This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License. Readers dont try to copy the content here.

Tuesday, 20 November 2018

Restaurant Style கோபி மஞ்சூரியன்


VICKEY'S RECIPES :)


 கோபி மஞ்சூரியன் யாருக்குத்தான் பிடிக்காது சொல்லுங்க . அதுவும் ரெஸ்டூரண்ட் ஸ்டைலில் வீட்லயே செஞ்சு குடுத்த அவ்ளோ தான் .  ஒரு நாள் நைட் டின்னெர்க்கு இந்தோ சைனீஸ் (Indo Chinese) cuisine ட்ரை பண்ணேன். சிக்கன் ப்ரெட் ரைஸ் மற்றும் இந்த கோபி மஞ்சூரியன் செஞ்சு குடுத்தேன். பொதுவாவே எங்க வீட்ல இருக்குறவங்க இந்த சாஸ் ஐட்டம் ரொம்ப இஷ்டபட்டு சாப்பிடுவாங்க . அவங்களுக்கு இந்த ஐட்டம் செஞ்சு குடுத்த கேட்கவா வேணும் சப்பு கொட்டிட்டு சாப்பிடுவாங்க. 


தேவையான பொருட்கள் 

 Cauliflower - 1 small
Maida - 1/4 cup
Corn flour - 1/2 cup
Chilli powder - 1/2 tsp
Salt As required 

FOR SAUCE

Garlic - 5
Green Chilli - 2
Onion - 1 Small
Capsicum(Any color of your choice)
Tomato Sauce - 2 tblspn
Chilli sauce - 1 tsp
Chicken 65 pwd- 1/2 tsp
Salt and Sugar for taste
Corainder leaves for garnishing

செய்முறை 

For Boiling Cauliflower
  • முதலில் காலிப்ளவ்ர் சின்ன சின்ன பூக்களாக நறுக்கி கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் தண்ணீர் கொதிக்க வைத்து அதில் இந்த சிறுதளவு மஞ்சள் தூள், உப்பு , காலிப்ளவ்ர் சேர்த்து ஒரு 10 நிமிடம் வேகவைக்க வேண்டும்.
For Frying Cauliflower

  • ஒரு பௌலில் கார்ன் பளார் , மைதா, உப்பு, மிளகாய் தூள்,சிறுது தண்ணீர் சேர்த்து பேஸ்ட் போல் கரைத்து கொள்ளவும். அதில் காலிப்ளவ்ர் சேர்த்து நன்றாக பிரட்டவும் .பேஸ்ட் தண்ணீராக இருந்தால் சிறிதளவு கார்ன் பளார் சேர்த்து கலக்கவும்

  • ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி அடுப்பில் காய வைக்க வேண்டும் . எண்ணெய் காய்ந்த பிறகு காலிப்ளவ்ர் சேர்த்து நன்றா பொரித்து எடுக்கவும் .
For the Sauce

  • ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி , பொடியாக நறுக்கிய இஞ்சி , பூண்டு சேர்த்து பொன்னிறமாக வதக்கவும் .
  • பின்னர் சின்ன சின்ன துண்டுகளாக நறுக்கிய வெங்காயம், குடை மிளகாய் , பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் சேர்த்து 1 நிமிடம் வதக்கவும்.
  • அடுத்து சோயா சாஸ், தக்காளி சாஸ் , சிறிது சர்க்கரை சேர்க்கவும் . 1 /4 கப் தண்ணீரில் 1 டீஸ்பூன் கார்ன் பளார் சேர்த்து கரைத்து , கடாயில் சேர்க்கவும்.உடனே அந்த சாஸ் திக்காக மாறிவிடும்.உப்பு ருசி பாத்து சேர்த்து கொள்ளுங்கள் ஏனென்றால் சாஸ்களில் உப்பு இருக்கும் .
  • கடைசியாக பொறித்த காலிப்ளவ்ர் சேர்த்து பிரட்டவும். அடுப்பை அணைத்து கொத்தமல்லி தழை சேர்த்து அலங்கரிக்கவும் . சுட சுட சுவையான கோபி மஞ்சூரியன் தயார் . 


No comments:

Post a Comment

எழுத்தாளர்கள் கவனத்திற்கு

இந்த தளத்தினில் உங்களது படைப்புகளையும் இடம்பெறச் செய்ய விரும்பினால், rheamoorthy6@gmail.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் செய்யவும்.