Raagaa's recipes
தேவையானவை:
கடலைப்பருப்பு, துவரம்பருப்பு, உளுந்து - தலா கால் கப்,
சோம்பு - அரை டீஸ்பூன்,
இஞ்சி - சிறிய துண்டு (சுத்தம் செய்து, தோல் சீவிக் கொள்ளவும்),
மிளகு - கால் டீஸ்பூன்,
காய்ந்த மிளகாய் - 3,
வெங்காயம் - ஒன்று (நறுக்கிக் கொள்ளவும்),
பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை, நறுக்கிய புதினா,
கொத்தமல்லி - சிறிதளவு,
எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை:
மூன்று பருப்புகளையும் ஒன்றாக சேர்த்து அரை மணி நேரம் ஊறவிடவும். பிறகு, நீரை வடித்துவிட்டு, இஞ்சி, மிளகு, காய்ந்த மிளகாய், உப்பு சேர்த்து கொரகொரப்பாக அரைக்கவும்.
இதனுடன் நறுக்கிய வெங்காயம், புதினா, கொத்தமல்லி, பெருங்காயத்தூள் சேர்த்துக் கலக்கவும். மாவை வடைகளாகத் தட்டி, சூடான எண்ணெயில் பொரித்தெடுக்க சுவையான முப்பருப்பு வடை தயார்.
No comments:
Post a Comment