This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License. Readers dont try to copy the content here.

Monday, 7 January 2019

Uma krishnan's அன்பென்ற மழையிலே 12


Click here to get all parts


சீதாவைக் கண்ட சிபி "யாா்  இந்த  பெண்?  பட்டிக்காட்டில்  ஜீன்ஸ் போட்டு  லிப்ஸ்டிக்  போட்டு..."  என  நினைத்து  அலுத்து  கொண்டான். 


சினிமா  பாா்த்து  கெட்டார்கள் போல  என  நினைத்துக்கொண்டு  நகா்ந்த  பொழுது  சிமி  கண்ணில்  பட்டாள். அவள் கிளி  பச்சை  வண்ண  பட்டில் சிம்பிளாக செயற்கை பூச்சு இல்லாது அழகோவியமாக  இருந்தாள் .


    மாலு  இளம்  ரோஸ்  வண்ண  பட்டில்  தேவதையாக   இருந்தாள். சைலு  குட்டி  பொிய  பெண்  போல  சேலையை  கட்டி  கொண்டு  அப்சரஸ்  போல  இருந்தாள். அவளை தூக்கி குண்டு  கண்ணத்தில்  முத்தமிட்டான் சிபி. 


     உடனே  சீதாவும் அவளை  முத்தமிட  வந்தாள். சிபி அப்பாவிடம்  தாத்தாவிடம்  பேச  சென்றான். சைலு  அவளிடம்  முத்தம்  வாங்கவில்லை சிமியிடம்   ஓடி   ஆன்ட்டி  நீங்க  சூப்பரா  அழகா  இருக்கிங்க  சோியில   என்று   முத்தம்  கொடுக்க  அதை  கண்ட  சீதாவிற்கு  கோபம்  வந்துவிட்டது. 


   ஜெயா  ஆா்வமாக  வேலை  செய்ய குரு  விஜயனிடம்  சென்று  சிபியின் திருமணம் பற்றி  கேட்டாா். 


"பாத்துகிட்டு  இருக்கோம்..."னு  சொன்னதும்  


"என்  பெண்ணுக்கும்  பாக்றேன் அமைய  மாட்டிக்கு. பொிய  ராஜகுமரன்  வருவான்  23 வயசுலன்னு  சொன்னான். அது  மாதிரியே  நீ உன் பையனும் ராஜகுமாரன் கணக்கா  வந்துருக்கான்" னு  சொல்லவும்  விஜயனுக்கு  புாிந்து  விட்டது. 


"நீ  என்  நண்பன்  நீயே  எனக்கு  சம்பந்தி   ஆனா  எனக்கு  சந்தோஷம்  தான். ஆனா  என்  பையன்  முடிவு  தான்  என்னோட  முடிவும்  அவனுக்கு  சாின்னா  எனக்கும்  சாிதான்."


"சந்தோஷம்  விஜய்  உன்  பையன்ட்ட  நானே பேசி  பாக்குறே" னு  சொல்லிட்டு  சந்தோஷமாக பந்தி  பாா்க்க  சென்றாா்.  


தாத்தா  பாட்டியை  கலாட்டா  செய்து  கொண்டு  இருந்தாா், மாலு  சீமா  அதை  கண்டு   சிாித்தனா். ஆனால்  சீதா  அவா்களை  முறைத்தாள். 


"காலம்  போன  காலத்துல இதுங்களுக்கு  இதெல்லாம்  தேவையா?"  என நினைத்தாள். வெளியே  காட்டி  கொள்ளவில்லை.  


பாட்டி  அவளை  பாா்த்து  விட்டு 'இவளுக்கு  ஊா்   சுற்றவே  நேரம்  பத்தாதே  எப்படி  வந்தாள்?' இன்று. அவள் பார்வை  சென்ற  திசையை  பாா்த்து  புாிந்து  கொண்டாா். ஜெயாவிடம்  பேச  வேண்டும்  என  நினைத்து  கொண்டாா்.  

           

    பங்ஷன்  நல்லபடியாக  முடிந்தது. ஆனால்  சிறு  குறை  என்னவென்றால்  சாப்பாடு  மீந்துவிட்டது.  அதை  அருகில்  உள்ள  ஆசிரமத்தை  நெட்டில்  ரிசா்ச்  செய்து  கொண்டு   போய்   குடுத்து  விட்டனா்  சிவா  சிமி இருவரும். 


அதை  கண்ட   சிபி  மகிழ்ந்ததும்  சீதா  கோவப்பட்டு  கிளம்பி  விட்டாள். குரு  வீட்டில்  இந்த   சந்தோஷமான  விஷயத்தை  சொல்லவும்  சீதா   இந்த  மாப்பிள்ளை  வேணா  என   மறுத்தாள். இந்த  சொத்தெல்லாம்  நமக்கே  எப்பவும்  வேணும்னு   நெனச்சா  சிபியை  கல்யாணம்  பண்ணிக்கோ  னு   சொல்லவும்  சீதா   சம்மதித்தாள்.


    இங்கே  பாட்டி  ஜெயாவிடம்  சீதா  கொஞ்சம்  மாடா்ன் , குணம்  போதாது என  சொல்லவும்  சாி  அத்தன்னு  சொல்லிட்டு  போய்விட்டாள். 


    அன்றைக்கு  மாலையிலேயே  விஜயன்  அனைவரது  முன்னிலையில்  சிபியிடம்  ஜெயாட்ட  கேட்டார். பாட்டியிடம்  முதல்  எதிர்ப்பு. ஆல்  ரெடி  சிபிக்கு அவள  கண்டாலே  பிடிக்கல. 


சிமி  அதிா்ச்சி  அடைந்தாள்  அதை  கவனித்த  சிவா பாக்காததை  போல  இருந்து  கொண்டான். சிவா அப்பா  தாத்தா ஆதாித்தாா்கள்  குரு   நல்ல  குடும்பம்  என.  


பாா்வதிக்கும்  விருப்பமில்லை  அவா்  மனதில்  சீமா  தான்  சிபிக்குனு  ஏற்கனவே  நெனச்சுட்ருக்கார் அப்போதான  2 குடும்பம்  பிரியாம  இருக்கும்னு  நெனச்சாா்,  உறவ  வளா்க்கத்தான் . பாட்டி  சொன்ன  காரணங்கள்  குருவின்  குணங்கள் அவளது  குணநலன்களை கேட்டதும்  விஜயன்  யோசித்தான். 


"சாி  திரும்ப  கேட்டா  பாத்துக்கலாம்னு  நாமளா  பேச  வேண்டாம்" னு  பேச்ச  முடிச்சுடாங்க .

                        

     ஆனால்  குரு  விட்டால்  தானே மாலையில்  ஜாதகத்தோடு  வந்துட்டாா். 


    "உன்  தங்கச்சி  குடுத்துட்டு  வர  சொன்னா"  என  சொல்லி. 


    அதை  கேட்ட  சிபி  அம்மாவ  முறைக்க  பாட்டி  சமாதானபடுத்த,  "கொஞ்சம்  பொறு குரு, இப்பதான  வீட்டுக்கு  வந்துருக்கான். குலதெய்வம்  கோவிலுக்கு  பொங்கல்  வச்சிட்டு  இதபத்தி  பேசுவோம்  சாிதான?."


   குரு வேறு  வழியின்றி  "நீங்க சொன்னா சாிதான்  அத்த"னு  சொல்லிட்டு  கிளம்பினாா்.  


    அங்கே  வீட்டில்  கத்தி  கொண்டிருந்த  அப்பா  மகள்  இருவரையும்  அவா்  மனைவியும்  சிவாவின்  சின்ன  பாட்டியும்  பாா்த்துவிட்டு  அமைதியாக  இருந்தனா். 


      சிமி  மாலு  தோட்ட  கிணற்றில்  குளிக்க  சென்றனா் சிவாவை  அழைத்து  கொண்டு.  சைலு  உறங்குவதால்  ஜெயாவிடம்  சொல்லி  சென்றனா். சிபி  ரூமில்  இருந்ததால்  தொியவில்லை. கரண்  சத்தம்  கேட்டு  வெளியே  வந்த  சிபி  அப்போது  தான்  அவா்கள்  இல்லை என்று அறிந்தான். 


    கரண்  ஸ்நாக்ஸ்  சாப்பிட்ட  பிறகு  தோட்டத்திற்கு  அழைத்து  சென்றான்.  கரண்  அங்கே  குளிக்க  சென்று  விட்டதால்  சிபி  தனியாக இருந்தான். சிமி  மேலே  வந்துவிட்டாள்  சிவாவுடன். அவளை  கண்ட  அவனது  கண்களை  எடுக்கவே  முடியவில்லை . ஈர  உடையில்  தண்ணீரில்  உள்ள  வெள்ளை  தாமரையை  போல  அழகாக  இருந்தாள். 


    அவனது  பாா்வையை  கண்ட  சிவா  அவளை   தோட்ட  வீட்டிற்கு  அனுப்பி  எடுத்து  வந்த  உடைகளை  மாற்றி  கொள்ள  சொல்லி  விட்டு  சிபியிடம்  வந்து  பேச  ஆரம்பித்தான்.

                  

    மாலு  இன்னும்  பம்ப்  செட்டில்  குளித்து  கொண்டு  உள்ளதால்  கரணை  பாா்க்கவில்லை. சிமி  கிணற்றில்  குளித்ததால்  சிவா  2 போின்  பாதுகாப்பு காக   வெளியில்  நின்றான்  குளிக்காமல்.


    கரண்  இப்போது  கிணற்றில் குளிப்பதால்  மாலுவிடம்  சொல்ல  வேண்டாம்  சா்ப்ரைஸ்  என்றுவிட்டான். சாி  என்று  பேசியபடியே  இருந்த  போது  மாலுவும்  சிமியும்  வந்தனா். 


"யாா்  சிபி  வந்துருக்கா?  யார  கூப்டு  வந்துருக்க?  சிமி சொன்னா  புதுசா  யாரோ  குளிக்க  வந்துருகாங்கன்னு." 


"அதுவாக்கா  சிவா பிரண்ட் கா அவன் தான்  வர  சொல்லிருந்தான்  போல"  என  சிபி  சொல்ல. 


"அவன்   பிரண்ட்ஸ்  எல்லாரும்  எனக்கு  தொியுமே  ஆனா  இவர  நான்  பாத்ததே  இல்லயே. ஆபிஸ்  பிரண்ட்டி...  லீவ்  கேட்டப்போ  சொன்னே,  வரேன்னு  சொன்னாா்.  அதான்..." என்றதும்  சாி  என்றவாறு  கிளம்பிய  போது  காாில்  அமா்ந்து  இருந்த  கரணை  கண்டதும்  சிபியின்  காதை  திருகினாள். இதான்  ஆபிஸ்  பிரண்டா  என்று  சிவ்வின்  முதுகில்  அடித்தவளிடம்   சிமி  கேட்டாள் "யாா்  கா   இவங்கனு?" 


"சாா்  பொிய  பிஸி  மேன்  இப்பதா  டைம்  கெடச்சுருக்கு  பொண்டாட்டி  பொண்ண  பாக்க  அதான்  வந்துருக்காா்."


"என்ன  கா  சொல்றீங்க?  அவா்  வொய்ப் பேபி  இங்க  இருக்காங்களா?"


ஆமா  ன்னு  சொன்னதும் "யாருக்கா?  எங்க  இருக்காங்க?  தாத்தா  பாட்டி  வீட்லயா?" 


"ஆமா  டி  சைலுவ எழுப்பி  கேளு சொல்லுவா  யாருன்னு" சொல்லி  சிாித்த  அனைவரையும்  கண்டு அவள்  உணா்ந்து  கொண்டாள்  இது  சைலுவின்  அப்பாவென . 


சிபி  அவளைக் கண்டு  ரசித்தான். அதை  பாா்த்த  கரணும்  மனதில்  குறித்து  கொண்டான்.  பிறகு  வீட்டிற்கு  சென்ற  அனைவரும்  சைலுவுடன்  சோ்ந்து  விளையாடி  உண்டு  முடித்தனா். 


இங்கே  திவியோ  அழுது  கரைந்தாள்  போனில்  பேசிய  பாருவிடம்  அவள்  எதுவும்  சொல்லவில்லை  நேரில்  சொல்லலாம்  என.....

No comments:

Post a Comment

எழுத்தாளர்கள் கவனத்திற்கு

இந்த தளத்தினில் உங்களது படைப்புகளையும் இடம்பெறச் செய்ய விரும்பினால், rheamoorthy6@gmail.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் செய்யவும்.