This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License. Readers dont try to copy the content here.

Monday, 14 January 2019

Bhuvana's இளம் தென்றல் 11



Click here to get all parts
ஸ்கூலில் ஒரு பகுதியில் குழந்தைகள் விளையாட  என்று ஒரு பூங்கா அமைக்க முடிவெடுத்திருந்தான் வருண். 
அதற்கான கட்டுமான பணிகளுக்காக சிலரை நியமித்து  விட முடிவெடுத்தான்.

ஏற்கனவே ஸ்கூலுக்கு காக என்று ஒரு கட்டுமான பணிகளுக்காக ஒரு குரூப் இருந்தது, ஆனால் பாண்டியன் மூலம் வந்தது என்று தெரிந்ததும் அவர்களை இந்த பணி செய்ய அனுமதிக்கவில்லை வருண். 
அதனால் புதிய ஒரு குரூப்பை ஏற்பாடு செய்தான். பாண்டியனை எதிலும் சேர்க்காமல் வேலைகளை செய்ய தொடங்கினான். 

இதில் அந்த மேஸ்திரி வேலுவுக்கு வருண் மேல் கோபம் இருந்தது. 
மேஸ்திரி வேலு ஒன்றல்ல இரண்டல்ல பல முறை வந்து பேசியும் வருண் இந்த வேலையை அவனிடம் கொடுக்க மறுத்தான். 

கடைசியில் பாண்டியனிடம் போய் நின்றான் மேஸ்திரி வேலு. 

" சார் உங்களுக்காகத்தான் நான் பொறுமையா போறேன், இல்லன்னா அவனை நான் ஒரு வழி பண்ணிடுவேன்  ரொம்ப ஓவரா தான் பண்றான்.

அவன் இப்பதான் ஸ்கூல் பொறுப்பை ஏற்றுக் இருக்கான், ஆனால் நான் முதலிருந்தே ரவுடி, அப்புறம் தான் இந்த கட்டுமான பணி எல்லாம். சொல்லி வைங்க இல்ல கையை காலை எடுத்து விடுவேன்" என்று கூறினான். 

மேஸ்திரி வேலு பேசப்பேச அமைதியாக இருந்தான் பாண்டியன். 
"சார் நான் இவ்வளவு சொல்றேன் நீங்க கம்முனு இருக்கீங்க ,நான் சும்மா எதையும் சொல்லலை சார், உண்மையா தான் சொல்றேன்".என்று கோபம் குறையாமல் சூளுரைத்தான். 

"சரி உன்னால் முடிந்ததை செய்," என்று அலட்டிக் கொள்ளாமல்  சென்றுவிட்டான் பாண்டியன். 

ஆனால் பாண்டியன் மனதில் வன்மமாக சிரித்துக்கொண்டான், தான் இப்படி அவனை சட்டை செய்யாமல் வந்ததே  ,அவன் இன்னமும் கிளப்பிவிட்டு இருக்கும் .தான் செய்ய நினைத்ததை அவன் செய்வான் என்ற திருப்தியுடன் வெளியேறினால் பாண்டியன். 

தற்செயலாய் அந்த பக்கம் வந்த வருணி ரெண்டு பேரும் அந்த அறையிலிருந்து பேசிக் கொண்டிருந்ததையும் அவர்கள் இருவரும் அறையிலிருந்து வெளி வருவதையும் பார்த்தாள். 

தன்னை அவர்கள் பார்க்காத வண்ணம் ஸ்கூல் வராண்டாவில் உள்ள தூணின் மறைவில் நின்று கொண்டாள். 

சிறிது நேரத்துக்கு முன்பு வரை வருணிடம் கெஞ்சி கொண்டு இருந்துவிட்டு இப்போது ரூமே அதிரும் வண்ணம் அவன் பேசியது ஒரு சின்ன குழப்பத்தை உண்டு பண்ணியது. 

'ஏதாவது problem செய்வானோ!' என  நினைத்தாள். 

ஆனால் இவர்கள் பேசுவார்கள் எதுவும் ஆகாது என்று அஜாக்கிரதையாக இருந்து விட்டாள் விட்டாள். 

"தான் கண்டது மேஸ்திரிதான், நான் ஏய் நில்லு, என்பது குள்ள அவன் என்னை பார்த்தவுடன் சென்றுவிட்டான் அப்பா" என்று கூறினால் வருணி. 

பாலாவுக்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை. 

வருணிடம் சொல்ல வேண்டுமா? இல்லை சந்திரசேகரிடம் சொல்ல  வேண்டுமா?

ஆனால் அப்போதே தன்னை தனியாக அழைத்து பாண்டியன் சரி இல்லை என்று கூறியிருந்தார்  சந்திரசேகர். அவனால் பிரச்சனை வராதபடி பார்த்துக்க  சொன்னார். ஆனால் பாண்டியன் உயிருக்கே குறி வைக்கிறான். 
பாண்டியன் தான் செய்தானா இல்லை மேஸ்திரி வேலு உடைய கொலை முயற்சியா என்று தெரியாமல் குழம்பினார். 

முதலில் தான் செய்ய வேண்டிய வேலைகளை ஒவ்வொன்றாக செய்யத் தொடங்கினார். 
முதலில் சந்திரசேகருக்கு விஷயத்தைக் கூறினார்..  தந்தை ஆயிற்றே மனம் துடித்தது ,ஆனால் அவரால் வரதான் முடியவில்லை. விமான டிக்கெட் கிடைக்க தாமதம் ஆனது.

ஆனால் பாலநாதன் இருந்தது அவருக்கு பெரும் ஆறுதலாக இருந்தது.

தான் வரும் வரை வரை வருணனை பார்த்துக் கொள்ளும்படி கூறினார். தனக்கு தெரிந்த போலீசை வைத்து அந்த மேஸ்திரியை பிடிக்க வழி செய்தார்.

அதுமட்டுமில்லாமல் வருணனுக்கு பாதுகாப்பு கொடுக்க ஏற்பாடு செய்தார். வெளிநாட்டில் இருந்து கொண்டு அனைத்து விஷயத்தையும் முடித்து விட்டார் சந்திரசேகர். பாலாவுக்கு பெரும் நிம்மதியாக இருந்தது.

ஹாஸ்பிடலில் வருணுக்கு உணவு சமைக்க என்று லட்சுமி அம்மாவும் சுமதியும் சென்றுவிட ,பாலா போலீஸ் ஸ்டேஷனில் கம்ப்ளைன்ட் செய்ய செல்வதாக செய்ய செல்வதாக வருணி இடம் கூறிச் சென்றார்.
தான் வரும் வரை வருணனை பார்த்துக் கொள்ளும்படி கூறினார். ரூமில் வருணி வருண், வித்யா மூவரும் அமைதியாக இருந்தனர்.

அமைதியை கலைத்தாள் வித்யா "என்ன சார் கண்ணு முழிச்சதும் என்ன ஒரு வழி பண்ணிட்டு இப்ப திருப்தியா ஒங்களுக்கு, "என்றாள்.

" நீதான் அம்மா சொன்ன நான் ரொம்ப வெயிட்டா இருக்கேன்னு அதான் உனக்கு ஜூஸ் கொடுக்க சொன்னேன் சொன்னேன்" என்று சிரித்துக் கொண்டே கூறினான். 

"ஓ, அப்படியா நான் மட்டுமா சுமந்தேன் என் அக்காவும் தான் சுமந்தா அவளுக்கு" என்று சைகை செய்தாள் வித்யா. 

"ஆமால்ல" என்று வருணிடம் பார்வையைத் திருப்பினான்.

சிவனே என்று அமர்ந்திருந்த வருணி ஐயையோ அங்க சுத்தி இங்க சுத்தி என்னிடம் வந்து விட்டானா என்று நினைக்கும் நிமிடம் நர்ஸ் வந்து ஒரு சீட்டை வருணியிடம் நீட்டி "இதுல இருக்கிறத வாங்கிட்டு வாங்க அம்மா எல்லாம் வேணும்" என்று சென்றுவிட்டார். 

அப்பாடா தப்பித்தோம் என்று ஓட நினைத்தவளை வித்யா நிறுத்தினால் "அக்கா நீ இரு, நான் வாங்கிட்டு வரேன், இந்த ரூமிலேயே இருந்து இருந்து இருந்து போரடிக்குது".என்று சீட்டை வாங்கிக் கொண்டு கொண்டு வெளியேறினாள். 

எப்போதும் இல்லாத அவளது அமைதி வருணுக்கு புதிதாய் இருந்தது. அவனே பேச்சை தொடர்ந்தான் "இம் அப்புறம் சொல்லுங்க" என்றான். 

"என்ன சொல்ல" என்று எதுவும் தெரியாத மாதிரி கேட்டால் வருணி. 

"நான் பார்த்தேன் வருணி, நீ உங்க அப்பாவை தனியா கூட்டிட்டு போனதையும் ,ஆக்சிடென்ட் நடந்தப்ப அந்த வேலுவை நீ, கூப்பிட்டதும் பார்த்தேன். எனக்கு அடிபட்ட அப்ப நீ எனக்காக கஷ்டப்பட்டதெல்லாம் நான் பார்த்தேன். என்ன தான் உனக்கு பிடிக்காதே வருணி, அப்புறம் ஏன் என்ன காப்பாத்தின?" என்று அவளையே பார்த்தான் வருண். 

"அப்படியெல்லாம் ஒன்னும் இல்ல" என்றால் வருணி. 

"அப்போ என்ன உனக்கு பிடிக்குமா ?இதுநாள் வரை ஒன்னு நீ என்ன முறைப்ப, இல்ல திட்டுவ  ஆனா இன்னிக்கு உன் கண்கள் வேற சொல்லிச்சு வருணி என்னது அது?"

"நீங்க என்ன சொல்ல வர்றீங்கன்னு எனக்கு புரியல ப்ளீஸ் இப்ப நீங்க ஓய்வெடுங்க மனதில் கண்டதையும் போட்டு குழப்பிக்காதீங்க" என்றாள். 

No comments:

Post a Comment

எழுத்தாளர்கள் கவனத்திற்கு

இந்த தளத்தினில் உங்களது படைப்புகளையும் இடம்பெறச் செய்ய விரும்பினால், rheamoorthy6@gmail.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் செய்யவும்.