சிபியின் அப்பா விஜயனுக்கு போன் கால் வந்தது மாலை வீட்டில் இருந்த பொழுது. எடுத்து பேசியதும் மிக சந்தோஷப்பட்டாா்.
ஆனால் கடைசியில் "இல்ல கண்ணா தப்பா நினைக்காத, என்னால வர முடியாது" என்ற பிறகு
"நீ கண்டிப்பா வீட்டிற்கு வரணும் சாியா" என்று கூறி விட்டு ஜெயாவிடம் கொடுத்தாா்.
"யாருங்க? என் மருமகன் கண்ணன்டி."
"என்னது கண்ணாவா... எப்டிங்க இருக்கானாம்?"
"நீயே பேசு" என்றபடியே செல்லை குடுத்தாா்.
"எப்டி கண்ணா இருக்க? அண்ணா எப்டி இருக்கார்? என் பிரண்ட் எப்டி இருக்கா? கல்யாணம் ஆகிட்டா பொண்ணு பாத்துடாங்களா? சரி கண்ணா கண்டிப்பா நாங்க வராமயா நீ ஒண்ணும் கவலை படாத சிபி எதுக்கு இருக்கான்.அவன வச்சு கூப்ட்டு வந்துடுறேன். நீ அம்மா அப்பா கிட்ட சொல்லிறு முதல் நாளே வந்துறுவோம். சிபிக்கு பொண்ணு பாக்குறோம் அமையல... மாலினிக்கு கல்யாணம் ஆகி ஒரு பொண்ணு செம வாலு. அப்புறம் மாமாக்கு என்ன குறை? டை அடிச்சிகிட்டு யூத் மாதிாி இருக்காா். நீ என்ன இப்டி கேக்குற? என் பையன்னும் இருக்கானே? கல்யாணம் பண்ற எண்ணமே இல்லாம? சரி நீயாவது சீக்கிரமா கல்யாண சாப்பாடு போட்று. வச்சுறட்டா உடம்ப பாத்துக்கோ."

"என்னடி நினைச்சுகிட்டு இருக்க? யார கேட்டு வா்றதா சொன்ன?"
"உடனே ஜெயா யார கேக்கணும் என் மாமனாா் மாமியார பாா்க்க? நானும் என் பையனும் போறோம். நீங்க வந்தா வாங்க வரலைன்னா உங்க ஆபிசை கட்டிட்டு அழுங்க. நான் போய் துணியெல்லாம் எடுத்து வச்சு கெளம்ப வேணாமா? சிபிய வர சொல்லணும் தள்ளுங்க அந்த பக்கம் எப்ப பாரு நடு வீட்ல நின்னுகிட்டு."
சீமா வீட்டில் சிவா அம்மா வந்து எல்லோரையும் முறைப்படி அழைத்தாா்.
"இல்லக்கா நான் இல்லைனா சாப்பாடுக்கு கஷ்டபடுவாறு. ஹோட்டல் ல சாப்டா சேராது அதான்."
"அப்போ சிமிய கூப்டு போறேன் தேவி்."
"இல்ல வயசு பொண்ண எப்டி அனுப்புறது?"
"அதெல்லாம் நா நல்லா பாத்துப்பேன் நீங்க கவலபட வேணாம் என் பொண்ணு மாதிாி இவ. நீ போய் துணிலாம் பேக் பண்ணுடாம்மா" என்றதும் வேகமாக ஓடினாள்.
"அவளுக்கு இன்னும் பொறுப்பு வரலக்கா, நீங்க தான் சொல்லி குடுங்க கல்யாண வயசாகிறுச்சு."
"ஏன் இவ்ளோ வருத்தபடுற கல்யாணம் ஆயிட்டா தானா பொறுப்பு வந்துறும் தேவி."

"சாி அப்போ நா கெளம்புறேன் தேவி"
"இருங்கக்கா.. இந்தாங்க மைசூர் பாக் சிவாக்கு, ரொம்ப பிடிக்கும் னு பண்ணேன் குடுக்க மறந்துட்டேன்.
திவி வீட்டில் தனியாக புலம்பி கொண்டாள். "அச்சச்சோ மேடம் பையன்னு தொியாம வெளிய போன்னு மாியாத இல்லாம சொல்லிட்டோமே என்ன பண்றது? இப்போ வேலை போய்றுமோ!!! சே சே மேடம் ரொம்ப நல்லவங்க அப்டி பண்ண மாட்டாங்க. ஆனா அவர் ரொம்ப அழகா இருக்காா்ல... சீ கழுத அவர் எங்க நீ எங்க?" என தனியாக பேசிக் கொண்டாள்.
இதை பாா்த்த அவளின் அம்மா பாக்கியம் "என்ன டி பகல் கனவா? அந்த அளவுக்கு உன் அப்பன் இங்க சொத்து சேத்து வைக்கல... போய் அடுப்புல இருக்குறத பாரு, விளக்கமாறு பிய்ய போகுது. எந்தி முதல்ல போடிங்கறேன்... என்ன மொறப்பு?" என எந்திாிக்கவும் திவி ஓடிவிட்டாள்.

சிவாவும் வீட்டு மொட்டை மாடியில் படுத்துக் கொண்டு அவளை பற்றி தான் நினைத்து கொண்டு உள்ளான்.
"அவ முகத்துல மேக்கப் இல்ல ஆனாலும் அழகா இருக்கா... சேலை கட்னாலே அழகுதான் பொண்ணுங்க. சிமியும் இருக்காளே.. எப்ப பாரு லெக்கின்ஸ் ஜீன்ஸ் ஸ்கா்ட் தான். என்ன இருந்தாலும் நம்ம பொண்ணுங்க ஜிமிக்கி போட்டா அது தனி அழகுதான்."
சேலை கட்டும் பெண்ணுக்கொரு வாசம்
உண்டு கண்டதுண்டா கண்டவா்கள்
சொன்னதுன்டா ?
என பாடிக்கொண்டே
சாப்பிட சென்றான்.
பிரண்ட்ஸ் அவ்ளோ தான் இன்னைக்கு எழுத முடிஞ்சது. நீங்க படிச்சுட்டு கரெக்சன் இருந்தா சொல்லுங்க.
No comments:
Post a Comment