மசக்கை உணரவில்லை மணிவயிற்றில் தாங்கவில்லை
அன்னமென வந்து என்னை அன்னையென அழைத்தவளே
சிட்டுகுருவியென குட்டி குட்டிகுறும்பு செய்து
சிந்தை மகிழவைத்தாய் கட்டிகரும்பே கைமாறு செய்திடவே
காலம் கனிந்திட காத்திருப்பேன் கண்மணியே
Click here to get all parts |
புதிய வீட்டுக்கு வந்தபின் தொழிலில் இருந்து ஜானகி விலகி கொண்டார் வீட்டிலும் பொறுப்புக்களை லக்ஷ்மியிடம் கொடுத்துவிட்டார் குழந்தைகளை வளர்ப்பதிலேயே கவனம் செலுத்தினார். ஜானகி தெய்வமாகி விட்டபின் குடும்ப பொறுப்புக்களை லக்ஷ்மியும் குழந்தைகளின் பொறுப்பை ராதாவும் தொழில் பொறுப்புக்களில் ஆண்களுடன் உதவியாக கௌசல்யாவும் இருந்தனர்.
தொடர்ந்து பருவமழை பொய்த்ததாலும் விவசாய இடுபொருட்களின் விலை ஏற்றத்தாலும் ஏற்பட்ட நஷ்டத்தை ஈடுகட்ட வீட்டு பெண்களின் நகையையும் நிலங்களையும் வங்கியில் அடமானம் வைத்தார் பாஸ்கர். எதிர்பாராவிதமாக திருப்ப முடியாது போய் விட ஷேஷகிரியிடம் உதவிகோரினார்
தமையனின் நிலைக்கு வருந்தி அழுத கண்களுடன் லக்ஷ்மி நிற்க ஷேஷகிரி அனைவரிடமும் தயங்கி தயங்கி ஆலோசனை கேட்க யோசித்து முடிவெடுக்கலாமென முடிவு செய்யப்பட்டது.
அடமானம் வைக்கப்பட்டிருந்தது ஆனந்த் வேலை செய்யும் வங்கி என்பதால் தன்னால் ஆனவற்றை செய்ய நினைத்த ஆனந்த் வங்கிக்கு சென்ற போது தன் சேமிப்பிலிருந்தும் தன் அண்ணன் விஸ்வநாதனின் உதவியுடன் பாஸ்கரின் கடன் களை கட்டிமீட்க வந்திருந்தாள் கௌசல்யா.
அனைவரும் குடும்பத்துடன் பாஸ்கரின் வீட்டுக்கு சென்று நகைகளையும் நில பத்திரங்களையும் ஒப்படைத்தனர் நா தழுதழுக்க நன்றி சொல்ல பாஸ்கர் முனைந்த போது குறுக்கிட்ட கௌசல்யாவும் ஆனந்தும் என்ன அண்ணா நீங்க லக்ஷ்மி மட்டும் இல்லேனா என்னை யாரும் இப்போ உயிரோட பாத்திருக்க முடியாது அதே மாதிரி கௌசல்யாவோட பிரசவமும் நல்லா நடந்திருக்காது எங்களுக்கு லக்ஷ்மி செஞ்சதவிடவா நாங்க செஞ்சிருக்கோம்.
இதையெல்லாம் போய் பெருசா பேசிக்கிட்டு இருக்காதீங்க லக்ஷ்மியோட அண்ணன் எங்களுக்கும் அண்ணன் தான் முதல்ல கண்ணை துடைச்சுகிட்டு வேற வேலை இருந்தா பாருங்க என்றனர்.
இப்படி ஒருத்தருக்கு ஒருத்தர் கை கொடுத்து தூக்கி விட்டுதான் இந்த தொழில் சாம்ராஜியம் வளர்ந்தது. இன்னைக்கு நாம இவளோ நல்லபடியா இருக்கோமின்னா லக்ஷ்மியோட தியாகமும் கௌசல்யாவோட அனுசரணையும் ஆனந்தோட புரிதலும்தான் காரணம்.
ஏன்னா நான் ரங்கநாதன் ராதா மூணு பேரும் ஒண்ணா பிறந்தவங்க நாங்க ஒத்துமையா இருக்குறது பெரிய விஷயம் இல்ல ஆனா வேற வேற இடத்திலேர்ந்து இந்த வீட்டுக்கு வாழ வந்த மருமகள்களாகட்டும் அவங்க கூட பிறந்தவங்களும் தாங்கி நின்னுதான் இந்த குடும்பம் வளந்திருக்கு இதோ இது வரைக்கும் சரயூ தத்தெடுத்த பொண்ணுங்கறது அவளுக்கு தெரியாது அவளுக்கு தான் இந்த வீட்டுக்கு வர காரணம் பாஸ்கர்னும் தெரியாது.
ஏம்பா ஸ்ரீருத்ரா அவ எதோ தெரியாம பேசுனதுக்காக சட்டுனு அவ மேல கோபபட்டியே இந்த மாதிரி சின்ன சின்ன விஷயத்துக்கெல்லாம் நாங்களும் கோபபட்டிருந்தா இந்த சந்தோஷம் நமக்கு வாழ்க்கையில கிடைச்சிருக்குமா? இல்ல இத்தனை கஷ்டத்தை தாண்டி வந்திருக்க தான் முடியுமா ?
இந்தோ இன்னமும் கொஞ்ச நாளுல கிருஷ்ணா -பூர்ணா கல்யாணம் முடிஞ்ச பின்னால தொழில உங்க கிட்ட ஒப்படைக்க போறோம் இனியும் நீங்க சின்ன பிள்ளைங்க கிடையாது. நாங்க காப்பத்தி வந்த இந்த ஒத்துமை எப்போதும் நீடிச்சு இருக்கணும் என ஷேஷகிரி சொல்ல கண்ணீர் நிறைந்த கண்களுடன் தலையாட்டின இளவல்கள் நாமும் அவர்களின் ஒற்றுமை நீடிக்க வாழ்த்தி விடை பெறுவோம் தோழியரே...
முற்றும்
No comments:
Post a Comment