நீங்கா ரணங்களுடன் நிமிடங்கள் கடந்து செல்ல
இனி நிம்மதி என் வாழ்வில் கனவென நான் நினைத்திருக்க
நிழல் போல் வந்தவனே உன் தோள்கள் தருவாயா ?
என் துயர்களை தீர்த்துக்கொள்ள
காலையில் இருந்து அன்று ஏனோ மனது சரியில்லை பாஸ்கருக்கு ஒரு ஆயிரம் முறை பத்திரமாக இருக்கும் படி ப்ரபாவிடம் சொல்லிவிட்டு வெளிவேலையாக சென்ற பாஸ்கருக்கு சிறிது நேரத்தில் குளிக்க சென்ற மனைவி குளியலறையில் தவறி விழுந்து விட்டதாகவும் தலையிலும் வயற்றிலும் அடிபட்டிருப்பதாகவும் தகவல் வந்தது
பதறி அடித்துகொண்டு ஓடினால் மருத்துவர்களோ ப்ரபாவின் உயிரை பிடித்து வைக்க போராடினர் பனிக்குடமும் உடைந்து விட்டதால் உடனே பெரிய ஆஸ்பத்திரியில் சேர்க்க கூறினர் விரைந்து ஆஸ்பத்திரியில் சேர்த்தாலும் அறுவை சிகிச்சை செய்ய வேண்டுமெனெவும் அப்போதும் தாய் அல்லது குழந்தை இருவரிலொருவர் தான் பிழைப்பார் எனவும் கூறிவிட்டனர்
அறுவை சிகிச்சை முடிந்து வந்த மருத்துவரின் கைகளில் பாஸ்கரின் மகன் இருந்தான் ஆம் தாயை காப்பாற்றி விட்டு தன்னை படைத்த கடவுளிடமே சென்றிருந்தது அந்த சிசு
24 மணி நேரம் சென்ற பின் கண்விழித்து கொண்டாள் ப்ரபா குழந்தை இறந்து விட்டாலும் மனைவி பிழைத்து விட்டதால் சற்றே ஆறுதலுற்றான் பாஸ்கர்.செய்தி தெரிந்த லக்ஷ்மியோ ப்ரபாவின் நிலை அறிந்து கண்ணீர் வடித்தாள் கமிஷன் வியாபாரம் செய்ய ஷேஷகிரி வெளியூர் சென்றிருந்ததால் அவளால் ப்ரபாவை சென்று பார்க்கமுடியாமல் போனதும் கொடுமையே
கல்யாணம் முடிஞ்சு ஊரை விட்டு வந்த லக்ஷ்மியும் ஷேஷகிரியும் வீட்டுக்கு வந்த போது ஷேஷகிரியோட அம்மா ஜானகி ய சமாதான படுத்த யாராலயும் முடியல
கோவத்துல அவங்க லக்ஷ்மிக்கிட்டயும் ஷேஷகிரிகிட்டயும் முகம் கொடுத்து கூட பேசல இருந்தாலும் இருவரையும் வீட்டுக்குள்ள சேத்துகிட்டாங்க
ரங்கனாதனும் ராதாவும் ஆரம்பத்துல கோபமா இருந்தாலும் போக போக லக்ஷ்மிகிட்ட சகஜமா பேச ஆரம்பிசிட்டாங்க அவங்க மெஸ்சுல உதவியா இருந்த பசுபதியோட மகளான கௌசல்யாவ ரங்கனாதனுக்கு நிச்சயம் பண்ணி இருந்தாங்க
பசுபதியோட மகன் பேர் விஸ்வநாதன் இந்த குடும்பமும் மெஸ்ஸுக்கு பக்கத்துல தான் குடி இருந்தது ராதாவுக்கு தரகர்கள் மூலமா வரன் வேட்டை நடந்துக்கிட்டு இருந்தது வரும் வரன்கள் எல்லாம் தட்டி தட்டி சென்றுவிட மகளின் திருமணம் குறித்த கவலையில் இருந்தார் ஜானகி
அன்று வெளி வேலையாய் ரங்கநாதனும் விஸ்வநாதனும் சென்றிருக்க ஜானகியும் லக்ஷ்மியும் கௌசல்யாவும் சமையலறையில் இருக்க பசுபதியோ உணவை பரிமாற கல்லாவில் இருந்தாள் ராதா .
மருத்துவ விடுப்பில் சென்றிருந்த ஒரு ஊழியரின் இடத்தில் பணியாற்ற தான் பணி புரியும் பக்கத்து ஊரின் வங்கி கிளையில் இருந்து தற்காலிக பணியில் வந்திருந்த ஆனந்தின் கண்களுக்கு ராதா தேவதையாக பட தரகரிடம் பேசி பிடிவாதம் பிடித்த பெற்றோரை சரிகட்டி பெண் பார்க்க வந்து விட்டான் ஆனந்த் .
ஆனந்தின் பெற்றோரின் முகசுழிப்பில் இருந்தே அவர்களுக்கு இது பிடிக்கவில்லை என ஊகித்த ஜானகி தன் மூத்த மகன் வெளியூர் சென்றிருப்பதால் அவன் வந்த உடன் கலந்து பேசி பதில் சொல்வதாக சொல்லி விட்டார் வெளியூர் சென்றிருந்த ஷேஷகிரி திரும்பிய பின் இது குறித்து பேசினார் தன் தாய் தன்னிடம் பேசியதில் மகிழ்ச்சியில் இருந்த ஷேஷகிரியோ அம்மா ராதாவுக்கு பிடிச்சிருந்தா மேல் கொண்டு பேசி முடிக்க பாருங்க அம்மாஎன்று சொல்ல அது மட்டுமில்ல ரங்கனுக்கும் நிச்சயம் பண்ண பெண் இருக்கா அவன் கல்யாணத்தையும் முடிஞ்சா விஸ்வநாத அண்ணன் கல்யாணத்தையும் சேத்தே முடிச்சிறலாம் அத்தை என்றாள் உடன் இருந்த லக்ஷ்மி
லக்ஷ்மியின் திட்டங்கள் நிறைவேறுமா?பொறுத்திருந்து பார்ப்போம்
No comments:
Post a Comment