This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License. Readers dont try to copy the content here.

Monday, 28 January 2019

Bhuvana's இளம் தென்றல் 13

ஆயிரம் நிலவு வந்தாலும் ஒரு சூரியனை மறைக்க முடியாது, அதேபோல ஆயிரம் சூரியன் வந்தாலும் ஒரு வெண்ணிலவின் குளிர்ச்சியைத் தந்து விட முடியாது.


காதலும் அப்படி ஒரு உணர்வுதான் ஒருவர் வேண்டும் என்றாலும் சரி, வேண்டாம் என்றாலும் சரி, அதன் வேலையை காட்டத் தான் செய்யும்.... காதல் இன்பமான ஒரு துன்பம்....🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹.


இப்படியே ஒரு வாரம் சென்று விட்டது. 


அதற்குள் வருணின் அப்பா, அம்மா என்று அனைவரும் வந்து விட்டனர்.
அவர்கள் அனைவரையும் வருண் பேசியே சமாளித்தான். 


பாலாவுக்கும் ,சுமதிக்கும் நன்றி கூறினார் சந்திரசேகர். தன் மகனை தன்னைவிட நல்லபடியாக பார்த்துக் கொண்டனர் என்ற திருப்தி அவருக்கு. 


கல் மனதாய் இருந்த சரளாவே கலங்கிப் போய் விட்டார். என்ன செய்வது பெற்றமனம் ஆயிற்று. 


சந்திரசேகர் மேஸ்திரி வேலுவை போலீசில் பிடித்துக் கொடுத்து விட்டார். அவனை அடித்து விசாரித்தாலும், அவன் பாண்டியன் பெயரை கூறவில்லை. 


ஆனால் அனைவருக்கும் அதில் ஒரு சிறு சந்தேகம் இருந்துகொண்டே இருந்தது.  இந்த வேலையை பாண்டியன் செய்ததாக இருக்குமோ  என்று.


வருணி வேலுவை அடையாளம் காண்பித்தாள் போலீஸிடம். 


வேலு வருணி மீது வன்மம் கொண்டான். தன்னைப் பிடித்துக் கொடுப்பதற்காக தன் மனதுக்குள், " உன்னை விடமாட்டேன், என்னைக்காவது நீ என் கையில மாட்டுவ" என்று கூறிக் கொண்டான். 


சந்திரசேகர் வருணை சென்னை வர சொன்னார். பிரச்சனை வேண்டாம் என்று கூறினார். 


"அப்பா நானா எதையும் செய்யல ,இது தற்செயலாக  கூட நடந்திருக்கலாம்  இல்ல..." என்று தன் அப்பாவை சமாதனப்படுத்த நினைத்தான். 


" எனக்கு தெரியும் வருண், இது என்னை சமாதானம் செய்ய நீ கூறும் வார்த்தைகள் என்று, ஆனாலும் சொத்து ,கௌரவம் அது எல்லாத்தையும் விட நீ எங்களுக்கு முக்கியம்." என்றார். 


" இல்லப்பா நான் பாத்துக்குறேன் எனக்கு துணையா பாலா சார் பேமிலி இருக்கு, அப்புறம் என்ன வேணும்.
வேணும்னா நான் என் ஃப்ரெண்டு ராமை கூப்பிட்டுக்கிறேன். போதுமாப்பா?" என்று தந்தைக்கு ஆதரவாக பேசினான். 


ராம் வருணின் சிறுவயது தோழன், இருவரும் ஒன்றாய் ஸ்கூல் ,காலேஜ் என்று பழகியவர்கள். 


ஆனால் ராம் வசதியில் குறைவானவன் ஸ்கூல் ,காலேஜ் என்று அனைத்தும் ஸ்காலர்ஷிப்பில் படித்தவன் .நல்ல மதிப்பெண்கள் எடுத்ததனால் சந்திரசேகரின் பள்ளிகளில் ஒன்றில் பணியில் சேர்ந்தான். 


என்னதான் தன்னுடைய அப்பாவின் பள்ளியில்  வேலைக்கு சேர்ந்தாலும், இளமைக்கால நட்பால் இன்று வரை இருவரும் நல்ல நண்பர்களாகவே இருந்தனர்.


சந்திரசேகர் யோசித்தார்... ராம் நல்ல பையன், தனக்கும் வருணுக்கும் உண்மையாய் இருப்பான், என்று தோன்றியதால் அதற்கு ஒப்புக்கொண்டார். 


இங்கு இப்படி நடந்து கொண்டிருக்க வருணி வீட்டில் வித்யா வருணியை விடுவதாக இல்லை. "அக்கா சொல்லுக்கா அவர் என்ன சொன்னாரு?..." என்று வருணியை தொலைத்து எடுத்துக்கொண்டிருந்தாள். 


" ஐயோ சும்மா ஏண்டி என்ன தொல்லை செய்ற, அங்கு நீ நெனைக்கிற மாதிரி எதுவுமே இல்லை. வருணை யார் இடிச்சாங்க? என்னாச்சு? என்று கேள்வி தான் கேட்டாங்க". என்று கூறினாள். 


"அக்கா நான் உன் தங்கச்சி, எனக்கே நாமத்த போட பாக்காத... நான் போலீஸ் ஸ்டேஷன்ல கேக்கல, அன்னைக்கு ஹாஸ்பிட்டல்ல வருண் சாரு உன்கிட்ட ஒன்னு கேட்டாரே அத சொல்லு..." என்றாள். 


"ஏய் ஒட்டு கேட்டியா நீ ?"என்று முறைத்தாள். 


" இல்லக்கா நான் அப்பவே வந்துட்டேன் ஆனா அவரு உன்கிட்ட, நான் உன்னை விரும்புகிறேன் சொன்னாரு இல்ல ,அந்த டைம்ல உள்ள வந்தா நல்லா இருக்காதே அதான் வெளியே நின்னுட்டேன் ,அப்ப லைட்ட  காதில் விழுந்தது. " என்றாள். 


" அதுக்கு என்ன இப்ப? "என்றாள் வருணி. 


"என்ன நீ? அதுக்கு என்னன்னு அசால்ட்டா கேட்கிற, அதுக்கு பதில் சொல்லுக்கா..." என்றாள் வித்யா.


" நீ என்ன அந்த  ஆளுக்கு தூது போறியா?" என்றாள் வருணி. 


"சொல்லுக்கா... சொல்லுக்கா...." என்று விடாமல் நின்றாள் வித்யா. 


"நான் என்ன பதில் சொல்ல?, அதைத்தான் நான் ஏற்கனவே சொல்லிட்டேனே அப்புறம்  என்ன?" என்றால் வருணி. 


"அது என்ன ஒரு கொள்கை? அதை நீ எங்கிட்ட கூட சொல்லலை"  என்றாள் வித்யா. 


"இப்போது ரொம்ப அவசியமா? "என்று எரிந்து விழுந்தார் வருணி. 


" அக்கா சொல்லுக்கா ஏன் அவரை நீ வேண்டாம்னு சொல்ற?, அவருக்கு என்ன குறை சொல்லு? "என்று விடாமல் நச்சரித்ததால் தங்கை. 


"ஏய் நீ சின்ன பொண்ணு, இங்க இருந்து போ" என்றாலும் விடுவதாய் இல்லை வித்யா.


" அக்கா இன்னிக்கு சின்ன பொண்ணா இருந்தாலும் நானும் கத்துக்க வேண்டிய ஒன்று தானே சொல்லு "என்றாள்.


" அவனுக்கு எதுவும்  குறைவில்லை எல்லாமே அதிகம்தான். என்னை நெருங்கவிடாமல் பண்றது அதுவும் ஒன்று" என்றால். 


" அப்படின்னா வேற என்ன எல்லாம் இருக்குன்னு நீ  நினைக்கிற?" என்றாள் வித்யா.


" காதல் என்றால் என்ன தெரியுமா வித்யா, அது ஒரு கசப்பான வாழ்க்கை, காதலிக்கிறவங்க ,காதல் கல்யாணம் வரை மட்டுமே என்று நினைப்பாங்க கல்யாணம் வரை கொண்டுவர அவங்களுக்கு வாழ்க்கை முழுக்க வெச்சிக்க தெரியாது. நான் நிறைய பேரை பார்த்திருக்கேன் காதலிக்கிறப்ப அன்பா, ஆசையா காதலியை பார்த்துக்குவாங்க. ஆனா அது பொண்ண கல்யாணம் பண்ற வரைக்கும் தான். அதுக்கப்புறம் எல்லாமே மாறிப் போய்விடும்."


"காதலியாய் இருந்த வரைக்கும்  தேவதையாய் தெரிந்தவள் கல்யாணம் ஆனா அப்புறம் அதே பொண்ணு ராட்சஸி யாய்  தெரிவாள். அதுவும் பணக்கார பசங்கள நம்பவே முடியாது."


" என் கிளாஸ்யே ஒரு பையன் இருக்கான் அவங்க அம்மா பாவம் வித்தியா, காதலிச்சி ஒரு பணக்கார ஆள கல்யாணம் பண்ணிக்கிட்டாங்க, ஆனால் அந்த ஆளு கொஞ்ச நாள்தான் அவங்களோட வாழ்ந்தான். 
பணம் வீடு சொத்து என்று அனைத்தையும் விட்டு வந்து கல்யாணம் பண்ணியும், அவங்க கர்ப்பமாக இருக்கும் வரை தான் இருந்தான். அதுக்கு மேல வசதியா வாழ்ந்தவனுக்கு  வசதி இல்லாமல் ஒரு சின்ன  வீட்ல இருக்க முடியல. பொண்டாட்டிய விட்டுட்டு அவனோட அப்பா அம்மா கிட்டே போய் விட்டான். இப்ப அந்த அம்மாவும் பையனும் கஷ்டப்படுறாங்க. அவங்க வேலைக்கு போய் தான் பையனை படிக்க  வைக்கிறாங்க .இதுல காதல் எங்க இருக்கு. உருகி, உருகி காதலிக்கும் போது தெரியலையா, இந்த மாதிரி எல்லாம் கஷ்டம் வரும்னு" என்று மனதில் உள்ளதை கொட்டினால் வருணி. 


" அக்கா அந்த ஒரு ஆளை வச்சி எல்லாரையும் அப்படி தப்பா நினைக்க கூடாது இல்ல அக்கா?" என்றாள் வித்யா. 


" நான் அந்த ஆள எதுவும் சொல்லல வித்தியா, காதல்,  அது ஒரு ஈர்ப்பு மட்டும்தான் பணக்கார பசங்களுக்கு. கடைசி வரைக்கும் உண்மையா இருக்க அவங்களால முடியாது. கஷ்டத்தையும், வறுமையையும் அவங்களால தாங்க முடியாது. சரி இதுக்கு மேல இத பத்தி பேச வேண்டாம்  .இந்த டாபிக்கை இதோட  விட்டுடு "என்று பேச்சுக்கு முற்றுப்புள்ளி வைத்தாள். 


" ஆனா அக்கா என்னுடைய கேள்வியே வேற... உன் கொள்கை என்ன?" என்று வித்யா கூறிய வார்த்தைகள் காற்றோடு கலந்தது தான் மிச்சம், அதை காதில் வாங்காமலே வருணி சென்றுவிட்டால்.  


வருணியின், மனதில் இருக்கும் எண்ணம் மாறுமா ?அதைக் காலம் மாற்றுமா? தொடர்ந்து பார்ப்போம். 💐💐💐💐💐💐💐💐💐💐💐



No comments:

Post a Comment

எழுத்தாளர்கள் கவனத்திற்கு

இந்த தளத்தினில் உங்களது படைப்புகளையும் இடம்பெறச் செய்ய விரும்பினால், rheamoorthy6@gmail.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் செய்யவும்.