|
VICKEY'S RECIPES :)
நான் வந்துட்டேனு சொல்லு , திரும்பி வந்துட்டேனு சொல்லு . ஒரு மாசத்துக்கு முன்னாடி எப்படி போனேனோ அப்படியே திரும்பி வந்துட்டேனு சொல்லு விக்கிடா :) :).
என்னப்பா பண்றது லேப்டாப் கொஞ்சம் மக்கர் பண்ணிடுச்சு . உங்க வீட்டு பிள்ளையா நினைச்சு மன்னிச்சுக்கோங்கபா . இது வரைக்கும் ஆதரவு கொடுத்தவர்களுக்கும், இனி கொடுக்க போகிறவர்களுக்கும் மிக்க நன்றி .
இன்னிக்கி நம்ம பார்க்க போற ரெசிபி சிக்கன் நூடுல்ஸ் . எப்போ ஹோட்டல் போனாலும் நூடுல்ஸ் , fried ரைஸ் ஆர்டர் பண்ணிடுவோம் . எனக்கு நூடுல்ஸ் விட fried ரைஸ் தான் பிடிக்கும் . என் husband தான் நூடுல்ஸ் ரொம்ப விரும்பி சாப்பிடுவாங்க. மாசத்துக்கு 2 அல்லது 3 தடவை வீட்லயே செஞ்சிடுவோம் . இந்த ரெசிபி நம்ம ஊர் ரோட்டறோம் இருக்குற தள்ளுவண்டி நூடுல்ஸ் மாதிரி இருக்கும் . சிக்கன் எல்லாம் வறுத்து போடுறதுனால. நீங்க எல்லாரும் இந்த ரெசிபி ட்ரை பண்ணி பாத்துட்டு சொல்லுங்க. இப்போ நம்ம ரெசிபிக்கு போகலாம் வாங்க.
தேவையான பொருட்கள்
hakka நூடுல்ஸ் பாக்கெட் - 2
முட்டை - 4
எலும்பு இல்லாத சிக்கன் - 250 gm
இஞ்சி - 1 இன்ச் பொடியாக நறுக்கியது
பூண்டு - 5 பல் (பொடியாக நறுக்கியது )
பச்சை மிளகாய் - 3 அல்லது 4 (பொடியாக நறுக்கியது )
பெரிய வெங்காயம் - 1
கேரட் - 1
முட்டைகோஸ் - 1 /2 கப் (நீளவாக்கில் நறுக்கியது)
குடை மிளகாய் - 1
சோயா சாஸ் - 1 டீஸ்பூன்
தக்காளி சாஸ் - 1 டேபிள்ஸ்பூன்
சிவப்பு மிளகாய் சாஸ் - 1 டேபிள்ஸ்பூன்
மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
கரம் மசாலா தூள் - 1 டீஸ்பூன்
மிளகு தூள் - 1 டீஸ்பூன்
எண்ணெய் மற்றும் உப்பு தேவையான அளவு
- சிக்கனை நன்றாக அலசிவிட்டு , பொடியாக நறுக்கி அதில் மிளகாய் தூள் , கரம் மசாலா தூள் , சிறிதளவு உப்பு போட்டு நன்றாக பிசைந்து ஒரு 15 நிமிடம் ஊற வையுங்கள்.
- நூடுல்ஸ் பாக்கெட் பின்னால் கொடுத்துள்ள முறைப்படி அதை வேக வைக்க வேண்டும். ஒரு பாத்திரத்தில் 10 கப் தண்ணீர் எடுத்து அதை நன்றாக கொதித்த வைத்து ,பின் அதில் 1 /2 ஸ்பூன் உப்பு , 1 ஸ்பூன் எண்ணெய் , நூடுல்ஸ் சேர்த்து 3 முதல் 5 நிமிடம் வரை வேக வைக்கணும் . வெந்த உடன் நூடுல்ஸ் எடுத்து ஒரு பாத்திரத்தில் தனியாக எடுத்து வையுங்கள்.
- ஒரு அகலமான பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி காய்ந்த உடன், 4 முட்டை உடைத்து சேருங்கள் , அதில் சிறிதளவு உப்பு , 1 / 4 டீஸ்பூன் மிளகு தூள் சேர்த்து நன்றாக வறுத்து எடுத்து தனியாக வையுங்கள்.
|
- அதே பாத்திரத்தில் கொஞ்சம் எண்ணெய் சேர்த்து ஊற வைத்துள்ள சிக்கனை சேர்த்து ஒரு 5 நிமிடம் வதக்குங்கள். வதங்கிய பின்னர் இஞ்சி பூண்டு , பச்சை மிளகாய் ,வெங்காயம் ,மற்றும் அனைத்து காய்கறிகளையும் சேர்த்து 2 முதல் 3 நிமிடம் வதக்குங்கள்.
- அடுத்து அனைத்து சாஸ் வகைகளையும் போட்டு ஒரு நிமிடம் வதக்கி விட்டு , பின் பொரித்து வைத்துள்ள முட்டை மற்றும் நூடுல்ஸ் , 1 ஸ்பூன் மிளகு தூள் சேர்த்து ஒன்றோடு ஒன்று சேரும் படி நன்றாக கிளறுங்கள். உப்பு சேர்க்கும்போது டேஸ்ட் பாத்துட்டு சேர்த்துக்கோங்க ஏன்னா சாஸ்ல , அப்புறம் நூடுல்ஸ் வேக வைக்கும்போது உப்பு சேர்த்துருக்கோம் .
சூடான , டேஸ்டியான சிக்கன் நூடுல்ஸ் ரெடி . நீங்களும் செஞ்சு சுவைத்து பாத்துட்டு உங்க கருத்துக்களை இங்கே பதிவிடுங்க. நன்றி :)
No comments:
Post a Comment