சிந்தையெனும் சோலையிலே
சிறுமலராய் வந்தவளே
சுவாசமடி நீ எனக்கு
ஜீவனடி நான் உனக்கு
மணிவிழா முடிச்சு வீட்டுக்கு வரதுக்குள்ள நாக்கு தள்ளிப்போயிடுச்சு பா....
என்ன வேலை... என்ன வேலை... இதுல இன்னுமும் பத்து நாளுல க்ருஷ்ணா கல்யாணம் வேற.... ஸ் அப்பா இப்பவே கண்ண கட்டுதே! என ஸ்ரீ ருத்ரா வடிவேலு ஸ்டைலில் புலம்ப...
ஏண்டா வந்ததே லேட்டு, செஞ்சதே திங்குற வேலை மட்டும்தான், இதுல உனக்கு வேல கண்ண வேற கட்டுதா? புல் கட்டு கட்டுனா அப்படிதான்டா கண்ண கட்டும்... என திட்டிகொண்டே க்ருஷ்ணா ஒரு புறமும், யவனா ஒரு புறமும், சூர்யா ஒரு புறமும் விரட்ட....
ஸ்ரீ காந்த்தும் பூர்ணாவும் சிரித்தபடி இதை வேடிக்கைப் பார்க்க, "இன்னமும் ரெண்டு அடி நல்லா போடுங்க" என சரயுவும் உசுப்பேத்த,
மிக சரியாக அங்கே வந்த லக்ஷ்மி மற்றும் ஷேஷகிரி பின்னால் அடைக்கலம் புகுந்தான் ஸ்ரீருத்ரா.
அவர்களின் பின்னாலயே வந்தனர் குடும்பத்தின் மற்ற அங்கத்தினர்கள் எல்லாம்.
பெரியவர்களை கண்டவர்கள் விளையாட்டை நிறுத்தி விட்டு சமத்தாக இடம் பார்த்து அமர்ந்தனர்.
மணிவிழாப் புகைப்படங்கள் வந்து விட அவற்றை பார்த்து கொண்டிருந்த சூர்யா, "ஏன் அத்தை... இப்பவே இவ்வளவு அழகா இருக்கீங்களே, உங்க கல்யாண போட்டோ காட்டுங்க. அதுல எப்படி இருக்கேங்கனு பாக்கணும்..." என்று கேட்டான்.
சின்னவர்களை பார்த்து எங்க கல்யாணத்தை போட்டோ எல்லாம் எடுக்கல தம்பி என்றார் லக்ஷ்மி.
"ஏன் பாஸ்கர் மாமா நீங்க கஞ்சூஸ்ஸா?" என சரயு கேட்டு விட,
இதை கேட்ட லக்ஷ்மியின் முகம் வாடிவிட்டது. அவரை ஷேஷகிரியும் பாஸ்கரும் சேர்ந்து, ஏதேதோ சொல்லி சமாதானபடுத்தினார்கள்.
லக்ஷ்மியின் முகம் வாடியதை பொறுக்காத ஸ்ரீ ருத்ரா, "மரியாதை இல்லாம என்ன பேச்சு இது சரயு?" என உணர்ச்சி வசப்பட்டு சரயுவை அடித்து விட்டான்.
அதை கண்ட ஆனந்தும் ராதாவும், "ஏண்டா புத்தி கித்தி கெட்டு போச்சாடா உனக்கு? அவ ஏதோ ஒரு ஜாலிக்கு சொன்னா... அதுக்கு போய் கை நீட்டுற" என ஸ்ரீ ருத்ராவை திட்டிட,
அனைவரையும் ஒரே குரலில் அடக்கினார் ஷேஷகிரி....
"போதும் நிறுத்துங்க.... சின்ன பசங்க சண்டையில பெரியவங்க தலையிட்டு பெருசாக்காதீங்க. யாரும் இனி பழைய கதை தெரியாம பேசுனதுக்காக, பிள்ளைங்கள திட்டவோ அடிக்கவோ கூடாது.... அது மட்டும் இல்ல இப்போ நீங்க ஒருத்தரை ஒருத்தர் ஓடி பிடிச்சு துரத்தி விளையாடினீங்களே, இந்த ஒத்துமை நம்ம குடும்பத்துல நிலைக்க எத்தனை பேர் பாடு பட்டிருக்கோம்னு தெரியுமா?..."
No comments:
Post a Comment