VICKEY RECIPES:) |
Valentine day வருது, அதுனால இந்த வாரம் முழுவதும் இந்த மாதிரி ரெசிபிஸ் ஷேர் பண்ணலாம்னு இருக்கேன்.
பொதுவாவே நான் பெரிய காபி லவ்வர் எல்லாம் கிடையாது. கல்யாணத்துக்கு முன்னாடி வரைக்கும் வைட் சாக்லேட் காபி நான் கேள்வி பட்டதே இல்ல. US வந்த அப்புறம், என் ஹஸ்பண்ட் தான் இங்க starbucks காபி நல்லா இருக்கும் ட்ரை பண்ணி பாருன்னு சொன்னாங்க. சரினு ட்ரை பண்ணேன். ரொம்பவே யம்மியா, கிரீம் எல்லாம் போட்டு சூப்பரா இருந்துச்சு. அதுல இருந்து அந்த காபிக்கும்,அந்த கடைக்கும் fan ஆகிட்டேன். காரணம் என்னனா, அந்த இடம் அவ்ளோ இயற்கையோட ஒன்றி போன மாதிரி இருக்கும், ஒரு காபி வாங்கிட்டு நீங்க எவ்ளோ நேரம் வேணும் நாளும் அங்க இருக்கலாம், free wifi.
ஸ்டுடென்ட்ஸ் எல்லாம் லேப்டாப், புக் வச்சுட்டு படிச்சுட்டு இருப்பாங்க. ரொம்பவே மனசுக்கு இதமான ஓர் இடமா இருக்கும். நாங்க வீக்கெண்ட்ல எங்கயாவது ட்ரிப் மாதிரி போன, முதல starbucks ல போய் ஒரு காபி வாங்கிட்டு தான் கிளம்புவோம்.
என்னோட கதையை பாத்தாச்சு, இப்போ ரெசிபிக்கு போகலாம். நீங்களும் இந்த வித்யாசமான, அருமையான காபிய உங்களுக்கு விருப்பமானவர்களுக்கு போட்டு குடுத்து அசத்துங்க. இன்னும் நீங்க அசத்துரத்துக்கு, இன்னும் நிறைய ரெசிபிஸ் சீக்கிரமே ஷேர் பண்றேன்.
நன்றி!
இதோட வீடியோவும் இங்க போட்ருக்கேன். இந்த ரெசிபி செஞ்சுட்டு உங்க கமெண்டுகளை கீழே பதிவுடுங்க.
No comments:
Post a Comment