Raagaa's recipes:
நம் வீடுகளில் அன்றாடம் செய்ய கூடிய, மருத்துவ குணம் நிறைந்த ஒரு உணவு என்றால் அது ரசம் தான். அதிலும் மிளகு ரசம் உடலுக்கு ரொம்பவே நல்லது. மாறி வரும் பருவ சூழ்நிலைகளால் மிக விரைவாக குழந்தைகள் சளி, காய்ச்சலை நண்பர்களுடன் பரிமாறி கொள்கின்றனர். உணவே மருந்தான இந்த மிளகு ரசத்தை வாரம் இரு முறை செய்தாலே போதும், சளித்தொல்லை நம் பிள்ளைகளை அண்டவே அண்டாது.
தேவையானவை:
மிளகு - ஒரு டேபிள்ஸ்பூன்,
சீரகம் - 2 டேபிள்ஸ்பூன்,
தனியா - ஒன்றரை டேபிள்ஸ்பூன்,
வெயிலில் காயவைத்த புளி - பெரிய நெல்லிக்காய் அளவு,
பொடியாக நறுக்கிய கொத்தமல்லி, கறிவேப்பிலை,
நெய் - சிறிதளவு,
உப்பு - தேவையான அளவு.
செய்முறை:
வெறும் கடாயில் புளியை நன்றாக வறுக்கவும். மிளகு, சீரகம், தனியா ஆகியவற்றை மிக்ஸியில் நைஸாக அரைக்கவும். இதனுடன் வறுத்த புளியைச் சேர்த்து அரைத்து, எல்லாவற்றையும் நன்றாகக் கலந்து வைக்கவும்.
ரசம் தேவைப்படும்போது, ஒரு பாத்திரத்தில் அரைத்த பொடி, தேவையான தண்ணீர், உப்பு, கொத்தமல்லி, கறிவேப்பிலை சேர்த்துக் கொதிக்க வைக்கவும். நன்றாக நுரை வந்ததும் இறக்கி, நெய்யில் தக்காளியை வதக்கிச் சேர்க்கவும்
ஒரு மாதம் வரை இந்த மிக்ஸை வைத்திருந்து பயன்படுத்தலாம்
No comments:
Post a Comment