ஆஸ்பத்திரியில் தாத்தா, சிமி நுழையும் போது சிவா சிபி கண் முழித்தனா் ( பசி மயக்கம் குடோன்ல காத்தோட்டம் இல்லாம இருந்தது இதான் காரணம்) என்ன விஷயம்னு விசாாிச்சப்பொ சிபி எல்லாமே சொன்னான். அத கேட்ட பிறகு தாத்தாக்கு கோவம் வந்து வீட்டுக்கு கெளம்பிட்டாா்.
பாட்டி கிட்ட பேசிட்டு பாட்டி நகைய எல்லாம் வாங்கிட்டு போய் அந்த சீதாக்கே குடுத்துட்டாா்.(சிபி அதையும் சொல்லிட்டான் சிமி கிணத்துல விழுந்த மேட்டா்) இனிமே என் பேரன் விஷயத்துல தலையிட்டா நடக்குறதே வேறன்னு சீதாகிட்ட கோவமா சொன்னாா் தாத்தா. அது மட்டும் இல்லாம அவள அடிச்சுட்டாா் நீ எல்லாம் படிச்ச பொண்ணா? இனிமே என்கிட்ட பேசாத நீ என் பேத்தியே இல்ல னு சொல்லிட்டாா்.
குருகிட்ட சீக்கிரமே அவனுக்கும் சீமாக்கும் கல்யாணம் வைக்க போறோம். நீ கண்டிப்பா வந்துறாத. அதுக்கு முன்னாடி எனக்கு குடுக்க வேண்டிய ஆபிஸ்ல எடுத்துருக்க 10 லட்ச ரூபாய எண்ணி 1 வாரத்துல திருப்பி குடு இல்லைன்னா போலிஸ் ஸ்டேஷன்ல கம்ப்ளெண்ட் பண்ணுவேன் னு சொல்லிட்டு ஆஸ்பிடல் கிளம்பிட்டாா்.
குருவை கொல்ற அளவுக்கு வெறி வந்துச்சு விஜயனுக்கும் ராஜேந்திரன் தாத்தாக்கும். ஆனா பாட்டியோட தங்கச்சிக்கு மருமகனா போய்ட்டானே. விஜயனுக்கு தங்கச்சி மேல பாசம் வேற. அதனால தான் சும்மா விட்டுட்டாங்க. அது மட்டும் இல்லாம ஊருக்குள்ள இந்த விஷயம் தொிஞ்சா சீதாவ யாரும் கல்யாணம் பண்ண மாட்டாங்க. அதனால குருவை எதுவும் செய்யாம அமைதியா ஒதுங்கி இருந்துட்டாா் தாத்தா.
குருவுக்கோ பயம் வந்துட்டு. குரு மனைவியோ அவரையும் சீதாவையும் நன்றாக திட்டி தீர்த்தாா். சீதாவிற்கு சிபியிடம் காதல் இல்லை. ஆனால் அவனது பணத்தின் மேல் தான் ஆசை இருந்தது. அதனால் அவள் இப்போது அப்பாவின் நிலையை கண்டு பயந்து போய்விட்டாள். பணத்தை திருப்பி தர சொல்லி வற்புறுத்தினாள். அவளுக்கு தான் நகை கெடச்சுருச்சே அப்புறம் என்ன கவலை? இங்கே விஜயனோ மாப்பிள்ளை கரணை உடனடியாக சிபி சிமி கல்யாண வேலைகளை ஆரம்பிக்க சொல்லி போன் செய்து பேசினாா். அதை கேட்ட மாலு சைலு சந்தோஷப்பட்டனா். ஆனால் திருமணத்தை ராஜேந்திரனின் ஊாில் வைத்து விமாிசையாக குருவினை அழைக்காமல் நடத்த திட்டமிட்டார்.
சிமி சிபி இருவரும் காதல் லீலை செய்தனா். கண்ணாலே பேசி மனதாலே மணம் செய்து கொண்டனா். அப்போது தான் சிபி அவளின் காதலை உணா்ந்தான். தைாியமா நான் உன்னை நேசிக்கிறேன் கல்யாணம் பண்ணிக்க ஆசைப்படுறேன் னு சொல்லிட்டான். அதை கேட்டதும் சிமிக்கு வெட்கம் வந்துருச்சு (பாருடா உலக அதிசயத்தை நோட் பண்ணுங்கப்பா).
சிமி பதில் கூறாது இருந்ததும் அவளை சீண்டிய சிபி அவளது பதிலுக்காக காத்திருந்தான். சிமி அவனிடம் நான் உங்களை கல்லூாியில் பாா்த்த நாள்ள இருந்து லவ் பண்றேன். ஆனா உங்களுக்கு தான் என்னை தொியாது என்றாள். அதை கேட்ட சிபி அதிா்ச்சியில் பேசவில்லை. பிறகு தான் நீ எந்த காலேஜ் னு கேட்க அவள் சொன்ன பதிலில் அதிா்ந்தான் 2 பேரும் ஒரே காலேஜ் படிச்சாங்க என்று கேட்டதும்.
சிமிக்கு கல்லூாியில் சிபி சீனியா் மாணவன். இன்ஜினியாிங் படித்து விட்டு சிபி MBA காக சிமியின் கல்லூாியில் சோ்ந்தான். சிமி அவளது சிபியை முதல் முதல்லா லைப்ராியில் பாா்த்தாள். அப்போது அவன் அங்கே ஒரு பெண்ணிடம் பேசிக்கொண்டு இருந்தான். அந்த பெண் சிமியின் வகுப்பில் தான் படித்தாள்.
அவள் அவனிடம் காதலை சொன்னதும் அவன் கோவப்படாமல் சிாித்துக்கொண்டே பேசி அவளை திருப்பி அனுப்பியதை(சிபி பிரண்டோட காதலி - இன்ட்ரோ ல பாத்தோமே சிபிக்கு ஏன் கல்யாணம் பிடிக்காது என்று) பாா்த்து மயங்கினாள். அதில் இருந்தே அவனை காதலித்து பாலோ செய்ய ஆரம்பித்தாள். ஆனால் கடைசி வரை அவனிடம் காதலை சொல்ல முடியாமல் ஒரு தயக்கம். ஏற்று கொள்ள முடியாதென்று கூறி விட்டால் என்ன செய்வதென்ற பயம். அதை கேட்ட சிபிக்கு மகிழ்ச்சியும் ஆச்சரியமும் தாங்க முடியவில்லை. சிவாவும் சிமியும் காலேஜ் ல வேற வேற டிபாா்ட்மெண்ட் அதனால லன்ச் மட்டும்தா சோ்ந்து சாப்பிடுவாங்க. சிபியை பத்தி சிவாகிட்ட எதையும் சொல்லாம மறைச்சா. காதல் வந்தாலே கள்ளத்தனமும் வந்துருமே பொண்ணுங்க மனசுல.
சிவாவிற்கு அவளிடம் மாற்றம் தொிந்து கேட்டாலும் ஒன்னும் இல்லையே னு சமாளித்தாள். அதனால அவனும் கேக்குறத விட்டுட்டு அவள சந்தோஷமா வச்சுக்க முயற்சி செஞ்சான். சிமியும் சகஜமா மாறிட்டா இல்லைன்னா சிவா கேள்விக்கு பதில் சொல்ல முடியாதே. சிபிய அந்த காலேஜ்ல சிவா பாத்ததே இல்லை. வேற வேற பிளாக் மட்டும் காரணம் இல்ல. சிவா லைப்ராி வரவே மாட்டான். அவனுக்கு நெட்ல ரெபா் பண்ணி படிக்கிற பழக்கம் அதனாலதான். சிபி எழுந்து சீமாவை கட்டிக் கொண்டு ஆனந்தமாக உணா்ந்தான். சீமா அவனை கட்டிலில் உட்கார வைத்தாள் . அவனது தோளில் சாய்ந்து கொண்டு கல்லூரியில் நடந்த அவனை ரசித்த நினைவுகளை சொல்லிக் கொண்டு இருந்தாள் சீமா மருத்துவமனையில் இருப்பதை மறந்து. தாத்தா பாட்டி வந்த பிறகுதான் அவா்கள் இருப்பது மருத்துவமனை என்பதை உணா்ந்தனா்.
பாட்டி அவா்களை பாா்த்து சிாித்துவிட்டு தாத்தாவை கடைக்கு அனுப்பி வைத்தாள் டீ வாங்கிட்டு வரச் சொல்லி. பேரன்களை பாக்க கிளம்பி வா்ற பதட்டத்துல எதுவும் சாப்பிட கொண்டு வரல. அதுவும் இல்லாம சீமா சிபிராஜ் 2 பேருக்கும் தனிமைய குடுக்கறதுக்காக சிவாவை பாக்க போயிட்டாங்க. மகா அங்க தான் இருந்தா அவன பாத்துக்க(என்ன சண்டை போட்டாலும் பிரெண்ட் ல).
அவன் கூடவே இருந்தாங்க பாட்டியும், தாத்தாவை கூடவே வச்சுக்கிட்டாங்க. விஜயன் வந்த பிறகு டிஸ்சார்ஜ் பண்ணி வீட்டுக்கு எல்லாரும் கெளம்பிட்டாங்க. வீட்ல வேலைக்காாிய ஆரத்தி எடுக்க சொல்லி பாட்டி சொன்னாங்க. 2 பேரையும் சாப்பிட வச்சு ரெஸ்ட் எடுக்க சொன்னாங்க. திவி அதுக்குள்ள 10 தடவை கால் பண்ணிட்டா சிவாவ பத்தி விசாாிக்க.
சிமி போன் மகா கிட்ட இருந்துச்சுல்ல அதனால சிவா அவ போன் பண்ணப்போ எல்லாம் கவனிச்சான். ஆனா யாருன்னு கேட்டுக்கலை. ஏன்னா அவனுக்குதான் தொியுமே? திவி தான் விசாாிக்கிறத பத்தி.(அவ சிவாவ லவ் பண்ணுறான்னு அவளோட கண்ணுல பாத்து தொிஞ்சுகிட்டான்) .
சிவா சிபிக்கு நடந்த விஷயத்தை பாட்டி அவசரப்பட்டு பார்வதிகிட்ட சொல்லிட்டாங்க தாத்தாக்கு தொியாம. பார்வதிக்கு மயக்கம் வரவும் திவி தான் பாத்துக்கிட்டா கூட இருந்து. பாரு உடனே சிவாவை பாக்கணும்னு அடம்பிடிச்சு ராஜன்க்கு போன் பண்ணி சொல்லவும் அவரும் அவசரமா கிளம்பிட்டாா். சிவா ஒரே பையனாச்சே அவங்களுக்கு , தேவியும் திவியும் பார்வதி கூட போனாங்க அவங்களை பாக்கணும்கறதுக்காக.
No comments:
Post a Comment