Click here to get all parts |
ஆறு மாதத்துக்கு முன் சக்தி ஷியாம் நிச்சயதார்த்தம் நடந்த அந்த நாளில்
துவங்கிய பிரச்சனை இது அதை அறிந்து கொள்ள நாமும் அந்த நாளைக்கு செல்வோமா?
முகம் முழுவதும் வெட்கம் பூசியபடி கன்னா கதுப்புகளில் இளம் ரோஜாக்கள்
பூத்திருக்க சக்தி அமர்ந்திருந்தாள் கல்லூரி நண்பர்கள் கலாட்டா
செய்துகொண்டிருக்க அவற்றுக்கெல்லாம் பதில் சொல்லியபடி தன்னவளை
பார்வையாலயே தின்று கொண்டிருந்தான் ஷியாம். சரத் அங்கும் இங்கும்
பொறுப்பாக அலைந்து கொண்டிருக்க அவனை பின் தொடர்ந்த கண்ணையும் மனதையும்
கட்டு படுத்தமுடியவில்லை சந்தனாவால்.
மெல்ல நிகழ்ச்சிகள் முடிவடைந்து குடும்பத்தினர்களும் நண்பர்களும்
மட்டுமே அமர்ந்திருந்தனர் சீதாவும் சந்தனாவும் வீட்டுக்கு செல்ல புறப்பட
அவர்களை விட்டுவிட்டு வர சென்றான் சரத் ஒரு முக்கிய பணி நிமித்தமாக
குமார் வெளியூர் சென்றுவிட சரத் அந்த பொறுப்பை ஏற்றுகொண்டான்
அங்கே நுழைந்த வயதான தம்பதிகளை வாங்க என வரவேற்று அழைத்து சென்றாள் பாரதி
அவர்களை கண்ட கலாவதியின் முகமோ வெளுத்தது மின்வெட்டாக ஸ்ரீதரின்
பார்வையயை சந்தித்த போது அவர் அவர்களை எதிர்பார்த்தது போலவே நடந்துகொள்ள
கண்மண் தெரியாத கோபம் வந்தது கலாவதிக்கு
எதிர்கால தம்பதிகளை ஆசீர்வாதம் செய்தப் பின் சாப்பிட்டுவிட்டு வரும் வரை
பொறுமையாக இருந்த கலாவதி அவர்கள் முன் போய் நின்று எதுக்காக இங்க
வந்தீங்க என் நிம்மதிய கெடுக்கவா? என கத்த சத்தம் கேட்டு கூடியவர்கள்
ஒன்றும் புரியாமல் முழிக்க சட்டென அங்கு வந்த பாரதிய பாத்து நீதான்
இவங்களை கூப்பிட்டயா? என கேட்டாள் ஆமாம் என பாரதி சொல்லி முடிப்பதற்குள்
கலாவதியின் கை பாரதியின் கன்னத்தில் இடியென இறங்கியது பதிலுக்கு என்ன
செய்யுறா கலா? என கத்தியவாறே வந்த ஸ்ரீதரன் ஓங்கி கலாவை அடித்துவிட
அனைவரும் விக்கித்து நின்றனர் அவங்கள கூப்பிட்டது பாரதி மட்டுமில்ல
நானும் தான் ஆனா உனக்கு தெரிஞ்சா சங்கடபடுவாயேனு மறைச்சோம் அவளோதான்
தன் உயிர் தோழியின் கைகளால் அடி வாங்கிய அவமானம் தாங்காமல் உள்ளே ஓடிய
பாரதி அழுகையினூடே சுயநினைவை இழக்க துவங்க அவளை சமாதான படுத்த உள்ளே ஒடிய
பரதனின் மற்றும் சக்தியின் அலறல் அனைவரையும் அங்கே இழுத்து வந்தது
உடனடியாக செயல்பட்டு டாக்டர் வந்து பார்த்தபின் சாதாரண மயக்கம் என
சொல்லிவிட்டு சென்றார்
ஒவ்வொருவராக பாரதியை வந்து பார்த்துவிட்டு செல்ல கடைசியில் வந்தார்
கலாவதி அவள் வந்த நேரம் பாரதி கண்விழிக்க துவங்க அவரிடமும் பரதனிடமும்
மன்னிப்பு கேட்டாள் கலாவதி இருக்கட்டும்மா நீ என்ன வேணுமினா அடிச்ச எதோ
கோபம் கைய மீறிடுச்சு பரவாயில்லை இத இதோட விட்டுடுவோம் என பரதன் கூறினார்
அனைவரும் உறங்க செல்ல கனத்த மனதுடன் அடுத்தடுத்து நாட்களும் சென்றது ஒரு
நாள் மதியவேளையில் வந்த தொலைபேசி தகவல் பாரதியையும் கலாவதியையும் உலுக்கி
போட்டது ஆம் அந்த முதிய தம்பதிகளின் மரண செய்திதான் அது செய்தி கேட்டு
அம்மா என பாரதி கூவ ஐயோ அத்தை என அலறினாள் கலாவதி
இரண்டு குடும்பங்களும் உடனே அங்கே செல்ல ஐயரின் வழிகாட்டுதலின் படி
இறுதிசடங்குகள் ஏற்கனவே பங்காளிகளால் ஆரம்பிக்க பட்டிருந்தது கிட்டதட்ட
கொள்ளி வைக்கும் நேரத்துக்கு சென்றபோது யார் கொள்ளி வைப்பது என்ற
தகராறும் நடந்து கொண்டிருந்தது. யாரும் வைக்கவேண்டாம் இதோ இருக்கான்
அவங்க பேரன் என ஸ்ரீதர் ஷியாமை கைகாட்ட
மெல்ல ஷியாமின் அருகில் வந்த பரதன் ஷியாம் இங்க எதுவும் பேசாதே நாங்க
சொல்றபடி செய் நீ இப்போ கொள்ளி போட போறது உன் அப்பாவ பெத்த தாத்தா
பாட்டிக்குதான் அதுவும் உன் அப்பா உயிரோட இல்லை அதனாலதான் எனசொல்ல
அதிர்ச்சி தாங்காது திகைத்து நின்றான் ஷியாம். இயந்திரகதியில் ஷியாமால்
இறுதிச் சடங்குகள் செய்யப்பட்டு பெரியவர்கள் கரையேற்றபட உன் அப்பா உயிரோட
இல்ல என பரதன் சொன்னதில் இருந்து குழப்பத்திலிருந்த ஷியாமோ தனிமை தேடி
தவித்தான்
ஷியாம் உண்மையை தெரிந்து கொள்ள வேண்டிய அந்த நேரமும் வந்தது
இறுதிக்காரியங்கள் நிறைவடைந்த அன்று வந்த அவர்களின் வக்கீல்
பெரியவர்களின் உயிலை படித்தார் அதன்படி அந்த வீடு நிலங்களை விற்று வரும்
பணம் ஷியாமை சேரும் எனவும் நகைகள் பண்ட பாத்திரங்கள் அனைத்தும் விற்று
வரும் பணம் யாவும் தங்கள் மகளான பாரதியை சேருமெனவும்
குறிப்பிட்டிருந்தனர் தாங்கள் உயிரோடு இருந்த போது செய்த தவறுகளுக்கு
கலாவதியிடமும் ஸ்ரீதரனிடமும் மன்னிப்பு கேட்டிருந்தனர் .உயிலை படித்த
வக்கீலோ சார் பெரியவங்க இருந்த போதே எல்லாம் ஏறத்தாழ முடிச்சி
வெச்சிருக்காங்க நீங்க எப்போ கிளம்பரீங்கனு தெரிஞ்சா அதுக்கு
தகுந்தமாதிரி ஏற்பாடு செய்யலாம் என்றார்
அதுவரை எதிலும் கலந்து கொள்ளாமல் அமைதியாக இருந்த ஸ்ரீதரன் வக்கீல்சார்
பத்து நாளைக்குள்ள நாங்க கிளம்பற மாதிரிதான் இருக்கும் நீங்க இதுக்குள்ள
எல்லா ஏற்பாடும் முடிச்சுக்குங்க தம்பிகிட்ட நான் பேசிக்கறேன் அன்று மாலை
ஷியாமிடம் வந்த ஸ்ரீதர் வாப்பா நம்ம அப்படியே நடந்துட்டு வரலாம் என
கூப்பிட அவர் எதோ தன்னிடம் தனியாக பேசவிரும்புகிறார் என புரிந்து
கொண்டவன்
அவருடன் இணைந்து நடக்க துவங்கினான் அந்த ஊரின் ஆற்றங்கரைக்கு வந்த
இருவரும் அமைதியாக ஒரு மரத்தடியில் உட்கார்ந்தனர் மெல்ல பேசத்துவங்கிய
ஸ்ரீதர் என்னப்பா எல்லாம் மர்மமா இருக்கா ? ஆமாம் உங்களை இதுவரைக்கும்
அப்பானு தான் கூப்பிட்டு இருக்கேன் எங்கிட்ட போய் நான் உனக்கு அப்பா
இல்ல அதனால உன் தாத்தா பாட்டிக்கு கொள்ளி வை அப்பிடினு சொன்னா எப்படி
இருக்கும் ? இங்க பாரு ஷியாம் இவளோ உணர்ச்சி வசப்பட கூடாதுப்பா மொதல்ல
என்ன நடந்தது நு தெரிஞ்சுகோ
நான் உங்க அப்பா எல்லாரும் இதே ஊரை சேந்தவங்கதான் உங்கப்பாவுக்கு எல்லா
கெட்ட பழக்கமும் இருந்தது அவனை கண்ட்ரோல் பண்ண முடியாத உங்க தாத்தாவும்
பாட்டியும் கல்யாணம் பண்ணா திருந்திடுவானு நினைச்சாங்க
உள்ளூருல யாரும் பொண்ணு கொடுக்க முன்வாராததால வெளியூர்ல பொண்ணு தேட
ஆரம்பிச்சாங்க அப்போ தெரிஞ்ச தரகர் மூலமா தான் யாருமே இல்லாத அனாதையா
இருந்த உங்கம்மாவ பத்தி தெரிஞ்சு கல்யாணம் பண்ணி வெச்சாங்க உங்கம்மா நல்ல
அழகு மட்டுமில்ல குணவதியும் கூட கல்யாணம் ஆகி கொஞ்ச நாளிலேயே தன் புருஷன
பத்தி தெரிஞ்சுகிட்ட அவங்க அவரை திருத்த முயற்சி பண்ணாங்க நடுவுல கொஞ்ச
நாள் நல்லா போச்சு உங்க அத்தை பாரதிக்கும் கல்யாணம் ஆகி புகுந்த
வீட்டுக்கு போயிட்டாங்க
எனக்கும் சொந்த ஊரிலேயே டீச்சர் வேலை கிடைச்சு வந்தேன் எங்கப்பா உங்க
தாத்தாவோட வயலுல தான் வேலை பார்த்து இருந்திருக்கார் அவர் இறந்ததுக்கு
அப்புறம் எங்கம்மா என்னை இந்த ஊரை விட்டே கூட்டிகிட்டு போய்ட்டாங்க
மறுபடியும் இந்த ஊருக்கு வந்த சந்தோஷத்துல எனக்கும் கல்யாணத்துக்கு
பொண்ணு பாக்க ஆரம்பிச்சிருந்த வேளை அந்த சமயம் எனக்கு ஒரு வரன் கூடி
வந்தது வேற யாரும் இல்லாததால உங்க தாத்தாவை போய் பாத்து பெண் பார்க்க
அழைச்சிட்டு வந்தாங்க
பெண் பாத்து நிச்சயம் வரைக்கும் வந்தது. நிச்சயம் முடிஞ்சு ஊருக்கெல்லாம்
கல்யாண பத்திரிகை வினியோகம் பண்ணிக்கிட்டு இருந்தோம் அப்படி ஒரு நாள்
ராத்திரி வினியாகம் முடிஞ்சு வந்தப்ப உங்கம்மா நடுவழில மயக்கம் போட்டு
விழுந்து கிடந்தத பாத்தேன் உடனே பக்கத்துல்ல இருந்த ஆஸ்பத்திரில
சேத்துட்டு உங்க வீட்டுக்கு தகவல் சொல்ல போனேன் உங்கப்பாவையும் காணாம
உங்க தாத்தாவும் பாட்டியும் தவிச்சுக்கிட்டு இருந்ததால மனசு கேட்க்காம
எங்கம்மாவை உங்கம்மாவுக்கு துணைக்கு வெச்சிட்டு உங்கப்பாவ தேடிப்போனோம்
நானும் உங்க தாத்தாவும் அங்க உங்கப்பா குடிபோதயில கள்ள சாரயத்தை
குடிச்சிட்டு இறந்து கிடந்தார்
அவர் கூட வெளில போன உங்கம்மாவ வீட்டுக்கு போக சொல்லிட்டு வழில பாத்த பழைய
நண்பனோட சரக்கு அடிக்க போயிருக்கார் உங்கப்பா நடுராத்திரில தனியா வந்த
உங்கம்மாவ நாலு ரவுடிங்க துரத்த தப்பிச்சு ஓடி வந்த போதுதான் மயக்கம்
போட்டு விழுந்திருக்காங்க என்ன பார்த்த உடனே ரவுடிங்க ஓடிட்டாங்க
உங்கப்பாவோட இறுதி காரியம் முடிஞ்ச உடனே என் கல்யாணத்தை நடத்த
நினைச்சபோது தான் எனக்கு நிச்சயம் பண்ண பொண்ணு வீட்டுல அந்த பொண்ணுக்கு
கட்டாயபடுத்தி கல்யாணம் பண்ணுற விஷயம் உங்க அத்தை மூலமா தெரிய வந்தது
கல்யாணத்த நிறுத்திட்டேன் இந்த ஊர்லேந்தும் மாற்றலாகி போயிட்டேன்
கொஞ்ச நாள் கழிச்சு உங்க தாத்தா பாட்டிய பாக்க வந்த போதுதான் உங்கம்மா
கர்ப்பமா இருக்கறதும் நான் உங்கம்மாகிட்ட சகஜமா பேசுனத வெச்சு
அவங்களையும் என்னையும் சேத்து வெச்சு உங்க தாத்தா பாட்டி சந்தேக பட்டதும்
தெரிய வந்தது உங்க அத்தை மூலமா புரிய வெக்க முயற்சி பண்ணப்போ பிரச்சனை
பெருசாகி ஊர் பஞ்சாயத்து கூட்டிட்டாங்க
பஞ்சாயத்துல தன் செல்வாக்கை உபயோகபடுத்தி உங்கம்மாவையும் எங்க
குடும்பத்தையும் ஊரை விட்டே தள்ளி வெச்சார் உங்க தாத்தா எங்கம்மாவையும்
கூப்பிட்டு பேசுனதுல எங்கம்மா அந்த பொண்ணு கழுத்துல தாலிய கட்டி நம்ம
வீட்டுக்கு கூட்டிகிட்டு வாடானு சொல்லிட்டாங்க வேற வழி இல்லாம தான் நான்
உங்கம்மா கழுத்துல தாலி கட்டினேன்
நீ பிறந்ததுக்கப்புறம் உன்னை முதல்ல கைல வாங்கினேன் பாரு அன்னையில
இருந்து உன்னை என் மூத்தமகன் நு நினைச்சிருக்கேன் நீ பிறந்து கொஞ்ச
நாளைக்கு அப்புறமா உங்க அத்தை என்ன வந்து பாத்தாங்க அவங்க சொல்லித்தான்
உங்க தாத்தாவோட நல்ல குணம் எனக்கு தெரிஞ்சது
தன் மகனோட சாவினால இந்த சின்ன பொண்ணோட வாழ்க்கை பாதிக்க பட கூடாது நு
நினைச்சிருக்கார் அதுமட்டுமில்லாம அன்னைக்கு துரத்திக்கிட்டு வந்த
ரவுடிங்களால உங்கம்மாவுக்கு எதுவும் ஆகல அப்படிங்கறது தெரிஞ்சது நான்
ஒருத்தன் தான் என்னை தவிர வேற யாரூம் உங்கம்மாவை நல்ல படியா பாத்துக்க
முடியாதுனு தோணி போச்சு அதுனாலதான் எங்கம்மா சம்மததோட இப்படி
செய்திருக்கார் நு தெரிஞ்சது
அதுக்கப்புறம் கலாவுக்கு தெரியாம நானும் போய் உங்க தாத்தா பாட்டிய
பாத்துட்டு வர ஆரம்பிச்சேன் அப்படி ஒருநாள் போயிட்டு வரும்போது தான்
ரோட்டோரம் இருந்த குப்பை தொட்டில ஒரு குழந்தை அழற சத்தம் கேட்டு எட்டி
பாத்தேன் அங்க இருந்த குழந்தைய எடுத்துகிட்டு வந்து கலாகிட்ட கொடுத்து
வளர்க்க சொன்னேன் சந்தோஷமா அவ ஒத்துக்கிட்டதும் என்னை ஒரு கேள்விகூட
கேக்காததும் என் மனசை அசைச்சுடுச்சு கலாகிட்ட எல்லா உண்மையயும் சொல்லி
மன்னிப்பு கேட்டேன் அதுக்கு அமைதியா அவ நீங்க போயிட்டு வரது எனக்கு
தெரியும் என் கோபமெல்லாம் எனக்கு அவங்க மறுமணம் பண்ணிவெக்க நினைச்சதுல
இல்ல அவங்க பிள்ளை பத்தி தெரிஞ்சும் நான் அனாதைங்கற ஒரு காரணத்தால
அவருக்கு கல்யாணம் பண்ணி வெச்சேங்களே அதுதான்.அவங்க பொண்ணா இருந்தா
அப்படி பண்ணி இருப்பாங்களா?அதை கூட மன்னிச்சிருவேன் மறுமணம் பண்ணிக்க
சம்மதிக்கலன போது என் மேல களங்கத்த பூசுனாங்களே அதை என்னால மன்னிக்க
முடியாது சொல்லிட்டா
உங்க மாமா பரதன் உன் தாத்தா பாட்டியோட பொறுப்பை எடுத்துகிட்டார் என் கூட
ஸ்கூலுலதான் அவரும் வேலை பாத்தார் குமாரும் நானும் ஏற்கனவே நல்ல
ப்ரெண்ட்ஸ் இப்போ இங்க உன்னை கூட்டிகிட்டு வந்தது கூட அவங்களுக்கான
இறுதிகாரியம் செய்ய மட்டும்தானே தவிர இந்த சொத்து விஷயத்துல நீ என்ன
முடிவு எடுக்கறயோ அதுக்கு நான் ஆதரவு தருவேன் என சொன்னார்
எல்லாம் கேட்டு பின் யோசனையாக இருந்த ஷியாம் வீட்டுக்கு வந்ததுக்கு
அப்புறம் தெளிந்த முகத்துடன் இருந்தான் பிறகு பரதனை கூப்பிட்டு மாமா
எனக்கு இந்த சொத்து வேண்டாம் என்னைக்குமே எனக்கு அப்பா ஸ்ரீதரன் தான் என
சொல்ல அங்கு வந்த பாரதி தம்பி என் அண்ணன் பண்ண தப்புக்கு எங்க அப்பா
அம்மா என்ன பண்ணுவாங்க அவங்களை நிராகரிக்காதீங்க என சொல்ல அதுவரை
அமைதியாக இருந்த கலாவோ வேண்டாம் பாரதி உங்கப்பா அம்மாவால நான் பட்ட
கஷ்டம் யாரும் படக்கூடாது என் பேருல அநியாயமா களங்கம் சுமத்தினாங்க அதை
இப்பொ கூட நான் மறக்கலை
உங்க அண்ணன் பிள்ளைக்குதான் உன் பொண்ணை குடுக்கனுமுனு நீ நினைச்சா
இப்போவே நம்ம சம்மந்தத்தை முடிச்சுக்கலாம் என சொல்ல சிலையாக நின்றாள்
பாரதி டக்கென்று முன்னே வந்த சக்தியோ போதும் அத்தை எங்க அம்மா
நினைச்சதுல தப்பொண்ணும் இருக்கறதா எனக்கு தெரியல உங்களை மறுமணம்
செஞ்சுக்க வெக்க தாத்தா பாட்டி போன வழி தப்பா இருக்கலாம் ஒருத்தங்க
இறப்போட அவங்கள பத்தின கெட்டத மறந்திடனும் ஆனா நீங்க அத இன்னமும் மனசுல
வெச்சுக்கிட்டு உங்களுக்கு சப்போர்ட்டா இருந்த எங்கம்மாவ பேசிட்டீங்க
இதுக்கு அப்புறமும் நான் உங்க வீட்டுக்கு எப்படி மருமகளா வருவேன்?
ஷியாமை நேருக்கு நேராக பார்த்து நீயும் நானும் காதலிச்சது எல்லாருக்கும்
தெரியும் நான் உன்னை விட்டுட்டு வேற ஒருத்தனை கல்யாணம் பண்ணிக்க மாட்டேன்
அதே சமயம் இனி உங்கம்மா எங்கம்மா கிட்ட தானா வந்து பேசாம உன்னை கல்யாணம்
பண்ணிக்க மாட்டேன் வாங்கம்மா கிளம்பலாம் என இழுத்து சென்றுவிட்டாள்
அம்மா உங்க உணர்வுக்கு மதிப்பு கொடுத்துதான் நான் சொத்து எதுவும்
வேண்டம்னு முடிவெடுத்தேன் மேல நான் பேசி முடிக்கறத்துக்குள்ள அவ ஏன் மா
இப்படி சொன்னீங்க ? என் உயிர் அம்மா அது தெரிஞ்சும் நீங்க இப்படி
பேசுவீங்க நு நான் நினைக்கல எனக்கு நீங்க எவளோ முக்கியமோ அவளும் அவளோ
முக்கியம் இனி நான் உங்க கூட பேசனுமுனா அது சக்திக்கும் எனக்கும்
கல்யாணம் ஆனதுக்கு அப்புறம்தான் இப்போ நான் கிளம்பறேன் என கிளம்பி
விட்டான் விக்கித்து நின்றாள் கலா அவளை சமாதான படுத்தி ஊருக்கு அழைத்து
வருவதற்க்கும் வேலை கிடைத்து ஷியாம் பெங்களூர் செல்வதற்க்கும் சரியாக
இருந்தது
முதலில் முரண்டு பிடித்தாலும் இறுதியில் ஷியாமின் பிடிவாதத்தாலும்
பாரதியின் நல்ல மனதாலும் இளகிய கலா கடைசியில் ஸ்ரீதரின் உடல்நிலையால்
கல்யாணத்துக்கு ஏற்பாடு செய்தார் கல்யாணத்துக்கு பின் ஷியாம் சக்தி
வாழ்வு மலருமா?
தொடரும்
No comments:
Post a Comment