This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License. Readers dont try to copy the content here.

Friday, 11 January 2019

Uma krishnan's அன்பென்ற மழையிலே 16


Click here to get all parts

சிமியின்  கண்களோ  ஆச்சாியத்தை  காட்ட  அவளது  வாயோ பொய்  சொல்லிற்று. 


    ஏன்னா  அங்கதான  பாரு  உக்காந்து  இருக்காங்க அதான். என்  பெட் ரூமை காட்டுறேன்  வா னு  இழுத்துட்டு  போயிட்டா. அங்க  போன பெறகு  கதைய  சொல்லி முடிச்சா. 


அத கேட்டு  திவி  அவகிட்ட  "அவள  ஏன்  சும்மா  விட்டீங்க  கா. செவுட்டுலயே   4 அறைய வைக்க  வேண்டி தான?" னு  சொல்றப்போ  சிவா  என்ட்ரி ஆகிட்டான். 


அத  பாத்த திவி  வாய  மூடிட்டா. சிவா  "என்ன  பேசிட்டு   இருந்தீங்க  2 பேரும்  சைலன்ட்  ஆகிட்டீங்களே  இப்ப ?" அவன்  வெளிய  நின்னு  எல்லாத்தையும்  கேட்டுட்டு  தான்  உள்ள  வந்தான் (இதுல  சீன்  வேற).

                        

      உடனே  சிமி  "அவளுக்கு கல்யாணம்  அதான்  இன்வைட்  பண்ண  வந்துருக்கா"  னு  ரீல்  விட்டா. அத  கேட்ட  சிவ் சாக்  ஆகிட்டான். ஏன்னு  கேட்காதீங்க  அவனுக்கே  தொியாதுங்க. 

                                      

     சிறிது   நேரம்  கழித்தே  கங்கிராட்ஸ்னு சொன்னான். அத  கேட்ட  சிமி  சிாிச்சா  ரொம்ப  சீக்கிரமா  விஷ்  பண்ணிட்டன்னு. 


    சிவா  "நான்  என் பிரண்ட  பாக்கணும்  பாத்துட்டு  வந்துா்றேன்"னு  கிளம்புனதும்  சிமி  பாய்  சொல்லிட்டா. 


    ஆனா அவன்  ஏதோ  டிஸ்டா்ப் பா  இருக்குறான் னு  புாிஞ்சுகிட்டா. இப்போ  திவி  முன்னாடி  பேச  முடியாதுல  அதான்  அமைதியா  இருக்கா. திவி  அவன்  போன  பக்கமே  பாத்துட்டு  இருந்தா. 


   அத  பாத்து  சிமி "ஏன்  டல்லா  இருக்க என்ன  ஆச்சு? அவன ஏன்  பாக்குற" னு  கேட்கவும்  திவி  முழிச்சுகிட்டா. 


    "அது  யாரு"ன்னு  கேட்டா? 


    "அவன  தொியாதா? பாரு  அம்மா  புள்ள  டி."


    "அப்டியா  எங்க  படிச்சாங்க? நான்  இதுவரை  பாா்த்ததே இல்லை. "


    "ஸ்கூல்   புல்லா  என்  கூட  தான். காலேஜ்   வேற  வேற.... அவன்  வெளியூருல படிச்சான். ஆமா  அவன  பத்தியே  எதுக்கு  கேக்குற."


    "இல்ல  மேடம் கு இவ்ளோ  பொிய  பையனா? நா இதுவரை  பாத்ததே  இல்ல  அதனால  கேட்டேன்."


     "சாி  சாி  நீ  விஷயத்துக்கு  வா, எதுக்காக பாக்க  வந்துருக்க? ஏதாவது  கெல்ப்  வேணுமா?  பணமா?"


    "இல்ல  கா  அது  வந்து?"


    "என்ன  மா  சொல்லு நான்  உன்  அக்கா தான்  கண்டிப்பா  கெல்ப்  பண்வேன். நீ பயப்படாம  விஷயத்தை  சொல்லேன்."


    " எனக்கு  மாப்ள  பாத்து  இருக்காங்க அம்மா. வா்ற வெள்ளிக்கிழமை  எனக்கு  நிச்சயம்  பண்ண  போறாங்க. எனக்கு. இந்த  கல்யாணத்துல  விருப்பம்  இல்ல. ஆனா  அம்மா  மாமாக்கு  பயப்படுது கா. கல்யாணத்துக்கு  பிறகு வேலைக்கு  போக  கூடாதாம் , படிக்க  கூடாதாம்."


     "என்ன  இதுக்காக வா  பீல்  பண்ற? நீ  லவ்  பண்றதா  சொல்லிரு  அவரே கல்யாணத்தை  நிறுத்திருவாா்." 


   "சூப்பா்  ஐடியா  கா  தாங்க்ஸ்  கா. ஆனா  எப்டி  சொல்றது  இப்ப? அவா்  போன்  நம்பா்  தொியாதே.  கடை  தான்  தொியும்."


    "சாி  நோ்ல  போய்  சொல்லிருவோம். கெளம்பு"னு  வண்டிய  ஸ்டாா்ட்  பண்ணப்போ சிவா  அம்மா  "எங்க  கிளம்பிட்டீங்க ?"கேட்கவும் சீமா  பதில்  சொன்னா. 


    அத  கேட்ட  தேவி (சிமி  அம்மா) பைக்கில  இந்நேரமா னு  தடை  போட்டுட்டாங்க. சாி  னு  சிவாவ வர  சொல்லி  காருல  கெளம்பி  அந்த  மாப்ள  கடைக்கு  போனாங்க. அவன் திவி வீட்டுக்கு னு  நெனச்சு  வண்டி  ஓட்டுனான்.


     கடை  கிட்ட  இறங்கவும்  "இங்கதான்  வீடா"னு கேட்டான். அவ  இல்லனு  தலைய  ஆட்டி  சிமிய  பாத்தா. ஆனா  அவ  அந்த  கடைல  இருக்குற  ஆள  பாத்து  பேச  போயிட்டா. 


    திவி  பயந்து  போய்  அவ பின்னாடியே  போயிட்டா. இவள  பாத்த  அந்த  மாப்பிள்ளைக்கு  சாக். "இங்க  எதுக்கு  வந்த  இந்நேரத்துக்கு? என்ன  வேணும்  யாரு  இவங்க"னு  கேட்ட  அவன்கிட்ட சிமி  தான்  பதில்  சொன்னா. 


     "அவளுக்கு  உங்கள  கல்யாணம்  பண்ண  பிடிக்கல  அவ  வேற  ஒருத்தர  விரும்புறா" னு சொன்னதும்  அவன்  சிாிச்சான். 


     "என்ன  சிாிப்பு?" னு  கேட்டதுக்கு 


     "அவ  அம்மா  கல்யாணத்தை  நிறுத்த  திவி  ஏதாவது  பொய்  சொல்லுவா  படிக்கணும் ற  ஆசையில  அத  நம்பாதீங்க னு."


    "அப்பிடியா  நம்ப  மாட்டியா?" னு  சொல்லி  சிவாவை கூப்டா. 


    அவன்  இறங்கி  வந்து  "என்ன?"ன்னு  கேட்டதும்  


    "நீயும்  இவளும்  லவ் பண்றீங்க னு  சொன்னா  நம்ப  மாட்டிக்கிறான் டா  இந்த  சொட்ட."


      அத  கேட்ட  திவி  சாக்  ஆகி  நிக்க,  சிவா  கூலா  ஆமான்னு  சொல்லிட்டான்  ஏன்னா  சிமி  சிக்னல்  காமிச்சுட்டாளே  சும்மான்னு. 


    இப்போ  திவி  பயந்து  போயி அவகிட்ட  அக்கானு  ஏதோ  சொல்லப்போக சிவா  அவள  அடக்கிட்டான். அவனுக்கு  பயந்து  அமைதி  ஆகிட்டா. சிமி  அந்த  மாப்பிள்ளய  கிட்டத்தட்ட  மிரட்டிட்டு  வந்தா. அவன்  பேய்  அறஞ்ச  மாதிாி  ஆகிட்டான். இந்த  பொண்ணே  வேணாம் னு  கும்பிடு  போட்டுட்டான். திவி  அம்மா  வாசல்ல  வெளக்குமாத்த  வச்சுகிட்டு  நின்னா திவிக்காக. சிமி சிவா அத  பாத்து  அதிா்ந்து  போயிட்டாங்க. அதுக்குள்ள நாம  சிபி  என்ன  பண்ணுறான்  னு  பாப்போம்.


       தனியா சிாிச்சுகிட்டு  இருந்த  அவன  பாத்த  அவனோட  அம்மா  "சாப்பிடாம  என்ன டா  சக்கரவா்த்தி சிாிப்பு" னு  கேட்டதுக்கு  ஆபிஸ்  ல  நேத்து  ஒரு  காமெடி  அத  நெனச்சு சிாிச்சேன்னு சொல்லி சமாளிச்சான். 


      ஆனா  அவன் அம்மா  நம்பல  "இவனாவது  ஆபிஸ்  ல சிாிக்கிறதாவது. அதும்  இல்லாம  அவன  சக்கரவா்த்தி  னு  கூப்பிட்டதுக்கு கோவமே  படாம  போயிட்டானே  அததான்  நம்ப  முடியல." சிபி  ஆபிஸ்  போனதும்  மாலுகிட்ட  போன்  பண்ணி  பேசுனாங்க  ஜெயா. 


    "அவனுக்கு காதல் முத்திட்டு சீக்கிரமா  கல்யாணத்த  பண்ணுங்க" னு  சொன்னா. 


    "நான்  மாட்டேன்னு  சொல்லலைடி நீ ஏன் இப்டி பேசுற? அவன்  தான் கல்யாணத்துக்கு  ஒத்துக்கலையே."


     "அது  அப்போ, ஆனா  இப்ப  அவன்  கண்டிப்பா  ஒத்துப்பான் எப்படிப்பட்ட  பொண்ணு  வேணும் னு  கூட  சொல்லுவான். நீ வேணும்னா  சாயங்காலம்  பேசி  பாத்துட்டு  சொல்லு."


    "யாரு டி  அந்த  பொண்ணு?"


    "அதெல்லாம்  சஸ்பெண்ஸ் மா. நீ என் சாயங்காலமா  கால்  பண்ணு  அவன்கிட்ட  பேசிட்டு  அப்ப  சொல்றேன். இப்ப  அவ  பேர  சொன்னா  நீ  அவன்ட்ட  கேட்ருவ அவன்  உடனே  இல்லன்னு  சாதிப்பான். இதெல்லாம்  தேவையா எனக்கு  சொல்லு? பாய்"  அப்டின்னு போன  வச்சுட்டா.


No comments:

Post a Comment

எழுத்தாளர்கள் கவனத்திற்கு

இந்த தளத்தினில் உங்களது படைப்புகளையும் இடம்பெறச் செய்ய விரும்பினால், rheamoorthy6@gmail.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் செய்யவும்.