யாரோவாய் அறிமுகமாகி
யாதுமாகி நின்றவனே!
உன்னுள் என்னை காண
ஓரு நொடி திகைத்தேனே!
என் இதயதுடிப்பின் சத்தம் கூட
உன் பேரை சொல்லிட!
கூடல் மாநகர் தூங்கா நகரம் சொக்கனும் மீனாட்சியும் அரசாட்சி செய்யும் பெருமைக்கும் சங்கம் வைத்து தமிழ் வளர்த்த சிறப்புக்கும் உரிய ஊர்.
நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே வாதம் பண்ணிய நக்கீரர் வாழ்ந்த ஊர் அட அது தாங்க நம்ம மதுரை இந்த கதையின் களமும் மதுரைதாங்க.
சுற்றிலும் புதிய பணக்கார ரக கார்கள் அணிவகுத்து நிற்க மிக பிரம்மாண்டமாக நகரின் நடுவில் இருக்கும் அந்த திருமண மண்டபத்தில் உறவினர்கள் புடைசூழ மங்கல வாத்தியம் முழங்கிட குறிப்பிட்ட முகூர்த்தவேளையில் வெட்கம் மேலிட சிவந்த முகத்துடன் அழகின் சொரூபமாக தன் அருகில் அமர்ந்து இருக்கும் மனையாளின் சங்குகழுத்தில் மங்கலநாண் பூட்டிவிட்டு பெருமையுடன் போட்டோவுக்கு போஸ் கொடுத்தார் நம்ம ஹுரோ.
தங்களிடம் ஆசி பெற வந்த இளவல்களை இன்முகத்தோடு அருகிலிருத்தி கணவருடன் சேர்ந்து நின்று வாழ்த்திட தயாராக நின்றாள் நம்ம ஹுரோயின்.
என்னங்க ஒரே குழப்பமா இருக்கா? இருக்காதா பின்னே இங்கே நடக்குறது மீனாட்சி எண்டர்பிரைசஸ் நிறுவனங்களின் உரிமையாளர்கள் குடும்ப தலைவர் ஷேஷகிரி - லக்ஷ்மி தம்பதிகளின் மணிவிழாவாச்சே.
குடும்ப உறுப்பினர்கள் அலுவலக ஊழியர்கள் வாடிக்கையாளர்கள் என அனைவரிடமும் நல்லுறவு பேணிவரும் அவருக்கும் அவருடன் பலவருடமாக இணை பிரியாமல் அன்பும் காதலும் குறையாமல் வாழ்ந்துவரும் அவர் மனைவிக்குக்கும் நடக்கும் மணிவிழா.
வாங்க நாமும் அவர்களிடம் ஆசி பெற்று வரலாம்.
No comments:
Post a Comment