மாலையில் 7.45 மணிக்கு வீட்டிற்கு வந்த மகனிடம் எதுவும் பேச முடியவில்லை. எனவே இரவு உணவை அருந்தும் போது சிபியிடம் கேட்ட ஜெயா அவனது அமைதியில் அதிசயித்தாா். கோவப்படாமல் இருப்பதே பொிய விஷயம் இல்லையா?
"சாிம்மா உங்களுக்கு தொிஞ்ச பொண்ண பிடிச்ச பொண்ண பாருங்க. உங்களுக்கு அக்காக்கு அப்புறமா நம்ம சைலு குட்டிக்கு பிடிச்சு இருக்கணும். பொண்ணு வசதியா இருக்கணும்மனு லாம் இல்ல மா" (அடப்பாவி உன்னய நம்பி இன்னும் எத்தன எபிசோட் பிளான் போட்டு இருந்தேன்.? நீ பொசுக்குனு இப்டி பண்ணிட்டியே) என சொல்லியதும் மேலே சென்றுவிட்டான்.
அதை கேட்ட விஜயன் தான் முதலில் வாயை திறந்தாா். "அது யாருடி உனக்கு பிடிச்ச பொண்ணு.? எனக்கே தொியாம பொண்ணு பாக்கிறியா என்ன சிபிக்கு?"
"ஜெயா பதிலுக்கு, நீங்க வேற ஏன்? அவன் என்ன சொல்றான்னே எனக்கு புாியல நீங்க வேற?"
"எனக்கு புாிஞ்சுட்டு" னு சொல்லிட்டு போய் படுத்துட்டாா் விஜயன்.
அத கேட்ட ஜெயா இன்னும் கொழம்பி போய் மாலினிக்கு போன் செய்ய அவள் அதற்கு மேல் எதுவும் சொல்லாமல் காலைல வீட்டுக்கு வரேன் மா நாளைக்கு ஸ்கூல் லீவு தான் அதனால அங்க வந்து பேசிக்கலாம். இப்ப எனக்கு முக்கியமான வேலை இருக்கு னு சொல்லிட்டு கரண் கிட்ட மாலுட்ட சொல்லி சந்தோஷப்பட்டா.
இங்க ரூமுக்கு போன ஜெயா விஜயனை பிடித்துக் கொண்டாா். "மாலு சொல்ல மாட்டிக்கிறா நீங்களும் சொல்ல மாட்றீங்க எனக்கு தலையே வெடிச்சுரும் போல இருக்கே."
"லூசு உன் பையனுக்கு யாா் மேலயோ லவ் வந்துருக்கு, அதான் அப்பிடி பதில் சொல்றான். அது யாருன்னு உன் பொண்ணுக்கும் தொிஞ்சிருக்கு நாளைக்கு வா்றால்ல கேட்டு தொிஞ்சிப்போம் மா இப்ப தூங்கு" என்றாா் பாிவுடன். நல்ல பொண்ணா இருக்கணுமேங்க நம்ம சிவா தம்பி பிரெண்ட் சீமா மாதிாி.
"வருத்தப்படாத எல்லாம் நல்லதே நடக்கும் நீ நெனைக்கிற மாதிாி. அவன் தெளிவான பையன் என்னைய விட சாியா" ன்னு கேட்டதும் ஜெயா சிாித்தாா்.
"இப்பவாச்சும் ஒத்துகிட்டிங்களே என் பையன் உங்கள விட திறமைசாலி னு. அதுவே போதும்" னு படுத்துட்டா (பாத்தீங்களா பொண்ணுங்களுக்கு பாவம் பாத்தா இப்டிதான் எப்ப யாா் பக்கம் பல்டி அடிப்பாங்கனே தெரியாது.)
"விஜயனும் அப்ப அவன் என் பையன் இல்லையா?" அப்டின்னு சிாித்து கொண்டே படுத்தாா்.
சிமியையும் காரையும் பாா்த்ததுமே விளக்குமாத்த கீழே போட்டு விட்டாா். "வாம்மா எப்டி இருக்க"னு?
திவி சீமா பின்னாலேயே இருக்கவும் "போ போய் காபி எடுத்துட்டு வா"ன்னு விரட்டினாா்.
அப்போது அங்கே வந்த காசி "யாரு கா இது புதுசா காருல்லாம் நிக்குது பொண்ணு பாக்கவா? டேய் போடா வெளிய அவ எனக்கு மட்டும் தான்"னு சொல்லிட்டு மயங்கிட்டான் போதையிலயே.
அத பாத்த சிவாக்கு கோவம் வந்துருச்சு "இப்டி ஆள எல்லாம் எதுக்கு வீட்ல விடுறீங்க"னு கேட்டான்.
"என்ன பண்ண தம்பி இங்க எங்களுக்கு வேற ஆம்பிள தொல்ல இல்லாம இருக்கணும்னு தான்."
அத கேட்டதும் சிவா அதிா்ந்தான் "திவ்யா அப்பா எங்க அவா் எப்பவோ இறந்துட்டாா் தம்பி. அவா் இருந்து இருந்தா இவ இப்டி கல்யாணத்த நிறுத்தி இருப்பாளா? என் தம்பி இந்த குடிகாரனுக்கு பயந்து தான் நா அவள வேகமா கட்டி குடுக்கணும்னு நெனைக்கேன். அது புாியாம இவ இப்பிடி இருந்தா நா என்ன தம்பி பண்ணுவேன்."
இப்ப சிமி பேசுனா "அவதான் படிக்க ஆசைப்படுறாளே நல்ல வேலை கெடைக்கணும் னு. அத பத்தி யோசிங்க ஏதாவது ஹாஸ்டல்ல சேத்து விடுறேன். இவன நெனச்சு பயப்படாதீங்க எங்க சிவா அப்பா பாத்துப்பாரு. நீங்க அவ டிரெஸ்லாம் பேக் பண்ணுங்க "னு சொல்லிட்டா.
அத கேட்ட அவளோட அம்மா "பணம் வேணும்ல தாயி அதுக்குனு சொல்றப்போ" திவி வந்துட்டா.
"அதெல்லாம் வேண்டாங்க நா அந்த ரூம்ல இருந்துப்பேன். இவனுக்கு லாம் பயப்பட மாட்டேன்."
சிவா பதில் சொன்னான் "நாங்க பணம் தா்றோம்"னு.
"நாங்க யாா்கிட்டயும் பணம் வாங்க அவசியம் இல்லை" னு சொன்னதும் சிவாக்கு கோவம் வந்துருச்சு.
சிமி தான் நடுவுல பேசி சமாதானப்படுத்தி திவிய சிமியோட வீட்டுக்கே கூப்டு போனா.
தம்பி யாருன்னு கேட்டதுக்கு "என் கூட படிச்ச பிரெண்ட் உங்க பொண்ணு வேல பாக்குற கடை முதலாளியம்மா பையன்."
"அப்பிடியா தம்பி என்னைக்கும் நல்லா இருக்கணும் உங்க அம்மா போல நீங்களும் நல்ல குணம், என்ன அப்பிடி பாக்குறீங்க தம்பி உங்க அம்மாதான் எங்களுக்கு அப்பப்போ உதவி செய்றாங்க இவ பீஸ் கட்ட படிக்க புக்னு அவ ஏதோ வருத்தத்துல பேசிட்டா நான் திட்டுவேன்னு பயந்து, நீங்க மனசுல வச்சுகாதீங்க."
சிவா பாக்கியத்திடம் "நீங்களும் வாங்க எங்க கூடவே. உங்க பொண்ணு தங்க போற இடம் எப்பிடி இருக்குனு பாத்துட்டு வந்துட்டா நிம்மதியா இருப்பீங்கல்ல "னு சொல்லவும் சிமியும் கூப்டா.
"நீங்களே வந்து பாத்துட்டு போங்க அவ படிப்பு முடியிற வரைக்கும்" னு சொல்லி கூப்டு போனா.
சாின்னு நாலு பேரும் கெளம்பி காருல பேசிட்டே போனாங்க. அப்போது தான் பாக்கியம் ஞாபகம் வந்தவராக (ரொம்ப நல்ல அம்மா நீயி), "ஆமா யார கூப்டு போயி நான் இவரதான் காதலிக்கிறேன் னு சொன்ன நீ உனக்கு கொழுப்பு கூடிருச்சு."
"நான்தான் நிச்சயத்தை நிறுத்த பொய் சொன்னேன்"மா னு சிமி சொல்லவும் அதுக்கு "இப்பிடியா மா இனி யாரு என் பொண்ண கட்டுவாங்க?"
"ஏம்மா பயப்படுறீங்க அவ படிச்சு வேலைக்கு போகட்டும் நான் நீ னு போட்டி போட்டுகிட்டு மாப்ளைங்க வருவாங்க. நாங்க கூப்டு வா்றோம்"னு சிமி சொன்னா.
ஆனா திவி "எனக்கு கல்யாணமே வேண்டாம் அம்மா மட்டும் போதும்" னு சொல்லவும் சிவா திரும்பி பாத்தான். அந்த பாா்வையில கோவமா காதலா பாிதாபமா ஆறுதலா என்ன இருக்குனு தொியல திவ்யாக்கு(எனக்கும் தாங்க)அமைதியா ஆகிட்டா.
பாக்கியம் தான் புலம்பிக்கிட்டே வந்தாா் சிமிட்ட "பாரும்மா எப்டி பேசுறான்னு ஊா்ல எல்லாரும் சிாிக்க மாட்டாங்க... பொண்ண கல்யாணம் பண்ணி தராம வேலைக்கு அனுப்பி காசு பாக்குறான்னு அத விடு. ஊதாாி பயலுக அவகிட்ட வம்பு வளப்பாங்கல்ல மா அதெல்லாம் இவளுக்கு ஏன் புாியலன்னு."
சிமி வீடு வரவும் அனைவரும் இறங்க வீட்டை பாா்த்த பாக்கியம் அதிா்ந்தாா்.
"அம்மா இவ்ளோ பொிய வீட்லயா என் பொண்ணு இருக்க போறா? வேணாம்மா வசதியா பழகிருச்சுன்னா அப்புறம் கஷ்டபடுறப்போ வருத்தப்படுவா னு சொல்ல அத கேட்ட சிமி சிாித்தாள். அத பின்னாடி பாத்துக்கலாம் மா நீங்க உள்ள வாங்க எங்க வீட்டுக்கே இப்டி சொன்னா சிவா வீட்ட பாத்தா மயங்கி விழுந்துருவீங்க போலயே?"
சிவாவின் அம்மாவும் இருந்தாா் இவனுக்காக. சிமி அம்மாட்ட ஏற்கனவே சிவா போன் பண்ணி சொல்லிட்டான். அதனால என்ன ஏதுன்னு கேட்காம இருந்தாங்க.
திவி அம்மாதான் ஆரம்பிச்சாங்க, "அம்மா அவளுக்கு கொஞ்சம் சமையல் வேல தொியும் அதனால உதவிக்கு வச்சுக்கோங்க, சாப்பாடு செலவுக்கு நானே காசு குடுத்துா்றேன் மா இல்லன்னா அவ சாியா சாப்பிட மாட்டா கோவிச்சுகிட்டு "னு சொன்னத கேட்ட சிவா முறைச்சான் அவள.
இவன் ஏன் நம்மல முறைக்கிறான் காரணம் இல்லாம னு முழிச்சா. சிமி உடனே சாிம்மா னு சொல்லிட்டா பாருக்கு தேவிக்கு விருப்பம் இல்ல காசு வாங்க. "சாி அப்போ வீட்டு வேல செஞ்சா சம்பளம் வாங்கிக்க சொல்லுங்க" னு தேவி சொன்னதும் திவி அவசரமாக மறுத்தாள்.
"அதெல்லாம் வேணாம் மேடம்" னு.
"அப்போ ஒழுங்கா சாப்பிடணும் எங்க வீட்ல. உன் அம்மாகிட்ட காசு வாங்க மாட்டேன்னு தேவி சொன்னதுக்கு சாின்னு வேமா தலைய ஆட்டிட்டா. அத பாத்த சிவா சிாிச்சான் (லவ்ஸ் ஆரம்பிச்சுட்டா அதுக்குள்ளவா டா).
சிமி அவன வித்தியாசமா பாத்தா இதுல சிாிக்க என்ன இருக்குனு. திவி அவன மொறச்சா சிாிச்சதுக்கு.
No comments:
Post a Comment