கூந்தல் பற்றி இழுக்கின்றாய்
நெற்றி திலகம் அழிக்கிறாய்
சற்றும் பயமின்றி என்னுடனே சபையினிலே
கன்னம் வைத்து இழைகின்றாய்
என்னவளே என் வாழ்வின் விடி வெள்ளியென
வந்தவளே என் மகளே இனி என்
வாழ்வில் எந்நாளும் திருநாளே
பாஸ்கர் காணாமல் போனது தெரிய வந்த நிமிடத்திலிருந்து அனைவரும் ஊர் முழுக்க சல்லடை போட்டு தேடினார்கள். சுந்தரம் தன் தோழர்களின் உதவியோடு பாஸ்கரை கடத்தினான் மறைவிடத்தில் மயக்கமடைய செய்து, பின் அவன் போட்டிருந்த நகைகளை கழற்றிகொண்டு நகைக்காக நடந்த கடத்தல் போல சித்தரித்தான்.
பின் பொழுது புலரும் நேரத்திலே மயக்கத்தில் இருந்த பாஸ்கரை தூக்கிக்கொண்டு அவர்கள் வீட்டை அடைந்தான். பாஸ்கரை கண்டு பிடிக்க முடியாமல் திணறிக்கொண்டிருந்த அனைவரும் ஒருமித்து போலிஸில் சொல்ல கிளம்பும் நேரம்.
பாஸ்கருடன் வீட்டை அடந்தான் சுந்தரம்... அங்கு பதறிய நெஞ்சுடன் வாசலில் அமர்ந்திருந்த ஈஸ்வரை அடைந்து பாஸ்கரை ஒப்படைத்து விட்டு, அவர்களிடம் தான் மதுரையிலிருந்து வந்ததாகவும், காணாமல் போன தனது தமக்கை வீட்டுக்கு தெரியாமல் திருமணம் செய்து கொண்டு இங்கு வாழ்ந்து வருவதாகவும், அவளை கண்டு சமாதானப்படுத்தி தன் வீட்டுக்கு அழைத்து செல்ல நினைத்து இங்கு வந்த போது, பஸ் நிறுத்தம் அருகில் விசித்திரமாக சிலர் நின்று கொண்டிருந்ததாகவும், அவர்கள் அவன் கண்காணிப்பதை கண்டவுடன் குழந்தையை போட்டு விட்டு ஒடி விட்டதாகவும், குழந்தை மயக்கதில் இருந்ததால் விசாரித்து வந்ததாகவும் கதை புனைந்தான்.
இதற்க்குள்ளே குழந்தை கிடைத்து விட்ட செய்தி கேட்டு வாசலுக்கு வந்த பார்வதி பாஸ்கரை அணைத்து உச்சி முகர்ந்தார். கூட வந்த மாலதியும் நாராயணனும் சுந்தரத்தை பார்த்து அதிர்ந்து நின்றனர். கிடைத்த வாய்ப்பில் அக்கா என்று அலறி பொய்யாக மயங்கி விழுந்தான் சுந்தரம்.
சுந்தரம் மயக்கம் நீங்கி எழுந்து அழத் துவங்க, மாலதியும் நாராயணனும் கூட அவன் திருந்தி விட்டதாகவே நம்பினர். வீடும் விழா கோலம் பூண்டது லக்ஷ்மியை பார்த்த சுந்தரத்தின் மனதிலும் பாசம் ஒரு கணம் வெளி வந்தது.
பின்னர் மாதங்கள் உருண்டோட குல தெய்வம் கோவில் திருவிழாவும் வர அங்கு வைத்து லக்ஷ்மிக்கு காதுகுத்தி முடி இறக்கவும் ஏற்பாடு செய்தனர்.
தாய் மாமன் மடியில் அமர்த்தி முடி இறக்க ஏற்பாடும் செய்யப்பட்டது, தன் சக்தியை மீறி கடன் வாங்கினான் சுந்தரம் அதை வைத்தே தனக்கு குழந்தையை கடத்த உதவி செய்த நண்பர்களுக்கு பணம் கொடுத்து சமாளித்தான். இந்நிலையில் பணம் குடுத்தவர்கள் வீட்டையும் பொருட்களையும் ஜப்தி செய்து வெளியில் துரத்தினார்கள். அப்போது அங்கே திருவிழாவுக்கு அழைக்க வந்த ஈஸ்வரன் தம்பதி அவர்களுக்கு ஆதரவு கொடுத்து தங்கள் வீட்டுக்கு கூட்டி வந்தனர்.
குழந்தையின் காது குத்து நல்லபடி முடிந்தது, சுந்தரத்தையும் அவனது தாயாரையும் தங்களுடன் ஒரே வீட்டில் வைத்துக் கொள்ள மாலதி ஓரேடியாக மறுத்துவிடவே அவர்களுக்கு தனிவீடு பார்த்து குடி வைக்க ஒரு நாள் முன்னதாக கிளம்பினர் நாராயணன். மாலதி சுந்தரம் மற்றும் அவரது அன்னை கிளம்பும் போது லக்ஷ்மி காய்ச்சலால் மிகவும் அழவே தங்கள் வரும் போது அவளை அழைத்து வருவதாக கூறினார் பார்வதி.
அதற்கு மாலதியோ அக்கா இனி அவ உங்க பொறுப்பு என கூறிவிட்டு கணவருடனும் சிற்றன்னை, தம்பியுடனும் , மகிழ்வுடன் கை ஆட்டி விட்டு சென்றார்.
இந்த மகிழ்ச்சி நீடிக்குமா பொறுத்திருந்து பார்ப்போம் - (தொடரும்).
No comments:
Post a Comment