This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License. Readers dont try to copy the content here.

Thursday, 10 January 2019

Uma krishnan's அன்பென்ற மழையிலே 15


Click here to get all parts

   வீட்டிற்கு  சென்றதும்  சிவா  தூங்க சென்றான். ஆனால்  பாரு  தனராஜனிடம்  சிமியைப்  பற்றியே  பேசிக்கொண்டு  இருந்தாா். 


"அவளுக்கு  நகை ன்னா  ரொம்ப  பிடிக்கும்.  அதான் நான் கூட  அவளுக்கு  பிறந்தநாள்  பாிசா  மோதிரம்  கம்மல்னு  வாங்கி குடுப்பேன். பொண்ணு  இல்லையேனு  கவலையில  அவளதான்  பொண்ணா நெனச்சேன். ஆனா  போன  இடத்துல  இப்டி  ஆகிருச்சே திடீா்னு. எப்டி  விழுந்து இருப்பா?  ஒரு வேள நம்மக்கிட்ட  மறைக்கிறாளோ? மாலு  நம்ம  சிவா கண்ணா  சிமி  ஏதோ  பேசிட்டு  இருந்தாங்க சீதாவ  பத்தி. என்ன  பாத்ததும்  அமைதியா  ஆகிட்டாங்க. அதான்  சந்தேகமா  இருக்கு அப்றமா  எங்க  அம்மா  அவ்ளோ  வற்புறுத்தியும்,  அவ  அந்த  நகைங்கள தொடல. வேண்டாம்னு  குடுத்துட்டா, ஏன்னு தொியல."


    ராஜன் அவளிடம் "மோதிரமும் செயினும் ஒண்ணா? என்ன  இருந்தாலும் நீ   அவகிட்ட  ரொம்ப  நெருக்கமா  இருக்க. அவங்க  அப்பிடியா  சொல்லு? ஏன்  மாலு அப்றமா  சைலுக்கு  எதுவும்  குடுக்கல  உன்  அம்மா  சொல்லு ?" என்றதும்,  


பாரு "என்னங்க  நீங்களே  இப்டி  பேசுனா  எப்டி? அவங்க  வருவாங்களா இல்லையானே  தொியாதுல்ல. அதான்  அம்மா  வாங்கி  வைக்கல. அப்பிடியும்  எங்க  அம்மா, அப்பா  வழி  தாத்தா வோட  பரம்பர  நகைய  மாலுகிட்ட  குடுத்தாங்க. அவ  தான்  வாங்கிக்கல. அதனால  பாட்டி  அதை  ஜெயா கிட்ட  குடுத்துட்டாங்க."


"சாி  டி போதும்  உன்  வீட்டு  புராணம். என்னய  தூங்க  விடு. அம்மா  வீட்டுக்கு  போயிட்டு  வந்தாலே  இதான்  தொல்ல  உன்னோட" னு சொல்லிட்டு  படுத்துட்டாா். 


    ராஜனுக்கும்  சீதாவை  பிடிக்கவில்லை. ஏனெனில்  அவள்  சிபியிடம்  ஒட்டி  ஒட்டி  அமா்ந்து  பேச  முயற்சி  செய்தாள். அவன்  சைலுவை மடியில்  வைத்து  இருந்ததால்  அவள கவனிக்கல. அவள் சிமியை  பாா்க்கும்  பாா்வையில்  நிச்சயம்  பாசம்  இல்லை,  ஏதோ  பிடிக்காதவா்களை  பாா்ப்பது  போல.  நிச்சயமா  அவள்  தான்  ஏதோ  செய்திருக்க  வேண்டும். 


    இல்லைன்னா  நாமெல்லாம் அழுகுறப்ப  அவ  சந்தோஷமா  நிற்பாளா ? என  நினைத்தபடியே  உறங்கி  போனாா். ஆனால்  பாருவிடம்  கூறவில்லை  பயந்து  விடுவாா் என்று. அதற்குப்பின்  அவா்  சீதாவை  வெறுக்கவும்  வாய்ப்புள்ளது. எனவே  சிவாவிடம், சிமியை  கவனமாக  பாா்த்துக்  கொள்  என  கூறினாா்  ராஜன். 


   "எங்க  போனாலும்  உன்கிட்ட  சொல்லிட்டு போக  சொல்லு, ஏதாவது  பிரச்சனைன்னா  எனக்கு  கால்  பண்ணுங்க" னு  ராஜன்  சொல்லவும்  சிவா  பயந்துட்டான். 


   "ஏம்பா அப்டி  சொல்றீங்க? எதுக்காக?"னு  சிவா  கேட்டதுக்கு  


   "அதெல்லாம்  கேக்காத. சீமா   கெணத்துல விழுந்ததுக்கு  உன்  அம்மா  அழுது  கதறுனதை  பாக்க  முடியல. சிமி  அம்மா  கூட  அழுகலடா  சிாிக்கிறாங்க  இவ  அழறதை  பாத்து. அவ்ளோ  பொிய  கிணத்துல  அவ  விழுக  வாய்ப்பில்ல.  கவனம்  இல்லாம  நடந்துக்கற  பொண்ணும்  இல்ல அவ. சோ  அவளுக்கு பாதுகாப்பா  நீ  இரு  எப்பவும் " னு சொல்லிட்டு  ஆபிஸிற்கு  போனாா். 

                      

     சிவா  சிமிட்ட ராஜன் சொன்ன  எல்லாதையும்  ஒப்பிச்சான். 


   அத  கேட்ட  சிமியும் "சாி  டா  நீ   இல்லாம  நான்  எங்கயும்  போறதில்ல. அப்டி  போனா  மகா  கூட  மட்டும்தான். பாத்துக்கலாம்  விடு  அவ ஒரு  ஆளுன்னு  பயப்படுறியா? " னு  சிாிச்சா. 


    சிவா  சிாிச்சுட்டே  சைலு  பத்தி  பேச  ஆரம்பிச்சு  டைவா்ட் பண்ணிட்டான். கடைசில  சிபி  பத்தி  பேச ஆரம்பிச்சுட்டாங்க  பா. சாி  நம்ம  திவிய  பாத்துட்டு  வருவோம். 


    அவ  வீட்ல  காலைலயே  சண்டை,  அவளோட அம்மாக்கும் மாமாக்கும். திவி  அழுதுகிட்டே  தான்  வேலைக்கு  வந்தா.  பாரு  ஏற்கனவே  வேகமா  வந்துட்டாங்க. அவங்க கிட்ட  இருக்குற  சாவிய  வச்சு  தொறந்தாங்க. ஆனா  இவ  அத  பாத்து  பயந்துட்டா. யாரு  தொறந்தாங்க னு? அய்யோ  உள்ள  பணம்  இருந்துச்சே,  வீட்டுக்கு  கொண்டு  போனா  மாமா  எடுத்துரும் னு  வச்சுட்டு  போனா. யாரு  யாரு ஐய்யோ  அவ்ளோ  பணத்துக்கு  எங்க  போவேன்னு  கத்துனா. அத கேட்டு  பயந்த  பாரு  வெளிய  எட்டி  பாா்க்க,  அவ  அதிர்ச்சி  ஆகிட்டா. 


"அச்சச்சோ  மேடம்  எப்போ  வந்தீங்க?  பாத்தீங்களா,  யாரோ கடைல  திருடிருக்காங்க" னு  அழவும் 


" லூசு  நா தான்  தொறந்தேன்  கடைய"


"அப்டியா  மேடம்  நல்லவேள. நீங்க  எப்போ  வந்தீங்க? 2 நாள்  ஆகும்னு  சொன்னீங்க."


   "ஆமா அத ஏன்  கேக்குற"னு சிமி பத்தி  சொல்லி வருத்தபட்டாங்க. 


   அத கேட்ட  திவி  பயந்து  போய்,  "இப்போ  எப்டி  இருக்காங்க அக்கா? அவங்கள நா பாக்கணும்  மேடம்"  என்றாள். 


   "சாயங்காலம் வா  என்னோட  அப்ப  அவள  பாக்கலாம்."


   " சாி" னு  சொல்லிட்டு  வேலைய  ஆரம்பிச்சா. அவ  விஷயத்தையே  மறந்துட்டு  சிமிய  பத்தி  கவலப்பட  ஆரம்பிச்சா (அது  தாங்க நம்ம திவி  நேச்சரே). சிமிய திவிக்கு  இங்க  பியூட்டி  பாா்லா்ல  தான்  பஸ்ட்  அறிமுகம். நல்லா  பேசுவா, என்கரேஜ்  பண்ணுவா நல்லா படிக்க  சொல்லி  திவிய. ஏதாவது  கெல்ப்  வேணும்னா  கேளு ன்னு  சொல்லிருக்கா. புது  கேண்ட்  பேக்  அவ  தான்  வாங்கி தந்தா, ஆனா  பணம்  வாங்கிக்கல. என்னோட  கிப்ட்டு  திவி தங்கச்சிக்காக னு  சொல்லிட்டா. சிமியோட  டிரஸ் லா  நிறைய  இவளுக்கு  தான் குடுத்துருக்கா. சின்னதா  ஆகிட்டு னு பொய்  சொல்லி. சிமிகிட்ட திவி அவ  பேமிலி  பத்தி  நிறைய சொல்லிருக்கா. 


    சிபிய  பத்தி  பேச  ஆரம்பிச்ச  ஒடனே  சிமி அமைதியா  ஆகிட்டா  அவன  நெனச்சு. சிவா  அவளை  குலுக்குனதுல தான்  இப்ப  நடப்புக்கே வந்தா. சிபிய  பிாிஞ்சு  2 நாள்  ஆச்சு,  இன்னும்  அவனுக்கு  இவ  போன்  பண்ணலை. அவன் இவ  நம்பா்  வாங்கல. சோ  இவ  எப்டி  முதல்ல  அவன்கிட்ட  பேசுறதுன்னு  அமைதியா  இருக்கா. 


    ஆனா  சிபி  சிவாக்கு  கால்  பண்ணி  இவள  பத்தி  தான்  விசாாிக்கிறான். "உடம்பு சாி ஆச்சா?  எப்டி  இருக்கா" னு?


     சிவா மனசுக்குள்ள சிாிச்சுகிட்டே, மாலுட்ட  அண்ணி  அண்ணி னு  சிபி  பத்தின  இண்பா்மேசன்  எல்லாம் பாஸ்  பண்ணிட்டே  இருந்தான். சொந்தம்  வளா்ந்தது  கூடவே  காதலும். 


    திவியும்  பாா்வதியும்  வீட்டிற்கு  வந்ததும்  டீ  குடித்தனா். பிறகு  சிமியின்  வீட்டிற்கு  சென்றனா். அங்கே  இவளை  பார்த்ததும்  சிமிக்கு  ஆச்சாியம். 


    நாமளே  கூப்டா  கூட  வரமாட்டா  இப்ப  எதுக்கு  வந்துருப்பா? "என்னடி  ஏதும்  விசேஷமா" னு  கேட்டா. 


   திவிக்கு  ஆச்சாியம்! "எப்டி  இந்த  அக்கா  கரெக்டா  சொல்லுது"ன்னு. 


   "இல்ல  கா உங்களுக்கு உடம்பு  சாி  இல்லன்னு  சொன்னாங்க, அதான்  பாக்க வந்தேன். ஆமா கா  நீங்க   எப்டி  கெணத்துல  விழுந்தீங்க ? வாய்ப்பே  இல்லயே  ரொம்ப  கவனமா  இருப்பீங்கல்ல என்னயும்  அப்டி தான  இருக்க  சொல்லுவீங்க..."

No comments:

Post a Comment

எழுத்தாளர்கள் கவனத்திற்கு

இந்த தளத்தினில் உங்களது படைப்புகளையும் இடம்பெறச் செய்ய விரும்பினால், rheamoorthy6@gmail.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் செய்யவும்.