தமிழர்களின் போர் கருவிகளை பற்றி தெரிந்து கொள்ள விரும்புகிறீர்களா? இதை படியுங்கள்.
பிற மனித குழுக்கள் போலவே தமிழர் வாழ்விலும் போர் ஒரு தொடர் அம்சமாக இருக்கின்றது. தமிழர் தம்மிடையேயும் பிறருடனும் போர் செய்தற்கான காரணங்கள், தமிழர் போர் மரபுகள், தமிழர் போர் நுட்பங்கள் மற்றும் உத்திகள், தமிழ் போர் சாதிகள், தமிழர் சம்பந்தப்பட்ட போர் வரலாறு, தற்கால ஈழப்போர் ஆகியவற்றை ஆயும் இயல் தமிழர் போரியல் எனலாம்.
நமக்கு போர்க்கருவிகள் என்றதுமே கத்தி, கட்டாரி, வேல், வாள், கேடயம், அரிவாள், வீச்சரிவாள் போன்றவையே நினைவுக்கு வரும். ஆனால் பழங்காலத்தில் போர்க்கருவிகள் இன்னும் பல இருந்திருக்கின்றன.
வீரத்தில் சிறந்து விளங்கிய தமிழர்கள் இத்துணை போர்க்கருவிகளை பயன்படுத்தியிருக்கிறார்கள் என்ற செய்தி நமக்கெல்லாம் பெரும் வியப்பை தருவதாக அமைந்துள்ளது.
- வளரி,
- அடார்,
- அரம்,
- அரிவாள்,
- ஆயுதக்காம்பு,
- எஃகு,
- கண்ணாடி தைத்த கேடகம்,
- கணிச்சிப்படை,
- கலப்பை,
- கழிப்பிணிப் பலகை,
- காழெஃகம்,
- கிளிகடிகருவி,
- குந்தாலி,
- குறடு,
- கேடகம்,
- கோடாலி,
- சக்கரம்,
- சிறியிலை எஃகம்,
- சேறுகுத்தி,
- தறிகை,
- துடுப்பு,
- நவியம்,
- படைவாள்,
- பூண்கட்டிய தண்டு,
- மழு,
- வாள்,
- வில்,
- வேலுறை
- வளைவிற்பொறி
- கருவிரலூகம்
- கல்லுமிழ் கவண்
- கல்லிடுகூடை
- இடங்கணி
- தூண்டில்
- ஆண்டலையடுப்பு
- கவை
- கழு
- புதை
- அயவித்துலாம்
- கைப்பெயர் ஊசி
- எரிசிரல்
- பன்றி
- பனை
- எழு
- சீப்பு
- கணையம்
- சதக்களி
- தள்ளிவெட்டி
- களிற்றுப்பொறி
- விழுங்கும் பாம்பு
- கழுகுப்பொறி
- புலிப்பொறி
- குடப்பாம்பு
- சகடப்பொறி
- தகர்ப்பொறி
- அரிநூற்பொறி
- குருவித்தலை
- பிண்டிபாலம்
- தோமரம்
- நாராசம்
- சுழல்படை
- சிறுசவளம்
- பெருஞ்சவளம்
- தாமணி
- முசுண்டி
- முசலம்
தமிழர்களின் போர்முறை அறபோர்முறை. அவர்கள் வஞ்சகம், சூழ்ச்சி, கெடுத்தல் அற்றதாக நேரானதாக இருந்துள்ளது. காலை முரசறையத் தொடங்கும் அவர்களின் போர் மாலை முரசறைய நிறுத்தப்படுவதாக இருந்துள்ளது. முழுஇரவு ஓய்விற்குப்பின் மீண்டும் அடுத்தநாள் காலை தொடங்கும் அவர்களின் போர்முறை எதிரிகளுக்கு இரங்கும் நெஞ்சம் உடையதாக, எதிரிகளுக்குத் தக்க வாய்ப்பளிக்கும் போக்கினதாக அமைந்திருக்கிறது.
எதிர்குழுவினரையும் தம்மொடு ஒத்த மனித உள்ளமாக, மனித உடலாகக் கொண்டு தமிழர்கள் போர் செய்துள்ளனர். அவர்கள் தன் இரத்தம் வெளிப்படும் துன்பத்தைப் போலவே பிறன் இரத்தம் வெளிப்படும் துன்பத்தையும் கண்டுள்ளனர்.
இதன்மூலம் போர்க்களம் என்பது கொலைக்களமாக மட்டும் விளங்காமல் துயரம் கண்டு இரங்கும் களமாகவும் இருந்துள்ளது. இவ்வகைப்பட்ட போரை நடத்திட தமிழர்க்குப் பல போர்க்கருவிகள், பல திட்டங்கள் உதவிபுரிந்திருக்க வேண்டும், அவர்கள் இவ்வகைக் கருவிகளை உருவாக்கி, அவற்றைப் பயன்படுத்திடக் கற்றுக் கொண்டிருக்கவேண்டும். போரில் வென்றபின் வீரர்கள் தோற்ற நாட்டில் படைவீடு அமைத்துத் தங்குவர். அப்படைவீடு சிதைந்த போர் கருவிகளைக் கொண்டு கட்டப்பட்டதாக இருக்கும்.
தமிழர் இத்தகைய போர் அறிவியலில் குறிப்பிடத்தக்க இடத்தைப் பெற்றிருந்தமைக்கான சான்றுகள் பண்டை இலக்கண நூலான தொல்காப்பியம் முதலாக கிடைக்கப் பெறுகின்றன. பண்டைக்காலம் முதலாக, தொடர்ந்து வரும் காலங்களிலும் அவர்களின் போர் அறிவியல் ஆற்றல் மேம்பட்டிருந்ததற்கான பல சான்றுகள் தமிழிலக்கியங்கள் வாயிலாகக் கிடைக்கப் பெறுகின்றன.
No comments:
Post a Comment