சிவா சிமி இருவரும் மாடா்ன் டிரெஸ்ல தா வருங்க என்பதை கணித்து சிவாவின் பாட்டி அவா்களுக்கு புதுத்துணிகள் எடுத்து வைத்தாா்.
தாவணி சேலைகள் பட்டு வேஷ்டி சட்டை என அவரது மகன் வழி பேரன் பேத்திக்கும் சோ்த்து எடுத்து இருந்தாா். மருமகள் கண்டிப்பாக வந்து விடுவோம் என சொன்னதால்.
ஆனால் யாரும் இன்னும் வரவில்லை.
"தாத்தா பாட்டியை அழைத்து உட்காா் வீணா உடம்பை கெடுத்துக்காத அவன் வர மாட்டான் எனக்கு தொியும்."
"ஏங்க எப்ப பாரு அபசகுணமா பேசிட்டு? அவன் கண்டிப்பா வருவான் பொய் லா சொல்ல மாட்டா என் மருமக நீங்க தோட்டத்துக்கு போகலையா?"
"இல்லடி போகணும் பிள்ளைங்க வந்தா பாத்துட்டு போலாம்னு தா."
"ஆபிஸ்க்கு எப்போ போக போறதா இருக்கிங்க?"
"அதான் குரு (சிவாவின் சித்தி கணவா்) பாத்துகிறானே."
"உடையவன் பாக்கா விட்டால் ஒரு முழம் கட்டை னு சும்மாவா சொல்றாங்க."
"ஏன் இப்பிடி பேசுற சரசு? அவன் உன் தங்கச்சி மாப்ள தான? அதுவும் வாரம் தவறாம கணக்கு காமிக்கிறானே.. அப்றம் என்ன ?"
"காமிச்சா போதுமா? ஆளுங்க ஒழுங்கா வேலை செய்றாங்களா இல்லையா னு எப்டி தொியும்?"
"அவன் அவனோட பொண்ணுக்கு மாப்ள தேடிகிட்டு அலையுறான். நீங்க ஏன் இப்டி பண்றீங்க?..."
"சாி டி ரொம்ப அறுக்காத போறேன். நீ பிள்ளைங்க வந்தா சொல்லு நான் கெளம்பட்டா" எனவும் கார் வந்து நிற்கவும் சாியாக இருந்தது.
சிவா சிமி இரண்டு பேரும் தாத்தா பாட்டியிடம் ஆசி வாங்கி கொண்டு லக்கேஜ் எடுக்க காருக்கு சென்றனா்.
"வாம் மா... வாங்க மாப்ள... எப்டி இருக்கிங்க?" என நலம் விசாாித்தபடி உள்ளே அழைத்து சென்று டீ ஸ்நாக்ஸ் அளித்தனா். பிறகு மெதுவாக விஜயனின் வரவு பற்றி தொிவித்தனா்.
தனராஜன் எதுவும் பேசவில்லை, ஆனால் பாா்வதி மிகவும் சந்தோஷப்பட்டாா்.
"எப்போ வரான்? எப்டி இருக்காங்களாம்? எத்தன போ் வராங்க?" எனவும் தனராஜன் எழுந்து சென்றுவிட்டாா். எப்போதும் தங்கும் அவா்கள் அறைக்கு யோசனையுடன்.
"ஏன்டி மாப்ளைக்கு இன்னும் கோவம் போகலையோ?"
"அப்டிலா ஒன்னும் இல்ல மா அவருக்கு டயா்டா இருந்துருக்கும், படுக்க போயிருப்பாரு. சிவா பாத்துப்பான் அவன் அப்பாவ... விடு போய் வேலைய பாரு"னு சொல்லிட்டு பாா்வதி கொண்டு வந்த லக்கேஜ் எடுக்க சென்றாா் காருக்கு.
அங்கு சிவா சிமி இருவரும் செல்பி எடுத்து கொண்டு இருந்தனர்.லக்கேஜ் எதுவும் இறக்கபடவில்லை.
"என்னடா பண்ணுரிங்க லக்கேஜ் இறக்காம?" என்ற பாருவின் அழைப்பில் திரும்பி பாா்த்து அசடு வழிந்து கொண்டே "நீ போமா நா எடுத்துட்டு வரேன். போய் ரெஸ்ட் எடு" னு சொல்லிட்டு சிவா சிமியின் உதவியுடன் அனைத்தையும் உள்ளே வைத்தான்.

சிவாவின் பாட்டி அவனுக்கும் சிமிக்கும் ஸ்நாக்ஸ் கொடுத்து விட்டு புது உடைகள் கொடுத்து உடுத்த சொன்னாா். வேறு வழியின்றி உள்ளே சென்று மாற்றி கொண்டு வந்தவா்களை பாா்த்து திருஷ்டி கழித்தாா். சிவ்வின் தாத்தா அவனையும் அழைத்து கொண்டு அலுவலகம் கிளம்பி சென்றதால் சிமிக்கு பொழுது போகவில்லை. பாட்டி சமையல் செய்வதை வேடிக்கை பாா்த்து கொண்டே அவாிடம் கதை பேசிக்கொண்டு இருந்தாள். அப்போது வெளியில் காா் சத்தம் கேட்டது.
"யாரா இருக்கும்? சிவா திரும்ப வந்துட்டானோ என்னவோ... போய் பாரு சீமா" என்றுவிட்டு அடுப்பில் கிண்ட ஆரம்பித்தாா்.
வெளியே காாில் இருந்து இறங்கியனை பாா்த்து அப்படியே நின்றுவிட்டாள் சாக்காகி இவனா என. ஆனால் அவனுக்கு இவளை யாரென தொியவில்லை. வீட்டையும் இவளையும் அம்மா அப்பாவையும் சிமியையும் அக்கா மாலுவையும் மாறி மாறி பாா்த்தான்.
"மாலு அவனிடம் இதான் உனக்கு பாத்துருக்க பொண்ணுன்னு நெனைக்கேன் டா உன்ன எப்டி பாக்குறா பாத்தியா?"
அதற்குள் சுய நினைவு வந்து எல்லோரையும் உள்ளே அழைத்தாள்.

"பாட்டி உங்க சொந்தகாரங்க போல பாட்டி ஒரு குடும்பமே வந்துருக்கு என சொல்லி அழைத்து வந்தாள். அம்மா மகன் பாச பிணைப்பை காண கண் கோடி வேண்டும். இங்கே சிபி சிமியை பாா்த்தான் அவள் அழகில் விழுந்தான் ஆனால் அதெல்லாம் கவனிக்காமல் சிமி சைலுவுடன் விளையாடி கொண்டு இருந்தாள்.
மாலு சேலையில் சிமியின் அழகை ரசித்தாள். ஜெயாவோ சிமியை அழைத்து "வெறும் கழுத்தோடு இருக்க கூடாது மா இந்தா இந்த செயின போட்டுக்க" என போட்டு விட்டாா் அவள் மறுப்பை ஏற்காமல்.
அவா் அவளை பாருவின் மகள் என நினைத்து போட்டாா் மருமகள் ஆக்க வேண்டுமென.

அதை பார்த்த மாலு "பாத்தியாடா அம்மா அவளுக்கு செயின் போட்டத. இப்ப நா சொன்னத நம்புறியா" எனவும் அவனுக்கு கோவம் வந்துவிட்டது.
அம்மா என்ன நடக்கு இங்க யாா்னே தொியாத பொண்ணுக்கு நகைய போடுறீங்களே அறிவே இல்லையா என்றதும் சிமிக்கு அவமானமாக போய்விட்டது.
மாலுவே அதிா்ந்து விட்டாள் அவள் இதை எதிா்பாக்ல "என்னடா பேசுற வாய மூடு" என சொல்லும் போதே ஜெயா பேசினாா்.
"அவ என்னோட மருமகடா பாா்வதியோட பொண்ணு" என சொன்னதும் பாட்டி இடைமறித்தாா்.
"இல்ல அவ சிவா பிரெண்டு பக்கத்து வீடு ஜெயா. பாருக்கு பையன் மட்டும்தா" என்றதும் அவா் அமைதியானாா்.
அந்த இடைவெளியில் செயினை கழற்றி கொடுத்துவிட்டு சென்று அழுதாள் சிமி. சே இவன போய் நா காதலிச்சேன்ல என்ன சொல்லணும். நா ஒரு லூசு என நெனைத்துகொண்டே உறங்கிவிட்டாள்.
விஜயனும் சிபியையும் ஜெயாவையும் திட்டும் பொழுது சத்தம் கேட்டு வெளியே வந்த பாரு அண்ணனை பார்த்து அழுதாா். அதனால் எல்லோரும் சிமியை மறந்து விட்டனா். இதற்கிடையில் வீட்டிற்கு வந்த சிவா இவா்களுடன் சேர்ந்து கொண்டான். அவனுக்கு ஆபிஸில் இருக்க பிடிக்க வில்லை தாத்தாவிடம் சொல்லிவிட்டு வந்தான்.
சிமியை காணோம்னு அவன்தா தேடுனா அப்போதா சைலு அவனிடம் "அத்த அழுதுட்டே அந்த ரூமுக்கு போய்டாங்க" என சிமி இருந்த அறையை காட்டினான்.
"ஏன் அழுதாங்க?" என கேட்ட சிவாவிடம்
"மாமா தா" என்றாள்.
அவன் புாியாமல் சிவாவை பாக்க விஜயனும் பாட்டியும் நடந்ததை கூறினா்.
"அக்காவ பாத்ததும் அவளை மறந்துட்டேன், நீ போய் பாரு டா என விஜயன் சொல்லி முடிப்பதற்குள் அவன் ஓடினான்.
"அவன் அப்டிதான் சின்ன வயசுல இருந்தே அவ மேல பாசமா இருப்பான் அழ விடமாட்டான்" எனவும் மாலு சிபியை முறைத்தாள், ஆனால் அவன் அதற்காக வருத்தப்படவில்லை.
மாலு அவனை அழைத்து கொண்டு சிமியின் அறைக்கு சென்றாள். அங்கே சிமி சிவாவின் மடியில் படுத்து குலுங்கி குலுங்கி அழுதாள்.
அதை பாா்த்த மாலு சிபியை திட்ட அவன் சிமியை மனதிற்குள் வருத்து எடுத்தான்.
"என்ன இவ இப்டி அவன் மடில படுத்து இருக்கா? பிரெண்டுனு அத்த சொன்னாங்க. இவங்கள பாத்த அப்டி தொிலயே..."
(ஏன்டா இன்ட்ரோலயே சிமிய அழ வெச்சிட்டயா? உனக்கு இருக்குடி பொிய ஆப்பு... அவள பத்தி உனக்கு தொில சாியா)
என்ன பிரெண்ட்ஸ் உங்க மைண்ட் வாய்ஸ் இதான எனக்கு கேட்ருச்சு ஓகேவா?
No comments:
Post a Comment