிடுதல் வேண்டும். ‘நான்’ என்ற அகங்காரத்தை பலியிட வேண்டும்.


சிலர் ‘எல்லாமே நம்மால் தான் நடக்கிறது’ என்ற மாயையில் சிக்கித் தவிப்பார்கள். அகந்தையுடன் நடந்து கொள்வார்கள். அந்த இறுமாப்பை பலிபீடம் அருகில் நின்று பலியிட வேண்டும். பிறகு பலிபீடம் அருகில் தரையில் விழுந்து வணங்க வேண்டும். ஆலயத்தின் கருவறையானது வடக்கு, மேற்கு திசையை பார்த்தபடி இருந்தால், பலி பீடத்தின் இடது பக்கத்திலும், கருவறையானது கிழக்கு மற்றும் தெற்கு நோக்கி இருந்தால் பலி பீடத்தின் வலது பக்கத்திலும் நின்று வணங்க வேண்டும்.


மூலவருக்கு அபிஷேகம் நடக்கும் போதோ அல்லது சுவாமிக்கு நைவேத்தியம் படைக்கும் போதோ பலி பீடத்தை வழிபடுதல் கூடாது.


அதுபோல பலிபீட வழிபாட்டை ஒரு தடவை, இரண்டு தடவை மட்டும் செய்து விட்டு நிறுத்தி விடக் கூடாது. 3, 5, 7, 9, 12 என்ற எண்ணிக்கையில் வணங்க வேண்டும். அந்த சமயத்தில் நம்மிடம் உள்ள காம, குரோத, லோப, மோக, மத, மாச்சர்யம் எனும் 6 கெட்ட குணங்களை பலியிடுவதாக மனதில் நினைத்து வணங்க வேண்டும்.


பலி பீடத்தை வழிபட்டு முடித்ததும், நம் மனதில் மேலான எண்ணங்கள்தான் உள்ளன என்ற நினைப்பை உருவாக்கிக் கொள்ள வேண்டும். அந்த நல்ல மன நிலையுடன் கருவறை அருகில் சென்று இறைவனை வழிபடும்போது, அவர் அருள் நம்மை ஆக்கிரமிக்கும்; ஆசீர்வதிக்கும்.


பலி பீடத்துக்கு ‘பலி நாதர்’, ‘மாயச் சக்கரம் என்றும் பெயர் உண்டு. அதாவது நமது பிறப்பு - இறப்பு எனும் மாயச் சக்கரமாக பலி பீடத்தைக் கருதுகிறார்கள். இதை சுற்றி வந்து வழிபட்டால், ‘ஸ்தூல சூட்சம காரண சரீரங்களில் இருந்து என்னை விடுவித்து விடு’ என்று வேண்டுவதற்கு சமமாகும்.


பொதுவாக கோவில்களில் எட்டு மூலைகளில், எட்டு பலி பீடங்கள் அமைத்திருப்பார்கள். அவை இந்திரன், அக்னி, எமன், நிருதி, வருணன், வாயு, குபேரன், ஈசானன் எனும் எட்டு திக் பாலகர்களை உணர்த்துகிறது.


இந்த 8 பலி பீடங்களும் ஒவ்வொரு கோவிலின் ஆகம விதிகளுக்கு ஏற்ப கோவில் பிரகாரங்களில் அமைக்கப்பட்டிருக்கும். இவற்றுக்கு தலைமை பலி பீடமாக நந்தி பின்புறம் உள்ள பலி பீடம் அமையும். பொதுவாக தலைமை பலி பீடம், மூலவ மூர்த்தியின் பாதங்களை தாமரை வடிவில் தாங்கியதாக இருக்கும்.


சில கோவில்களில் பலி பீடத்தின் அடியில் பக்தர்கள் உப்பும், மிளகும் போட்டுச் செல்வார்கள். உப்பாகிய உடம்பையும் மிளகாகிய ஆணவத்தையும் இறைவனிடம் அர்ப்பணித்து விட்டேன் என்பதைச் சொல்லும் வழிபாட்டு முறை இதுவாகும்.


சக்தி தலங்களில் தலைமை பலி பீடம் தவிர பிராம்மி, மகேசுவரி, கவுமாரி, வைஷ்ணவி, வராகி, இந்திராணி, சாமுண்டி எனும் சப்த மாதாக்களை உணர்த்தும் பலி பீடங்களும் அமைத் திருப்பார்கள். அந்த பலி பீடங்களையும் மறக்காமல் வழிபட வேண்டும்.


பலி பீடம் முன்பு நின்று ஆத்மார்த்தமாக வழிபட்டால் நம்மிடம் உள்ள தேவையற்ற காமம் போய் விடும். ஆசை போய் விடும். கோபம் போய் விடும். தீராத பற்று போய் விடும். நெறி பிறழாத தன்மை உண்டாகும். பேராசை வரவே வராது. உயர்வு - தாழ்வு மனப்பான்மை விலகும். வஞ்சகக் குணம் வரவே வராது. குறிப்பிட்டுச் சொல்ல வேண்டுமானால், பலிபீடம் மனிதனை மனிதம் கொண்டவனாக மாற்றுகிறது.


எனவே பலி பீடம் அருகில் நின்று நிதானமாக வழிபடுவதை பழக்கத்துக்கு கொண்டு வாருங்கள். அது உங்களை மேன்மைப்படுத்தும். கோவிலில் கோபுர வாசலுக்கும் கொடி மரத்திற்கும் இடையில் உள்ள பலிபீடத்தில் நித்யபூஜையின் முடிவில், கோவிலுள்ள அனைத்து தெய்வங்களுக்கும், அன்னம் (சாதம்) வைப்பர். இதை ‘பலி போடுதல்’ என்பர். இதனை தெய்வங்கள் சாப்பிட்டுச் செல்வதாக ஐதீகம். வழிபாட்டின் போது, பலிபீடத்தை தொட்டுக் கும்பிடுவதோ, உரசிச் செல்வதோ கூடாது.


              

Wednesday, 10 October 2018

நவராத்திரி விரதம்

புராண காலத்தில் மகிஷாசுரன் என்கிற அரக்கன் பூலோகம் மட்டுமல்லாது தேவலோகத்தையும் கைப்பற்றி பல அராஜகங்களை செய்து வந்தான். அவனது அக்கிரமங்களை பொறுக்க முடியாத தேவர்கள் சக்தியாகிய அன்னை பார்வதியிடம் முறையிட்டனர். இதையடுத்து துர்க்கை அம்மன் வடிவெடுத்த பார்வதி தேவி மகிஷாசுரனுடன் 9 நாட்கள் போரிட்டு, அவனை துர்க்கை வதம் புரிந்ததை நவராத்திரி விழாவாக அனைவரும் கொண்டாடுகின்றனர். தீமைகளை எப்போதும் இறைசக்தி வெல்லும் என்பதை குறிக்கும் விழாவாக நவராத்திரி விழா இருக்கிறது.தெய்வீக தன்மை வாய்ந்த இந்த ஒன்பது தினங்களாகிய நவராத்திரி விழாவின் மகிமை குறித்தும், அப்போது அனுஷ்டிக்க வேண்டிய “நவராத்திரி விரதம்” குறித்து இங்கு விரிவாக அறிந்து கொள்ளலாம்.


நவராத்திரி எனப்படும் இந்த ஒன்பது தினங்களும் புனித தினங்களாகும். இந்த 9 நாட்களும் பெண் தெய்வங்களுக்கு விரதமிருந்து வழிபடுவதை நவராத்திரி விரதம் என அழைக்கின்றனர். இராமாயணத்தில் “ஸ்ரீ ராமச்சந்திரமூர்த்தியும்”, “மகாபாரதத்தில்” பஞ்ச பாண்டவர்களும் இந்த நவராத்திரி விரதத்தை அனுஷ்டித்து தங்களின் எதிரிகளை வென்று, தாங்கள் இழந்த அனைத்தையும் மீண்டும் பெற்றனர். இந்த விரதத்தை நாம் மேற்கொள்வதால் நமது கர்ம வினைகள் நீங்கும், பொருளாதார கஷ்டங்கள், கடன் பிரச்சனைகள், உடல்நல பாதிப்புகள், குழந்தை பேறில்லாமை, திருமண தாமதம் போன்ற அனைத்தும் எல்லாமாக இருக்கும் அன்னையின் அருளால் நிச்சயம் நீங்கும்.


நவராத்திரி ஆரம்பிக்கும் முதல் தினம் தொடங்கி 9 நாட்களும் காலை 9 மணிக்குள்ளாக குளித்து விட வேண்டும். பூஜையறையில் சென்று “சரஸ்வதி, லட்சுமி” போன்ற பெண் தெய்வங்களின் படத்திற்கு பூக்களை சமர்ப்பித்து, கற்கண்டு பழம் போன்றவற்றை நைவேத்தியம் வைத்து அப்பெண் தெய்வங்களுக்குரிய மந்திரங்களை கூறிவனங்க வேண்டும் உடலில் எந்த விதமான நோய், நொடி பாதிப்பும் இல்லாதவர்கள் இந்த 9 நாட்களும் திட உணவுகளை தவிர்த்து, பாதாம், பிஸ்தா, முந்திரி போன்றவற்றோடு பழ சாறுகளை மட்டும் அருந்தி விரதம் இருக்க வேண்டும். இந்த விரத முறை கடுமையாக இருப்பதாக கருதுபவர்கள் ஒரு வேளை திட உணவையாவது தவிர்த்து பருப்புகள், நீராகாரம் போன்றவற்றை எடுத்துக்கொள்ளலாம்.


இந்த 9 நாள் விரத காலத்திலும் முடி, நகங்கள் வெட்டுவது போன்றவை கூடாது. பிறர் வீடுகளில் தங்க கூடாது. வீட்டை முடிந்த வரை சுத்தமாக வைத்து கொள்ள வேண்டும். மது, புகைபிடித்தல், புலால் உணவுகளை அறவே நீக்க வேண்டும். மனதை எல்லாவித கவலைகள், வருத்தங்கள் போன்றவற்றிலிருந்து விலக்கி சக்தி தேவியை மட்டுமே தியானிக்க வேண்டும். இந்த 9 நாள் காலத்திலும் ஏழை பெண்களுக்கு உங்களால் முடிந்த தான தர்மங்களை செய்வது இந்த விரதத்தின் பலனை மேலும் அதிகரிக்கும். இறுதி நாளான 9 ஆம் தினம் 3 கன்னிகைகளுக்கு அன்னதானம் அளித்து, ரவிக்கை துண்டு, பழம், மஞ்சள், குங்குமம், கண்ணாடி, சீப்பு போன்ற சீர்வரிசை அளிக்க வேண்டும். இந்த தானம் உங்கள் குடும்பத்திற்கு அல்லது பரம்பரைக்கு பெண் சாபம் ஏதேனும் ஏற்பட்டிருந்தால் அதை போக்கும். மிகுந்த பலனளிக்கும் இந்த நவராத்திரி விரதத்தை குழந்தைகள், நோயாளிகள், முதியோர்கள் தவிர்த்து ஆண் – பெண் பேதமின்றி அனைவரும் மேற்கொள்ளலாம்.


நவராத்திரி விரத பலன்கள்:


நவராத்திரி பண்டிகையை முதன் முதலில் ராமர்தான் கொண்டாடியதாக கூறப்படுகிறது. ராமபிரான் நவராத்திரி விரதத்தை கடைபிடித்த பிறகுதான் அவருக்குச்  சீதை இருக்குமிடம் தெரிந்தது என்று கூறப்படுகிறது.


நவராத்திரி நாட்களில் பெண்கள் கன்யா பூஜை செய்வதால் சகலசெல்வங்களையும் பெறலாம். விஜயதசமி தினத்தன்று பெருமாள் கோவில்களில் வன்னி மரக்கிளையை வைத்து அதில் பெருமாளை எழுந்தருளச் செய்து பூஜை நடத்துவார்கள். இந்த வழிபாட்டில் கலந்து கொண்டால் கிரக தோஷங்கள் விலகி ஓடி  விடும்.


வீட்டில் கொலு வைத்தால், அம்பிகை நம் வீட்டில் எழுந்தருளி விட்டாள் என்பது நம்பிக்கையாகும். நவராத்திரி நாட்களில் பகலில் சிவ பூஜையும் இரவில் அம்பிகை பூஜையும் செய்வதே சரியான வழிபாடாகும் என்று கூறப்படுகிறது.


நவராத்திரி 9 நாட்களும் தினமும் பகலில் 1008 சிவ நாமாவளிகளை ஜெபித்து வழிபாட்டால் அளவிடற்கரிய பலன்கள் கிடைக்கும். நவராத்திரி நாட்களில் சுண்ணாம்பு மாவினால் கோலம் போடக்கூடாது. அரிசி மாவைப் பயன்படுத்திதான் கோலமிட வேண்டும். அவ்வாறு செய்வதால் குடும்ப ஒற்றுமையும், செல்வமும் வளரும். சுண்ணாம்பு மாவு பயன்படுத்தினாலோ, எதிர்மறையான விளைவுகளே உருவாகும். நவராத்திரி கோலத்தை செம்மண் கலந்து போட்டால்  அம்பாள் மனமகிழ்ந்து வருவார் என்பது ஐதீகம்.


நவராத்திரி 9 நாட்களும் வாசலில் மாவிலை கட்டி பூஜை செய்தால் ஐஸ்வர்யம் உண்டாகும். கொலு வைத்திருப்பவர்கள் அதன் முன் நவக்கிரக கோலம் போட்டால் அம்பாள் அனுக்கிரகமும், நவக்கிரகப் பலன்களும் கிடைக்கும்.

Friday, 28 September 2018

ஸ்ரீ கணபதி சஹஸ்ரநாமம்

ஸ்ரீ கணபதி சஹஸ்ரநாமம் விநாயகரின் 1000 திருநாமங்களைக் கொண்டது. அதைத் தினமும் கூற முடியாதவர்கள் ,சஹஸ்ரநாமத்தில் உள்ள சில சுலோகங்களைத் தினமும் ஜெபித்து வருவதால் பல பலன்களை அடையலாம்.

1.காரியத்தடைகள் நீங்க:-

மஹாகணபதிர் புத்தி பிரிய :க்ஷிப்ர பிரசாதன :|
ருத்ர ப்ரியோ கணாத்யக்ஷ உமா புத்தரோ க நாசன||

இதைத் தினமும் 18 தடவை ஜெபித்து வர எல்லாக் காரியங்களிலும் தடைகள் நீங்கும்.ஏதேனும் ஒரு செயலில் இறங்கும் இந்த ஸ்லோகத்தை 18 தடவை ஜெபித்து பின்னர் துவங்க வெற்றி உண்டாகும்.

2.எதிரிகளால் துன்பம் நேராமல் இருக்க

வஜ்ராத்யஸ்த்ர பரீவார:கனசண்ட ஸமாஸ்ரய :|
ஜயோஜய பரீவார :விஜயோ விஜயாவஹ :||

இதைத் தினமும் 27 தடவை தெற்கு நோக்கி அமர்ந்து சங்கல்பம் செய்து ஜெபித்து வர எதிர்ப்புகள் ,எதிரிகளால் உண்டாகும் தொல்லைகள் நீங்கும்.

3.கல்வியில் முன்னேற்றம் உண்டாக :-

சரஸ்வத்யா ஸ்ரிதோ கௌரி நந்தன ஸ்ரீ நிகேதன :|
குருகுப்த பதோ வாசா சித்தோ வாகீஸ்வரேச்வர :||

இதைத் தினமும் 18 தடவை கிழக்கு நோக்கி அமர்ந்து கல்வி,கலைகளில் உயர்வுபெற வேண்டிச் சங்கல்பம் செய்து ஜெபித்து வர நல்ல முன்னேற்றம் உண்டாகும்.

4.செல்வம் பெருக,தியானம் சித்திக்க :-

தனதான்யபதிர் தந்யோ தனதோ தரணீதர :|
த்யானைக பிரக்டோ த்யேய :த்யாநோ த்யான பராயண:||

இதைத் தினமும் 18 தடவை மேற்கு நோக்கி அமர்ந்து ஜெபித்து வர நிறை செல்வமும் ,ஆன்மீக,தியான நிலையில் உயர்வும் கிட்டும் .

5.நாகதோஷம் நீங்க,புத்திர ப்ராப்தி உண்டாக :-

ஸ்தம்பகாகார கும்பாக்ரோ ரத்னமௌளிர் நிரங்குஸ:|
ஸர்ப்பஹார கடீசூத்ர : சர்ப்ப யக்ஞோபவீதவாந் ||
ஸர்ப்பகோடீர கடக: சர்ப்ப க்ரைவேய காங்கத:|
ஸர்ப்ப கக்ஷோதராபந்த: ஸர்ப்பராஜோத்தரீயக:||
சர்வ வஸ்யகரோ கர்ப்பதோஷஹா புத்ரபௌத்ரத :||

இந்த ஸ்லோகத்தைத் தினமும் 18 தடவை மேற்கு நோக்கி அமர்ந்து ஜெபித்து வர சர்ப்பதோஷம் நீங்கும்.சர்ப்ப தோஷத்தினால் குழந்தை பாக்கியம் உண்டானால் அது விலகி குழந்தை பாக்கியம் கிடைக்கும்.இதை அரசமரமும்,வேப்பமரமும் இணைந்த இடத்தில் உள்ள விநாயகரின் முன் ஜெபிக்க நிறைவான பலன் கிடைக்கும்.

6.வழக்குகள்,எதிர்ப்புகளை வெல்ல

மேதாத :கீர்த்தித:சோகஹாரி தௌர்பாக்ய நாசன :|
பிரதிவாதி முகஸ்தம்ப: துஷ்ட சித்த பிரசாதன :||

வாக்குவாதம்,வழக்குகளுக்குச் செல்லும் பொழுது இந்த ஸ்லோகத்தை 27 தடவை தெற்கு நோக்கி அமர்ந்து ஜெபித்து குங்குமம் அணிந்து செல்ல வெற்றி கிடைக்கும்.

7.கிரக தோஷ பாதிப்புகள் விலக :-

ராசிஸ் தாரா திதிர் யோக : வார :காரண அம்சக :|
லக்னோ ஹோரா காலசக்ரோ மேரு :சப்தர்ஷயோ த்ருவ:||
ராஹூர் மந்த:கவிர் ஜீவ :புதோ பௌம சசீ ரவிஹி :|
கால: ஸ்ருஷ்டி :ஸ்திதிர் விஸ்வ:ஸ்தாவரோ ஜங்கமோ ஜகத்||

இந்த ஸ்லோகத்தை 27 தடவை வடக்கு நோக்கி அமர்ந்து ஜெபித்து வர கிரகதோஷம் நீங்கும்.

ஸ்ரீ லிங்காஷ்டகம்

ஸ்ரீலிங்காஷ்டகம் படிப்பதால் ஜாதகத்தில் சூரியன், குரு நீசனாக இருந்தாலும் தலைவலி, தலைசுற்றல், மயக்கம், நரம்புத் தளர்ச்சி முதலியவைகள் இருந்தாலும் அந்த தோஷங்கள் விலகும். ஸகல மங்களங்களும் உண்டாகும்.

ஸ்ரீகணேஸாயநம:
1 : ப்ரும்ஹ முராரி ஸுரார்ச்சித லிங்கம்
நிர்மல பாஸித ஸோபித லிங்கம்I
ஜன்மஜது:க வினாஸக லிங்கம்
தத்ப்ரணமாமி ஸதாஸிவ லிங்கம்II

பொருள்:

பிரம்மதேவன், ஸ்ரீமஹாவிஷ்ணு, தேவர்கள் இவர்களால் அர்ச்சிக்கப்பட்ட லிங்க மூர்த்தியை, நிர்மலமாகவும், பிரகாசத்துடன் கூடியதாகவும், சோபையுடன் கூடியதாகவும் உள்ள லிங்க மூர்த்தியை, பிறப்பினால் ஏற்படும் துக்கத்தைப் போக்குகின்ற லிங்கமூர்த்தியை, எப்பொழுதும் மங்களத்தைச் செய்யும் ஸ்ரீமகாலிங்க மூர்த்தியை நமஸ்கரிக்கிறேன்.

2: தேவமுனிப்ரவரார்சித லிங்கம்
காமதஹம்கருணாகர லிங்கம்I
ராவணதர்ப்ப வினாஸன லிங்கம்
தத்ப்ரணமாமி ஸதாஸிவ லிங்கம்II

பொருள்:

தேவர்களாலும் சிறந்த முனிவர்களாலும் அர்ச்சிக்கப்பட்ட லிங்க மூர்த்தியை, மன்மதனை பஸ்மமாகச் செய்தவரும், கருணையைச் செய்யும் லிங்க மூர்த்தியை, ராவணனுடைய கர்வத்தை நாசம் செய்த லிங்க மூர்த்தியை, எப்போதும் மங்களத்தைச் செய்யும் ஸ்ரீமகாலிங்க மூர்த்தியை நமஸ்கரிக்கிறேன்.

3: ஸர்வஸுகந்திஸுலேபித லிங்கம்
புத்திவிவர்த்தனகாரண லிங்கம்I
ஸித்தஸுராஸுரவந்தித லிங்கம்
தத்ப்ரணமாமி ஸதாஸிவ லிங்கம்II

பொருள்:

எல்லாவித வாசனை திரவியங்களாலும், பூசப்பட்ட லிங்க மூர்த்தியை, புத்தியை விருத்தி செய்வதற்கு காரணமான லிங்க மூர்த்தியை, ஸித்தர்கள், தேவர்கள் அஸுரர்கள் முதலியவர்களால் பூஜிக்கப்பட்ட எப்போதும் மங்களத்தைச் செய்யும் ஸ்ரீமகாலிங்க மூர்த்தியை நமஸ்கரிக்கிறேன்.

4 : கனகமஹாமணிபூஷித லிங்கம்
பணிபதிவேஷ்டிதஸோபித லிங்கம்I
தக்ஷஸுயக்ஞவினாஸன லிங்கம்
தத்ப்ரணமாமி ஸதாஸிவ லிங்கம்II

பொருள்:

தங்கத்தாலும், சிறந்த மணிகளாலும் அலங்கரிக்க்ப்பட்ட லிங்க மூர்த்தியை, நாகராஜனால் சுற்றப்பட்டு விளங்குகின்ற லிங்க மூர்த்தியை, தக்ஷயாகத்தை நாசம் செய்த லிங்க மூர்த்தியை, எப்போதும் மங்களத்தைச் செய்யும் ஸ்ரீமகாலிங்க மூர்த்தியை நமஸ்கரிக்கிறேன்.

5: குங்குமசந்தனலேபித லிங்கம்
பங்கஜஹாரஸுஸோபித லிங்கம்I
ஸஞ்சிதபாபவினாஸன லிங்கம்
தத்ப்ரணமாமி ஸதாஸிவ லிங்கம்II

பொருள்:

குங்குமம், சந்தனம் இவைகளால் பூசப்பட்ட லிங்க மூர்த்தியை, தாமரை புஷ்பங்களாலான மாலைகளால் விளங்குகின்ற லிங்க மூர்த்தியை, குவிக்கப்பட்ட பாபங்களை நாசமாக்குகிற லிங்க மூர்த்தியை, எப்போதும் மங்களத்தைச் செய்யும் ஸ்ரீமகாலிங்க மூர்த்தியை நமஸ்கரிக்கிறேன்.

6: தேவகணார்ச்சிதஸேவித லிங்கம்
பாவைர்பக்திபிரேவச லிங்கம்I
தினகரகோடிப்ரபாகர லிங்கம்
தத்ப்ரணமாமி ஸதாஸிவ லிங்கம்II

பொருள்:

தேவகணங்களால் அர்ச்சிக்கப்பட்டதுடன், ஸேவிக்கப்பட்டதுமான லிங்க மூர்த்தியை, நல்ல எண்ணங்களாலும் பக்தியாலும் ஸேவிக்கப்பட்ட லிங்க மூர்த்தியை, எப்போதும் மங்களத்தைச் செய்யும் ஸ்ரீமகாலிங்க மூர்த்தியை நமஸ்கரிக்கிறேன்.

7: அஷ்டதளோபரிவேஷ்டித லிங்கம்
ஸர்வஸமுத்பவகாரண லிங்கம்I
அஷ்டதரித்ரவினாஸித லிங்கம்
தத்ப்ரணமாமி ஸதாஸிவ லிங்கம்II

பொருள்:

எட்டு தளங்கள் உள்ள ஆஸனத்தில் அமர்ந்த லிங்க மூர்த்தியை, எல்லா வஸ்துக்களின் உற்பத்திக்கும் காரணமான லிங்க மூர்த்தியை, எட்டுவித தரித்திரங்களையும் நாசம் செய்யும் லிங்க மூர்த்தியை, எப்போதும் மங்களத்தைச் செய்யும் ஸ்ரீமகாலிங்க மூர்த்தியை நமஸ்கரிக்கிறேன்.

8: ஸுரகுரு ஸுரவர பூஜித லிங்கம்
ஸுரவன புஷ்ப ஸதார்ச்சித லிங்கம்I
பராத்பரம் பரமாத்மக லிங்கம்
தத்ப்ரணமாமி ஸதாஸிவ லிங்கம்II

பொருள்:

ப்ருகஸ்பதியினாலும், இந்திரனாலும் பூஜிக்கப்பட்ட லிங்க மூர்த்தியும், இந்திரனுடைய தோட்டத்திலிருந்து கொண்டு வந்த புஷ்பத்தினால் எப்போதும் பூஜிக்கப்பட்ட லிங்க மூர்த்தியை, ப்ரம்மாதி தேவர்களுக்கெல்லாம் மேற்பட்ட பரமாத்ம ஸ்வரூபியான லிங்க மூர்த்தியை, எப்போதும் மங்களத்தைச் செய்யும் ஸ்ரீமகாலிங்க மூர்த்தியை நமஸ்கரிக்கிறேன்.

லிங்காஷ்டகமிதம் புண்யம் ய:படேச்சிவஸன்னிதௌ
ஸிவலோகமவாப்னோதி ஸிவேன ஸஹ மோததேII

மகாலிங்கத்தைப் பற்றிய எட்டு ஸ்லோகங்கள் கொண்ட இந்தப் புண்ணியமான ஸ்தோத்திரத்தை ஸ்ரீபரமேஸ்வரரின் திருமுன்,
எவர் படிப்பாரோ... அவர், சிவலோகம் சென்று சாட்சாத் சிவபெருமானுடன் ஆனந்தத்தை அனுபவிப்பான்.

உகந்த தினம்

இந்து புராணத்தில் வாரத்தின் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு கடவுளுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. கடவுளை வழிபடும் பக்தர்கள் கண்டிப்பாக தினமும் அந்தந்த கடவுளை வணங்க தவற மாட்டார்கள். ஒரு கடவுளின் அனைத்து அவதாரங்களையும் திருவுருவங்களையும் தரிசிக்க வேண்டுமானால் அன்றைய நாளை முழுவதுமாக நீங்கள் பயன்படுத்திக் கொள்ளலாம். சுருக்கமாக சொல்ல வேண்டுமானால், வாரத்தின் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு கடவுளுக்கென அர்பணிக்கப்பட்டுள்ளது.

உதாரணத்திற்கு திங்கள் என்றால் அது சிவனுக்கு உகந்த தினமாகும். அதே போல் செவ்வாய் என்றால் ஹனுமான் மற்றும் புதன் என்றால் விநாயகர். இவையனைத்தும் சிவபுராணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. விசேஷ தினங்களில் கடவுளை வழிபடுவது, உங்களுக்கு வெற்றியை ஈட்டி தந்து உங்களுக்கு ஆன்மீக தெளிவூட்டலை ஏற்படுத்தும்.

கடவுள்களுக்காக நேரத்தை ஒதுக்கி அவர்களை வழிபட உங்களுக்கு இந்த தினசரி வழிபாடு வாய்ப்பை ஏற்படுத்தி கொடுக்கும். உதாரணத்திற்கு, விஷ்ணு பகவான், சிவபெருமான், லக்ஷ்மி தேவி, சூர்ய பகவான் என அந்தந்த கடவுள்களை அவர்களுக்கான தினத்தில் வழிபடலாம். கடவுள்களை அவர்களின் உகந்த தினத்தில் வழிபடுவது நன்மையை அளிக்கும் என்று நம்பப்படுகிறது. சரி, எந்த நாளில் எந்த கடவுள் என்று பார்க்கலாமா?

திங்கள்:

சிவபெருமான்
சிவன் கோவில்களில் அதிகளவிலான கூட்டங்களை காணலாம்; முக்கியமாக திங்கட்கிழமைகளில். காரணம் நீலகண்டனை வழிபட அதுவே உகந்த நாளாக கருதப்படுகிறது. அன்றைய தினம், சிவபெருமானுக்கு பால், அரிசி மற்றும் சர்க்கரையை படைத்திடுங்கள்.

செவ்வாய்:

ஹனுமான்
குரங்கு கடவுளான ஹனுமாரை செவ்வாய் கிழமைகளில் வழிபடலாம். பலத்தின் கடவுளாக கருதப்படும் இவர் சிவபெருமானின் அவதாரமாக நம்பப்படுகிறார்.

புதன்:

விநாயகர்
அனைத்து தடங்களையும் நீக்கும் வல்லவர் விநாயகர். அவரை வழிபட புதனே உகந்த தினமாக கருதப்படுகிறது.

வியாழன்:

விஷ்ணு பகவான்
விஷ்ணு பகவானை பொதுவாக வியாழக்கிழமை அன்று வழிபடுவார்கள். விஷ்ணு பகவானின் மனைவியான லக்ஷ்மி தேவியை வணங்கவும் இதுவே உகந்த நாளாக பார்க்கப்படுகிறது. நற்பேறு மற்றும் செல்வம் நிறைந்துள்ள கடவுள்களை வியாழக்கிழமையில் வணங்குவது உகந்ததாக கருதப்படுகிறது

வெள்ளி:

துர்க்கை
துர்க்கை அம்மனையும் அவரது அவதாரங்களையும் வெள்ளிக்கிழமை வழிபட வேண்டும். இந்த நாளில் இக்கடவுளின் அனைத்து அவதாரங்களையும் ஒன்றாகவும் வழிபடலாம்.

சனி:

சனி பகவான்
சனிக்கிழமை என்பது சனி கிரகத்தை சார்ந்ததாகும். அந்த கிரகத்தை ஆட்சி செய்வது சனி பகவான் என நம்பப்படுகிறது. சனிக்கிழமைகளில் சனி பகவான், ஆஞ்சநேயர் மற்றும் காளி தேவியை பக்தர்கள் வணங்கலாம்.

ஞாயிறு:

சூரிய பகவான்
நவகிரகத்தின் முதன்மையான புகழ் பெற்ற கடவுளான சூரிய பகவானை ஞாயிறு அன்று வழிபடுவது உகந்தது. அந்நாளில் காலை வேளையில், சூரியனுக்கு தண்ணீர் படைத்து, காயத்ரி மந்திரம் படிக்க மறந்து விடாதீர்கள்.ஆன்மீக

தீப ஸ்லோகம்

  

நாம் தீபம் ஏற்றுகையில் சொல்ல வேண்டிய ஸ்லோகம்.

ஓம் சுவர்ண விருத்திம்
குருமே க்ருஹே ஸ்ரீ-
ஓம் சுதான்ய விருத்திம்
குருமே க்ருஹேஸ்ரீ-
ஓம் கல்யாண விருத் திம்
குருமேக் ருஹேஸ்ரீ-

பவுர்ணமி

   

பவுர்ணமி என்பது விஸ்வரூப வடிவத்தில் உள்ள தெய்வ மூர்த்தங்களின் விரதம் இருந்து தரிசனம் பெற வேண்டிய நாளாக குறிப்பிடப்படுகிறது.

பவுர்ணமி நாள் என்றால் முழு நிலவு நாள் என்றும், அன்று கோவில்களில் சிறப்பான வழிபாடுகள் நடக்கும் என்றுதான் பலரும் நினைத்துக்கொண்டிருக்கிறார்கள். ஆனால், பவுர்ணமியில் கிட்டத்தட்ட 108 வகைகள் இருப்பதாகவும், அவற்றின் தன்மைகளுக்கேற்ப பல்வேறு விரத வழிபாட்டு முறைகள் உண்டு என்றும் சித்தர்கள் விளக்கம் அளித்துள்ளனர். அதாவது, பவுர்ணமி நாளானது பகலில் தொடங்கி இரவில் முடிவது, பாதி பகல்- பாதி இரவாக அமைவது, இரவில் தொடங்கி பகலில் முடிவது என்று பவுர்ணமியில் பல்வேறு வகைகள் இருக்கின்றன.



பவுர்ணமி என்பது விஸ்வரூப வடிவத்தில் உள்ள தெய்வ மூர்த்தங்களின் விரதம் இருந்து தரிசனம் பெற வேண்டிய நாளாக குறிப்பிடப்படுகிறது. அதாவது, பூமியிலிருந்து வானளாவ எழுந்து நின்ற தெய்வ வடிவங்களின் தரிசனத்தை பவுர்ணமி நாளன்று பெறுவதன் காரணமாக, ஒருவரது உள்ளுணர்வு ரீதியான ஆன்மிக தன்மைகள் மேம்படுத்தப்படும் என்று சித்தர்கள் குறிப்பிட்டுள்ளனர்.



குறிப்பாக, வெட்டவெளியில் அமைக்கப்பட்டுள்ள காளியம்மன், ஆஞ்சநேயர், அய்யனார், சங்கிலி கருப்பன் போன்ற தேவதா மூர்த்திகள் 20 அடிகளுக்கும் மேலான உயரத்தில் பல்வேறு இடங்களில் நிர்மாணிக்கப்பட்டிருக்கும். அவற்றை பவுர்ணமி நாட்களில் விரதம் இருந்து தரிசனம் செய்வது ஆன்மிக முன்னேற்றத்துக்கு உகந்தது என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், அத்தகைய தெய்வ ரூபங்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டு நீண்ட காலம் ஆகியிருக்கும் பட்சத்தில் அவற்றின் அருள் பொழியும் சக்தி நிலைகளில் பூரணத்தன்மை அதிகமாக இருக்கும் என்றும் ஆன்மிக சான்றோர்கள் தெரிவித்துள்ளனர்.



அதன் அடிப்படையில், ஆலய கோபுரங்களின் உயரத்தில் பல்வேறு தெய்வ மூர்த்தங்களின் உருவங்கள் அமைக்கப்பட்டுள்ளன. கோவில் கோபுரம் மூலமாகவும் விஸ்வரூப தரிசனத்தை பெறலாம் என்ற காரணத்தை வைத்து ‘கோபுர தரிசனம் கோடி புண்ணியம்’ என்ற வழக்கும் இருக்கிறது. மேலும், மலைப்பகுதியில் அமைக்கப்பட்டுள்ள தெய்வ விக்கிரகங்களுக்கு பிரபஞ்ச சக்திகளை கிரகித்து, அந்த ஆற்றலை தன்னை தரிசிப்பவர்களுக்கு பல மடங்குகளாக திருப்பித்தரும் தன்மை உண்டு என்றும் ஆன்றோர்கள் மறைபொருளாக தெரிவித்துள்ளார்கள்.



இத்தகைய விஸ்வ ரூப மூர்த்திகள் இல்லாத ஊர்களில் இருப்பவர்கள் கிட்டத்தட்ட 100 ஆண்டுகளுக்கும் மேலாக இருந்துவரும் ஆலமரம், அரசமரம், வேப்பமரம் போன்ற பழமையான விருட்சங்களை பிரதட்சிணம் செய்து வழிபட்டு வரலாம். மேலும், பவுர்ணமி நாளின் விரதமிருந்து பகல் பொழுதில் செருப்பு அணியாமல் நடந்து சென்று ஆலய தரிசனம் செய்வது பல நன்மைகளை அளிப்பதாக குறிப்பிடப்படுகிறது. சம்பந்தப்பட்ட விஸ்வரூப மூர்த்தியின் நாமங்களை மானசீகமாக ஜபம் செய்வதும் நல்ல வழியே.


* அர்த்த பூர்ணிமம் என்பது பவுர்ணமி திதி, பகலிலும் இரவிலும் சரியாக அமைந்திருப்பதாகும்.


* பூர்வ பூர்ணிமம் என்பது பவுர்ணமி திதி இரவில் தொடங்கி இரவு முழுவதும் நிறைந்து பகலில் முடிவதாகும்.


* உத்தர பூர்ணிமம் என்பது பகலில் தொடங்கி இரவில் முடிவதாகும்.


* பாச பூர்ணிமம் என்பது பெரும்பாலான நேரம் பகல் பொழுதில் அமைந்து, இரவில் சிறிது நேரம் இருப்பதாகும்.

சித்திரை பௌர்ணமி

சித்திரை மாத பௌர்ணமி சித்ரா பௌர்ணமி என்றழைக்கப்படுகிறது. சித்திரை மாதத்தில் பொதுவாக சித்திரை நட்சத்திரத்தில் பௌர்ணமி வருகிறது. சித்திர குப்தனின் பிறந்த நாளாக சித்திரை பௌர்ணமி கொண்டாடப்படுகிறது. இன்றைய தினம் விளக்கேற்றி வழிபாடு செய்ய நீடித்த ஆயுள் கிடைக்கும். மரண பயம் நீங்கும். குழந்தை பாக்கியம் கிட்டும்.


கிரிவலம்

பொதுவாக பௌர்ணமியில் கிரிவலம் செய்வது சிறப்பானது. மலையினை சுற்றி வருவதால் மனத்திற்கு அமைதியும் உடலுக்கு ஆரோக்கியமும் கிடைக்கும். கூட்டமாக பாடல்களை பாடிக் கொண்டு சுற்றும்போது ஆன்ம பலமும், தேக பலமும் கிடைக்கும். கார்த்திகை பௌர்ணமியில் திருவண்ணாமலையில் கிரிவலம் செய்வது சிறப்பாகக் கருதப்படுகிறது.

எழுத்தாளர்கள் கவனத்திற்கு

இந்த தளத்தினில் உங்களது படைப்புகளையும் இடம்பெறச் செய்ய விரும்பினால், rheamoorthy6@gmail.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் செய்யவும்.