ஸிந்தூராருணமிந்துகாந்தி வதனம் கேயூரஹாராதிபி:
திவ்யைராபரணைர் விபூஷிததனும் ஸ்வர்காதி ஸௌக்யப்ரதம் அம்போஜாபய சக்திகுக்குடதரம் ரக்தாங்கராகோஜ்வலம் ஸுப்ரமண்யமுபாஸ்மஹே ப்ரணமதாம் பீதிப்ரணாசோத்யதம்
பொருள்: சிந்தூரம் போல் செம்மையான தோற்றம் கொண்ட சுப்ரமண்யரே நமஸ்காரம். சந்திரன் போல் பேரெழிலுடன் விளங்கும் சுப்ரமண்யரே நமஸ்காரம். தோள்வளை, முக்தாரம் போன்ற அழகுமிகு ஆபரணங்களை அணிந்தவரே நமஸ்காரம். சுவர்க்க லோகம் போன்ற சுகமான வாழ்வை, இம்மையிலேயே அருளும் சுப்ரமண்யரே நமஸ்காரம். தாமரை, அபயஹஸ்தம், சக்திவேல், கோழி ஆகியன தாங்கியவரே, வாசனைப் பொடிகளால் நறுமணம் வீசும் நாயகனே நமஸ்காரம். உன் பாதம் பிடித்தோரின் பயத்தைப் போக்கி, அவர்கள் எண்ணியதை எல்லாம் ஈடேற்றித் தரும் சுப்ரமண்யரே நமஸ்காரம்.
No comments:
Post a Comment