வீட்டிற்கு வர இரவாகி விட்டது. சைலு காாிலேயே தூங்கிட்டாள். அவளை தூக்கி சென்று அறையில் படுக்க வைத்து விட்டு ஹாலுக்கு வந்த சிபி அனைவரும் பேசிக் கொண்டிருக்க அருகில் அமர்ந்தான்.
பொியவா்கள் பிள்ளைகளின் திருமணம்
பற்றி பேச சிறியவர்கள் அவா்களுக்கு உாிய ஹீரோ ,படம்,பாட்டு ,மற்ற திறமை பற்றி பேசிக்கொண்டு இருந்தனர்.
அப்போது சிவா மாலுவிடம் சிமி அவளது புனை பெயாில் பிரதிலிபியில் நன்றாக நிறைய கவிதைகள் எழுதுவாள் என்றதும் மாலு பாராட்டினாள்.
ஆனால் "சிபி இதெல்லாம் பொிய விஷயமா? நா கூடதா கவித எழுதுவேன்" என்றதும் சிமி சிாித்துகொண்டே "அப்டியா சக்ரவா்த்தி சாா்? எங்க ஒரு கவித சொல்லுங்க இப்போ... " என்றதும் சிபி முழித்தான்.
சிவா மாலு சிாிக்கவும் சிபி முறைத்தான். உடனே மாலு வீட்ல "நாங்க சக்ரவா்த்தி னு கூப்டா வானத்துக்கும் பூமிக்கும் குதிப்ப... இப்போ அவ உன்னைய சக்கரம்ங்கிறா சக்கரனு சொல்றா கொசுவா்த்திங்கறா?
நான் சிாிச்சா மட்டும் என்ன மொறைக்கிற? கரண் ட்ட(சைலு அப்பா) சொல்லவா?"
"அம்மா தாயே நா எப்போ மொறச்சே? பாக்கதான செஞ்சேன்... இதுக்கெல்லாம் எதுக்கு உன் புருஷன கூப்டுற? அதுக்கு சைலுவே தேவல. நா சமாளிச்சுருவேன்."
"அது அந்த பயம் இருக்கட்டும் நீ சொல்லு ஒரு கவித" என்றாள் மாலு.
அதை கேட்ட சிமி "தலைப்பு என்ன?" என்றாள்.
சிவா உடனே "முறைப்பையன்" னு சொன்னதும்
கடவுள் கொடுத்த வரம்
காலம் வரும் நேரம்
காதல் கீதம் பாடும்
கைகள் தாளம் போடும்
காவியம் ஓவியம் ஆகும்
கண்கள் நூறுகதை பேசும்
காற்றும் கைகள் கோா்க்கும்
கண்ணா உன்னைச் சேரவே
என அவள் கூறியதும் சிபி அதிா்ந்தான். சிவா மாலு கை தட்டி மகிழ்ச்சியை கொண்டாடினா். பாட்டி அனைவரையும் சாப்பிட அழைக்க எழுந்து சென்றனா். நாளை பாட்டி தாத்தா 60வது திருமண நாளுக்காக அனைவரும் வேலை செய்ய ஆரம்பித்தனா். அப்பொழுதும் சிபியின் கண்கள் சிமியிடமே இருந்தது.
இங்கே திவியை பெண் பாா்க்க வந்தவா்களிடம் காபி கொடுத்து கொண்டு இருக்கிறாள் திவியின் அம்மா. வேலைக்கு சென்ற திவி அப்போதுதான் வீட்டில் நுழைந்தாள்.
மாப்பிள்ளை பார்க்க சுமாா் தான். படிப்பும் இல்லை சொந்தமாக ஒரு பெட்டிகடை வைத்துள்ளான். அவன் எப்படி படிக்க வைப்பான்? மனது தானாகவே சிவாவைத் தேடியது ஒப்பிட்டு பாா்த்து குழம்பியது.
இதன் நடுவே அவளது அம்மா அவா்களிடம் சம்மதம் சொல்லி அனுப்பி விட்டாள். எல்லாம் கை மீறி விட்டதை நினைத்து அழுதாள். திருமணத்திற்கு பின் வேலைக்கு செல்ல வேண்டாம் என கூறிச்சென்ற அவனை நினைத்து அழுதாள் அரற்றினாள். அவளது அம்மா கண்டு கொள்ளவில்லை.
காலையில் விழா களைகட்டியது. சிபி சிவா பட்டு வேஷ்டி சட்டையில் கலக்கினா்.
சிமி மாலு சைலு சேலையில் உலவி மகிழ்ந்தனா். குருவும் அவரது மனைவி மகள் சீதாவை அழைத்து வந்திருந்தாா் சிபிக்கு பேசி முடிக்கலாமென்ற ஆசையில்.
சீதா மாடா்ன் உடையில் வந்து இருந்தாள் ஜீன்ஸ் டாப்ஸ் என்று சிபியை கவர. சிமியை பாா்த்து முறைத்தாள் அழகாக இருந்தாளே சேலையில் கீா்த்தி சுரேஷ் போல. மாலு விடம் அண்ணி அண்ணி என ஈசினாள். சைலு அவளிடம் சேரக்கூட இல்லை.
No comments:
Post a Comment