முன்கதை சுருக்கம்
சீமா சிவா சிறு வயது முதல் நண்பர்கள். அடுத்த தெருவில் வசிக்கும் இவர்கள் வேலைக்கு கிளம்புகின்றனர். சீமா குடும்ப இன்ட்ரோ ஓவர் சிவாவின் குடும்பம் பற்றி .
சீமாவை அவள் அலுவலகத்தில் விட்டபிறகு சிவா அவனது அலுவலகத்திற்கு கிளம்பினான். அங்கே உள்ள பெண்களை சைட் அடித்துக் கொண்டே...
சிவாவின் அப்பா தனராஜனுக்கு பூர்வீகம் இராஜபாளையம் தான் என்பதாலும், அவருக்கு சொந்தமான பூர்வீக தொழிலான பர்னிச்சர் கடை இங்கு நடப்பதாலும், சிவா ஒரே மகன் என்பதால் இங்கேயே நிரந்தரமாக சிவா தங்கிவிட்டான்.
சிவாவின் அம்மா பார்வதிக்கு என தனியாக பியூட்டி பார்லர் உண்டு என்றாலும் அவர் அடிக்கடி அங்கு செல்ல நேரம் இல்லை என்பதால் வேலைக்கென ஒரு பெண்ணை வைத்துள்ளார். அவள் பெயர் திவ்யா. 12 வரை படித்துள்ள அவள் அதற்குமேல் படிக்க வசதி இல்லை என்பதால் இங்கு வந்து வேலை செய்து கொண்டு கரஸ்ஸில் பி.காம்(சிஏ) படிக்கிறாள். அவளது தோழிகள் அவளை திவி என அழைப்பர். சிவாவின் அம்மா அவளிடம் பாசமாக இருப்பார், அவ்வப்போது பண உதவி செய்வார். சம்பளம் வந்த உடன் திருப்பி தந்து விடுவாள் திவி.
பார்க்க அழகாக இருப்பாள் ஆனால் அழகு படுத்திகொள்ள மாட்டாள். அவளுக்கு அம்மா பாக்கியமும் தாய் மாமன் காசிராஜ் மட்டுமே உள்ளனர். அம்மாவும் மாமாவும் ஸ்பின்னிங் மில்லில் வேலை பார்க்கிறார்கள்.மாமா குடிகாரர் என்பதால் அதிகம் பேசமாட்டாள்.
நல்ல வேலையில் சேர்ந்து அம்மாவை நன்றாக பார்த்துக் கொள்ள வேண்டும் என ஆசைப்படுகிறாள். பார்வதி அவளுக்கு ஊக்கம் அளிக்கிறார். அவள்தான் அவருக்கு பின்னாலில் மருமகளாக வரப்போகிறாள் என தெரியாமல். திவி கொஞ்சம் புத்திசாலி என்பதால் பி.காம்(சிஏ) வீட்டிலேயே யார் உதவி இன்றி நன்றாக படிக்கிறாள்.
ஆபிஸ் சென்ற சீமா அவளது தோழி மகாதேவி இன்னும் வராததால் அவளது இடத்தில் சென்று அமர்ந்தாள். எப்போதும் சீமா வேகமாக வந்து விடுவாள். ஏனெனில் இவளை விட்டபிறகு சிவா ஆபிஸ் செல்ல வேண்டும் அல்லவா?அவன் சங்கரன்கோவிலில் வேலை செய்வதால் மாலை வர தாமதமாகும். ஆதலால் தினம் காலையில் இருவரும் சேர்ந்து செல்கின்றனர்.
சீமாவிற்கு அலுவலக நேரம் காலை 9 -- 5.30 என்பதால் பிரச்சனை இல்லை. சிவாவிற்கு 10 -- 7 எனவே அவன் வீட்டிற்கு வரவே 8.30 ஆகிவிடும். வாரவாரம் ஞாயிறன்று மதியம் இரண்டு பேரும் திருட்டு சிடியில் புதுப்படம் பார்க்கவென சிவா வீட்டை குப்பை ஆக்குவார்கள். காலையில் சீமா வீட்டில் சாப்பிட்டு விட்டு அவளது அப்பா அம்மாவிடம் ஆபிஸ் கதைபேசி விட்டு வருவர்.
இங்கு சிவா வீட்டில் பார்வதியையும் சேர்த்து கொண்டு படம் பார்ப்பர். சிவாவின் அப்பாவிற்கு மதியம் உண்டதும் உறங்கும் பழக்கம் இருப்பதால் இவர்கள் செய்யும் சேட்டைகள் சொல்லி முடியாதுப்பா எனக்கு. பார்வதி தான் ரொம்ப பாவம் இதுல.இவங்களுக்கு டீ ஸ்நாக்ஸ் குடுத்து டயர்ட் ஆகிறுவாங்க. இதுல எங்க படம் பார்க்க? தூங்கவும் விட மாட்டாங்க கேடி பசங்க... வேற ஒன்னும் இல்ல கிட்சன் நாஸ்தி ஆகிறும்ல அதான்.
என்னப்பா அறுக்குறேனா? ஹீரோ எங்கனு கேக்குறீங்க அப்டிதான? ஒடனே என்ட்ரி குடுத்தா சஸ்பென்ஸ் இருக்காதுல அதான். நெக்ஸ்ட் எபிசோட்ல முயற்சி பண்றேன் ஓகேவா? ஹீரோ நேம் மட்டும் சொல்லட்டா? சிபிராஜ் சக்ரவர்த்தி...
No comments:
Post a Comment