Click here to get all parts |
கெட்டி மேளம் முழங்க மங்கையவள் சங்கு கழுத்தில் மங்கல நாண் கட்டி தன்னவள் ஆக்கி கொண்டான் ஷியாம் . சுற்றி நின்ற பெரியவர்கள் மனம் நிறைந்த வாழ்த்துக்களோடு மங்கல அக்ஷதை தூவினர் ஆனால் மகிழ்ச்சியில் திளைக்க வேண்டிய காதலர்களோ குழப்பத்தில் இருந்தனர்.
விடுமுறை நாள் என்பதாலும் ஷியாமின் நண்பர்கள் சக்தியின் தோழியர் என இளமைப்பட்டாளம் கல்யாண மண்டபத்தை கலகலக்க வைத்து கொண்டிருந்தனர்.
நண்பர்களின் சீண்டல்களுக்கு தக்கபடி பதில் கொடுத்து கொண்டிருந்த ஷியாமின் கண்கள் நொடிக்கொருதரம் சக்தியை வருடி சென்றது. சக்தியின் அருகில் இருந்த சந்தனாவின் விழிகள் இதனை குறும்புடன் நோட்டமிட்டன அவள் ஷியாமின் அருகில் இருந்த சரத்தை பார்த்து சரத் மண்டபத்துல எங்கயோ தண்ணி லீக்கேஜிருக்கு போல வா போய் பார்த்துட்டு வரலாம் என கூப்பிட அவளின் கிண்டலை புரிந்து கொண்ட சக்தியும் ஷியாமும் ஒருவரை ஒருவர் பார்த்து கொண்டனர்.
புரிந்து கொள்ளாத சரத் உண்மையென நம்பி கிளம்பினான்.
உக்காரு சரத் சந்தனா பக்கத்து இலைக்கு பாயாசம் கேக்குறா என வாரினான் ஷியாம் . பதிலுக்கு சந்தனாவோ யாரு நாங்க பக்கத்து இலைக்கு பாயசம் கேக்குரோமா? இங்க உள்ளதுக்கே வழிய காணோமாம் இதுல பாயாசம் வேற கிடைச்சிட்டாலும் என நொடித்தாள்.
அது வரை சுவாரசியமாக உரையாடலை கவனித்த சக்தி விஷயம் புரிந்து ஷியாமின் முகத்தை பார்க்க அவனோ கண் இமைத்து ஆம் என்றான்.
மாலை வரவேற்பும் களைக்கட்டியது, ஒன்று போல சேலை அணிந்து சந்தோஷ முகத்துடன் வளைய வந்தனர். பாரதியும் கலாவதியும் வெள்ளை வேட்டி- சட்டை அணிந்து கம்பீரமுகத்துடன் இருந்தனர்.
ஸ்ரீதரும் பரதனும் என்னம்மா கல்யாணம் உங்களுக்கா இல்ல உங்க பசங்களுக்கா? என குமாரும் சீதாவும் கலாய்தபடி வர அங்கே ஒயாத சிரிப்பலை எழுந்தது.
தாய் தந்தையை கண்ட சந்தனா அவர்களுடன் போய் ஒட்டிக்கொள்ள அப்போது வாசலில்வந்த ஒரு விருந்தாளியை வாசலுக்கே சென்று வரவேற்று கூட்டி வந்தான் சரத்
அந்த பெண்ணை கண்ட மறுகணம் ஸ்ரீதரனின் முகம் இருண்டது .ஸ்ரீதரின் முகம் போன திசையில் பார்த்த கலாவும் பேரதிர்ச்சி அடைந்தார் .சில வினாடிகளிலேயே முகத்தை சமநிலைக்கு கொண்டு வந்த இருவரும் தங்களுக்குள் அர்த்தம் பொதிந்த பார்வை பார்த்துகொண்டனர் .
எதோ வேலை இருப்பது போல மெல்ல நழுவிய ஸ்ரீதரும் கலாவதியும் அந்த பெண்மணி கிளம்பி செல்லும் வரை அவரின் கண்களில் படாமல் கண்ணாமூச்சி காட்டியபடி இருந்தனர். மேடையில் இருந்தபடி இந்த கண்ணாமூச்சி ஆட்டத்தை கண்ட சக்திக்கு மனதில் எதோ விவகாரமாக பட சரத்திடம் வந்தவர் குறித்து விசாரிக்க துவங்கினாள்.
அவர் தானும் ஷியாமும் வேலை பார்க்கும் கம்பெனியின் முதலாளி என்றும் ஷியாமை வாழ்த்தவே வந்ததாகவும் கூறினான். அவர் சென்றவுடன் வெளியே வந்த ஸ்ரீதரன் மற்றும் கலா முகத்தில் தென்பட்ட நிம்மதி இவர்களுக்கு இடையே எதோ ஒன்று உள்ளது என்று சக்திக்கு அறிவுறுத்தியது.
கூட்டம் குறைந்த பின் கலாவதியை தேடி சென்ற சக்தி தான் கண்டது குறித்து கேட்க பதில் சொல்லமுடியாத நிலையில் இருந்த கலாவோ சக்தியிடம் இதோ பாருமா இது உனக்கு தேவை இல்லாத விஷயம் இப்போதான் உன் கழுத்துல தாலி ஏறிருக்கு அதுக்குள்ள தேவை இல்லாம கேள்வி கேக்குற வேலை வெச்சுக்காதே. உனக்கு எது தேவையோ அதை உன்கிட்ட கட்டாயம் நாங்க சொல்லுவோம் என கடிந்து பேச
ஏற்கனவே தன் தாயை கலாவதி கோபித்து கொண்டதிலும் கல்யாணத்தை நிறுத்த சொன்னதிலும் அவர்மீது வருத்ததிலிருந்த சக்தி இப்போ கொந்தளித்து விட்டாள்.
என்ன அத்தை பேசுறீங்க உங்க பையன் எப்போ என் கழுத்துல தாலி கட்டினாரோ அப்பேலேர்ந்து இந்த வீட்டுல நானும் ஒருத்தி . இங்க இனி நடக்கபோற நல்லது கெட்டது எல்லாமும் எனக்கும் தெரியனும். ஒண்ணு நீங்க சொல்லுங்க இல்ல ஷியாம் கிட்ட நான் கேட்டு தெரிஞ்சுக்கறேன். என்று சொல்ல கோபத்தில் இருந்த கலாவோ போம்மா போய் கேளு நீ என்னதான் கேட்டாலும் இதுபத்தி அவன் ஒரு வார்த்தை பேச மாட்டான் என சொல்லி விட்டு விடு விடுவென சென்றுவிட்டாள்.
திருமணம் என்ற பெயரில் இருவரும் ஒன்றாக சேர்ந்த பின்னர் தன்னவனை தனியே சந்திக்க அலங்கார பதுமையென தயாரானாள் சக்தி மனதில் ஆயிரம் குழப்பங்கள்.
இருந்தாலும் அதை பின்னுக்கு தள்ளியபடி ஷியாம் மீது கொண்ட காதலே மனதில் நிறைந்திருந்தது மற்றதை ஒதுக்கிவிட்டு அவனுடன் இல்லறம் நடத்த தயாரானாள். சக்தி உள்ளே வந்த பின் அவள் அழகை அள்ளி பருகியபடி அசையாது நின்றிருந்தான் ஷியாம்.
மெல்ல சுயநினைவுக்கு வந்த ஷியாமிடம் சக்தி தான் மனதில் உள்ளதை பேசத் துவங்கினாள். அவளின் சந்தேகத்தை கேட்ட ஷியாமுக்கோ அதற்கான விடை தெரியாதது அவமானமாய் இருக்க அதை காட்டிக்கொள்ளாது அவளின் கவனத்தை திசை திருப்ப முயன்றான்.
கலாவதியின் வார்த்தைகளின் தாக்கம் ஏற்படுத்திய விளைவால் ஷியாம் தன்னிடம் இருந்து விஷயத்தை மறைப்பதாகவே நினைத்தாள் சக்தி. அதன் விளைவு அங்கே அவர்களுக்குள் வாக்கு வாதம் மூண்டது.
போதும் ஷியாம் வந்ததுலேந்து கேக்குறேன் எனக்கு சரியா பதில் சொல்லாம நீங்க நடந்துக்கறது நல்லா இருக்கா?
ஏன் சக்தி டென்ஷன் ஆகுறே ? இதுல என்ன இருக்கு ? இன்னைக்கு நமக்கு முதலிரவு. எத்தனை நாளா உன்னை கல்யாணம் பண்ணனும்னு கனவு கண்டு இன்னைக்குதான் அது நடந்திருக்கு. இப்பொ நம்ம வாழ்க்கைய பத்தி பேசுரத விட்டுட்டு சும்மா சும்மா தேவை இல்லாதத பத்தி பேசிகிட்டு இருக்குறே? என ஷியாம் கேட்க
ஷியாம் உங்கம்மாவும் இத எனக்கு தேவை இல்லாத விஷயம் நு சொன்னாங்க. நீங்களும் இப்பொ அப்படியே சொல்லறீங்க எப்போ நான் உங்களுக்கு பொண்டாட்டியானேனோ அப்பவே நம்ம குடும்பத்துல நடக்குற நல்லது கெட்டதுக்கு எனக்கும் பங்கு உண்டு. பீளிஸ் ஷியாம் சொல்லுங்க என்ன நடக்குது யார் அவங்க? அவங்கள பாத்த உடனே ஏன் அத்தையும் மாமாவும் பயப்படனும் என சக்தி கெஞ்ச அவளின் தீவிரத்தை உணர்ந்த ஷியாம் அவளை அமர வைத்து பேசத்துவங்கினான்.
சக்தி நீ இதுல இவளோ தீவிரமா இருப்பேனு நான் நினைக்கல. அவங்களுக்கும் நம்ம குடும்பத்துக்கும் என்ன சம்மந்தம்னு எனக்கு தெரியாது.
ஆனால் அதை அம்மா அப்பாகிட்ட கேக்க முடியாது எங்கம்மாவை பொறுத்த வரைக்கும். அவங்க விருப்பபடலேனா தலைகீழா நின்னா கூட அவங்க வாயிலிருந்து விஷயத்த வாங்க முடியாது. அப்பாவோ அம்மா பேச்சை மீறி எதுவும் செய்யமாட்டார். கொஞ்சம் பொறுமையா இரும்மா எல்லாத்தையும் கண்டுபிடிக்கலாம் அதுக்கு உனக்கு என்ன உதவி வேணுமுனாலும் நான் செய்யறேன் என உறுதியளித்தான்.
மறுநாள் காலை விழித்து எழுந்த ஷியாம் தன் பக்கத்தில் கண்டது காலி படுக்கையை தான் அவனுக்கு முன்னாடியே எழுந்து வந்த சக்தியை எதிர் கொண்டது கலாவதியும் பாரதியும் தான் முந்தைய நாள் நடந்த வாக்கு வாதங்களின் சுவடு எதுவும் இன்றி மலர்ந்த முகத்துடன் இருந்த கலாவதியை பார்த்த சக்தி ஆச்சரியப்பட்டாள்.
கலைந்த தலையும் சேலையும் ஆயிரம் கதைகள் சொல்ல அனுபவபட்ட தாய்மாரோ தங்கள் மக்களின் வாழ்வு மலர்ந்து விட்டதை புரிந்து கொண்டனர்.
தன் தாயின் முகத்துக்கு இணையாக கலாவதியின் முகமும் மலர்ந்திருப்பதை கண்ட சக்தி அவரின் கோபம் போய் விட்டதை உணர்ந்தாள்.
சக்தி போய் குளிச்சிட்டு சாமி கும்பிட்டு விளக்கேத்திட்டு வாம்மா என பாரதி சொல்ல இரு பாரதி இன்னமும் பொழுது விடியல இங்க பாரு பனி எப்படி கொட்டுதுனு. போம்மா போய் முகம் கை கால் கழுவிட்டு வந்து காபி குடிசிட்டு வா வெந்நீர் ரெடியானதுக்கப்புறம் குளிக்கலாம். ஷியாம் எழுந்திருசிருந்தா அவனுக்கும் காபி எடுத்துட்டு போ என சொல்லியவாறே அவ்விடம் விட்டு நடந்தார் கலா.
குளித்து முடித்து பூஜை அறையில் விளக்கேற்றிவிட்டு வந்த சக்தியை தேடி வந்த ஷியாம் சக்தி வேலைக்கு எத்தனை நாள் லீவு போட்டுருக்க என வினவினான்.
இல்ல ஷியாம் கல்யானத்துக்கு முன்னாடியே நான் வேலைய ரிசைன் பண்ணிட்டேன்.
எனக்கு அந்த வேலை செட் ஆகலை இனிமேதான் வேற வேலைதேடணும் உனக்கு சொல்லாம செஞ்சுட்டேன் பா தப்பா எடுத்துக்காதே
ஹே ஆங்ரி பேர்ட் இதுக்கெல்லாம் கோச்சுக்குவேனா நான் .
என்னது ஆங்ரி பேர்ட் ஆ எப்பொலேர்ந்து இந்த பட்ட பேரு வெச்ச ஷியாம் என சக்தி வினவ அத்தையும் அம்மாவும் சண்டை போட்ட உடனே அதுக்கு என்கிட்ட பேசம இருந்த பாரு அதுலேருந்துதான்.
வரலாமா என குரல் கொடுத்துகொண்டே அங்கே வந்தாள் சந்தனா போச்சுடா என முணுமுணுத்து கொண்டே வாம்மா சைரன் எங்க இந்த பக்கம் வந்தே இது உனக்கு நடுராத்திரி ஆச்சே என ஷியாம் கேட்க இங்க பாரு சக்தி உன் புருஷன் கிட்ட சொல்லிவை எப்போ பாரு என்ன சைரன் சைரன்நு கூப்ப்ட்டுகிட்டு இருக்கான். அப்புறம் இதுக்கும் சேத்து பின்னாடி வருத்தபட வேண்டிருக்கும் என கொதிக்க அது நடக்குறப்ப பாத்துக்கலாம். இப்போ நான் கேக்குற கேள்விக்கு பதில் சொல்லு எங்க இந்தபக்கம் காலங்காத்தால காத்து வீசுது என மறுபடியும் ஷியாம் கலாய்க்க, அத நான் சொல்றேன் ஷியாம் என்றபடி ஆஜரானான் சரத்.
குட்மார்னிங் அண்ணி ஒரு நிமிஷம் வந்து ஷியாம் பக்கத்துல நில்லுங்க என சேர்த்து நிக்க வைத்து விட்டு அவர்கள் கைகளில் இருவரும் சேர்ந்து ஒரு கவரை திணித்தனர். அதை கையில் வாங்கிய ஷியாமும் சக்தியும் பிரித்து பார்க்க அவர்கள் சென்னையிலிருந்து மதுரை வரை விமானத்தில் போய் வரவும் மதுரையிலிருந்து கொடைக்கானல் செல்ல அங்கு தங்க , ஊர் சுற்ற உண்ண என அனைத்து வசதிகளும் கொண்ட ஹனிமூன் செல்வதற்க்கான பேக்கேஜ். அதுவும் இன்றே கிளம்ப ஏற்பாடு செய்திருந்தனர்.
அதை கண்டு திகைத்த முகத்துடன் நிமிர்ந்த ஷியாமை கண்டு குறும்பாக நகைத்த சந்தனா இப்போ ஏன் தெரியுதா என் காத்து இந்த பக்கம் வீசிச்சுனு ?
அப்பொ இது உன் வேலையா ? என ஷியாம் கேட்க இது என் வேலை மட்டுமில்ல உன் தம்பியும் இதுல பார்ட்னர் அதுனால எங்கள மொறைக்காம காலா காலத்துல கிளம்பற வழிய பாருங்க என சந்தனா விரட்ட, இல்ல அத்தை மாமா கிட்ட சொல்லாம எப்படி என சக்தி தயங்க அங்கு வந்த கலாவும் ஸ்ரீதரும் எங்க ரெண்டுபேருக்கும் சொல்லிட்டு தான் அவங்க இத ஏற்பாடு பண்ணாங்க ஸோ போய் தயக்கமில்லாம கிளம்புங்க என சொன்னார்கள்.
யாருக்கிட்ட என கெத்து காட்டியபடியே சந்தனா சிரிக்க இளையவளின் குறும்பை ரசித்தபடியே அந்த இடம் விட்டு நகர்ந்தனர் மூத்த தலைமுறையினர்.
சரி வா சக்தி ரெடியாகி வரலாம் என கூப்பிட்ட படியே சென்றான் ஷியாம்.
எல்லாம் வருவா நீ முன்னாடி போ இந்தோ இப்போ அனுப்பிவைக்குறேன் என் சந்தனா சொல்ல சிரித்தவாரே நகர்ந்தனர் ஷியாமும் சரத்தும்.
அவர்கள் சென்றபின் தன் தோழியை சீண்ட எண்ணி ஆமா நாங்க இங்க வந்த போது யாரோ ஆங்ரி பேர்ட தேடிக்கிட்டு இருந்தீங்களே நீயும் சக்தியும் எங்கே பா ? என கேட்டாள் தனக்கு தன் கணவன் வைத்த செல்ல பெயரை சொல்லி தன் தோழி கிண்டல் செய்ய வெட்கத்தால் முகம் சிவந்த சக்தியோ சொல்ல மாட்டேன் போடி என சொல்ல. இப்போ நீ சொல்லல ஆள் வெச்சு அடிப்பேன் தெரியுமில்ல?
ஹாங் எல்லாம் தெரியும் போடி இந்த வீட்டுல உன் கையாள் யாருனு எனக்கு தெரியும் ஆளு வெச்சு அடிக்கற முகரய பாரு உன் ஆளு அதுகெல்லாம் சரிவர மாட்டாரு என சக்தி சொல்ல இப்போது முகம் சிவப்பது சந்தனாவின் முறை ஆயிற்று.
வெட்கத்தில் சிவந்த தன் தோழியின் முகத்தை பார்த்த சக்தியோ ஹனிமூன் முடிச்சுட்டு வந்து உன்னை வெச்சு செய்யறேன் சந்து என ராகம் பாடிவிட்டு சென்றாள் இவர்கள் நினைத்ததெல்லாம் இனிதே நடக்குமா? பொறுத்திருந்து பார்ப்போம்.....
தொடரும்..
No comments:
Post a Comment