Raagaa's Recipes:
தேவையானவை:
கத்திரிக்காய் - கால் கிலோ,
புளித் தண்ணீர் - சிறிதளவு,
மஞ்சள்தூள் - ஒரு சிட்டிகை,
உப்பு - தேவையான அளவு.
செய்முறை:
கத்திரிக்காயை சிறு துண்டுகளாக நறுக்கி, ஒரு நாள் வெயிலில் காயவைத்து எடுத்துக்கொள்ளவும். இதனுடன் புளித் தண்ணீர் உப்பு, மஞ்சள்தூள் சேர்த்து அடுப்பில் வைத்து கொஞ்ச நேரம் கொதிக்கவிடவும்.
வெந்ததும் நீரை வடித்து, திரும்பவும் 2 நாட்கள் வெயிலில் காயவைத்து உபயோகப்படுத்தவும்.
இதை வதக்கி பயன்படுத்தி குழம்பு செய்தால்... ருசியாக இருப்பதுடன், வாசனை ஊரைக் கூட்டும்.
No comments:
Post a Comment