Raagaa's recipes
தேவையானவை:
தேங்காய் - அரை மூடி,
உளுத்தம்பருப்பு - 2 டீஸ்பூன்,
காய்ந்த மிளகாய் - 4.
கறிவேப்பிலை,
உப்பு, எண்ணெய் - தேவையான அளவு.
செய்முறை:
கடாயில் எண்ணெய் விட்டு, உளுத்தம்பருப்பையும் காய்ந்த மிளகாயையும் சிவக்க வறுத்து எடுத்து வைக்கவும்.
கறிவேப்பிலை போட்டு வறுக்கவும். தேங்காயைத் துருவி சிவக்க வறுக்கவும். இதனுடன் மற்ற அனைத்துப் பொருட்களையும் ஒன்றாகச் சேர்த்து நைஸாக பொடிக்கவும்.
இட்லி மிளகாய்ப்பொடிக்கு பதிலாக இதை பயன்படுத்தலாம். வித்தியா சமான சுவையில் இருக்கும். சாதத்தில் போட்டு பிசைந்தும் சாப்பிட லாம்.
இரண்டு வாரங்கள் வரை இந்த மிக்ஸை வைத்திருந்து பயன்படுத்தலாம்.
No comments:
Post a Comment