ஓம் சுதர்ஸனாய வித்மஹே
ஜ்வாலா சக்ராய தீமஹி
தன்னோ: சக்ர ப்ரசோதயாத்
சக்கரத்தாழ்வார்:
சக்கரத்தாழ்வார் என்பவர், திருமாலின் ஆயுதங்களில் ஒன்றான சக்கராயுதத்தின் உருவமாக கருதப்பெறுகிறார். சுதர்சனர் எனப்படும் சக்கரத்தாழ் வாருக்கென்று விசேஷமான ஆராதனைகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்த ஆராதனைகள் விகசை என்ற மகாமுனியால் ஏற்படுத்தப்பட்டவை. ஜீவாலா கேசமும், திரிநேத்ரமும், பதினாறு கரங்களும் பதினாறு வித ஆயுதங்களும் உடைய இவரை வழிபடுவதால் முப்பிறவியிலும், இந்த பிறவியிலும் உண்டான பாவங்கள், மற்றவர்களால் ஏற்படும் தீங்குகள், தீவினைகள், தோஷங்களால் கெடுதிகள் யாவும் நீங்கும்.
வலக்கை ஆயுதங்கள்
சக்கரம், மால், குந்தம், தண்டம், அங்குசம், சதாமுகாக்கனி, மிஸ்கிரிசம், வேல்.
இடக்கை ஆயுதங்கள்
பாஞ்ச சண்யம், சாரங்கம், பாசம், கலப்பை, வஜ்ராயுதம், கதை, உலக்கை, திரிசூலம்.
வழிபடும் முறை:
சுதர்சனரை வழிபடச் சித்திரை நட்சத்திர தினங்கள் சிறப்பானவை. சித்திரை அவருக்குரிய நட்சத்திரம்.
ஸ்ரீ சக்கரத்தாழ்வாரையும், அவர் பின்புறமுள்ள ஸ்ரீ நரசிம்மரையும் வணங்கி சுற்றி பிரதட்சணம் செய்தால், நான்கு வேதங்களையும், பஞ்ச பூதங்களையும் அஷ்ட லட்சுமிகளையும், எட்டு திசைகளையும் வணங்கிய பலன் கிடைக்கும். 16 வகையான பேரருளும் கிடைக்கும் என்பது முன்னோர்களின் வாக்கு.
ஸ்ரீ சக்கரத்தாழ்வாரை புதனும்,சனியும் சேவிப்பது விசேஷம். முடிந்தால் தினமும்,இயன்ற நிவேதனம் வைத்து பூஜிப்பது நல்லது.
ஸ்ரீ சக்கரத்தாழ்வாருக்கு வியாழ கிழமை சிவப்பு மலர்களால் மாலை சூட்டி வழிபட்டால், நினைத்த காரியங்களில் வெற்றி கிட்டும்.
பலன்கள்:
ஸ்ரீசக்கரத்தாழ்வாரை வணங்குவதால், சகல தோஷங்களும் விலகும்.
முன்புறத்தில் ஸ்ரீ சக்கரத்தாழ்வாரையும், அதன் பின்புறத்தில் ஸ்ரீ நரசிம்மரையும் வணங்கி சுற்றி பிரதட்சணம் செய்தால் நான்கு வேதங்களையும், பஞ்ச பூதங்களையும்,அஷ்ட லட்சுமிகளையும், எட்டு திக்கு பாலர்களையும் வணங்கிய பலன் கிடைக்கும்.
அவரின் பரிபூரண அருள் கிடைக்கப்பெற்று நிம்மதியும், சந்தோஷமும் பொங்க வாழலாம்.
திருமால் கோவிலில் உள்ள சுதர்சனர் சந்நிதியில் நெய் விளக்கேற்றி வழிபட்டால் வாழ்வில் சுபிட்சம் காணலாம்.
திருமணமாகாத கன்னிப் பெண்களுக்கு விரைவில் திருமணம் நடைபெறும்;
சுமங்கலிகள் நீடூழி சுகமாக வாழ்வர். சுதர்சனர் பிரத்யட்ச தெய்வம்.
தீவிரமாக உபாசிப்பவர்களுக்கு விரும்பியதை அளித்து காப்பாற்றுவார்.
ஸ்ரீசுதர்சன வழிபாடு பயங்கரமான கனவு, சித்தபிரமை, சதாமனோ வியாகூலம், பேய்விசாசு, பில்லி சூன்யம், ஏவல் முதலிய துன்பங்களிலிருந்து காக்க வல்லது.
No comments:
Post a Comment