This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License. Readers dont try to copy the content here.

Tuesday, 22 January 2019

Bhuvana's இளம் தென்றல் 12


காதல் ஒரு மனிதனை  என்னவெல்லாம் செய்யும், காதல் ஒரு சாம்ராஜ்ஜியத்தையும் அழிக்கும்,
அதே காதல் ஒரு சாம்ராஜ்யத்தையும் உருவாக்கும் என்பது எவ்வளவு பெரிய உண்மை என்று அதை உணர்ந்தவர்களுக்கு மட்டுமே  தெரியும். 

சிலர் இருப்பார்கள் காதலுக்காக தன் சொந்தங்களை இழந்து.
பலர் இருப்பார்கள், சொந்தங்களுக்காக தன் காதலை இழந்து. ஆனால் வாழ்வில் வந்த முதல் காதலை மனதோடு மறைத்து அதனோடே வாழ்நாள் முழுவதும்  அதை பொக்கிஷமாய் பாதுகாத்துக் கொண்டு  வாழ்வது ஒரு சுகம். 💐💐💐💐💐💐💐💐

" நான் என்ன சொல்றேன் என்று உனக்குப் புரியலையா?, சரி நான் நேரடியா சொல்றேன் நான் உன்னை விரும்புகிறேன் போதுமா".என்றான்.

"என்ன" என்று தன் காதுகளில் கேட்டது உண்மைதானா என்று அவளுக்கு சந்தேகம் எழுந்தது. 

"நான் சொன்னது உன் காதுல விழாலையா ஐ லவ் யூ" என்று கூறினான்.

" என்ன பாத்தா எப்படி தெரியுது உங்களுக்கு, என்னை எத்தனை நாளாய்  தெரியும், பார்த்த கொஞ்ச  நாளிலேயே என்ன விரும்புகிறேன் என்று  சொல்றீங்க, முதல ஒரு பொண்ணுகிட்ட எப்படி பேசணும்னு தெரிஞ்சிக்கோங்க. 

"ஆமா தெரியாம தான்  கேக்குறேன் உங்களுக்கு என்ன தகுதி இருக்குன்னு விரும்புகிறேன் சொல்றீங்க". என்று வருணிக்கு கண்ணு மண்ணு தெரியாமல் கோபம் வந்தது. 

கோபம் என்பது ஒரு நல்ல மனிதனின் மனதையும் ,மூளையையும் மழுங்க செய்யும் என்று பள்ளி  குழந்தைகளுக்கு பாடம் எடுத்த வருணியே அதை மறந்தாள். 

கோபத்தில் தான் என்ன பேசுகிறோம் என்று தெரியாமல் வாய்க்கு வந்ததையெல்லாம் கூறினால்.
வருண் முதலில் தடுமாறினாலும் அவளை பேச விட்டான். 

தன்னைப் பற்றி அவள் என்னதான் நினைக்கிறாள் என்று கேட்க நினைத்தான். 

" தகுதியா இதை விட என்ன தகுதி வேண்டும், நான் நல்லா படிச்சு இருக்கேன், பணம் எல்லை இல்லாமல் இருக்கு, நான் என்ன  நினைத்தாலும் செய்யும் திறமை இருக்கு, இதற்கெல்லாம் மேலாக நான் அழகா இருக்கேன் என்றும் என் ஃப்ரெண்ட்ஸ் எல்லாரும் சொல்லுவாங்க, எந்தப் பெண் என்னைப் பார்த்தாலும் என் கூட பேசணும் பழகணும் தான் நினைப்பாங்க இதற்கு மேல என்ன தகுதி வேண்டும் எனக்கு" என்று கேட்டான். 

" பணத்திமிர் வருண் இது. காதல் இல்லை, பணத்தையும், அழகையும், அந்தஸ்தையும் வைத்து மற்ற பெண்களை நீ வாங்கலாம். ஆனா என்ன  இல்ல. எனக்குனு ஒரு கொள்கை இருக்கு, அதை எக்காரணம் கொண்டும் என்னால் மீற முடியாது" என்று கூறினாள்.

" எனது கொள்கையா" என்று வியப்பாக கேட்டான். சரி அது இருக்கட்டும், பணத்திமிர் அது எங்கே இருந்து வந்தது வருணி. " என்று புரியாமல் கேட்டான். 

" ஆமா வருண், திமிர் இல்லன்னா நீ என் கிட்ட பர்மிஷன் வாங்கி இருப்பேன், ஆனா நீ சொன்னது information. 

பர்மிஷன்னுக்கும், இன்ஃபர்மேஷன் நிறைய வேறுபாடு இருக்கு. " என்று கூறினாள்.

அப்போதுதான் வருணுக்கு தான் செய்த தப்பு புரிந்தது. 

அவசரமாக" இல்ல, இல்ல வருணி நான் அப்படி எதையும் நினைத்து கூறவில்லை. எனக்கு எப்படி சொல்றதுன்னு தெரியல, இந்த சினிமால வர மாதிரி மாதிரி வர மாதிரி மாதிரி எல்லாம் எனக்கு சொல்ல தெரியல, என் மனசுல பட்டத தான் தான் நான் கேட்டேன். தப்பான வார்த்தைகளை நான் சொன்னாலும் நான் சொல்ல வந்தது, ஐ லவ் யூ மட்டும் தான் ,அதை புரிஞ்சுக்கோ. " என்று கூறினான். 

" ஐயோ, சும்மா சும்மா அதையே சொல்லாதீங்க. நான் யாருக்கும் எதுக்காகவும் இல்லை என்று சொல்ல மாட்டேன். என்னால முடிஞ்சதை செய்ய தான் நினைப்பேன். ஆனா உங்ககிட்ட திரும்பத் திரும்ப திரும்ப நான், இல்லை என்ற வார்த்தையை சொல்கிறேன். ப்ளீஸ் இனி விரும்புகிறேன் என்று வார்த்தையை என் கிட்ட சொல்லாதீங்க "என்று கூறினாள்.

" சரி சரி நான் சொல்ல, ஆனா இப்போதைக்கு மட்டும்தான்". என்றான். 

அவன் சொல்லி முடிக்கவும் வித்யா வரவும் சரியாக இருந்தது. அவள் உள்ளே நுழைந்ததும் இரண்டு பேரும் அமைதியாயினர். சிறிது நேரம் பார்த்து விட்டு வித்யா" என்ன பூஜை நேர கரடி ஆகிவிட்டேனா" என்று கூறினாள். 

"இல்லம்மா, உள்ளே வா" என்று சிரித்துக்கொண்டே கூறினான் வருண். 

வருணி தனது கோபத்தை மறைக்க முயன்று கொண்டிருந்தாள் ஆனால் முடியவில்லை வித்யா அவளது தங்கையாயிற்றே அவளால் விரைவாக கண்டுபிடிக்க தங்கையாயிற்றே அவளால் விரைவாக கண்டுபிடிக்க அவளால் விரைவாக கண்டுபிடிக்க முடிந்தது.

" சரி இப்போது எதுவும் கேட்கக் கூடாது" என்று அமைதி காத்தாள் வித்யா. 

" சரிக்கா நான் இந்த மாத்திரைகளை எல்லாம் நர்சிடம் கொடுத்துட்டு வந்துடறேன்" என்று சென்று விட்டாள். 

அவள் சென்ற சிறிது நேரத்தில் எல்லாம் மாத்திரை சாப்பிட நேரம் என்று வருணி மாத்திரையும் மாத்திரையும் வருணி மாத்திரையும் தண்ணீரும் தந்தாள் வருணுக்கு. 

அவளைப் பார்த்துக்கொண்டே மாத்திரை மாத்திரை போட்டதும் வருணுக்கு புரை ஏறியது. 

" அய்யய்யோ" என்று வருணி அவன் தலையில் தட்டி விட்டாள். 

வருண் அவளைப் பார்க்க பார்க்க, வருணி அமைதியாக தன் வேலையை பார்க்க, அதேநேரம் பாண்டியன் அந்த அறை கதவை திறந்தான் திறந்தான் கதவை திறந்தான் திறந்தான். 

அவன் கண்ட காட்சி அவன் மனதை உறைய வைத்தது ஏனென்றால், அவன் எத்தனை முறை அவளிடம் தன் மனதை கூறியும் கூறியும் தன்னை நிமிர்ந்து கூட பார்க்காமல் சென்று விடுவாள். நிறைய முறை அவமதித்தும் இருக்கிறாள்.
ஆனால் நேற்று வந்தவனுடன் சேர்ந்து கொண்டாலே என்று கோபம் வருணி மீது இருந்தது. இந்த காட்சி அந்த எண்ணத்தில் நெய்யை ஊற்றியது பாண்டியனுக்கு. 

பாண்டியனை பார்த்ததும் வருணி சற்று தள்ளி நின்றாள். 

வருணின் நிலை கண்டு மனதில் சிரிப்புமாக, முகத்தில் சோகமாக நலம் விசாரித்தான் பாண்டியன்.

" என்ன வருண், எப்படி ஆச்சு, எனக்கு ஒரு போன் பண்ணி இருக்கலாமே நான் என்னன்னு பார்த்திருப்பேன் இல்லை"என்று ஒன்றும் தெரியாத மாதிரி விசாரித்தான். 

"ஓ அப்படியா" என்று ஆச்சரியமாக வினாவினான் வருண். 

" பரவாயில்ல பா, இதுவரைக்கும் பார்த்து கிட் வாங்களே, நல்லாதான் பார்த்துக்கிட்டாங்க. உனக்கு எதுக்குபா சிரமம்". என்றான் வருண். 

" அதான் பார்த்தாலே தெரியுதே" என்று கண்கள் சிவக்க வருணியை பார்த்தான். 

அவன் பார்த்த பார்வையும் கூறிய வார்த்தையும் வருணுக்கு சில சந்தேகங்களை உருவாக்கியது. 

" சரி வருணியிடம் கேட்டுக்கலாம்" என்று அமைதியாய் பாண்டியனை இங்கிருந்து அனுப்ப நினைத்தான் வருண். 

அவன் வருணியை பார்ப்பது வருணுக்கு பிடிக்கவில்லை. 

அதனால்" பை த வே ,போலீசுக்கு தகவல் சொல்லியாச்சு இப்போ கொஞ்ச நேரத்துல போலீஸ் வருவாங்க, நீ கவலைப்படாத பா" என்று மர்ம புன்னகையுடன் கூறினான் வருண். 

இனிமேல் வருண் ஆடும் ஆட்டத்தை தாங்குவானா பாண்டியன்???? 

No comments:

Post a Comment

எழுத்தாளர்கள் கவனத்திற்கு

இந்த தளத்தினில் உங்களது படைப்புகளையும் இடம்பெறச் செய்ய விரும்பினால், rheamoorthy6@gmail.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் செய்யவும்.