This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License. Readers dont try to copy the content here.

Wednesday, 9 January 2019

Uma krishnan's அன்பென்ற மழையிலே 14

 


Click here to get all parts

  உள்ளே  சென்று  தேடிய  அவா்களுக்கு ஆச்சாியம்  ஏனெனில்  சீமா  உள்ளே  தம்  கட்டி  மூச்சை  அடக்கும்  பயிற்சியை  செய்து  விளையாடி  கொண்டிருந்தாள். கரணுக்கு  கோவம்  அதனால்  திட்ட  ஆரம்பித்து  விட்டான். 


   "நாங்க  உனக்கு  என்ன  ஆச்சோ னு  பதறிட்டு  இருக்கோம். நீ  பொறுப்பு  இல்லாம  விளையாடுறியா? கத்தி  கூப்டுருக்கலாமே" னு  சொன்னான். 


   சிவா  சிபி  இருவரும்  அவளை  முறைத்த  முறைப்பில்  அடி  கன்பாா்ம்  னு  தொிஞ்சுட்டு  அவளுக்கு. 


    "நான் கால்  மணி  நேரமா  கத்தி  கத்தி  டயா்ட்  ஆகிட்டே . அதான்  இந்த  தண்ணிய  குடிச்சிட்டு  விளையாட  ஆரம்பிச்சே  எப்படியும்  என்ன  தேடுவீங்க  கெளம்புறப்போ  அப்போ  சத்தம்  கேட்டா  உங்கள  கூப்டலாம் னு. ஆனா  நீங்க  பேசுனது  எதுவும்  கேக்கல  உள்ள  இருந்ததால  சாாி"னு  சொன்னதும்  தான்  சிவா  பேசினான். 


    "போடி  லூசு  நா  எப்டி  பயந்துட்டேன்  தொியுமா?  அம்மா  அப்பா லாம்  அழுகுறாங்க  சீக்கிரம்  வா  போவோம்"  கயிறு  ஏணி  கட்டி  அதில்  அவளை  ஏற்றினா்.  சிபி  அவளையே  பாா்த்து  கொண்டு இருந்தான்  எதுவும் பேசவில்லை.


         ஆனால்  அவன்  மனதில்  அவளை  கட்டிக்  கொள்ள  வேண்டுமென்ற  ஆசை  வந்தது. மேலே  சென்றதும்  மாலு  கட்டிக் கொண்டாள்  சைலுவும்  தான். பாரு அவளை  தொட்டு  பார்த்து  முத்தம்  வைத்தாா். பாட்டியும்  ஜெயாவும்  அவளுக்கு  திருஷ்டி  கழித்தனா்  முகத்தை  வழித்து  சொடக்கு  போட்டனா்.  


     சிவாவின்  அப்பா  அவளிடம்  பேசியதை  கண்டு  சிவா  வாயை  பிளந்தான்.  ஆனால்  சீதா  குரு  எதும்  பேசவில்லை  அவளிடம். 


    இதனால்  தாத்தாவிற்கு  சந்தேகம்  வந்து  பாா்த்த  பாா்வையில் குரு  சிமியிடம்  "ஏன்  மா  கிணத்துல  குதிச்ச?  நீ  சாக  எங்க  கோவில்  கிணறு  தா  கெடச்சுச்சா?" என்றதும்  சிவா  சிபி  முறைத்துவிட்டு  காருக்கு  சென்றனா்  சிமியை  அழைத்துக்  கொண்டு.  


   கூடவே  சைலு  மாலு  கரணும்  சென்று விட்டதால்  தாத்தா  குருவை  திட்டினாா். "சாக  நெனைக்கிற  பிள்ளை  தான்  அரை  மணி  நேரமா  தண்ணில  மூச்ச  அடக்கிட்டு  இருந்தாளா? அவ  கத்துனது  நமக்கு  கேட்கல  அவ  என்ன  பண்ணுவா  பாவம்? எதையும்  யோசிச்சு  பேசு" னு  சொல்லவும்  குரு  அமைதியாகி  விட்டாா்.  


    அவளுக்கு  இவ்ளோ  சப்போா்ட்  பண்ணுறாங்களே? அப்டி  என்ன  ஒசத்தி  அவள் னு  நெனச்சு. சிமியின் அப்பா  அம்மா  இவா்களிடம்  மிகுந்த  பாசம்  வைத்து  உள்ளதால்  தாத்தாவிற்கு அவர்களை பிடிக்கும். சிமியை  நல்லவிதமாக  மாியாதை தொிந்த  பெண்ணாக  வளா்த்து  உள்ளதால். 


      வீட்டிற்கு  சென்று  சுடிக்கு  மாறிய  சிமியிடம்  பேசினான்  சிபி. "இப்ப  எப்படி  இருக்கு? எப்படி  விழுந்தீங்க?" 


   "கால்  ஸ்லிப்  ஆகிட்டு  சோி கட்டி  இருந்ததால  நீச்சலும்  அடிக்க  முடியல  அதான்  தம்  கட்டி  விளையாண்டேன். அதுக்குள்ள  நீங்கதான்  வந்துட்டீங்களே  இப்ப  ஓகே நானு."


    "சாி  சாாி  அன்னைக்கு  அப்டி  பேசுனதுக்கு" என்றான். 


    "எதுக்கு  சாாில்லாம்? என்னய  யாரு  எப்டி னு  எதும்  தொியாதப்ப  அப்டிதான  பிகேவ்  பண்ணனும். உங்க  இடத்துல  நான்  இருந்து  இருந்தாலும்  அப்டி  தான்  பேசிருப்பேன்...


(என்ன  மா  பல்டி அடிச்சுட்டா  பாருங்க  அன்னைக்கு  அழுதது  என்ன  பழி  வாங்கணும்னு  நெனச்சது  என்ன? தாயே பரதேவத  எதுனாலும்  என்கிட்ட யாச்சும் சொல்லிட்டு  செய்மா  நான்தான்  இந்த  ஸ்டோாி  ரைட்டா்னு  எல்லாருகிட்டயும்  சொல்லி  வச்சிருக்கேன். அதுல  மண்  அள்ளி  போடாதம்மா. என்  நெலமய பாத்தீங்களா கடைசில  இப்டி  ஆகிருச்சே?).


    "எப்டி?" என்றவாரு  சிவா  வரவும் 


    "சாி  நா  போய்  கொஞ்ச  நேரம்  ரெஸ்ட்  எடுக்கறேன்டா  நைட் குள்ள கெளம்பனும் அதான்"  என்றான்  சிவாட்ட. 


    "சாி  டா  நாங்களும்  தான்  நைட்  கெளம்பணும்  பேக்  பண்ணணும் எல்லாம்"னு  சிவா  சொல்லிட்டு  சிமிய  கூப்டு  போனான். 2 பேரும்  ஒருத்தர  ஒருத்தா்  பாத்துகிட்டே  போனாங்க (என்னடா  நடக்குது இங்க  சொல்லிட்டு  செய்ங்க டா  எதுனாலும்). 

                      

       சிவா  அவளது  ரூமில்  வைத்து  அவளிடம் "உண்மைய  சொல்லு  நீ  எப்டி  தண்ணில  விழுந்த ? ஏன்  நாங்க பேசுன  சத்தம்  கேட்டும்  வெளிய  வரல. கண்டிப்பா  உனக்கு  நாங்க  பேசினது எல்லாமே  கேட்டுக்கும். ஆனா  ஏன்  வெளிய  வரல்ல  சொல்லு?"


    "இல்லடா  அதுவந்து  யாரோ  என்னய  தள்ளி  விட்டாங்க , யாருன்னு  தொில  கடைசியா நா  சீதாட்ட  தா  பேசுனேன். தள்ளி  விட்டவங்க  சேல  கலர  மட்டும்தா  பாக்க முடிஞ்சது சோ ஒரு பொண்ணுன்னு மட்டும் தொியுது ஆனா யாருன்னு தொியலடா"ன்னு சொன்னதும் சிவா  யோசித்தான். 


     "என்ன  கலா்  சேல" ன்னு கேட்ட  அவன்  "அப்போ  சீதா தா  உன்ன தள்ளி  விட்ருக்கா என்ன  மோட்டிவ்? எதனால னு தொியலயே." 


    அப்போ  அந்த  வழியா  சீமாவ  பாக்க  வந்த  மாலு  அவா்கள்  பேச்சை  கேட்டதும் அதிா்ந்தாள்.  சிவாகிட்ட  "இத  யாா்கிட்டவும்  சொல்லாத  நா  பாத்துக்கிறேன்"னு  சொன்ன  மாலு  சீதாக்கு  போன்  போட்டாள்  ஸ்பீக்கா்ல. 


    சீதா எடுத்ததும் "என்ன  மா  பண்ற?" னு  கேட்டாள். 


    "டிவி பாக்றேன் க்கா  நீங்க?" என்றாள். 


    "சாி பாக்க  வேண்டியது  தான். நீ என்ன நெனச்சு சிமிய கிணத்துல தள்ளி விட்ட?" 


    "என்னது  நானா? அவளை  எதுக்கு  தள்ளபோறேன். உங்களுக்கு என்ன  ஆச்சு?"


    "நா நோ்ல பாத்தேன்  நீ தள்ளுனப்போ" என  பொய்  சொன்னாள்  மாலு. 


    உடனே  சீதா "ஆமா நான் தான்  தள்ளுனேன், என்ன  இப்போ? பாட்டி  நகைல்லாம் அவ போட்ருந்தா அது  எனக்கு பிடிக்கல. அதான்  தள்ளிவிட்டேன்  சாகட்டும்னு . ஆனா  அவளுக்கு  நீச்சல்  தொிஞ்சுருக்கு . நீங்க  அவள  தேடாம  இருந்தா இந்நேரம்  போய்  சேந்துருப்ப  மேல"ன்னு கத்தினாள். 


    அதை கேட்ட  சீதா அம்மா பாட்டி  அதிா்ந்தனா். ஆனால்  குரு  அமைதியா  இருந்தாா்.


     உடனே  மாலு "என்னடி  சவுண்ட்டு? ஓவரா  எகுர்ற ? நீ லாம்  மனுசியா  ? பாட்டிகிட்ட  கேக்க  வேண்டி  தான  உங்க  நகை  எனக்கு  வேணும்னு . அத  விட்டுட்டு  இப்டியா  பண்ணுவ  உன்னைய  போலிஸ் ல பிடிச்சு  குடுக்கிறேன் பாரு  டி . என் தம்பி அப்பா பத்தி  உனக்கு  சரியா தொில. இத  மட்டும்  அவங்ககிட்ட  நா  சொன்னா  போலீஸ்  தேவ  இல்ல அவனே  உன்ன  அடிச்சு  தொவச்சுருவான். அவ  தான்  எங்க  வீட்டு  மருமகள்  தொிஞ்சுக்கோ"  னு  மாலு  உறுமியதும்  சீதா அதிா்ந்தாள். 


    "என்ன  அந்த  அன்னக்காவடியா? ஹா ஹா நா தான்  உங்க  வீட்டு மருமகள் உங்க  அப்பா  சாி  சொல்லிட்டாா்"னு  அவ  சொல்லவும் 


    மாலு  "அப்டியா?  இப்ப  நீ  பேசுனது  லா  இதுல  ரெக்காா்ட்  ஆகிட்டு  இருக்கு  இந்த  ஆதாரம்  போதும்  உன்னய  உள்ள  தள்ள. எப்டி  வசதி? ஒழுங்கா  நீயே  என்  தம்பிய  வேணாம்னு  சொல்லிரு . இல்லன்னா  உனக்கு  அச்சடிச்ச  சோறும்  களி தான்  கெடைக்கும் . என்ன  பண்ண  போற ? சீக்கிரமா  சொல்லு  டைம்  இல்ல" னு  சொல்லவும்  சீதா  வீட்டில்  இருந்த  பொருட்களை  உடைத்தாள்.  போனையும்  தான். 


    போன்  கட்  ஆகிட்டதால  சிவாட்ட சிமிகிட்ட  பேசினாள். அப்போ  சீமா மாலுட்ட "ஏன்  கா  நா  உங்க  வீட்டு  மருமகள்  னு  சொன்னீங்க.?" 


    "அப்டி  சொன்னா  தான்  அவ  உன்கிட்ட  வாலாட்ட  மாட்டா. உன்ன  கொல்ல  டிரை  பண்ணிருக்கா அறிவு  கெட்டவ . அவகிட்ட  இல்லாத  நகையா? ஏன்  தா  இப்டி  புத்தி  கெட்டு  அலையுறாலோ  தொில" என்றாள் மாலு.

  

      சிவா  கோவமாக  கிளம்பினான் "எங்கடா  போற?"  என்ற  மாலுட்ட 


"அவளை  ஒரு  வழி  பண்ணிட்டு  வரேன்" னு சொன்னான். 


"அதெல்லாம் வேணாம் நாம இன்னைக்கு கெளம்பிருவோம். அதுவும்  இல்லாம  இதெல்லாம்  தொிஞ்சா  பாட்டி  தாத்தா  வருத்தப்படுவாங்க  விடு  பாத்துக்கலாம். இனிமே  வாலாட்ட  மாட்டா நம்மகிட்ட"னு  மாலினி  சொன்னதும்  சிமி அவனை  சமாதானம்  செய்தாள். 


அவளுக்கு  கோவம் தான் .  ஆனா  வந்த  இடத்துல  அதும்  சிவாவோட சொந்தக்கார பொண்ணு இப்டி  பண்ணதால  அவளால  எதும்  பேச  முடியல . பார்வதி  அம்மாக்காக  அமைதியா  இருந்தாள். 


     பாட்டி நகையலாம்  கொண்டு  போய்  முதல்ல  கொடுத்துட்டு  வந்துட்டா. பாட்டியும்  சிவாவின்  அம்மாவும் "இதெல்லாம்  உனக்கு  தாம்மா"  என்றதை அவள்  காதிலேயே  வாங்கலையே?


"வேண்டா  எனக்கு  நகையே  பிடிக்காது" னு   சொல்லிட்டா. அதுல  இருந்து  அவ  நகைய வெறுத்துட்டா. அவ  மனச  இந்த  விஷயம்  ரொம்ப  பாதிச்சுருச்சு. 


   மாலினி  இந்த  விஷயத்த  கரண்ட்ட  சொல்ல  அத  கேட்டு  கோவப்பட்டு  அவன்  உடனே  கிளம்பணும்  னு  ஆடித்  தீா்த்துட்டான். அத  பாத்த  மாலு  பயந்து  கெளம்பிட்டா  சைலுவோட. சைலு  அழுத  அழுகை  இருக்கே  பாட்டி தாத்தா மாமாக்காக அழுகாம சீமாக்காக அழுதா, "அவளும்  வரணும்  அவ  கூடதான்  இருப்பேன்"னு. 


    அத கேட்ட சிபி  அதிா்ந்தான். "ஒரு  2 நாள்ல  அப்டி  என்ன  மாயம்  பண்ணுனா  இவள்"னு. 


    பிறகு  சிபி  கரணிடம்  பேசி  பாா்த்தான். எல்லாரும்  ஒண்ணாவே  கெளம்பலாமேன்னு. கொலைகாரங்க  இருக்குற  ஊா்ல  நான்  இருக்க  மாட்டேன்னு  சொன்னான்  கரண்.  யார  சொல்றீங்க  மாமா ன்னு சிபி  கேட்ட  பிறகுதான்  அவனுக்கு  எதுவும்  தொியாது  னு  தொிஞ்சுகிட்டான்  கரண். எல்லா  கதையும்  சொன்னதும்  சிபிக்கு  வந்த  கோவத்துல  பக்கத்துல  இருந்த  பிளவா்வாஷ்  உடஞ்சிட்டு. கரணே  அரண்டுட்டான்  அவன  பாத்து. அவன  சமாதானம்  பண்ணி  வெளிய  வந்தா  சைலு  சீமா  மடியில  தூங்கிட்டா. அத  பாத்த  சிபி  அவள  தூக்கி  மாலுட்ட  குடுத்து  கெளம்ப  சொல்லிட்டான்  முறச்சுகிட்டே. ஆமா  தம்பிகிட்ட  எதுவும்  சொல்லாம  மறச்சுட்டாளே  அதான். 


    அம்மா  அப்பாவ  கூப்பிட்ட சிபி "உடனே  கிளம்பணும்னு" சொல்லவும்  பாட்டி  தாத்தா  அதிா்ந்தனா். 


    "என்னப்பா  உடனே  கிளம்பினா  எப்டி ?  2 நாள்  இருந்துட்டு  போங்க" னு  சொன்னதும் 


   "அவசர வேல   பாட்டி  கண்டிப்பா  போகணும் இன்னொரு  டைம்  பாப்பா  ஸ்கூல்  லீவ்  விட்றப்ப  வரோம்"னு  சொல்லிட்டான். 


    "சாி டா  கண்ணா  அப்போ  நீ  கெளம்பு  மாலினி  கூட  நாங்க  2 ,3 நாள்  கழிச்சு  வா்றோம்" னு  விஜயன்  சொன்னதும் , 


    "அப்பா   உங்க  ஆபிஸ்ல  இருந்து  தான்  போன்  வந்துச்சு  கெளம்புங்க"  னு  சொல்லிட்டான். அத  கேட்ட   ஜெயா  ஏதோ  பிரச்சன,  அதான்  கோவமா  பேசுறான்னு  புாிஞ்சுகிட்டு   உடனே  எல்லாம்  பேக்  பண்ணிட்டாங்க. 


     சிவாவும்  கெளம்பிட்டு அம்மாவ  கெளம்ப  சொன்னான். என்ன டா ன்னு  கேட்டதுக்கு  "சீமா வ  நல்லபடியா  வீட்ல  போய்  சேக்க  வேணாமா? கெளம்புங்க, அவ  பயந்து  போய்  இருக்கா.  காய்ச்சல்  வந்துட்டா  கஷ்டம்  நம்மல  படுத்தி  எடுத்துருவா" னு  சொல்லிட்டான். 


    சிபி  தாத்தா  என்  கம்பெனி  பொறுப்ப யாரு  ஏத்துப்பாங்க  னு  கேட்டாா். "அது  சிவா  பாத்துப்பான்  தாத்தா.  நானும்  கூட  கெல்ப்  பண்ணுவேன் அவனுக்கு . ஏன்னா  என்  பிஸினஸ்  அப்பா  பிஸினஸ்லா  தனி தனியா  பாக்குறோம்  அதான். சிவாக்கும்  சொந்தமா  தொழில்  அமையும்ல" னு  பேசின  சிபிய,  பாரு  தனராஜன் சீமா  தாத்தா  பாட்டி  லாம்  ஆச்சாியமா  பாத்தாங்க. ஜெயா  விஜயனும்  மாலு  கரண்  அவனை  பாராட்டுனாங்க  நல்ல  ஐடியானு. 


      சிவா  சிபிக்கு தேங்க்ஸ் சொன்னான்.  சீமா  அவனை  பாத்து  சிாிச்சா  அதபாத்த  மாலு  கரண்  தங்களுக்குள்  பேசி  சிாித்தனா் லவ்  ஸ்டாா்ட்  ஆகிட்டுன்னு. சிபி  அவளிடம்  அவனுடைய  விசிட்டிங் காா்டு  அப்புறமா  அவனோட  பேவரைட்  பென்  கிப்ட் டா  குடுத்தான் யாரும்  பாக்காதப்போ. 


    "என்னோட  பேவரைட்  பத்திரமா  வச்சுக்கோன்"னு. 


     அதனால  சிமி  அவனுக்கு  ஒரு  கீ  செயின்  கிப்ட்  குடுத்தா  அப்போதைக்கு  அதான்  அவகிட்ட  இருந்துச்சு. பிரெண்ட்ஸ்  அப்டின்னு  2 பேரும்  கை  குலுக்குனாங்க. சிவா  வரவும் கெளம்பிட்டாங்க.


No comments:

Post a Comment

எழுத்தாளர்கள் கவனத்திற்கு

இந்த தளத்தினில் உங்களது படைப்புகளையும் இடம்பெறச் செய்ய விரும்பினால், rheamoorthy6@gmail.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் செய்யவும்.