பிரிவு இல்லா உறவு ஒன்று உண்டென்று
முடிவு இல்லா கனவு கண்டேன்
கண்விழித்து எழும் முன்னே
காணாமல் போனவளே உன்னை
காணும்வரை விழிமூட மறுக்குதடி
தன் மகளினை கடைசியாக இப்படி ஒரு நிலையிலா பார்க்கவேண்டும் கதறி துடித்த ப்ரபாவின் பெற்றோரை தேற்றுவதிலும், இறுதி காரியங்கள் அனைத்தும் குறைவின்றி நடப்பதிலும் பாஸ்கருக்கு துணை நின்றான் ஷேஷகிரி.
சாரதாவின் உறுதியற்ற காதலால், தன் வாழ்வில் நடந்த சம்பவங்களின் பாதிப்பால், காதல் என்ற சொல்லே வெறுத்து போய் இருந்தது பாஸ்கருக்கு. இது தெரியாத லக்ஷ்மியும் ஷேஷகிரியும் மெல்ல காதல் வயப்பட்டனர்...
நாட்கள் செல்ல செல்ல மூத்த மகள் மறைந்து விட்ட சோகத்தில் இருந்து மனதை தேற்றி கொண்ட ப்ரபாவின் பெற்றோர் தன் இளைய மகளின் வளைகாப்பு வைபவத்திற்க்காக தயாராகினர்.
வளைகாப்பு நாளும் வந்தது... பட்டு சேலை உடுத்தி அழகின் உருவமாய் தாய்மையின் சோபையோடு மிளிர்ந்த தன் மனைவியை விட்டு கண்ணை எடுக்கவில்லை பாஸ்கர்.
எளிமையான அலங்காரத்திலும் ஒரு தேவதை பூமியில் இறங்கி வந்தது போல இருந்த லக்ஷ்மியை பின் தொடர்ந்தன ஷேஷகிரியின் கண்கள்.
லக்ஷ்மியின் அழகை கண்டு அங்கு வந்த ஒரு குடும்பத்தினர் தங்கள் வீட்டு வரனுக்கு லக்ஷ்மியை பெண் கேட்க அதை காதில் வாங்கிய காதலர்கள் இருவருமே அதிர்ந்தனர். அப்போதைக்கு பாஸ்கரோ தான் யோசித்து சொல்வதாக சொல்லிவிட சற்றே நிம்மதியடைந்தனர்.
பிரசவத்திற்காக தன் தாய் வீட்டுக்கு மனைவி சென்றுவிட அவளின் பிரிவால் பாஸ்கர் சோர்வாக இருந்தான். மனைவியின் பிரசவம் நல்லபடி நடந்தேற வேண்டி கோவிலுக்கு சென்ற ஒரு மாலை வேளையில் அதே கோவிலில் ஒரு ஓரமாக நின்று கண்களில் காதல் மின்ன எதிர்க்காலத்தை குறித்து பேசிக்கொண்டிருந்த காதல் ஜோடிகள் கண்ணில் பட்டனர். அவன் கூடவந்தவர்களும் அதை பார்த்து அதிர்ந்து போனார்கள்...
எதிர்பாராது பாஸ்கரின் கண்களில் சிக்கிவிட்ட காதல் ஜோடி திகைப்புடன் நெருப்பு துண்டை மிதித்தது போல ஸ்தம்பித்து நின்றனர். எதுவும் பேசாது வீட்டுக்கு இருவரையும் அழைத்து வந்த பாஸ்கரின் கோபத்தில் மிரண்டாள் லக்ஷ்மி.ஸஊசி விழுந்தால் கூட சத்தம் கேட்கும் அளவுக்கு அமைதியாக இருந்ததது வீடு.
மிரண்டு நின்ற லக்ஷ்மிக்கு கண்களால் தைரியம் சொன்னான் ஷேஷகிரி.
மூவரில் முதலில் பேச ஆரம்பித்த பாஸ்கர் லக்ஷ்மியை நோக்கி, "இதோ பாரு லக்ஷ்மி என் வாழ்க்கையில உறுதி இல்லாத காதலால எத்தனை பிரச்சனை வந்ததுனு உனக்கு தெரியும். அப்போ இருந்து எனக்கு இந்த காதலே பிடிக்கல ஆனாலும் நீ இவன விரும்பறனு தெரிஞ்சதுக்கு அப்புறம் வேற ஒருத்தனுக்கு உன்னை கட்டாயப்படுத்தி கல்யாணம் பண்ணி வெக்கவும் மனசு வரல. இப்பொ உனக்கு ரெண்டு வாய்ப்பு தரேன். ஒன்னு நீயா மனசை மாத்திக்கிட்டு இவனை மறந்திட்டு நாங்க பாக்குற மாப்பிள்ளைய கல்யாணம் பண்ணிக்கனும். இல்ல அடுத்த முகூர்த்ததுல இவனோட உனக்கு கல்யாணம் நடக்கும் அதோட எங்க உறவ நீ மறந்திடனும். எங்களுக்கு எப்பொ உன் காதல் மேல நம்பிக்கை வருதோ அப்போதான் உங்கிட்ட பேசவே செய்வேன். எது உன் முடிவுனு யோசிச்சு சொல்லு..." என்றான்
ஒரு நிமிடம் கூட தாமதிக்காத லக்ஷ்மி, "அண்ணா நாங்க அடுத்த முகூர்த்தத்துலயே கல்யாணம் பண்ணிக்கிறோம். ஒரு சாதாரண கோவில்ல வெச்சு கூட எங்களுக்கு கல்யாணம் பண்ண ஏற்பாடு பண்ணு அண்ணா..." என்றாள்.
ஒருகணம் திகைத்த பாஸ்கர், "சரிம்மா நான் இன்னைக்கு ராத்திரி உன் அண்ணிய பாத்து விஷயத்த சொல்லிட்டு, அவங்களையும் கல்யாணத்துக்கு கூட்டிட்டு வரேன். பத்திரம்மா நீ இருந்துக்கோ" என்றான்
பிறகு ஷேஷகிரிய பாத்து, "மாப்பிள்ளை நீங்க உங்க வீட்டுல தகவல் சொல்லி வரசொல்லிடுங்க. வர வெள்ளிக்கிழமை கோவில்ல வெச்சு உங்க ரெண்டு பேருக்கும் கல்யாணம்" என்றான்.
அதற்கு ஷேஷகிரியோ, "பாஸ்கர் எனக்கு கல்யாணம் ஆகாத ஒரு தங்கச்சி இருக்கா அவளுக்கு முன்னாடி எனக்கு கல்யாணம் பண்ண எங்க அம்மா சம்மதிக்க மாட்டாங்க. அதனால உங்க தங்கைய கல்யாணம் பண்ணிக்கிட்டுதான் நான் அவங்களுக்கு சொல்லணும். ஆகையால நீங்க கல்யாண வேலைய ஆரம்பிங்க... எங்க வீட்டு பிரச்சனையை நான் பாத்துக்கறேன்" என்றான்.
லக்ஷ்மியின் முடிவால் மனம் வெதும்பிய பாஸ்கர், தன் மனைவியைத் தேடி அவன் மாமனார் வீட்டுக்கு வந்தான். மெல்ல மனைவியிடம் விஷயத்தை சொன்ன போது அவளின் அதிர்ச்சியோ அளவிட முடியாததாக இருந்தது.
பிறகு கல்யாணத்துக்கு வேண்டிய ஏற்பாடு செய்ய வேண்டி இருப்பதால் காலை கிளம்புவதாக கூற அவளும் தானும் உதவிக்கு வருவதாகவும் திருமணம் முடிந்த பின்னர், தமது வீட்டிலேயே இருக்க போவதாகவும் கூற பாஸ்கரும் அவளது பெற்றோரும் மறுத்தனர் முடிவில் ப்ரபாவின் பிடிவாதமே வென்றது.
திருமணத்துக்கு வரும் ப்ரபா அதற்கு பின் தன் பெற்றோருடன் பாஸ்கரின் வீட்டில் தங்கி பிரசவம் பார்த்து கொள்வது என்று முடிவாயிற்று. திருமண நாளும் நெருங்கியது, நல்லபடியாக நகைகளாகவும் ரொக்கமாகவும் சீர் செய்து தன் தங்கையை அவளின் மனதுக்கு பிடித்தவனுடன் மனைவியாக அனுப்பி வைத்தார் பாஸ்கர்.
பிரசவ தேதி நெருங்கி விட்ட நிலையிலும் தன் மனதின் துயரம் அறிந்து பிடிவாதம் பிடித்து தன்னுடனே தங்கிவிட்ட மனைவியை நினைத்து பெருமை கொண்டார்.... இந்நிலையில் பாஸ்கரின் வாழ்வில் மற்றோர் நீங்கா துயரை கொடுக்க அந்த பொல்லாத நாளும் வந்தது....
No comments:
Post a Comment