ஏயா என் கோட்டிக்காரா
அட வாயா என் வேட்டைக்காராா!
குத்தால சாரல் போல்
தல தட்டும் சேட்டக்காரா!
செத்தாலும் வாழ்ந்தாலும்
நீதான் என் சொத்துக்காரா!
யே எட்டி என் கொட்டிக்கார
அடி ஏழா என் வேட்டைக்காரி!
குத்தால சாரல் போல்
தல தட்டும் சேட்டைக்காரி!
செத்தாலும் வாழ்ந்தாலும்
நீதான் என் சொத்துக்காரி!
தேடி சேர்த்த காச போல்
காதல் இருக்குதா?
கொஞ்சமாக எடுக்குற
கஞ்சம் தடுக்குதா?
காச போல காதலும் செலவுக்கில்லட்டி
கோடி முத்தம் வாங்கிக்கோ
கஞ்சம் இல்லட்டி...
சின்ன புள்ள நான்தான்
பெண்ணே உண்மை அல்லோ!
என்ன தாங்க இப்போ
மூணு அம்மை அல்லோ!
பாலருவியும் தேனருவியும் ஐந்தருவியும்
உன் நேசத்தின் முன்னே முன்னே தோத்தே போகும்
மண்ணில் சொர்கமிது!
ஏயா என் கோட்டிக்காரா
அட வாயா என் வேட்டைக்காரா!
குத்தால சாரல் போல்
தல தட்டும் சேட்டக்காரா!
செத்தாலும் வாழ்ந்தாலும்
நீதான் என் சொத்துக்காரா!
காச போல காதலும் செலவுக்கில்லட்டி
கோடி முத்தம் வாங்கிக்கோ
கஞ்சம் இல்லட்டி....
தட்டான் பூச்சி போல
வண்ணம் அள்ளி தார...
கண்ணில் இன்னும் வேற
ஏதோ சொல்லி தார...
நான் நினைச்சதும் நீ நினைச்சதும்
நூழிலையில் தான் வழுக்கிட
பேசி பேசி இன்னும் பேசி
பேசா நிலை வருமோ?
தேடி சேர்த்த காச போல்
காதல் இருக்குதா?
கொஞ்சமாக எடுக்குற
கஞ்சம் தடுக்குதா?
காச போல காதலும் செலவுக்கில்லட்டி
கோடி முத்தம் வாங்கிக்கோ
கஞ்சம் இல்லட்டி....
No comments:
Post a Comment