This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License. Readers dont try to copy the content here.

Tuesday, 19 February 2019

Chicken Pizza

VICKEY RECIPES :)
பீசா யாருக்குத்தான் பிடிக்காது. இப்போ உலகம் பூரா குழந்தைங்க முதல் பெரியவங்க கிட்ட  பிரபலமா இருக்குற  இந்த பீசாவை நம்ம வீட்லயே, நம்ம ஊர் ஸ்டைலில் எப்படி செய்யலாம்னு பாக்கலாம். பொதுவா பீசால வெந்த சிக்கன் அது மேல கொஞ்சம் மிளகு தூள் இல்லேன்னா அதுகூட போடமாட்டாங்க. நான் கொஞ்சம் காரமான சாப்பாடு விரும்பி சாப்பிடுவேன், அதுனால நான் காரம் எல்லாம் போட்டு இந்த பீசாவை பண்ணிருக்கேன். ரொம்ப காரம் எல்லாம் இருக்காது, பட் நம்ம ஊர் டேஸ்ட் கொஞ்சம் இருக்கும்.

எங்க வீட்ல முதல எல்லாம் கடைல தான் பீசா வாங்கி சாப்பிடுவோம். அங்க ரொம்ப சீஸ் எல்லாம் போட்டு இருக்கறதுனால சரி உடம்புக்கு நல்லது இல்ல, நம்மளே வீட்ல சீஸ் கம்மியா போட்டு , மைதாக்கு பதிலா கோதுமை மாவு போட்டு பண்லாம்னு முடிவு பண்ணோம். என்கிட்ட பீசா சாஸ் இல்ல அதுனால நான் இங்கே  தக்காளி சாஸ் உபயோக படுத்திருக்கேன்.
பீசா செய்யுறது சுலபம்ங்கிறதால மாசத்துக்கு ஒரு முறை அல்லது ரெண்டு முறை நாங்களே வீட்ல செய்யவோம். என் husband கூட சேர்த்து ஹெல்ப் பண்ணுவாரு . குக்கிங் ரொம்பவே fun ஆ இருக்கும். 

நான் இங்க மைதா போட்டு பீசா ரெசிபி ஷேர் பண்ணிருக்கேன். சீக்கிரம் கோதுமை பீசா ஷேர் பண்றேன். இந்த ரெசிபி ட்ரை பண்ணி பாத்துட்டு சொல்லுங்க. வேற ஏதும் சந்தேகம் இருந்தாலும் கீழே கமெண்ட் ல சொல்லுங்க. நன்றி!

தேவையான பொருட்கள் 

மைதா - 2 .5 கப்
ஈஸ்ட் - 1 .5 டீஸ்பூன்
சர்க்கரை - 2 டீஸ்பூன்
தண்ணீர் - 1 கப்
எழுப்பில்லாத சிக்கன் - 150 gm 
மிளகாய் தூள் - 1 /4 டீஸ்பூன்
கரம் மசாலா தூள் - 1 /4 டீஸ்பூன்
மிளகு தூள் - 1 /4 டீஸ்பூன்
வெங்காயம், குடைமிளகாய் ( நீளவாக்கில் நறுக்கியது) - 1 கப்
மோசரெல்லா மற்றும் செடார் சீஸ் - 1 கப்
தக்காளி சாஸ் - 3 டேபிள்ஸ்பூன்

எண்ணெய் மற்றும் உப்பு தேவையான அளவு




செய்முறை

பீசா மாவு


  • ஒரு பௌலில் வெதுவெதுப்பான தண்ணீர், ஈஸ்ட், சர்க்கரை சேர்த்து மிஃஸ் செய்து ஒரு 10 நிமிடம் தனியா வையுங்கள்.
  • 10 நிமிடம் கழித்து மைதா மாவு , உப்பு சேர்த்து நன்றாக பிசைந்து கொள்ளுங்கள் . மாவு மேலே 1 ஸ்பூன் எண்ணெய் போட்டு தடவி, ஈர துணி அல்லது ஈர டிஷு போட்டு மாவை ஒரு 2 மணிநேரம் ஊற விடுங்கள்.
சிக்கன் ப்ரை

  • சிக்கனை சிறு துண்டுகளா நறுக்கி, அலசி எடுத்து கொள்ளுங்கள். அதில் மிளகாய் தூள், கரம் மசாலா தூள், சிறிதளவு உப்பு போட்டு பிசறி ஒரு 10 நிமிடம் ஊற விடுங்கள்.
  • 10 நிமிடம் கழித்து, அடுப்பில் ஒரு கடாய் வைத்து சிறிதளவு எண்ணெய் ஊற்றி , ஊற வைத்துள்ள சிக்கனை போட்டு 5 நிமிடம் வறுத்தெடுங்கள். கடைசியாக மிளகு தூள் மற்றும் 1 டேபிள்ஸ்பூன் தக்காளி சாஸ் சேர்த்து அடுப்பை அணைத்து விடுங்கள்.
  • அடுத்து வெங்காயம் மற்றும் குடைமிளகாயை நீளவாக்கில் நறுக்கி வையுங்கள்.
பீசா செய்முறை 

  • 2 மணிநேரம் கழித்து மாவு இரண்டு மடங்காக உப்பி வந்துருக்கும். 
  • ஒரு பெரிய பீசா பான் எடுத்து, அதில் எண்ணெய் போட்டு தடவி விடுங்கள். அதின் மேல் பீசா மாவை, சப்பாத்தி போல் பான் முழுவதும் திரட்டுங்கள்.  
  • மாவை திரட்டியதும் கத்தி அல்லது போர்க் வைத்து அங்கங்கே குத்தி விடுங்கள். இது மாவை பொங்கி வராமல் இருப்பதற்கு செய்கிறோம். பீசா கொஞ்சம் மெல்லிசா, ஓரங்களில் கிரிஸ்பியா இருக்கும்.
  • அடுத்தாக தக்காளி சாஸ் அல்லது பீசா சாஸ் மேல போட்டு முழுவதுமாக பரப்பி விடுங்கள். அடுத்து பாதி சீஸ், வெங்காயம், குடை மிளகாய், சிக்கன் துண்டுகள், மீதம் உள்ள சீஸ் போட்டு விடுங்கள்.
  • அவனில் 350 F or 230 C செட் செய்யது 15 முதல் 17 நிமிடம் வரை பீசாவை bake செய்யுங்கள்.
  • 17 நிமிடம் கழித்து சுவையான, சீஸியான பீசா தயார். சூடாக இருக்கும்போதே கட் செய்யது கொள்ளுங்கள்.
இப்பொழுது சுவையான, சூப்பரான பீசா நம்ம வீட்லயே செய்யலாம். ட்ரை பண்ணி பாத்துட்டு சொல்லுங்கள். நன்றி!

No comments:

Post a Comment

எழுத்தாளர்கள் கவனத்திற்கு

இந்த தளத்தினில் உங்களது படைப்புகளையும் இடம்பெறச் செய்ய விரும்பினால், rheamoorthy6@gmail.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் செய்யவும்.