This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License. Readers dont try to copy the content here.

Tuesday, 8 January 2019

Bhuvana's இளம் தென்றல் 10



Click here to get all parts
வந்ததிலிருந்து திருவிழா, ஸ்கூல் வேலை என்று திரிந்து கொண்டு  இருந்த வருணுக்கு, இந்த சனி, ஞாயிறு விடுமுறை தேவையான ஒன்றாக இருந்தது. 

காலையிலேயே குளித்து முடித்து ஊரை சுற்றி பார்க்க என்று கிளம்பினான். 

தனது வீட்டு பக்கத்தில் ஒரு சிறு ஆறு ஓடுகிறது என்று தெரிந்து முதலில் அதை பார்க்கலாம் என்று அங்கு சென்றான். 

ஆனால் அங்கு சென்றால் ஒரு குழந்தை பட்டாளத்தை வைத்துக் கொண்டு வருணி அவர்களுடன் விளையாட்டு சமையல்  சாமானை வைத்து விளையாடிக் கொண்டிருந்தாள். 

வருணுக்கு தன் கண்களையே நம்ப முடியவில்லை "ஸ்கூலில் பாடம் சொல்லிக்கொடுக்கும் டீச்சரா இது???" என்று அவனுக்கே வியப்பாக இருந்தது. 

அவளது குழந்தைத் தனத்தில் ஒரு நிமிடம் தன்னையே மறந்தான். அவள் மட்டும் இல்லாமல் அவள் தங்கை வித்தியாவும் இருந்தாள். 

அவர்களுக்கு தெரியாமலேயே அவர்களை தூரத்தில் இருந்து இருந்து தூரத்தில் இருந்து இருந்து தூரத்தில் இருந்து இருந்து பார்த்துக் கொண்டிருந்தான் வருண். இது எதுவும் தெரியாமல் தன் காரியத்தில் கண்ணாய் இருந்தாள் வருணி. 

அதுல ஒரு வாண்டு "அக்கா ரொம்ப நேரமா அரிசியை வேக வைக்கிறியே வைக்கிறியே, வேகுமா? என்று சந்தேகமாக கேட்டது. 

"ஏன்டி இப்படி கேக்குறே நான் எல்லாம் சரியாதான் வெச்சிருக்கேன்" என்றாள் வருணி. 

"நீ எல்லாம் சரியாதான் வெச்சிருக்க ஆனால் கீழே எறிய வைக்க வேண்டிய அடுப்பு தான் இன்னும் சரியா பத்தவே இல்லை" என்றாள். 

"நீ இப்படி வா, நான் செய்றேன்..." என்றும் அந்த சிறு வாண்டு குச்சிகளை நகற்றி சரியாக செய்து. 

அதுமட்டுமில்லாமல் "நீ எப்படித்தான் ஸ்கூல்ல பாடம்  எடுக்கிற?"என்று தலையில் அடித்துக் கொண்டது. 

அது வரை சும்மா இருந்தவள் "உன்ன..." என்று ஒரு குச்சியை வைத்து துரத்தி கொண்டு சென்றாள்.

"அக்கா விடாத அவளை..." என்று வித்தியாவும் அவர்கள் பின்னே ஓடினாள். 

ஏதோ ஒரு இனம் புரியா மகிழ்ச்சியில் அவர்களைப் பின் தொடர்ந்து சென்றான் சென்றான் நம் கதையின் நாயகன் வருணும்... 

சிறிது தூரம் சென்றதும் அவர்கள் வயல் வெளியில் சென்று விளையாட தொடங்கினார்கள். 

அவன் வயலுக்குள் இறங்காமல் ரோடு ஓரத்தில் ஒரு மரத்தின் மறைவில் இருந்து அவர்களை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தான். 

சுவாரசியமாக அவர்களை வேடிக்கை பார்ப்பதிலேயே இருந்தவன் தன்னை நோக்கி வேகமாக வந்து கொண்டிருந்த ஜீப்பை கவனிக்கத் தவறினான். 

கண்ணிமைக்கும் நொடியில் அது வருணனை இடித்துவிட்டு , ஒரு பத்தடி தொலைவில் சென்று நின்றது. 

இடித்த வேகத்தில் உருண்டு விழுந்தவனுக்கு தலையிலும், காலிலும் சரியான அடி. ரத்தமும் கசிய தொடங்கியது.

விளையாடிக்கொண்டு இருந்த மூவரும் என்ன சத்தம் என்று பார்க்க ரோட்டுக்கு ஓடிவந்தனர். 

சம்பவத்தை பார்த்ததும் அனைவரும் ஒரு நிமிடம் உறைந்து போனார்கள். கண்ணுக்கேதிரே காலைப் பிடித்துக் கொண்டு வருண் வலி தாங்க முடியாமல் முணங்கி கொண்டு இருந்தான்.

வருணி சுற்று முற்றும் பார்த்தாள் அந்த ஜீப்பை தவிர வேறு எதுவும் இல்லை. 

ஜீப்பில் இருந்து இறங்கிய ஒரு ஆள் வருணி தன்னைத்தான் பார்க்கிறாள் என்றதும் மறுபடியும் வண்டியில் ஏறி சென்று விட்டான். 

வருணி "ஏய் நில்லு" என்று கூறும் முன் ஜீப் கண்ணை விட்டு மறைந்து இருந்தது மறைந்து இருந்தது இருந்தது. 

இப்போது என்ன செய்வது என்று யாருக்கும் தெரியவில்லை ரோட்டில் அவர்களைத் தவிர வேறு யாருமில்லை, பேருக்கு கூட ஒரு வண்டி கூட வரவில்லை. வேறு வழி இல்லை என்று நினைத்த வருணி, தான் அணிந்திருந்த தாவணியின் நுனி துணியை கிழித்து ரத்தம் வந்த இடத்தில் கட்டுக்களை போட்டாள். தன் கரத்தை அவனிடம் நீட்டினாள் அவனிடம் நீட்டினாள். 

ஒரு நிமிடம் நிமிர்ந்து பார்த்த வருண் அவள் கையைப் பிடித்து எழுந்து நிற்க முயற்சி செய்ய வலி அதிகமாயிற்றே தவிர அவனால் நிற்க கூட முடியவில்லை. 

வித்யாவும் உதவிக்கு வந்தாள். ஒரு கையை வித்தியாவின் தோளிலும் மற்றொரு கையை வருணயின்  தோளிலும் என்று போட்டுக் கொண்டு நகர முயற்சி செய்தான். 

அவர்களுடன் இருந்த அந்த சிறு பெண் விபத்தை நேரில் கண்ட அதிர்ச்சியில் மிகவும் பயந்து போயிருந்தாள் போயிருந்தாள்.

வித்யா அந்த சிறுமியிடம்" ஓய் நீ சீக்கிரமா ஓடிப்போய் இந்த ரோடு முனையில் இருக்கிற பொட்டிக்கடை தாத்தா கிட்ட விஷயத்தை சொல்லி வண்டி ஏதாவது கொண்டு வர சொல்லு" என்று கூறினாள். 

"சரிக்கா" என்றுவிட்டு அதுவும் ஓடியது. 

இரண்டு பெண்களும் தங்களால் முடிந்த வரை வருணை தூக்கிச் சென்றார்கள். 

ஒரு கட்டத்தின் மேல் வித்யாவால் சுத்தமாக முடியவில்லை. 

வித்யா "சார் நான் தெரியாமத்தான் கேட்கிறேன்... நீங்க என்னதான் வீட்டில் சாப்பிடுறீங்க, இந்தக் கனம் கணக்குரிங்க, முடியலடா சாமி" என்றாள்.

வருணுக்கு சிரிப்பு ஒரு பக்கம் என்றால் வலி ஒரு பக்கம், அதற்குள் வருணி. 

"வித்யா" என்றாள் கோபமாக. 

வருணின் நிலை அவளுக்குப் பாவமாக இருந்தது.  அவன் வலியை அடக்க முயற்சிக்கிறார் என்பது அவன் முகத்தை பார்க்கும் போதே தெரிந்தது. 

வரணும் அவளைப் பார்க்க இவளும் அவனைப் பார்க்க கண்கள் இரண்டும் நேருக்கு நேர் பார்த்துக் கொண்டது.

எப்போதும் தன்னை முறைத்து கொண்டும், கோபமாகவே பார்த்த அந்த கண்கள் இன்று அக்கறையாய் பார்க்கின்றது. 

"வலி அதிகமா இருக்கா, இதோ, பக்கத்துலதான் வந்துட்டோம்" என்று அக்கறையுடன் கூறினாள். 

இந்த அக்கறையுடனான பேச்சு வருணனை என்னவோ செய்தது. அது என்னவென்று அவனுக்கே தெரியவில்லை. 

சிறிது நேரத்தில் ஒரு வண்டி வந்து நின்றது அதில் வருணை ஏற்றி விட்டு தானும் ஏறி அமர்ந்தால் வித்யாவிடம் "நீ அப்பாவை அழைத்துக்கொண்டு நம்ம பவித்ரா ஹாஸ்பிடலுக்கு வந்துவிடு" என்று கூறி வண்டியை ஹாஸ்பிடலுக்கு போக சொன்னாள்.

காற்றென பறந்த வண்டி அடுத்த ஐந்து நிமிடத்தில், ஹாஸ்பிடலில் இருந்தது. அவசர, அவசரமாக அனைத்து வேலைகளும் நடந்தது. வருணுக்கு டிரீட்மென்ட் நடந்துமுடிந்தது. 

அதற்குள் பாலா ,சுமதி ,வித்யா மற்றும் லட்சுமி அம்மா என்று அனைவரும் வந்து விட டாக்டர் ரூமில் இருந்து வெளியே வந்தார். 

பாலா தான் "என்ன டாக்டர் எப்படி இருக்கு, ஒன்னும் பிரச்சனை இல்லையே" என்று விசாரித்தார். 

"தலையில் சின்ன காயம் தான், ஆனால் காலில் தான் கொஞ்சம் காயம் பெருசா இருக்கு. ஒரு வாரம் பெட் ரெஸ்ட் எடுக்கணும். அப்புறம் வீட்டுக்கு கூட்டிட்டு கூட்டிட்டு போகலாம், இருந்தாலும் அதிகமா நடக்க கூடாது. மத்தபடி அவர் நல்லா இருக்காரு" என்று கூறிச் சென்றார். 

சுமதி லட்சுமி அம்மாவிடம் "என்னமா ஐயாவுக்கும், அம்மாவுக்கும் தகவல் சொல்லி ஆச்சா" என்று கேட்க.

போன் போட்டேன் ஆனால் ஏதோ சொந்தக்காரர்கள் கல்யாணம் என்று வெளிநாடு போயிருக்காங்களாம் "வர ஒரு வாரம் ஆகும், வருணை பத்திரமா பாத்துக்கங்க எங்களால எவ்வளவு சீக்கிரம் வர முடியுமோ, அவ்வளவு சீக்கிரம்  வந்துவிடுவோம் "என்று சொன்னார்" என்றார்கள்.

சிறிது நேரத்திலேயே வருணுக்கு மயக்கம் தெளிந்து நினைவு வந்தது. அவன் கண் திறந்து பார்க்கும் போது பாலா காப்பி வாங்க செல்வதாக சுமதி இடம் கூறிக் கொண்டிருந்தார். 

வித்யாவும் வருணியும் சாத்துக்குடி பழம் பிழிந்து கொண்டு இருந்தாங்க. லட்சுமி அம்மா பாலநாதன் வாங்கிவந்த மருந்து மாத்திரைகளை நேர வரிசைப்படி அடுக்கிக் கொண்டிருந்தார்கள். 

வருண் கண்விழித்ததை பார்த்த பாலா "இப்ப எப்படி இருக்கு டாக்டரை கூப்பிடவா" என்று கூற,


"வேண்டாம்" என்று சைகை செய்தான். 

"சரி தம்பி ஜூஸ் குடிங்க ,நிறைய ரத்தம் போயிருக்கு ,நிறைய பழம், ஜூஸ் எல்லாம் சாப்பிடணும் என்று டாக்டர் சொன்னார்" என்று கூறினார். 

வருணி ஜூஸ் எடுத்து வர, வருணோ வித்யாவை பார்த்துக் கொண்டிருந்தான். 

வருணியை கிட்ட அழைத்து ஜூசை வித்யாவிடம் கொடுக்கச் சொன்னான் சொன்னான். 

வருணிக்கு சிரிப்பு தாங்க முடியவில்லை அவளின் அம்மா சுமதி "ஏய் ஏண்டி? எதுக்கு சிரிக்கிற?" என்று கேட்டாள். 

வருணி வித்யா கூறியதை அனைவரிடமும் கூறினால் அதனால் தான் வருண் அவளை ஜூஸ் குடித்து உடம்பை ஸ்ட்ராங் ஆக சொல்கிறார்" என்றாள். 

பாலா வித்யாவின் காதை திருகினார் "ஏய் வாலு ,சும்மா இருக்க மாட்டியா?" என்று செல்லமாக அவள் தலையில் ஒரு குட்டு வைத்தார். 

அனைவரும் சிரித்துக் கொண்டிருக்க, வருணி தன் தந்தையை மட்டும் தனியே அழைத்துச் சென்று தனக்குத் தெரிந்த விஷயத்தை கூறினாள். அவள் சொன்ன விஷயத்தைக் கேட்டதும் ஒரு நிமிஷம் வேர்த்துக் கேட்டதும் பாலாவுக்கு.

No comments:

Post a Comment

எழுத்தாளர்கள் கவனத்திற்கு

இந்த தளத்தினில் உங்களது படைப்புகளையும் இடம்பெறச் செய்ய விரும்பினால், rheamoorthy6@gmail.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் செய்யவும்.