This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License. Readers dont try to copy the content here.

Wednesday, 19 December 2018

Bhuvana's இளம் தென்றல் 6

    

சூரியன் வரும் முன்பே நிலா ஓடி ஒளிந்து மறைந்து கொள்ளும்,


நிலா வரும் முன்பே சூரியன் ஓடிப்போய் மறைந்து கொள்ளும், 


ஆனால் அது இரண்டுமே எப்போதும் அழியாது என்ற நிதர்சனம் அவைகளுக்கு விளங்குவதே இல்லை. அது போல் தான் வருண் வருணியின் நிலை இருந்தது.


   வருணை, பணியாள் இரவு நேர உணவுக்காக அழைத்து விட்டு சென்றான்.  வருண் மாடி இறங்கி கொண்டு இருந்த வேளையில், கீழிருந்த அறையில் இருந்து அப்பாவின் குரல் கோபமாக ஒலித்துக் கொண்டு இருந்தது.  என்னதான் என்று தெரிந்து கொள்வதற்காக வருண் சிறிது நேரம் அப்படியே நின்றான். 


     "என்னய்யா பண்றிங்க ,இவ்வளவு நாளா,  உங்களை எல்லா நம்பி தானே  இந்த பள்ளி பொறுப்பை விட்டுட்டு போனேன், அரசாங்காத்தில் இருந்து நோட்டீஸ் விடுர வரைக்கும், நீங்கலாம் அவ்வளவு கவனம் குறைவா இருந்திருக்கிங்க. சொல்லு பாண்டியா  என்ன பன்னலாம்? " என்று கோபமாக கேட்டுக் கொண்டு இருந்தார்.  


     (அட நான்  பாண்டியன் யாருன்னு உங்களுக்கு சொல்லல பாருங்க... பாண்டியன் சரளாவின் அக்கா பையன், சரளாவின்  உத்தரவின் பெயரில் அந்த வேலையை சந்திரசேகர் அவனுக்கு கொடுத்துள்ளார். கேள்வி கேட்க ஆளில்லை என்ற தைரியத்தில் பாண்டியன் சில, பல பொய் கணக்கு எழுதுவது, வந்த பணத்தில் அளவில்லாமல் செலவு செய்வது என்று தறிகெட்டு திரிந்து கொண்டு இருந்தான். அனைத்து வகையான கெட்ட பழக்கமும் உண்டு அவனுக்கு. இந்த சின்ன விஷயத்திற்காக குடும்ப ஒற்றுமையை குலைக்க விரும்பாமல் அது அனைத்தையும் கண்டும், காணாததுமாய்  சந்திரசேகர் பார்த்து வந்தார். ஆனால் கல்வி துறையில் இருந்து பள்ளியை  ஆய்வு செய்ய ஆள் வரும் பொழுது அங்கு  பாண்டியன் இல்லாததாலும்,  பள்ளியில் சில அடிப்படை வசதிகள் சரியாக இல்லாததாலும் பள்ளிக்கு நோட்டீஸ் விட்டு விட்டார்கள். இதையும் சந்திரசேகரிடம்  இருந்து மறைந்து விட்டான் பாண்டியன்.)


    இந்த விஷயத்திற்காக தான் தற்போது அவனிடம் கோபமாக கேள்வி கேட்டு கொண்டு இருந்தார். பிறகு சிறிது நேரத்தில் பாண்டியனை அனுப்பி விட்டு, தனது பி. ஏ சங்கரிடம் ஏதேதோ பேசி கொண்டிருந்தார். 


    "என்ன பண்றதுனே தெரியலை சங்கர்... இப்போதைக்கி சென்னையிலும் நான் இருந்தே ஆகவேண்டிய வேண்டிய சூழ்நிலை இருக்கு, இங்க என் அப்பா வழி வந்த இந்த பள்ளியும் அதே அளவு எனக்கு ரொம்ப முக்கியம். பாரம்பரியமா செய்ற சேவையில என்னோட குடும்ப கௌரவமே அடங்கி இருக்கு, கண்டிப்பாக என்னாலே இத இப்படியே விட்டுட்டு வர முடியாது. இக்கட்டான சூழ்நிலையில் மாட்டுகிட்டேனே..." என்று கூறினார். 


    இதை காதில் வாங்கிக் கொண்ட வருணுக்கு ஒரு ஐடியா வந்தது "எப்படியும் அந்த பெண்ணைக் தேட சிறிது நாள் ஆகும். இந்த பள்ளி பிரச்சனை முடியவும் நாள் ஆகும்.  ஏன்  இதை யூஸ் பண்ண கூடாது". 


    சிறிது நேரத்தில்  அனைவரும் சாப்பிட வந்தனர். சரளாவிற்கு பள்ளி விஷயம் அனைத்தும் தெரியும், இருந்தும் சம்பந்தப்பட்டிருப்பது  தன்னுடைய  உறவு  என்பதனால் மௌனமாக இருந்தார்.  


   வருணே முதலில் பேச்சை துவக்கினான் 

"அப்பா இங்க இருக்கிற நம்ம ஸ்கூல நான் பார்த்துக்கலாமா? "என்றான். 


     அவனது கேள்வியால் சந்திரசேகருக்கு என்ன சொல்வதென்றே புரியவில்லை,  ஒரு நிமிடம் அமைதியானார். 


    "பரவாயில்லை என் பையனுக்கும் பொறுப்பு எல்லாம் வருது போல..." என்று மனதில் மகிழ்ச்சி கொண்டார்.  


   இருந்துமே எதையும் வெளியில் காட்டி கொள்ளாமல் "காலையில சொல்றேன்"  என்று கூறி சென்றார். 


   காலை விடியலுக்காக  காத்து கொண்டு இருந்தான் வருண், அதே சமயம் சந்திரசேகரும் ஒரு முடிவு எடுத்திருந்தார்.  காலையில் அப்பா அழைப்பதாக வேலையாள்  வருணை கூப்பிட்டான்.  அங்கு ஹலில் அப்பாவும்,  அம்மாவும்  காபி அருந்தி கொண்டு இருந்தார்கள்.  


    வருண்  வந்ததும். "வருண் நீ நேத்து கேட்டத பத்தி அம்மாவும் நானும் பேசினாம்.  பரவா இல்லை...  பொறுப்ப  பேசுற... ஆனால் ஸ்கூல் இப்ப இருக்குற நிலமை உனக்கு தெரியுமா? " என்று வினாவினார். 


    "தெரியும்ப்பா... நேத்து பாண்டியன் கிட்ட நீங்க பேசுனத நான் தற்செயலா கேக்குற மாதிரி ஆயிடுச்சு. அதுவும் இல்லாம, நல்லா நடந்துட்டு இருக்குற ஒரு நிர்வாகத்தை எடுத்து நடத்துறத விட இப்படி இருக்குறத எடுத்து திறமையா நடத்துனா தானே  எனக்கும்,  உங்களுக்கும் பெருமை அதனால்தான்". என்று நம்பிக்கையாய் கூறினான். 


   சந்திரசேகர், "சரி, உனக்கு துணையா அங்கு வேலை செய்யுற பாலநாதனை அமர்த்தலாம், அவர் நமக்கு பரம்பரை விசுவாசி, உனக்கு உண்மையாவும் உதவியாவும் இருப்பார், அவருட்ட கேட்டு ஸ்கூல் விசயங்களை தெரிஞ்சுக்க."


   மறு நாள் மாலையில் நல்ல நேரம் பார்த்து, அன்னை தந்தையின் ஆசியுடன் வருண் பள்ளி பொறுப்பை ஏற்றான். பள்ளியில் பணி புரியும் அனைத்து ஆசிரியர்களுக்கும், அன்று மாலையில் மீட்டிங் இருப்பதாய் தகவல் தெரிவிக்க பட்டது. 


   பள்ளி முடிந்து மாலை மீட்டிங் ஹாலுக்கு சென்ற வருணிக்கு அதிர்ச்சியாய் இருந்தது, அங்கு கண்ட காட்சி. ஏனென்றல் மேடையில் நடுநாயகமாய் அதிகார தோரணையில் வீற்றிருந்தான் வருண்.  


    மேடையில் வருண்,  சந்திரசேகர், பாண்டியன், பால நாதன் என்று அனைவரும் இருந்தனர்.  அனைத்து ஆசிரியர்களும் வந்த பிறகு கடைசி வரிசையில் தன்னைப் பாதி மறைந்து கொண்டு அமர்ந்தாள் வருணி. 


    சந்திரசேகர் எழுந்து பேச ஆரம்பித்தார். "அன்பார்ந்த  ஆசிரியர்  பெருமக்களே! இன்று முதல் நம் பள்ளி பொறுப்பை என் மகன் வருண் என்பான், அவனுக்கு துணையாய் நமது பால நாதன் மற்றும் பாண்டியன்  இருப்பார்கள். இது ஒரு அவசர முடிவு, எப்போதும் போல் ஹெச்.எம் பாண்டியன் தான், ஆனால் இறுதி முடிவுகள் அனைத்தும் வருண் எடுப்பார். இப்போது வருண் தன்னை தானே அறிமுகம் செய்வார்" என்று கூறி சென்றார். 


    வருண், "எல்லாருக்கும் வணக்கம். நான் எம்.பி.ஏ மற்றும் எம்.பில் முடித்து இருக்கிறேன். இந்த நிர்வாகத்துக்கு நான் புதிது. இதுவரைக்கும் இந்த பள்ளியின் மற்ற ஆசிரியர்களுக்கு எப்படி தங்கள் ஒத்துழைப்பை தந்தீர்களோ அதே போல எனக்கும் தருவீர்கள் என்று நான் நம்புகிறேன், நன்றி" என்று முடித்தான்.  


    சங்கர், "அனைவருக்கும் இந்த புதிய செய்தியை கூறவே இந்த அவசர மிட்டிங் வைத்தோம். இப்போது இந்த மகிழ்ச்சியை கொண்டாடும் விதமாக, நிர்வாகத்தின் சார்பில் சிறிய பார்ட்டி ஒன்றினை ஏற்பாடு செய்து இருக்கிறோம். அனைவரும் மறக்காமல் கலந்து கொள்ளும்படி கேட்டு கொள்கிறோம்" என்று கூறினார். 


     இது அங்கு வேலை செய்யும் அனைவருக்கும் மகிழ்ச்சியாய் இருக்க, இருவருக்கு மட்டும் அது அதிர்ச்சியாய் இருந்தது. 


    ஒன்று பாண்டியன், அவன்தான் இது நாள் வரை பள்ளி கணக்கு வழக்குகளை சுதந்திரமாய் கவனித்து வந்தான். ஆனால் இனிமேல் அப்படி இருக்க முடியாது, அனைத்துக்கும் அதிகார வாரிசான வருண் வந்துவிட்டான்.


    பாண்டியன் நினைத்து பார்க்க வில்லை, வருண் வருவான் என்று. தனது சித்தப்பா ஏதாவது கேட்பார், அவரையும் சித்தியே பார்த்துபாங்க என்று தைரியமாய் நினைத்திருந்தான். 


   அடுத்தது வருணி, "திருவிழாவிற்கு வந்தவன் இன்றோ நாளையோ இங்கிருந்து சென்று விடுவான், என்று பார்த்தால் இப்படி வந்து அழிச்சாட்டியமாமய் உட்கார்ந்து  விட்டான்" என அதிர்ச்சியில் உறைந்து விட்டாள்.  


   சிறிது நேரத்தில் சுய நினைவுக்கு வந்தவள், முதலில் இங்கிருந்து தப்பி சென்று விட வேண்டும் என்று சுற்றும், முற்றும் தன் அப்பாவை தேடினாள்.  ஆனால் அவர்  சந்திரசேகர் மற்றும் வருணுடன் ஏதோ மும்மரமாய் பேசி கொண்டு இருத்தார். தூரத்தில் இருந்து அதை பார்த்து கொண்டு இருந்தவள், பக்கத்தில் இருந்த தன் தோழி லாதவிடம், தன் அப்பாவை  தான் அழைப்பதாக  கூறும் படி சொல்ல சொன்னாள். 


    லதாவும், வருணியுடன் பணிபுரியும் ஒரு ஆசிரியை.  


  அப்போது தான் பாலநாதனுக்கு  நியாபகம் வந்தது வருணியும் இங்கே இருக்கிறாள், தானும் அவளும் சேர்ந்து ஒன்றாகத்தான் வீடு செல்ல வேண்டும் என்று. 


    அதே நேரம் சந்திரசேகர், "ஆமா பாலா, எங்கே உங்க பொண்ணு? நான் பார்க்கவே இல்லையே... கூப்பிடுங்க, அவள சின்ன வயசுல் பார்த்தது, ரொம்ப மரியாதையான பொண்ணு..." என வருணிடமும் கூறினார். 


   பாலநாதன் சென்று வருணியிடம், "அம்மாடி வருணி, சந்திரசேகர் சார் உன்ன பாக்க கூப்பிட்டார்மா வா" என்று அவள் மறுத்தாலும் விடாமல் கை பிடித்து அழைத்து சென்றார்.  


    அதே சமயம் வருணும் அப்பாவின் கட்டளைக்கிணங்கி பாலநாதனை தேடி வர, அவரோ வருணியின் கையை பிடித்து அழைத்து கொண்டு வருண் முன்னால் வந்தார்.  


   வருணி வருணை பார்க்க, வருணும் அவளை பார்க்க, ஒரு கணம் அவர்களை சுற்றி இருந்த சூழல் அப்படியே உறைந்து நின்றது.

No comments:

Post a Comment

எழுத்தாளர்கள் கவனத்திற்கு

இந்த தளத்தினில் உங்களது படைப்புகளையும் இடம்பெறச் செய்ய விரும்பினால், rheamoorthy6@gmail.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் செய்யவும்.