This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License. Readers dont try to copy the content here.
Showing posts with label ஸ்லோகம். Show all posts
Showing posts with label ஸ்லோகம். Show all posts

Friday, 23 November 2018

சக்கரத்தாழ்வார் ஸ்லோகம்


ஓம் சுதர்ஸனாய வித்மஹே


ஜ்வாலா சக்ராய தீமஹி


தன்னோ: சக்ர ப்ரசோதயாத்



சக்கரத்தாழ்வார்:


  சக்கரத்தாழ்வார் என்பவர், திருமாலின் ஆயுதங்களில் ஒன்றான சக்கராயுதத்தின் உருவமாக கருதப்பெறுகிறார். சுதர்சனர் எனப்படும் சக்கரத்தாழ் வாருக்கென்று விசேஷமான ஆராதனைகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்த ஆராதனைகள் விகசை என்ற மகாமுனியால் ஏற்படுத்தப்பட்டவை. ஜீவாலா கேசமும், திரிநேத்ரமும், பதினாறு கரங்களும் பதினாறு வித ஆயுதங்களும் உடைய இவரை வழிபடுவதால் முப்பிறவியிலும், இந்த பிறவியிலும் உண்டான பாவங்கள், மற்றவர்களால் ஏற்படும் தீங்குகள், தீவினைகள், தோஷங்களால் கெடுதிகள் யாவும் நீங்கும்.


வலக்கை ஆயுதங்கள்


சக்கரம், மால், குந்தம், தண்டம், அங்குசம், சதாமுகாக்கனி, மிஸ்கிரிசம், வேல்.


இடக்கை ஆயுதங்கள்


பாஞ்ச சண்யம், சாரங்கம், பாசம், கலப்பை, வஜ்ராயுதம், கதை, உலக்கை, திரிசூலம்.



வழிபடும் முறை:


     சுதர்சனரை வழிபடச் சித்திரை நட்சத்திர தினங்கள் சிறப்பானவை. சித்திரை அவருக்குரிய நட்சத்திரம்.


    ஸ்ரீ சக்கரத்தாழ்வாரையும், அவர் பின்புறமுள்ள ஸ்ரீ நரசிம்மரையும் வணங்கி சுற்றி பிரதட்சணம் செய்தால், நான்கு வேதங்களையும், பஞ்ச பூதங்களையும் அஷ்ட லட்சுமிகளையும், எட்டு திசைகளையும் வணங்கிய பலன் கிடைக்கும். 16 வகையான பேரருளும் கிடைக்கும் என்பது முன்னோர்களின் வாக்கு.


    ஸ்ரீ சக்கரத்தாழ்வாரை புதனும்,சனியும் சேவிப்பது விசேஷம். முடிந்தால் தினமும்,இயன்ற நிவேதனம் வைத்து பூஜிப்பது நல்லது.


    ஸ்ரீ சக்கரத்தாழ்வாருக்கு வியாழ கிழமை சிவப்பு மலர்களால் மாலை சூட்டி வழிபட்டால், நினைத்த காரியங்களில் வெற்றி கிட்டும்.



பலன்கள்:


ஸ்ரீசக்கரத்தாழ்வாரை வணங்குவதால், சகல தோஷங்களும் விலகும். 


முன்புறத்தில் ஸ்ரீ சக்கரத்தாழ்வாரையும், அதன் பின்புறத்தில் ஸ்ரீ நரசிம்மரையும் வணங்கி சுற்றி பிரதட்சணம் செய்தால் நான்கு வேதங்களையும், பஞ்ச பூதங்களையும்,அஷ்ட லட்சுமிகளையும், எட்டு திக்கு பாலர்களையும் வணங்கிய பலன் கிடைக்கும்.


அவரின் பரிபூரண அருள் கிடைக்கப்பெற்று நிம்மதியும், சந்தோஷமும் பொங்க வாழலாம். 


திருமால் கோவிலில் உள்ள சுதர்சனர் சந்நிதியில் நெய் விளக்கேற்றி வழிபட்டால் வாழ்வில் சுபிட்சம் காணலாம். 


திருமணமாகாத கன்னிப் பெண்களுக்கு விரைவில் திருமணம் நடைபெறும்; 


சுமங்கலிகள் நீடூழி சுகமாக வாழ்வர். சுதர்சனர் பிரத்யட்ச தெய்வம். 


தீவிரமாக உபாசிப்பவர்களுக்கு விரும்பியதை அளித்து காப்பாற்றுவார். 


ஸ்ரீசுதர்சன வழிபாடு பயங்கரமான கனவு, சித்தபிரமை, சதாமனோ வியாகூலம், பேய்விசாசு, பில்லி சூன்யம், ஏவல் முதலிய துன்பங்களிலிருந்து காக்க வல்லது.

Tuesday, 6 November 2018

மகாலக்ஷ்மி ஸ்தோத்திரம்

இந்திர உவாச 

நமஸ்தேஸ்து மஹாமாயே 

பிடே ஸுரபூஜிதே 

சங்கு சக்ர கதாஹஸ்தே 

மஹாலக்ஷ்மி நமோஸ்துதே 



நமஸ்தே கரூடாருடே 

கோலாஸு பயங்கரி 

ஸர்வ பாப ஹரேதேவி 

மஹாலக்ஷ்மி நமோஸ்துதே 



ஸர்வஜ்ஞே ஸர்வவரதே 

ஸர்வதுஷ்ட பயங்கரி ஸர்வ துஃக்கஹரே தேவி 

மஹாலக்ஷ்மி நமோஸ்துதே 



ஸித்தி புத்திப்ரதே தேவி 

புக்தி முக்தி ப்ரதாயினி 

மந்த்ரமூர்த்தே ஸதாதேவி 

மஹாலக்ஷ்மி நமோஸ்துதே 



ஆத்யந்தர ஹிதே தேவி 

ஆதிசக்தி மஹேச்வரி 

யோகக்ஞே யோஸகம்பூதே 

மஹாலக்ஷ்மி நமோஸ்துதே 



ஸ்தூர ஸூக்ஷ்ம மஹாரெளதரே 

மஹாசக்தி மஹோதரே 

மஹா பாபஹரே தேவி 

மஹாலக்ஷ்மி நமோஸ்துதே 



பத்மாஸன ஸ்திதே தேவி 

பரப்ரஹ்ம ஸ்வரூபினி 

பரமேசி ஜகந்மாதா 

மஹாலக்ஷ்மி நமோஸ்துதே 



ச்வேதாம்பரதரே தேவி 

நானாலங்கார பூஷிதே 

ஜகஸ்திதே ஜகந்மாத 

மஹாலக்ஷ்மி நமோஸ்துதே 



மஹாலக்ஷ்மியஷ்டகம் ஸ்தோத்ரம் 

யப்படேத் பக்திமான் நர 

ஸர்வஸித்தி மவாப்னோதி ஸர்வா 

ஏக காலம் படேந் நித்யம் 

மஹாபாப விநாசனம் 

த்விகாலம் யபடேந் நித்தயம் 

தனதான்ய ஸமந்வித 

த்ரிகாலம் யபடேந் நித்யம் 

மஹாசத்ரு விநாசனம் 

மஹாலக்ஷ்மீர் பவேந் நித்யம் 

ப்ரஸன்னா வரதா சுபா 

மஹாலக்ஷ்மியஷ்டகம் ஸம்பூர்ணம் 

சுப்ரமண்ய ஸ்லோகம்

ஸிந்தூராருணமிந்துகாந்தி வதனம் கேயூரஹாராதிபி:

திவ்யைராபரணைர் விபூஷிததனும் ஸ்வர்காதி ஸௌக்யப்ரதம் அம்போஜாபய சக்திகுக்குடதரம் ரக்தாங்கராகோஜ்வலம் ஸுப்ரமண்யமுபாஸ்மஹே ப்ரணமதாம் பீதிப்ரணாசோத்யதம் 


பொருள்: சிந்தூரம் போல் செம்மையான தோற்றம் கொண்ட சுப்ரமண்யரே நமஸ்காரம். சந்திரன் போல் பேரெழிலுடன் விளங்கும் சுப்ரமண்யரே நமஸ்காரம். தோள்வளை, முக்தாரம் போன்ற அழகுமிகு ஆபரணங்களை அணிந்தவரே நமஸ்காரம். சுவர்க்க லோகம் போன்ற சுகமான வாழ்வை, இம்மையிலேயே அருளும் சுப்ரமண்யரே நமஸ்காரம். தாமரை, அபயஹஸ்தம், சக்திவேல், கோழி ஆகியன தாங்கியவரே, வாசனைப் பொடிகளால் நறுமணம் வீசும் நாயகனே நமஸ்காரம். உன் பாதம் பிடித்தோரின் பயத்தைப் போக்கி, அவர்கள் எண்ணியதை எல்லாம் ஈடேற்றித் தரும் சுப்ரமண்யரே நமஸ்காரம்.


Saturday, 3 November 2018

ஸ்ரீஸ்துதி - ஸ்லோகம்

கல்யாணனாமவிகலநிதி: காபி காருண்யஸீமா

நித்யாமோதா நிகமவசஸாம் மௌலிமந்தாரமாலா

ஸம்பத்திவ்யா மதுவிஜயின: ஸந்நிதத்தாம் ஸதாமே

ஸைஷா தேவீ ஸகலபுவனப்ரார்த்தனா காமதேனு:


- தேசிகர் அருளிய ஸ்ரீஸ்துதி



பொருள்


எல்லாவகை மங்களங்களையும் அருள்பவளே, மகாலட்சுமியே நமஸ்காரம். வெறும் வார்த்தைகளால் அளந்துவிட முடியாத எல்லையற்ற கருணை கொண்டவளே, நமஸ்காரம். என்றென்றும் ஆனந்தம் அளிப்பவளே, நமஸ்காரம். 



வேதங்களை அழகு செய்யும் மந்தாரப் பூமாலை போன்றவளே, நமஸ்காரம். ஸ்ரீமந் நாராயணனின் ஐஸ்வர்யமாக துலங்குபவளே, நமஸ்காரம். உலக மக்களுக்கு காமதேனுவைப் போல் வேண்டிய வரங்களை எல்லாம் தந்தருள்பவளே, மகாலட்சுமியே உனக்கு நமஸ்காரம்.



பலன்:


இந்த ஸ்லோகத்தை ஒவ்வொரு வெள்ளிக்கிழமையிலும் சொல்லி வரலாம். குறிப்பாக வரலட்சுமி விரத நாளன்று மகாலட்சுமியின் திருவுருவப் படத்தின் முன் நெய் விளக்கேற்றி தாமரைப்பூ சூட்டி இந்தத் துதியைப் பாராயணம் செய்தால், வேண்டும் வரத்தை வேண்டியவாறே அருள்வாள்.

Sunday, 21 October 2018

புஷ்பாஞ்சலி ஸ்லோகம்

எப்போது பூஜை செய்தாலும் என்ன பூஜைகள் செய்தாலும் அந்த பூஜையில் முக்கிய அங்கம் வகிப்பவை, பூக்கள்தான்! ஒவ்வொரு பூவுக்கும் எப்படி விதம்விதமான நறுமணங்கள் இருக்கிறதோ... அதேபோல் ஒவ்வொரு பூவைக் கொண்டும் செய்கிற பூஜைகளுக்கும், ஒவ்வொரு பலன் உண்டு.


அந்தப் பூக்களைக் கொண்டு ஸ்வாமிக்கு பூஜை செய்கிற போது மறக்காமல் நிறைவில் இந்த ஸ்லோகத்தைச் சொல்லி வழிபடுங்கள். மலர்களைப் போல, நம் வாழ்க்கையும் மலரும்!    


புஷ்பாஞ்சலி ஸ்லோகம் 


யோபாம் புஷ்பம் வேத புஷ்பவான்

பிரஜாவான் பசுமான் பவதி   சந்த்ரமாவா

அபாம் புஷ்பம் புஷ்பவான் பிரஜாவான் பசுமான் பவதி


Tuesday, 16 October 2018

பஞ்சாக்ஷர ஸ்லோகம்

இதம் கமலஸுந்தரம் ஸதஸி காஞ்சநே ந்ருத்யத:


ஸதஞ்சித முதஞ்சிதம் கிமபி குஞ்சிதம் சஞ்சலம்


விசிந்த்ய சிதம்பரே ஹ்ருதயஸம்பதே ஸாஸ்வதம்


விரிஞ்சகரகந்துகம் சரணமிந்து சூடாமணே:


ஸிவ ஸிவ சரணம் ஸிவானந்தம் ஸிவ ஸிவ ஸிவாய ஸிவாய நமஹ


 


பொருள்: இது பூலோக கைலாசமான விளங்கும் சிதம்பரத்தில் ஆனந்த நடனமாடும் நடராஜமூர்த்தியைப் போற்றும் மஹாமந்த்ரம். அவர் தன் குஞ்சிதபாதத்தைத் தூக்கி நடனமிடும் காட்சி அற்புதமானது. பொன்னம்பலத்தில் உலகை இயக்குவதற்காக அவர் ஆனந்த திருநடனம் புரிகிறார். 


சிவ எனும் இரண்டெழுத்து மந்திரம் நம் பாவங்களை நீக்கி புண்ணியத்தை அளிக்கவல்லது. இம்மந்திரத்தில் ஏழு முறை சிவ நாமம் உச்சரிக்கப்படுகிறது. இந்த மந்திரம் வாழ்க்கையில் அடியார்களுக்கு அறம், பொருள், இன்பம், வீடு, எனும் பிறவிப்பயனை அளிக்கவல்லது. மேலும் இந்த மந்திரம் விசேஷமாக பேரின்ப நிலையை அளிக்கும்.

Saturday, 13 October 2018

ஸ்ரீ கார்த்தவீர்யாஜுன ஸ்லோகம்

அபூர்வ ராஜ்ய ஸம்ப்ராப்திம்  நஷ்டஸ்ய புனராகமம்,

லபதே நாத்ர ஸந்தேஹ ஸத்யேமேதந் மயோதிதம்

ஓம் கார்த்த வீர்யார்ஜுனோ  நாம:

ராஜா பாஹூ ஸஹஸ்ரவாந்.

யஸ்ய ஸ்மரந மாத்ரேன நஷ்டம் த்ரவ்யம் ச லப்யதே



இழப்புகள் தவிர்க்க முடியாதவை. ஆனால், தாங்கிக்கொள்ள இயலாதவை! இழந்த பதவியைப் பெறுவதற்காக அப்பேர்ப்பட்ட பிரம்மதேவரே கடும் தவம் புரிந்து, வரம் பெற்றார். நாம் இழந்ததைப் பெறுவதற்கும் தொலைத்ததை மீட்டெடுப்பதற்குமான இந்த ஸ்லோகத்தை கர்மசிரத்தையுடன் சொல்லச் சொல்ல, நம் வாழ்வில் தொலைந்த பொருளை மீட்டெடுக்கலாம். இழந்த வாழ்க்கையைக்கூட திரும்பப் பெற்று வாழலாம்.


Wednesday, 10 October 2018

நவராத்திரி ஸ்லோகம்


கிராஹுர் தேவீம் த்ருஹிண க்ருஹிணீ மாகமவிதோ

ஹரே: பத்நீம் பத்மாம் ஹரஸ ஹசரீ மத்ரித நயாம்!
துரீயா காபி த்வம் துரதிகம் நிஸ்ஸீம மஹிமா
மஹாமாயா விச்வம் ப்ரமயஸி பரப்ரஹ்ம மஹிஷி!!

பொருள்: இறைவனோடு இணைந்திருக்கும் சக்தியே! வேதங்களின் உட்பொருளை உணர்ந்தவர்கள் உன்னை சரஸ்வதி என்றும், லட்சுமி என்றும், சிவனின் பத்தினியாகிய பார்வதி என்றும் பலவிதமாகக் கூறுகிறார்கள். மனதிற்கும் வாக்கிற்கும் அப்பாற்பட்டவளே! எல்லையற்ற மகிமை கொண்டவளே! மகாமாயாவாக இருந்து உலகை இயக்கச் செய்து பிரமிக்க வைப்பவளே! அருள்புரிவாயாக.

Thursday, 4 October 2018

கருட பகவான் ஸ்லோகம்

ஓம் கருடாய நமஸ்துப்யம் சர்வ 

சர்ப்பேந்திர சத்ரவே !

வாஹனாய மகாவிஷ்ணோ

தார்ஷாய அமித தேஜயே!!


அப சர்ப்ப சர்ப்ப, பத்ரம் தே

தூரம் கச்ச மகாயசா!

ஜனமே ஜெயஸய யஞ்யா 

தேஹ்யாச்தீக வசனம் ஸ்மரன்!!

உடல் ஆரோக்கிய ஸ்லோகம்

அமிர்த சஞ்சீவினி மந்திரம்:


ஓம் நமோ பகவதி |மிருதசஞ்சீவினி |சாந்தி குரு குரு ஸ்வாஹா||


         அசுரகுரு சுக்ராச்சாரியார் இம்மந்திரத்தை உபயோகித்தே இறந்தவர்களைக்கூட  மீண்டும் உயிர் பெறச்செய்தார்.


வியக்கத்தக்க வகையிலும், உடனடியான பலன்களையும் தரும் இம்மந்திரத்தை உபயோகித்து பலனடையுங்கள். நமக்காக ஜெபிப்பதானால் மேற்கண்ட மந்திரத்தை அப்படியே ஜெபிக்கலாம். பிறருக்காக ஜெபிப்பதானால் சாந்தி என்ற வார்த்தைக்கு முன்னதாக சம்பந்தப்பட்டவரின் பெயரை சேர்த்துக்கொள்ளவேண்டும்.


உதாரணமாக:- திவ்யா என்பவருக்காக ஜெபிப்பதானால்


ஓம் நமோ பகவதி |மிருதசஞ்சீவினி |திவ்யா சாந்தி குரு குரு ஸ்வாஹா||


என ஜெபிக்க வேண்டும்.


தன்வந்திரி மந்திரம்:


ஓம் |நமோ பகவதே வாசுதேவாய|தன்வந்திரியே |அமிர்தகலச ஹஸ்தாய |


சர்வ ஆமய நசனாய|த்ரைலோக்ய நாதாய |ஸ்ரீ மஹா விஷ்ணவே நமஹா||


தேவர்களும் அசுரர்களும் பாற்கடலைக் கடைந்த போது அதிலிருந்து ஒரு பேரொளி தோன்றி தேவ ரூபம் கொண்டு நான்குகரங்களும் அவற்றில் முறையே சங்கு, சக்கரம், அட்டைபூச்சி, அமிர்தகலசம் இவற்றுடன்  தோன்றியவர்தான் ஸ்ரீ தன்வந்திரி பகவான். ஆயுர்வேதம் அவரால் தோன்றியது. இந்த மந்திரத்தை ஜெபித்து வந்தாலும் வியாதிகள் நீங்கும். வெண்ணையில் மந்திரித்து உண்ணலாம், மருந்துகள் உட்கொள்ளும் முன் அவற்றை இடது கையில் வைத்து இம்மந்திரம் ஜெபித்து பின் உண்ண வியாதிகள் விரைவாய் நீங்கும்.

எழுத்தாளர்கள் கவனத்திற்கு

இந்த தளத்தினில் உங்களது படைப்புகளையும் இடம்பெறச் செய்ய விரும்பினால், rheamoorthy6@gmail.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் செய்யவும்.