This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License. Readers dont try to copy the content here.

Sunday, 23 December 2018

Bhuvana's இளம் தென்றல் 7

    தனது அப்பாவே,  தன்னை வருணிடத்தில் மாட்டி விடுவார் என்று நினைத்து கூட பார்க்கவில்லை வருணி.     

             

   அப்பாவியான பாலநாதன், "அப்பா எங்க தம்பி?" என்றார் வருணிடம். 


   "அப்பா உங்களைதான் கூப்பிட்டு வரச்சொல்லி என்ன அனுப்பினார் சார், ஆனா இது? " என்று கேள்வியோடு வருணி பக்கம் கை காட்டினான் வருண். 


    வருணியின் வதனத்தை கண்டதும் வருண் கண்கள் இரண்டும் பிறர் அறியாதபடி கோப கனலை கக்கியது எனலாம். 


     பின்னே, இருந்த கோபத்திற்கு எங்கிருந்தாலும் அவளை தேடி கண்டு பிடித்து தனது பதில் தாக்குதலை நிகழ்த்த வேணடுமென ஐடியா செய்து கொண்டிருந்தவனுக்கு, லட்டு போல  வகையாய் கையில் வந்து மாட்டினாள் எனில் விட்டுவிடுவனா நம் வருண்? 


   பாலநாதனோ அவனிடம் பாசமாய், "இதுதான் தம்பி என் பொண்ணு வருணி, நம்ம ஸ்கூல்ல தான் டீச்சரா வேல பாக்குது..." 


    "ஓ" என்ற ஒற்றை வார்த்தையில் அவளை மேலும் கீழுமாய் அளந்து பார்த்தான். 


    அதற்க்குள் சந்திரசேகர் வந்து விட 

"அடடே வாமா வருணி... எப்படி இருக்க? உன்ன சின்ன வயசில பாத்தது... நல்லா இருக்கியா?"  என்று குசலம் விசாரித்தார். 


    வருணி முயன்று வரவழைத்த சிரிப்புடன், "நான் நல்லா இருக்கேன் சார், நீங்க  நல்லா இருக்கீங்களா?" என்று பவ்வியமாக நின்றாள். 


    "நல்லா இருக்கேன் மா" என்றார் அவரும் பாசமாய்.      

                            

     "நம்ம வருணி நல்ல அமைதியான பொண்ணு வருண், ஸ்கூல் விசயங்கள் எல்லாமே வருணிக்கும் தெரியும், உனக்கு எதாவது தகவல் தேவைனா அவள கேட்டு தெரிஞ்சுக்கோ... நமக்கு நம்பிக்கையான ஆளுங்க இவங்க, நீ கண்ண மூடிட்டுட்டு கூட கையெழுத்து போடலாம்" என்றார். 


    அவர்களை பாராட்டி பொதுவான ஒரு சில வார்த்தைகள் பேசியதும் பாலநாதனை அழைத்து கொண்டு தனிமையில் சென்று விட்டார். 


    கிடைத்த தனிமையில் வருண் அவளை நோக்கி "நீ  அமைதியான பெண்ணா!  நல்லா குணமா!  உனக்கா!  இதுல ஏதாவது ஒன்னு இருக்கா உனக்கு? 

அன்னக்கி எதோ தெரியாம இடிச்சதுக்கு என்ன சீன் போட்ட, இன்னைக்கி மாட்டினியா,  இத்தனை நாளா உன்னதான் தேடிட்டு  இருந்தேன். அதுக்குள்ள எங்க அப்பாவையே கைகுள்ள போட்டுக்கிட்டயே, நல்லா ஆள் தான் நீ... " என்று  தன் வாய்க்கு வந்தபடி  வசை பாடினான். 


    வருணியும் அவனை சும்மா விடவில்லை, "நானும் போனா போகுது, போனா போகுதுன்னு பார்த்துட்டு இருந்தா ரொம்பதான் பேசுற,  அன்னிக்கி தப்பான சைடுல வந்தது நீ. அப்பவே நீ தான்னு  எனக்கு தெரியாது" என்றாள் சோகமாக.  


    "தெரிஞ்சிருந்தா மட்டும் என்ன பண்ணி  இருப்ப?" என்றான் நக்கலாக கேட்டான்.  


    "அப்பவே உங்க அப்பா கிட்ட சொல்லி அவரையும் என்னோடு சேர்ந்து  உன்னை  இன்னமும் விளாசி இருப்பேன்." என்றாள் கோபமாக. 


    "அட கொலை காரி... உன்ன போய் நல்ல பெண்ணுனு நம்புறார் பாரு எங்க அப்பா, எவ்வளவு வாய் உனக்கு?  இந்த  ஸ்கூல தானே வேலை பார்க்குற,  உனக்கு இருக்கு டி" என்றான். 

 

   அதர்க்குள் சென்றவர்கள் இருவரும் திரும்பி வர அவர்கள் காதில் கேட்காத மாதிாி, " உன்னால் முடிஞ்சத பாத்துக்கோ,  போடா" என்று வேறு வருணை உசுப்பேத்தி விட்டுவிட்டால் வருணி. 


    சந்திரசேகர் வந்ததும், "சரி சார் நாங்க கிளாம்புறோம் " என்றவள், வருணுக்கும் சேர்த்து ஒரு வணக்கம் வைத்தாள்.

  

    வருண் எதையும் வெளியே காட்டி கொள்ளாமல் ஒரு தலை அசைப்போடு அவர்கள் செல்வதையே பார்த்து கொண்டு இருந்தான். 


     ஆனால் மனதினுள், "நான் தான் அவ வேலை பாக்குற ஸ்கூலுக்கே சொந்தகாரன்னு தெரிஞ்சும் ஒரு பயம் இல்லாம எப்படி பேசுறா? தைரியமான பெண்ணு தான். அய்யய்யோ... என்ன நாம அவளுக்கு பாசிட்டிவ்வா பேசிட்டு இருக்கோம்?" என்று திடுக்கிட்டான். 


    வருணி வீட்டுக்கு வந்ததும் சுமதி, "ஏன்டி இவ்வளவு நேரம்?" என்று வினவினார்.  


    "என்ன செல்லுறதுன்னே தெரியல சுமதி... ஸ்கூல் பொறுப்பை எல்லாம் வருண் தம்பி எடுத்துட்டார். அவருக்கு துணையா என்னை போட்டு இருக்காங்க.  இனிமே அந்த பாண்டியன் செஞ்ச தப்பு எல்லாமே ஒண்ணொண்ணா வெளியே வர ஆரம்பிக்கும். அதுனால பாண்டியன் கிட்ட கொஞ்சம் ஜாக்கிரதையாக  இருங்கன்னு சந்திரசேகர் அய்யா சொன்னார் " என்றார். 


    இதை கேட்ட வித்தியா வருணியை பார்க்க, வருணி தன் கண் அசைவில் வித்தியாவை தனியே அழைத்தாள். 


    "என்னக்கா நீ அவன்கிட்டயே திரும்ப, திரும்ப மாட்டுற?" என்றாள் வித்தியா.


    "என்ன பன்னுறதுனே தெரிலடி என்ன பழி வாங்கவே வந்த மாதிரியே பேசுறான். 

கண்டிப்பா எதையோ செய்ய போரான்டி" என்று பயத்தில் தான் வருணி துங்க சென்றாள். 


    காலை  விடிந்ததும் அப்பாவும், மகளும் பள்ளிக்கு கிளம்பினார்கள். ஆனால் அவர்களுக்கு முன்பாகவே வருண் அங்கு இருந்தான்.

No comments:

Post a Comment

எழுத்தாளர்கள் கவனத்திற்கு

இந்த தளத்தினில் உங்களது படைப்புகளையும் இடம்பெறச் செய்ய விரும்பினால், rheamoorthy6@gmail.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் செய்யவும்.