இராணி வேலு நாச்சியார் பதினெட்டாம் நூற்றாண்டில் தமிழ்நாட்டின் சிவகங்கைப் பகுதியின் ராணி, அவர் பிரிட்டிஷியக் கிழக்கிந்தியக் கம்பனிக்கு எதிராக ஆயுதம் ஏந்திப் போராடிய பெண் விடுதலைப் போராட்டத் தலைவி. இவரே இந்தியாவின் முதல் பெண் விடுதலைப் போராட்ட வீராங்கனை ஆவார்.
உலகில் மிகப்பழமையான பாதுகாப்பு இனமாகவும் சேதுபாலம் ராமலிங்கத்தின் பாதுகாவலர்களான சேதுபதி வம்சத்தில் 1730ஆம் ஆண்டு, உதித்தவர் தான் வேலு நாச்சியார். இளம் வயதிலேயே குதிரையேற்றம், வாள் வீச்சு, களரி உள்ளிட்ட போர்க்கலைகளை கற்று யாருக்கும் அஞ்சாத நெஞ்சுரத்தோடு திகழ்ந்தார்.
ராமநாதபுரத்தின் இளவரசியான அவர் மகாபாரதம், ராமயணம், இலக்கியங்களை சிறு வயதிலேயே கற்றுத்தேர்ந்தார். தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி, உருது, அரபி, பிரஞ்ச், இங்கிலிஷ், ஜெர்மன் என பத்து மொழிகள் பேசக்கற்றவர். 1746ல் சிவகங்கை இளைய மன்னர் முத்து வடுகநாதரை மணந்து பட்டத்து ராணியானார் வேலு நாச்சியார்.
வேலு நாச்சியார் வாள் சண்டை, வில்வித்தை, யானையேற்றம், குதிரையேற்றம், வளைதடி ஆகியவற்றில் சிறந்தவர். போர்வாளை தன் கைகளால் இரண்டாக உடைக்கும் வலிமைப் பெற்றவர். நமது வளரி கலையை பற்றி நன்கு அறிந்திருந்த ஜெனரல், வேலு நாச்சியாரின் கணவரான முத்து வடுகநாத தேவரை அழிக்க குறுக்கு வழியில் வந்தான். முத்து வடுகநாதர் ஒரு வீரர் மட்டுமல்ல, சிறந்த சிவ பக்தர். இவர் சிவ ஆலயங்களுக்கு செல்லும் போது ஆயுதம் இன்றி தான் செல்வார்.
காளையார் கோவிலுக்கு ஆயுதமின்றி சென்ற ராணியின் இளவரசியையும் கணவரையும் கொல்ல படையை அனுப்பினர். நவாப் படையினர் கண்டந்துண்டமாக வெட்டி மன்னரையும் இளவரசியையும் படுகொலை செய்தனர். ஆங்கில படைத்தளபதிகள் ஸ்மித், பாஞ்சோர், ஆகியோரால் கணவர் முத்து வடுகநாதர் கொல்லப்பட்டதை அறிந்து ஆங்கிலேய ஆதிக்கத்தை முடிவுக்கு கொண்டு வருவேன் என வேலுநாச்சியார் சூளுரைத்தார்.
ராணியையும், வெள்ளச்சி நாச்சியாரையும் திண்டுக்கல் கோபால நாயக்கர் கோட்டைக்கு மருது சகோதரர்கள் பாதுகாப்போடு கொண்டு சென்றனர். மருது சகோதரர்கள் முத்து வடுகநாதர் படையில் முக்கிய தளபதிகள். இதில் பெரிய மருது, மிகவும் கோபக்காரர். அவர் பற்றி சொல்ல வேண்டும் என்றால், தன்னை நோக்கி வரும் வேங்கையை ஒரே அடியில் சாய்க்கும் அளவுக்கு பலசாலி. சின்ன மருதுக்கு திட்டம் தீட்டுதல் கைவந்த கலை, அவர் ஒருவரை சமாதானம் பேச அழைக்கிறார் என்றால் எதிராளிக்கு கொலை நடுங்கும். அந்த அளவுக்கு திட்டமிடுதலில் புத்திசாலி. ஆங்கிலேயர்களுக்கு எதிராக குறுநில மன்னர்களை இவர்கள் அனைவரும் ஒருங்கிணைத்தனர்.
விஜயதசமி அன்று சிவகங்கை அரண்மனைக்குள்ளே இருக்கும் ராஜராஜேஸ்வரி தெய்வத்தை கூட்டம், கூட்டமாக பெண்கள் சென்று வழிபடுவது வழக்கம். வெளியே ஆங்கிலேயர் படை காவல் காத்துக் கொண்டிருக்கும். வேலுநாச்சியாரும், அவரோடு இருந்த பெண்கள் படையும், ஆயுதங்களை ஆடைக்குள் மறைத்துக் கொண்டு கூட்டத்தோடு கூட்டமாக அரண்மனைக்குள் உள்ளே இருந்த கோவிலுக்குள் சென்று திடீர் தாக்குதல் நடத்தியது.
இரானி வேலு நாச்சியார் ஜெயிக்க அவருடைய வீரம் மட்டுமல்ல, விவேகம், தன் படை அதிலும், தற்கொலை படை இதையெல்லாம் வைத்திருந்தார். அடுத்தடுத்து வந்த போரிலும் ராணியார் பெண் படையுடன் தன் மகா பலத்தை காட்டினார். தேசப்பற்று மிக்க குயிலி என்ற பெண் உடலில் தீ மூட்டி கம்பனியின் ஆயுதக்கிடங்கில் புகுந்து சர்வநாசம் செய்து இறந்தார்.
ஹைதர் அலி அளித்த காலாட்படை, குதிரைப்படைகள் மூலம் ஏழு ஆண்டுகளுக்கு பின்பு சிவகங்கை சீமையை வெற்றிக்கரமாக மீட்ட வீரமங்கை வேலுநாச்சியார், 1780-ம் ஆண்டு ராணியாக முடிசூட்டப்பட்டார். சிவகங்கை கோட்டை மீது பறந்த ஆங்கிலேயரின் கொடி இறக்கப்பட்டது. வேலு நாச்சியாரின் அனுமன் கொடி ஏற்றப்பட்டது.
அவரது சபதம் நிறைவேறியதும் வேலு நாச்சியார் சிவகங்கையின் அரசியானார். அவருடைய காலம் வீரத்தின் காலமாக இருந்தது. 1780 முதல் 1789 வரை நல்லாட்சி புரிந்த அவர், 1796-ம் ஆண்டு தனது அறுபத்தாறாவது வயதில் இறந்தார், வேலு நாச்சியார். அவரது வாழ்க்கை தமிழ் மண்ணின் வீரத்துக்கு அழியா சாட்சி....
No comments:
Post a Comment