This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License. Readers dont try to copy the content here.

Friday, 4 January 2019

Bhuvana's இளம் தென்றல் 9



வேலை முடிந்து வீட்டுக்கு வந்த வருணுக்கு அனைவரும் கிளம்பி கொண்டிருந்ததை கண்டு அப்படியே நின்றான். 
தான் வரும்பொழுது பாண்டியன் எதிரில் தன்னை  தாண்டி  செல்வதைக் கண்டான். அப்போதே புரிந்தது பாண்டியன் தன்னை  பற்றி ஏதோ சொல்லி இருக்கிறான்.
அதனால் அம்மாவுக்கு தன்மீது சிறு மணவருத்தம் .தான் கிளம்புவதை  தன்னிடம் கூட சொல்லாமல் சென்றார்கள்.

ஆனால் அப்பா அப்படி இல்லை" என்னப்பா முதல் நாள் எப்படி இருந்தது" என்று வினாவினார்.
" இப்பதான் பா புரிய ஆரம்பிச்சிருக்கு சிலதெல்லாம்  ஸ்கூல்ல கொஞ்சம் சரி செய்யணும்.
எல்லாத்துக்கும் மேல   கவர்மெண்ட் நோட்டீஸ்  விட்டதுக்கு கொஞ்ச நாள் டைம் வாங்கணும். 

ஒரு மூணு மாசம் டைம் இருந்தா போதும் அதுக்குள்ள கொஞ்சம் வேலைகளை முடிக்க முடியும். நீங்க கொஞ்சம் ஹெல்ப் பண்ண  முடியுமா? " என்றான் வருண்.

சந்திரசேகர் "சொல்லு என்னால் முடிந்ததை பார்க்கிறேன்" என்றார்.

"உங்களுக்கு  தெரிஞ்சவங்கள வெச்சி ஒரு மூணு மாசம் டைம் வாங்குங்க".
" அப்புறம்" என்று இழுத்தான் வருண்.
" சொல்லுப்பா "என்றார் சந்திரசேகர்.

"பாண்டியனை பற்றி தான்.பாண்டியன் நிறைய பொய் கணக்கு எழுதி இருக்கான் பணமும் வெளியே போய் இருக்கு, என்ன பண்ணலாம் ? வேற யாராவது இருந்தா  அவங்க மேல  ஆக்சன் எடுக்கலாம் கொடுக்கலாம்."
இன்னைக்கு நடந்த விஷயத்துக்கு அம்மா என்கிட்ட பேசல அதான் யோசிக்கிறேன்."

சிறிது நேரம் யோசித்த பிறகு" அவனை ஒன்னும் பண்ணாதே ,அப்படியே இருக்கட்டும், ஆனால் இனி பணம் விஷயமும், ஸ்கூல் விஷயத்திலும் அவனை தலையிட விடாதே அவனிடம் எப்போதும் கொஞ்சம் எச்சரிக்கையுடன் இரு." நான் இப்போது சென்னை போகிறேன் நிறைய வேலை இருக்கு வேறு ஏதாவது சந்தேகம் இருந்தா அப்புறம்  என்னை கூப்பிட்டு கேட்டுக் கொள்" என்று கூறிச் சென்றார்.

அவர்கள் கிளம்பிய பிறகு மனதில் தனிமை நிலை மேலேறியது எவ்வளவு நேரம் அப்படியே இருந்தானோ அவனுக்கே தெரியவில்லை லட்சுமி அம்மா" தம்பி சாப்பிட வாங்க வாங்க என்று அழைத்த பிறகுதான் சுய நினைவுக்கு  வந்தான்.

இரவு உணவு முடிந்து படுக்கையில் படுத்த வருணுக்கு, உறக்கம் தான் வர மறுத்தது. இன்று நடந்த அனைத்தையும் மனம் அசை  போட்டது. வருண் மனதில் முதலில் தோன்றியது வருணி தான். எப்போதும் அப்பாவுடன் இருக்க நினைக்கும் அவள் மனம், விட்டுக் கொடுக்காத பாசம், ஒருவேளை உணவு கூட இருவரும் ஒன்றாய் சேர்ந்து சாப்பிடும்  நிலை, குடும்பம் என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும் என்று ஏங்கும் மனம் இன்னும் அதிகமாக ஏங்கியது, வருணுக்கு. 

காலை வேளை சூரியன் அவன் வேலையை திறம்பட செய்து கொண்டிருக்க  வருண் சீக்கிரமே எழுந்து கிளம்பி ஸ்கூலுக்கு  சென்றான். 
இங்கு இப்படி இருக்க வீட்டில் எப்பொழுதும் சீக்கிரமாக எழுந்திருக்கும் பழக்கம் அவர்களுக்கு உண்டு. 
ஆனால் வருணிக்கு மற்றும் கோபத்திலேயே விடிந்தது காலை பொழுது  ஏனென்றால் நேற்று இரவே அப்பா" காலையில் சீக்கிரம் கிளம்ப வேண்டும் என்று  கூறினார் அதுவே அவரின் கோபத்திற்கு காரணம். 
எப்பொழுதும் அவர் உடனே செல்லும் பழக்கம் வருணிக்கு உண்டு. 
அதே போல அன்றும் அப்பாவுடன் சென்றால் ஸ்கூல் வெறிச்சோடி கிடந்தது  ஆனால் வருண் அறையில் மட்டும் விளக்கு எரிந்து கொண்டிருந்தது.  
இதை பார்த்த பாலாவுக்கும் வருணிக்கும் ஆச்சரியமாக   இருந்தது" இவ்வளவு காலையிலேயே வந்து  விட்டானா" என்று யோசித்தால் வருணி. 

அங்கு சென்று பார்த்த பொழுது கம்ப்யூட்டரில் எதையோ பார்த்துக்  கொண்டிருந்தான். கதவைத் தட்டிவிட்டு பாலா உள்ளே  வர அவர் பின்னே வருணியும் வந்தாள். 
பாலாவை கண்டதும் "வாங்க சார் கரெக்டா 7 மணிக்கு வந்துட்டீங்க" என்றான். 
" ஆமாம் தம்பி நீங்க இவ்வளவு சீக்கிரம் வருவீங்கன்னு நான் எதிர்பார்க்கலை" என்றார் "பாண்டியன் நிறைய வேலை பண்ணி இருக்கான் சார் அது சரி பார்க்கணும்னா சீக்கிரமா  வரவேண்டியதாப் போச்சு ஸ்கூல் டைம் இல்ல நான் ஏதாவது செஞ்சா உடனே அவன் காதுக்கு போகுது அதனால தான் சார்" என்றான்.  இவை அனைத்தையும் அமைதியாக பார்த்துக் கொண்டு  இருந்தாள் வருணி. பாலாவுக்காக சில வேலைகளை முன்னமே எடுத்து வைத்திருந்தான். 
அதை அவர் பார்க்கச் சென்று விட, வருணிக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை அங்கே நின்று கொண்டிருந்தாள். 
இதைக் கண்டு வருண் பாலாவிடம் "உங்க மகள் வெறும் டீச்சிங் வேலைதான் செய்வாங்களா இல்லை கம்ப்யூட்டர்ல ஏதாவது தெரியுமா" என்று நக்கலாக அவளைப் பார்த்துக் கொண்டே கேட்டான் கொண்டே கேட்டான். 

அதற்குள் பாலா "இல்லை தம்பி அவள் கம்ப்யூட்டர் படிப்பையும்  படித்திருக்கிறாள்" என்று அவர் மகள் படிப்பை பற்றி பெருமையாக பேசினார். 

"அப்படியா ,ஓகே, அப்ப எனக்கு ஹெல்ப் பண்ணுவாங்களா" என்று கேட்டான் ஏன்னா இங்கே  இருக்கிறவங்களை என்னால நம்ப முடியாது, உங்க   பொண்ணுன்னா நம்பிக்கையாய் இருக்கும் ".என்று கூறினான். 

உங்க பொண்ணு கூட வேலை செய்ற அவங்களோட டீடெயில்ஸ் கூட எனக்கு வேணும் உங்க வேலையை பத்தி எனக்கு தெரியும் நீ எவ்ளோ சின்சியரா கரெக்ட்டா எல்லாம் செய்வீங்கன்னு அதே மாதிரி தான் உங்க பொண்ணு  இருப்பாங்க மத்தவங்கள கரெக்டா எடை போடுவாங்க" என்று அவளைப் பார்த்துக் கூறினான்.
வருணிக்கு "ஆஹா இவன் காலையிலேயே ஆரம்பிக்கிறான் இன்னைக்கு நாள் நல்லா போன மாதிரி தான் " என்று முணுமுணுத்தபடியே வந்து கம்ப்யூட்டர் சீட்டில் அமர்ந்தாள். 
பாலா "ஓகே தம்பி அவ கிட்ட சொல்லுங்க என்ன செய்யணும்னு செய்வா" என்றார். 

ஒரு தலையசைப்பை தந்துவிட்டு வருணி இடம் வந்தான். 
வருணி என்ன வேலை என்பதற்குள் அவன் சொல்ல ஆரம்பித்தான். 
இதுவரை அவன் பார்த்து எழுதி வைத்து அனைத்து கணக்குகளையும் பதிவு செய்ய சொன்னான், ஆசிரியர் படிப்பு படித்தவர்கள் பெயர்கள் மட்டும் தனி லிஸ்ட் எடுக்கச் சொன்னான், மற்றவர்கள் பெயர்கள் தனியே வைக்க சொன்னான், ரெண்டு தனித்தனி பெயர் பட்டியல்களை எடுக்கச் சொன்னான், இதுவரை இருந்த அனைத்து கணக்கு வழக்குகளையும் தனது தந்தை மெயில் ஐடிக்கு மெயில்  அனுப்ப சொன்னான், இதுபோல பல வேலைகள் அவள் தலையில், கட்டினான். 
" இது அனைத்தையும் செய்து முடிக்கவே நேரம் ஆகிவிடும் பாதி செய் மீதியை மாலை வந்து செய்து முடித்து விட்டு கிளம்பி  விடு" என்று பாலா காது கேட்கும் படி கூறிவிட்டு ரகசியமாக  இன்று தானே  என்னிடம்  சிக்கி இருக்கிறாய் போக போக பாரு "என்று அவள் தந்தைக்கு கேட்காதபடி கூறிச் சென்றான். 
விதியே என்றாகிவிட்டது வருணிற்கு,  வேலைகளை செய்ய தொடங்கினால் அதில் சில சந்தேகங்கள் எழுந்தன வருணை அழைத்தாள். அவன் வருணி அருகில் சென்று குனிந்து அவள் கண்ணம் அருகில் செல்லும் நேரம் கதவை திறந்து கொண்டு  வந்தான் ரகுபதி. 
அவர்களை ஒரு நிமிடம் அப்படியே பார்த்துவிட்டு" சார் காலையிலேயே வந்துட்டீங்க என்று வாட்ச்மேன் சொன்னான் அதான் ஏதாவது வேணுமான்னு கேட்கலாம் என்று வந்தேன்". என்று திக்கி திணறி கேட்டான். 
"ஆமாம் மூணு காப்பி எடுத்துட்டு வா அடுத்த தடவை வரும் பொழுது அனுமதி கேட்டு  வா" என்று கூறினான். 
வருண் மூன்று என்று சொன்ன பிறகுதான் ரகுபதிக்கு பாலா அங்கு இருக்கும்  விஷயமே தெரிந்தது.
வருணிக்கு சந்தேகங்களை தீர்த்த பிறகு, பாலாவுக்கு சொன்ன முக்கியமான வேலைகளை  பார்க்க சென்றான். 

அதற்குள் ஸ்கூலில் அனைவரும் வந்திருந்தனர் வருண்" சரி வருணி நீங்க கிளம்புங்க கிளாசுக்கு நேரமாகுது மீதி வேலையை மாலை செய்து கொடுத்துவிட்டு வீட்டுக்கு போங்க "என்றான்.
ஒரு தலையசைப்பு போடு விட்டால் போதும் என்று அப்பாவிடம் விடை பெற்று கொண்டு கிளம்பினாள் வருணி. 
ரகுபதியும்" ஐயா ஏன் கேக்குறீங்க அந்த வருணி பொண்ணு வருண் ரூம்ல பார்த்த எனக்கு குப்பென்று இருந்தது அதுவும் அவ்வளவு காலையிலேயே".என்று பாண்டியனிடம் நீட்டி முழங்கி கொண்டு இருந்தான். 
இதைக் கேட்டதும் பாண்டியனுக்கு கோபம் அதிகமானது அவள் அப்பா இல்லையா என்று கேட்க ,ரகுபதி பச்சைப் பொய் கூறினான். "அங்கு அவர் இல்லை என்று ஒரு மணி நேரம் கழித்துதான் பாலநாதன் ஸ்கூலுக்கு வந்தார்" என்றான். 
அது மட்டுமல்லாது" நான் உள்ள போக சொல்ல அவங்க ரெண்டு பேரும் கன்னத்தோடு கன்னம் வைத்து உரசி கொண்டு  இருந்தார்கள்" என்று மேலும் எரிகிற நெருப்பில் எண்ணையை ஊற்றினான்.

பள்ளி விஷயத்திலும் சரி ,தன்னை அவமானம் செய்த விஷயத்திலும் சரி, அவ்வளவாக டென்ஷனாகாத பாண்டியன், வருணி விஷயத்தில் தீயாய் தவித்தான். 
இவை அனைத்துக்கும் ஒரு முடிவு கட்ட நினைத்தான் பாண்டியன்.

No comments:

Post a Comment

எழுத்தாளர்கள் கவனத்திற்கு

இந்த தளத்தினில் உங்களது படைப்புகளையும் இடம்பெறச் செய்ய விரும்பினால், rheamoorthy6@gmail.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் செய்யவும்.