Raagaa's recipes:
தேவையானவை:
பால் - ஒரு லிட்டர்,
அடை - கால் கப் (கடைகளில் 'பாலடா’ என்று கிடைப்பது),
சர்க்கரை - ஒன்றரை கப்,
ஏலக்காய்த்தூள் - கால் டீஸ்பூன்,
நெய் - 2 டேபிள்ஸ்பூன்,
முந்திரி, திராட்சை - சிறிதளவு.
செய்முறை:
சுடுநீரில் அடை துண்டுகளைப் போட்டு 5 நிமிடம் கொதிக்கவிட்டு, பின் குளிர்ந்த நீரில் கஞ்சிப் பசை போகுமளவுக்கு அலசவும்.
பாலை அடுப்பில் வைத்து கொதிக்கவிட்டு, அலசிய அடைத் துண்டுகளைப் போட்டு வேகவிடவும். பாதி வெந்ததும், சர்க்கரை சேர்க்கவும்.
இதனுடன் ஏலக்காய்த்தூள், நெய்யில் வறுத்த முந்திரி, திராட்சை சேர்த்து சிறிது நேரம் கொதிக்க விட்டு இறக்கி னால்... பிரதமன் (பாயசம்) தயார். இதை சூடாகவோ... குளிர வைத்தோ பரிமாறலாம்.
No comments:
Post a Comment