நகரின் மத்தியில் அமைந்துள்ள தனியார் மருத்துவமனை வெள்ளை தேவதைகளாய்
செவிலியர்கள் உலா வர அமைதியான மெல்லிய குளிரோடு கூடிய அறையில் உரிய
மருத்துவ உபகரணங்களின் உதவியுடன் சுவாசித்து கொண்டு கொடுக்கபட்ட
மருந்துகளின் விளைவால் உறக்கத்தின் பிடியில் இருந்தார் ஸ்ரீதரன்
நேர் எதிராக துளியும் ஊனுறக்கமின்றி கண்களில் உயிரை தேக்கி கொண்டு
இறைவனிடம் கணவனின் உயிரை யாசித்தபடி நின்றிருந்தார் கலாவதி . அவருக்கு
அருகே தன் தாயின் கரம் பற்றியபடியே ஆறுதல் சொல்லியவாறு நின்றிருந்தான்
சரத்.கொஞ்சம் தள்ளி டாக்டர்களிடம் ஸ்ரீதரின் உடல் நிலை குறித்து
விவாதித்து கொண்டிருந்தார் குமார்
இங்க பாருங்க குமார் இப்போ பேஷண்ட் இருக்குற உடல் நிலையில அவருக்கு அதிக
கவலையோ இல்ல அதிக வேலயோ குடுக்க கூடாது அது மட்டுமில்லை அவருக்கு இது
முதல் ஹார்ட் அட்டாக் வேற சரியான நேரத்துல கொண்டு வந்ததுனால எங்களால
காப்பாத்த முடிஞ்சது அவரோட கவலை என்னனு கேட்டு அத தீர்த்து சந்தோஷமா
வெச்சுக்க பாருங்க
ஒரு நாள் அப்செர்வேஷனுக்கு அப்புறம் அவரை டிஸ்சார்ஜ் பண்ணிடுவோம் இந்த
ஹாஸ்பிட்டல் பில் எல்லாம் இன்ஷுரன்ஸ் ல கிளைம் ஆயிடுச்சு அதுனால பில்லை
பத்தி கவலை படவேண்டாம் நைட் யாராவது ஒருத்தர் துணைக்கு படுத்தா போதும்
தயவு செஞ்சு மத்தவங்களை வீட்டுக்கு போக சொல்லுங்க என்றனர்
கலாவதியிடம் வந்த குமாரோ ஏம்மா ஷியாமுக்கு சொல்லியாச்சா? என கேட்க
சொல்லியாச்சு அவன் உடனே கிளம்பி வரேனு சொல்லிருக்கான் வர வேண்டிய
நேரம்தான் நாந்தான் நேரா ஹாஸ்பிட்டலுக்கே வரசொல்லிருக்கேன் என்று சொல்லி
வாய மூடவில்லை நமது ஹீரோ ஷியாம் ஓடி வந்தான்
வந்தவன் சரத்திடம் என்ன ஆச்சு சரத் இப்போ எப்படி இருக்கு என கேட்க குமார்
டாக்டர் சொன்னதை எல்லாம் சொல்லி ஷியாம் உங்கப்பாவும் நானும் ரொம்ப வருஷமா
ப்ரெண்ட்ஸ் ஒரே காலனில அடுத்த அடுத்த வீட்டுல வேற குடியிருக்கோம் அவன்
ரொம்ப நல்லவன்பா இனிமேலாவது உன் பிடிவாதத்த விட்டு அவனை அப்பானு பழைய
மாதிரி கூப்பிடு
சரி அங்கிள் நீங்க சரத்தையும் அவங்கம்மாவயும் வீட்டுல விட்டுடுங்க அவங்க
ரெஸ்ட் எடுத்துட்டு காலையில வரட்டும் நான் இங்க நைட் துணை இருந்துட்டு
அவரை காலையில வீட்டுக்கு கூட்டிட்டு வரேன் அங்க வெச்சு பேசிக்கலாம்
கண்ணீருடன் பேச முயன்ற கலாவதியின் முகம் கூட பார்க்கவில்லை ஷியாம்
சரத்தும் குமாரும் சமாதானபடுத்தி அழைத்து செல்ல தன்னிடம் ஒரு
வார்த்தையாவது பேசி விட மாட்டானா? என திரும்பி திரும்பி பார்த்தபடி
வீட்டுக்கு சென்றார் கலாவதி
சீரான உறக்கத்தில் இருந்த ஸ்ரீதரனின் முகத்தை பார்த்தபடியே அருகே
அமர்ந்திருந்தான் ஷியாம் இரவு பணியில் இருந்த நர்ஸ் வந்து தன் வழக்கமான
சோதனைகளை முடித்த உடன் அவனை பார்த்து சார் எவளோ நேரம் தான் இப்படியே
உக்காதிருப்பீங்க போய் நீங்க எதாவது சாப்பிட்டுட்டு வாங்க சார் ஆபிசுல
இருந்து நேரா இங்க வந்த மாதிரி தெரியுது நீங்க வரவரைக்கும் நான்
பெரியவரை பத்திரமா பாத்துக்கறேன் என சொல்ல அவளுக்கு நன்றி சொல்லிவிட்டு
கேண்டீனுக்கு கிளம்பினான்
கிளம்பிய அவனை அந்த வாசலைக்கூட தாண்ட விடாமல் தடுத்தது அந்த உருவம்
மெல்லிய குரலில் உனக்குதான் மாத்து ட்ரெஸ் சாப்பாடு எல்லாம் கொண்டு
வந்திருக்கேன் உனக்காக எங்க வீட்டுல செஞ்சது யார் மேலயோ இருக்குற
கோவத்தயெல்லாம் சாப்பாட்டுல காட்டாம ஒழுங்கா சாப்பிடு காலேல காபி டிபனோட
வந்து பாக்குறேன் மவனே சாப்பிடாம இருந்தேனு வெச்சுக்க என்ன பத்தி
தெரியுமுல என சொல்லிவிட்டு பின்னல் அசைந்தாட திரும்பி சென்றாள் அந்த
தேவதை
அதுவரை இருந்த சோகம் மறைந்து மெல்லிய குறுநகையுடன் அவள் குடுத்த உணவை
பெற்று கொண்டு திரும்பினான் விசித்திரமாக பார்த்த நர்ஸூக்கு மீண்டும்
ஒருமுறை நன்றி சொல்லி அனுப்பி விட்டு அவள் சொல்லியபடி உடை மாற்றிக்
கொண்டு உணவையும் உண்டு முடித்தான்
சேரில் உட்கார்ந்தவாரே தன் தகப்பனை பார்த்துகொண்டிருந்த ஷியாம் மெல்ல கண்
அயர்ந்தான் திடுக்கிட்டு கண் விழித்து பார்க்கையில் பொழுது
புலர்ந்திருந்தது ஸ்ரீதரனும் கண்விழிக்க துவங்கினார் மெல்ல கண் திறந்து
பார்க்கையில் ஷியாமை கண்டு நம்பமாட்டதவராக எழ முயற்சி செய்தார் உடனே
அவரின் தோள் பற்றி படுக்க வைத்துவிட்டு நர்சை அழைத்து அவரின் உதவியுடன்
காலை கடன்களை முடிக்க வைத்தான்
தம்பி எப்போ பா வந்தே ? மத்தவங்க எல்லாம் எங்கே? என ஸ்ரீதரன் கேட்க
ஷியாம் பதில் சொல்ல வாய் திறக்கும் முன் எல்லாரும் வீட்டுல இருக்காங்க
அங்கிள் என்று பதில் கொடுத்தபடி அவரிடம் வந்தாள் சந்தனா
பேருக்கு ஏற்றபடி பாலில் சந்தனமும் கலந்ததுபோல நிறத்துடன் நெற்றியில்
திருநீற்றின் கீற்று துலங்க இடையை தாண்டி ஆடிய பின்னலோ கருநாகமென
நீண்டிருந்தது குறுகுறுவென சதிராட்டம் ஆடும் கருவிழிகளின் குறும்பு
மின்னும் மொத்தத்தில் அழகும் புத்திசாலிதனமும் குறும்பும் மின்னும்
தேவதை பெண் இவள்
மெல்லிய புன் முறுவலுடன் உள்ளே வந்தவளை வா என தலையசைத்து அழைத்தார்
ஸ்ரீதரன் என்னம்மா சவுண்ட் சரோஜா வரும் போதே ஊரை கூட்டாம வரமாட்டியா?
உனக்கு சந்தனானு பேர் வெச்சதுக்கு சைரன் நு பேர் வெச்சிருக்கலாம் என
வம்பிழுத்தபடியே வந்தான் ஷியாம்.
நற நற வென பல்லை கடித்தவாறே அங்கிள் உங்க பையன எங்கிட்ட வம்பு வெச்சுக்க
வேணாமுனு சொல்லுங்க இல்ல நடக்குறதே வேற என சொல்ல அவளை தாண்டி அவன் சென்ற
பார்வை யாரையோ தேடியது ம்ம் என கனைத்த சந்தனாவோ ஷியாம் நீங்க தேடுற ஆள்
கீழ வண்டிய பார்க் பண்ண போயிருக்கு என காதை கடிக்க மெல்ல அசடு வழிந்தவாரே
வந்திருக்காளா ? என கேட்டான்
நீ வந்ததுக்கு தெரிஞ்சதுக்கு அப்புறம் அம்மணி வீட்டுல இருக்குமா ? நல்லா
கேக்குறான் பாரு கேள்விய? போதும் லிட்டர் கணக்குல வழியுது தொடை என சந்தனா
ஓட்ட எல்லாரும் சிரித்தனர் .மெல்லிய புன்முறுவலுடன் அந்த அறையில் நுழைந்த
சக்தியின் கண்கள் ஷியாமிடம் நிலைத்தது அவளின் பார்வைக்கு பதில் பார்வை
வீசியபடியே சந்தனாவிடம் ஆமா உன் கைல என்ன அது பேக்?
எல்லாம் உனக்கு பிடிச்சதுதான் காலேலயே எந்திரிச்சு செஞ்சு எடுத்துட்டு
வந்தோம் என சந்தனா சொல்ல யாரு இத நீ செஞ்சே இத நான் நம்பனும் என ஷியாம்
கேட்க நேத்து ராத்திரி மட்டும் நான் கொண்டு வந்து கொடுத்த உடனே சாப்பிட்ட
அப்போ தெரியலயா யாரு செஞ்சதுனு என சந்தனா எகிற பசி ருசியறியாதுனாலும் அதை
பாத்த உடனே நீ செஞ்சது இல்லனு புரிஞ்சு போச்சு அதனால தான் தைரியமா
சாப்பிட்டேன் என்று வாரினான் ஷியாம் உன்னை என்ன பண்றதுனுனே தெரியல? நீ
மட்டும் என்னிக்காவது எங்கிட்ட மாட்டு அன்னைக்கு உன்னை குர்பானி
குடுத்துடறேன் என்றாள் சந்தனா
பேச்சின் இடையே அவர்கள் கொண்டு வந்திருந்த காலை உணவை காலி செய்தனர்.
பின்னர் கிளம்பிய பெண்கள் இருவரும் ஸ்ரீதரிடம் சொல்லி கொள்ள அவர்களை
வாசல் வரை வந்து வழிஅனுப்பினான் ஷியாம் .போய் ஸ்கூட்டிய எடுத்துட்டு
வரேன் என சந்தனா கிளம்ப வேண்டாம் பா இத பிடி நானே எடுத்துட்டு வரேன் என
சாவியை பிடுங்கி கொண்டு ஓடினாள் சக்தி
ஷியாம் என்ன ஆச்சு உங்களுக்குள ? நான் உனக்கும் அவளுக்கும் பொதுவான
ப்ரண்ட் எனக்கு தெரியும் நீயும் அவளும் எவள்ளவு உயிருக்கு உயிரா
காதலிச்சீங்கனு இதோ இப்பொ கூட அவங்க அப்பாகிட்ட மட்டும் சொல்லிட்டு
உன்னை பார்க்க ஓடிவந்திருக்கா ? வந்ததுலேர்ந்து பாக்கறேன் ஒரு வார்த்தை
கூட ரெண்டு பேரும் பேசிக்க மாட்டேங்கறீங்க
சந்து இத நீ அவகிட்டயே கேட்டு தெரிஞ்சுக்கலாமே? என ஷியாம் கேட்க
ஹீம் அவளா கல்லுல இருந்து கூட நார் உறிச்சிரலாம் அவகிட்ட இருந்து உன்னை
பத்தி ஒரு விஷயத்த கறந்துட முடியுமா ? சரியான கல்லுளி மங்கியாச்சே
வெக்கம் கெட்டு போய் கேட்டும் பாத்தேன் எனக்கும் அவனுக்கும் ஆயிரம்
இருக்கும் அதெல்லாம் புருஷன் பொண்டாட்டி சமாச்சாரம் மாதிரி அதை ஏண்டி
கேக்குறே? என சொல்லிட்டா என சொல்லி முடிக்கவும் வண்டியுடன் சக்தி வரவும்
சரியாக இருந்தது சக்தியை கண்டவுடன் சந்தனா ஓட கண்கள் மின்ன தன்னிடம்
விழியால் விடை பெற்றவளை கண்டு சிலையாய் நின்றான் ஷியாம்
ஷியாம் மற்றும் சரத்தின் துணையுடன் வீட்டுக்கு வந்த ஸ்ரீதரை ஆரத்தி
எடுத்து வரவேற்றனர் கலாவதியும் சீதாவும் (குமாரின் மனைவி) கைத்தாங்கலாக
கூட்டிகொண்டு வந்த தகப்பனை அமர செய்துவிட்டு கூட வந்த குமாரிடம் அங்கிள்
நான் மாடிக்கு போய் ப்ரெஷ் ஆயிட்டு வரேன் ஊருக்கு கிளம்பற ஏற்பாட்ட
பாக்கணும் என் சொல்லியவாறே மாடியேற எத்தனித்த ஷியாமை நில்லுப்பா
நாங்களும் இங்க இருக்கோம் நாங்க சொல்றதயும் கேட்டுட்டு மாடிக்கு போயேன்
என்றார் பரதன் (சக்தியின் அப்பா)
உனக்கும் என் பொண்ணுக்கும் நிச்சயம் முடிஞ்சு ஆறு மாசமாச்சு அன்னைக்கு
எதோ சின்ன சண்டை நடந்துச்சுனு நீ உன்னை பெத்தவங்களோட பேசாம இருக்குறதும்
என் பொண்ணு உன் கூட பேசாம இருக்குறதும் நல்லா இல்ல தவிரவும் ஊரரிய உனக்கு
நிச்சயம் பண்ண பொண்ண இன்னொருத்தருக்கு கல்யாணம் பண்ணி கொடுக்கறதும்
கஷ்டம் உன்னை பெத்தவங்கள கேட்டா அவன் சரினா இன்னைக்கே கல்யாணம் பண்ணிக்க
ரெடிங்கறாங்க என் பொண்ணுக்கு ஒரு வழி சொல்லிட்டு ஊருக்கு நீ கிளம்பிக்கோ
இது வரைக்கும் நான் பொறுமையா இருந்ததே உன் அப்பா என் நெருங்கிய
ப்ரெண்ட்கறதுனாலதான் என பொரிய
அடிபட்ட விழிகளுடன் அவரை பார்த்தான் ஷியாம் அங்கிள் உங்க பொண்ணுக்கு
சம்மதம் நா நான் நாளைக்கே தாலி கட்ட ரெடி ஆனா நான் இப்போ ஊருக்கு போறது
என் வேலைய பெங்களூர் ப்ரஞ்ச் ல இருந்து சென்னைக்கு மாத்திக்கிட்டு
வரத்துக்குதான்
என்னைக்கு உங்க பொண்ணு என் பொண்டாட்டியா இந்த வீட்டுக்கு வராளோ அன்னைக்கு
தான் என்னை பெத்தவங்களோட நான் பேசுவேன் அதிகபட்சமா இந்த மாச கடைசியில
இந்த ஊருக்கு வந்திருவேன் நீங்களும் பாரதி ஆண்டியும் பேசி
முடிவெடுத்துட்டு எங்க வீட்டுல சொல்லுங்க என சொல்லிவிட்டு மாடிக்கு
சென்றான்
பரிதாபமாக ஸ்ரீதரனை பார்த்த பரதனோ கிளம்பறேன் பா என சொல்லிவிட்டு கிளம்ப
நில்லுங்கண்ணா என ஒலித்தது கலாவதியின் குரல் அண்ணா இன்னைக்கு ஜனவரி 1 வர
26ம் தேதி நல்ல முகூர்த்த நாள் அன்னைக்கு கல்யாணத்துக்கு ரெடியாயிக்கங்க
என் மருமக கேட்டுகிட்ட படி நான் பாரதிகிட்ட வந்து பேசி சரி பண்ணறேன்
என்றாள்
எப்படி பாத்தாலும் நான் பாரதிய பேசுன விதம் தப்புதான் தப்பு பண்ண நான்
அதை சரி பண்ணறதுதான் நியாயம் என்று சொல்லியபடியே வாசலை பார்த்தாள்
அந்நேரம் கணவனை காண அங்கு வந்த பாரதியோ கலா பேசியதை கேட்டு வேண்டாம் கலா
இப்படியெல்லாம் பேசாதே அப்படியென்ன நடந்திருச்சு நீ வருத்தபட நமக்குள்ளே
ஆயிரம் இருக்கும் அதை கேள்விகேட்க நம்மை கட்டுனவங்களுக்கே உரிமை இல்ல
இதுல நாம பெத்ததுங்க தலையிட்டதே மகா தப்பு இத காரணம் காட்டி சண்டை வேற
போடுதுங்க பாரு இவங்களையெல்லாம் திருத்தவே முடியாது நீ வருத்த படாதே நீ
சொன்ன மாதிரி வர ஜனவரி 26 கல்யாணம் நடக்கும் அந்த சக்தி கழுதைகிட்ட நான்
பேசிக்கறேன் என சமாதான படுத்தினாள் அப்படியென்ன இவங்களுக்குளே சண்டைனு
கேக்குறீங்களா நட்பூஸ் அத அடுத்த எபிசோடுல சொல்றேனே
No comments:
Post a Comment