காத்திருந்த வேளையிலே கண்ணிமைக்கும் நொடியினிலே
மின்னலென தோன்றியவளே உனைத்தேடி நான் திரிகையிலே
என் இதயம் கண்டுகொண்டேன்
பூ மயிலே
அஞ்சுகமே ஒருமுறை உனைக் காணஎன் நெஞ்சம் விரும்புதடி
தென்றலென தீண்டுவாயா? தீயெனவே எரிப்பாயா?
என் நேசம் அறிகையிலே
எதிர்பாராது பெய்த மழை விவசாயத்துக்கு புத்துயிர் ஊட்டியது. தண்ணீர் இன்றி வாடிய பயிர் எல்லாம் தளதளவென வளர்ந்து நிற்க, அதை விட ஒரு விவசாயி வாழ்வில் மகிழ்வான தருணம் இருக்க முடியுமா சொல்லுங்க?!
மகள் பிறந்த மகிழ்ச்சியோடு மழை கொடுத்த மகிழ்ச்சியும் சேர்ந்து கொள்ள, கூலி ஆட்களுக்கு பணம் புதுத்துணிகள் அப்படினு பரிசு கொடுத்து கொண்டடினார் நாராயணன்.
அட அவர் தான் அப்படினா நம்ம ஈஸ்வரன் போய் நின்ன இடம் மதுரையின் பிரபலமான நகைக்கடைங்க!!! அன்னைக்கு அவங்க நகை கடையில போட்ட பெரிய பில் நம்ம ஈஸ்வரன் வாங்கினதுதான்.
தன் சேமிப்பில் பெரும் பகுதியினை பொண்ணுக்கு நகையா வாங்குனாரு, கூட போன நாராயணனே கைலகால பிடிச்சு தடுக்கற அளவுக்கு போயிடுச்சுனா பாத்துக்கங்களேன்.
அப்படி அவங்களுக்குள்ள நடந்த வாக்குவாதம் வேண்டாத ஒருத்தன் கவனத்துலேயும் பட்டுச்சு. நகைய விக்க வந்த அவன் கவனிச்சது நம்ம நாராயணனத்தான்...
பொதுவுல நம்ம பெரியவங்க பகல்ல பக்கம் பாத்து பேசு, இரவுல அதயும் பேசதேயினு சொல்லுவாங்க. ஏன் தெரியுமா? நம்ம உணர்ச்சி வேகத்துல பேசுறது ஏதாவது வேண்டாதவங்க காதுல விழுந்து, அதனால சிக்கல் வந்துட கூடாது அப்படிங்கற முன்னெச்சரிக்கை தாங்க.
நகைகளுடன் ஊர் திரும்பிய ஈஸ்வரன், சகோதரனை உரம் வாங்க மதுரையிலேயே நிறுத்தி வைத்தது அவர் நேரம்னு தாங்க சொல்லணும்.
யாரும் அறியாமல் ஈஸ்வரனை நகை கடையிலிருந்து பின் தொடர்ந்த அவ்வுருவம், அவரது ஊரையும் அவருடைய செல்வாக்கையும் பணவசதியயும் நோட்டமிட்டது.
பாலுக்காக அழுத லக்ஷ்மிக்கு பசியாற்றி விட்டு யதேச்சையாக ஜன்னல் பக்கம் பார்த்துக்கொண்டிருந்த மாலதி, மறைந்திருந்து வீட்டை நோட்டம் பார்த்து கொண்டிருந்த அவ்வுருவத்தை கண்டு அதிர்ந்து போனார்.
மாலதி பார்த்ததை கண்ட அவனும் அவ்விடத்தை விட்டு உடனே சென்று விட்டான்.
முதலில் தான் கண்டது கனவா? நிஜமா? என்று குழம்பிய மாலதி லக்ஷ்மியின் சிணுங்கலில் தன்னை மறந்து குழந்தையை கவனிக்க போனாள். பிறகோ ஈஸ்வரனின் உற்சாக குரலிலும் கணவர் வர நேரமாகும் என்ற தகவலிலும் அவனைப் பற்றி மறந்தே போனார்.
ஊர் பஸ் நிறுத்ததுக்கு இருள் குவியும் நேரத்தில் வந்த அவன் பஸ் ஏறும் முன் ஒரு முடிவுக்கு வந்திருந்தான். அவன் மாலதியின் சகோதரன் சுந்தரம், சிற்றன்னையின் மகன். கெட்ட சகவாசத்தினால் தங்கள் தகப்பன் சேர்த்து வைத்து இருந்த பணத்தை அழித்தான் தாயின் நகைகளையும் விற்று சூதாட முனைந்தான்.
மாலதியின் சிற்றன்னைக்கோ மகனை குற்றம் சொல்வது பிடிக்காது, அதை விட மூத்தாள் மகளை தகப்பன் படிக்க வைப்பது அதற்க்காக செலவு செய்தது துளியும் பிடிக்கவில்லை. மாலதி தான் பிடிவாதமாய் அவர் தந்தையிடம் அடம் பிடித்து படிக்க வந்தாள். மாலதியின் திருமணத்துக்கு கொஞ்ச மாதங்களுக்கு முன்னரே அவர் தந்தை இறைவனடி சேர்ந்திருந்தார்.
அதன் பின் மாலதி பகுதி நேர வேலை செய்தே படித்து வந்தாள், தன் சம்பளத்தின் ஒரு பகுதியை வீட்டில் கொடுத்து விடுவதால், பெரும்பாலும் பண பிரச்சனை எதுவுமின்றி வாழ்ந்து வந்தனர்.
திடீரென மாலதியின் திருமணம் நடந்த போது அவளது புகுந்த வீட்டாரின் செல்வ வளம் பற்றி தெரியாததால், மாலதிக்கு எதுவும் செய்யாமலே கட்டிய புடவையுடன் வீட்டை விட்டு அனுப்பி விட்டனர்.
இப்பொது தமக்கையுடன் எப்படி ஒட்டி கொள்ளாலாம் என் யோசித்த சுந்தரத்துக்கு, குழந்தையின் பேர் சூட்டு விழா ஒரு நல்ல வாய்ப்பாக பட்டது. அவன் நன்கு யோசித்து ஒரு திட்டம் தீட்டி செயல் படுத்தினான், அதன் விளைவோ நினைத்து பார்க்க முடியாத படி இருந்தது!
மிக சிறப்பாக பேர் சூட்டும் விழாவினை ஏற்பாடு செய்திருந்தனர் ஈஸ்வரன் சகோதரர்கள். விழாவின் முந்தய நாள் இரவில் சொந்த பந்தங்களை கவனித்து கொண்டிருந்த பார்வதி, வேலை மிகுதியாலும் மாலதி பச்சை உடம்பு என்பதாலும், சற்றே கவன குறைவாக இருந்த மாலை நேரம் பிள்ளைகளுடன் ஊர் மைதானத்தில் விளையாடி கொண்டிருந்த பாஸ்கர் காணாமல் போனான்.
No comments:
Post a Comment