Raagaa's recipes:
தேவையானவை:
பச்சரிசி - 150 கிராம்,
கடுகு - ஒரு டீஸ்பூன்,
உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு - தலா 2 டீஸ்பூன்,
காய்ந்த மிளகாய் - 4,
கறிவேப்பிலை, பெருங்காயத்தூள், எண்ணெய் - சிறிதளவு.
உப்புமா கொழுக்கட்டை செய்ய:
தேங்காய் துருவல் - ஒரு டேபிள்ஸ்பூன்,
உப்பு - தேவையான அளவு.
செய்முறை:
அரிசியை மிக்ஸியில் ரவையாக உடைத்து சலிக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு, காய்ந்த மிளகாயைப் போட்டு, சிவந்ததும் கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, பெருங்காயத்தூள், கறிவேப்பிலை தாளித்து, உடைத்த ரவையில் கொட்டிக் கலந்து வைத்துக் கொள்ளவும்.
உப்புமா கொழுக்கட்டை தேவைப்படும்போது, கடாயில் தண்ணீர் ஊற்றி (ஒரு பங்கு ரவை கலவைக்கு 2 பங்கு தண்ணீர்) கொதிக்க வைத்து அரிசி ரவை மிக்ஸ், உப்பு சேர்த்து நன்றாகக் கிளறி மூடி வைக்கவும். அரிசி ரவை நன்றாக வெந்ததும், தேங்காய் துருவல் சேர்த்துக் கலக்கவும். ஆறியதும் உருண்டைகளாக உருட்டி இட்லி தட்டில் வைத்து, வெந்ததும் எடுத்து சூடாகப் பரிமாறவும்.
இதற்கு தொட்டுக் கொள்ள ஊறுகாயே போதும். சட்னிகூட தேவையில்லை. .
No comments:
Post a Comment