Raagaa's recipes
மோர்க்குழம்பு பிரியர்களே!
குழம்பு வகைகளிலேயே தனிச்சுவையுடையது மோர்க்குழம்பு இல்லையா.... உடலுக்கும் குளிர்ச்சியையும் மனதிற்கு மகிழ்ச்சியையும் ஒருங்கே தர வல்ல அந்த குழம்பு, சுலபமான செய்முறை விளக்கத்தோடு இதோ உங்களுக்காக.
தேவையானவை:
துவரம்பருப்பு, கடலைப்பருப்பு - தலா 50 கிராம்,
பச்சரிசி - ஒரு டேபிள்ஸ்பூன்,
தனியா, சீரகம் - தலா 2 டீஸ்பூன்,
காய்ந்த மிளகாய் - 7,
பெருங்காயத்தூள் - சிறிதளவு.
தாளிக்க:
கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, காய்ந்த மிளகாய், எண்ணெய் - சிறிதளவு.
மோர்க்குழம்பு செய்ய:
தயிர் - 100 கிராம்,
தேங்காய் விழுது - ஒரு டேபிள்ஸ்பூன்,
மஞ்சள்தூள் - சிறிதளவு,
ஏதேனும் ஒரு காய்கறி (வெண்டை, பூசணி, வாழை),
எண்ணெய் - சிறிதளவு.
செய்முறை:
பருப்பு வகைகள், அரிசி, தனியா, சீரகம், 5 காய்ந்த மிளகாய், பெருங்காயத்தூள் ஆகியவற்றை ஒன்றாக சேர்த்து மிக்ஸியில் நைஸாக அரைக்கவும்.
கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, 2 காய்ந்த மிளகாய் தாளித்து... மிக்ஸியில் அரைத்த பொடியுடன் சேர்த்துக் கலக்கி, சேமித்து வைக்கவும்.
மோர்க்குழம்பு தேவைப்படும்போது தயிரை நன்றாகக் கடைந்து, தேங்காய் விழுது சேர்த்துக் கலக்கவும். தயாரித்து வைத்திருக்கும் மோர்க்குழம்பு மிக்ஸை இதனுடன் கலந்து மஞ்சள்தூள் சேர்த்து, தேவைப்பட்டால் சிறிது தண்ணீர் சேர்த்து, அடுப்பில் வைத்து நுரை வந்ததும் இறக்கவும்.
கடாயில் எண்ணெய் விட்டு, காயைப் போட்டு வறுத்து, மோர்க்குழம்பில் சேர்க்கவும். இரண்டு வாரங்கள் வைத்திருந்து இந்த மிக்ஸை பயன்படுத்தலாம்.
No comments:
Post a Comment